என் மலர்
புதுக்கோட்டை
- மர்மநபர்களை தேடி வருகின்றனர்
- வீட்டில் நகைகள் திருட்டுபோனது.
புதுக்கோட்டை
புதுக்கோட்டை நரிமேட்டை சேர்ந்த ஆனந்தின் மனைவி பாலநந்தினி (வயது 30). இவர் வீட்டை பூட்டி விட்டு தனது மகனுடன் ஆவுடையார்கோவிலில் உள்ள தனது தாயின் வீட்டிற்கு சென்றிருந்தார். பின் அங்கிருந்து திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு கிடந்தது. மேலும் பீரோவும் திறந்து கிடந்ததோடு, அதில் இருந்த பொருட்கள் சிதறி கிடந்தன. மேலும் பீரோவில் இருந்த 4½ பவுன் நகைகள், வெள்ளி பொருட்கள், ரூ.4 ஆயிரம் ஆகியவை திருட்டு போயிருந்தன. இது தொடர்பாக திருக்கோகர்ணம் போலீஸ் நிலையத்தில் அவர் அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் நகைகளை திருடிச்சென்ற மர்மநபர்களை தேடி வருகின்றனர்.
- 17-ந் தேதி நடைபெறுகிறது
- வன்னியன்விடுதியில் ஜல்லிக்கட்டு நடப்பதாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை:
தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையின்போது நடத்தப்படுகிறது. இந்த ஆண்டில் தமிழகத்தின் முதல் ஜல்லிக்கட்டு புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே தச்சங்குறிச்சியில் கடந்த 8-ந் தேதி நடைபெற்றது. இதைத்தொடர்ந்து இனி வரிசையாக ஆங்காங்கே என மாவட்டத்தில் தொடர்ந்து ஜல்லிக்கட்டு நடைபெறும். குறைந்தது 5 மாதங்களுக்கு இந்த ஜல்லிக்கட்டு நடைபெறுவது வழக்கம்.
இந்த நிலையில் ஆலங்குடி அருகே வன்னியன்விடுதியில் வருகிற 17-ந் தேதி ஜல்லிக்கட்டு நடைபெற உள்ளது. இதற்கான முன்னேற்பாடுகள் நடைபெற்று வருகிறது. இதையொட்டி ஜல்லிக்கட்டு நடைபெறுவதற்கான அராசணை நேற்று வெளியிடப்பட்டது. அதன்படி 17-ந் தேதி ஜல்லிக்கட்டு நடைபெறுவது உறுதியாகி உள்ளது. கலெக்டர் கவிதாராமு மற்றும் அதிகாரிகள் ஜல்லிக்கட்டு நடைபெறும் இடத்தினை ஆய்வு மேற்கொள்ள உள்ளனர். அப்போது ஜல்லிக்கட்டு நடத்த சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தி உள்ள வழிகாட்டல்கள் நடைமுறை பின்பற்றப்பட்டுள்ளதா? என பார்வையிடுவார்கள். இந்த ஆய்வின்போது பாதுகாப்பு நடவடிக்கைகளை பார்வையிட்டு ஜல்லிக்கட்டுக்கு அனுமதி அளிப்பார்கள்.
- வாகன விபத்தில் முதியவர் பலினானார்
- கொப்பனாபட்டி ஆலவயல் பிரிவு சாலை அருகே வந்த போது எதிரே வந்த டிப்பர் லாரியும், இரு சக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதிக்கொண்டது.
பொன்னமராவதி:
புதுக்கோட்டை மாவட்டம் கிளிக்குடி அருகே உள்ள வேப்பங்கனிப்பட்டி கிராமத்தை ேசர்ந்தவர் சண்முகம் (வயது 60). இவர் மனைவி வளர்மதி(53) மற்றும் உறவினர் துளசிமணி ஆகியோருடன் இரு சக்கர வாகனத்தில் கிளிக்குடியிலிருந்து பொன்னமராவதிக்கு சென்று கொண்டிருந்தார். இரு சக்கர வாகனத்தை துளசிமணிஒட்டிவந்துள்ளார்.
கொப்பனாபட்டி ஆலவயல் பிரிவு சாலை அருகே வந்த போது எதிரே வந்த டிப்பர் லாரியும், இரு சக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதிக்கொண்டது. பலத்த காயமடைந்த சண்முகம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். வளர்மதி, துளசிமணி இருவரும் பொன்னமராவதி அரசு பாப்பாயி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். டிப்பர் லாரி ஒட்டுனர் ராங்கியம் சந்தோஷ் என்பவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
- அறந்தாங்கியில் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நடைபெற்றது
- தமிழக முழுவதும் கடந்த 11 ஆம் தேதி முதல் 17ஆம் தேதி வரை சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி தமிழ்நாடு போக்குவரத்துத்துறை சார்பாக நடத்தப்பட்டு வருகிறது.
அறந்தாங்கி:
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரத்தை மோட்டார் வாகன ஆய்வாளர் சசிகுமார் வாகன ஓட்டிகளுக்கு வழங்கினார்.தமிழக முழுவதும் கடந்த 11 ஆம் தேதி முதல் 17ஆம் தேதி வரை சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி தமிழ்நாடு போக்குவரத்துத்துறை சார்பாக நடத்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக அறந்தாங்கி பேருந்து நிலையத்தில் வாகனம் ஓட்டுவது குறித்து ஓட்டுனர்களிடம் துண்டு பிரசுரத்தை மோட்டார் வாகன ஆய்வாளர் சசிகுமார் வழங்கினார்.
மேலும் ஆட்டோ ஓட்டுனர்களுக்கு துண்டுபிரசுரம் வழங்கி ஆட்டோவிற்கு முகப்பு விளக்கில் கருப்பு ஸ்டிக்கர் ஒட்டி, வாகனத்தை எவ்வாறு ஓட்டுவது குறித்த விதிமுறைகளை விளக்கி கூறினார்.அதனை தொடர்ந்து அறந்தாங்கி சோதனைச்சாவடி அருகே புதுக்கோட்டை காரைக்குடி சாலையில் வாகனங்களை சோதனை செய்து ஓட்டுனர் உரிமம், வண்டியின் உரிம சான்று போன்றவற்றை ஆய்வு செய்யப்பட்டது.நிகழ்ச்சியில் போக்குவரத்து காவல் ஆய்வாளர் முகமது அனஸ், உதவி ஆய்வாளர் பொன்னுவேல் உள்ளிட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
- போர்க்கால அடிப்படையில் கல்லணை கால்வாய் கடைமடை பகுதியில் நெல் கொள்முதல் நிலையம் அமைக்க கோரிக்கை வைத்தனர்
- கல்லணை கால்வாய்கடைமடை பகுதியில் 27 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் விவசாயம் செய்ய்யபட்டு தற்போது அறுவடைக்கு தயாராக உள்ளது
அறந்தாங்கி:
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே கல்லணைக்கால்வாய் கடைமடை பகுதியில் சுமார் 27 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் நெற்பயிர் சாகுபடி செய்துள்ளனர். கடந்த ஜுன் மாதத்திற்கு பிறகு நெற்பயிர் சாகுபடி தொடங்கப்பட்டு தற்போது நெற்பயிர் முற்றி அறுவடைக்கு தயாராக உள்ளது. இதனால் விவசாயிகள் நெல் அறுவடை பணிகளை தீவிரமாக செயல்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் அறுவடை செய்த நெல் மணிகளை சேமித்து வைக்க போதிய இடம் இல்லாததால், அந்தந்த பகுதிகளில் நெல் கொள்முதல் நிலையம் தொடங்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து கல்லணைக்கால்வாய் பாசனதாரர் விவசாயிகள் ஒருங்கிணைப்பு சங்கத் தலைவர் கொக்குமடை ரமேஷ் கலெக்டரிடம் அளித்துள்ள மனுவில், கல்லணை கால்வாய்கடைமடை பகுதியில் 27 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் விவசாயம் செய்ய்யபட்டு தற்போது அறுவடைக்கு தயாராக உள்ளது. சித்தகன்னி, கூகனூர், கொடிவயல், களக்குடி ,கண்டிச்சங்காடு, அத்தானி, குடிக்காடு, இடையாத்திமங்களம், சிங்கவனம், காரக்கோட்டை, நிலையூர், தினையாகுடி உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் நெல் அறுவடையை தொடங்கியுள்ளனர். எனவே மேற்கூறிய பகுதிகளில் நெல் கொள்முதல் நிலையம் விரைந்து அமைத்திட வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார்.
- அனைத்துக் கட்சியினரும் இணைந்து கொத்தமங்கலத்தை தலைமையிடமாகக் கொண்டு புதிய ஊராட்சி ஒன்றியம் அமைக்க வேண்டும் என்று ஊர் கூட்டம் நடத்தி முடிவு எடுக்கப்பட்டது.
- அனைத்து கட்சியின் பிரமுகர்களும் ஓரணியில் நின்று புதிய ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கான இடத்தினை அடையாளம் கண்டு தூய்மை பணியை தொடங்கி வைத்தனர்.
ஆலங்குடி:
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தாலுகா திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியம் தமிழ்நாட்டில் உள்ள ஊராட்சி ஒன்றியங்களில் பரப்பளவிலும் மக்கள் தொகையிலும் மிகப்பெரிய ஊராட்சி ஒன்றியங்களி ல் ஒன்றாக இருந்து வருகிறதுஇந்த திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியத்தை இரண்டாகப் பிரித்தும் அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியத்தில் இருந்து சில ஊராட்சிகளை பி ரித்தும் புதிய யூனியன் ஒன்றியம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதாக தகவல் வெளியானது.
இது தொடர்பாக புதிதாக அமைய இருக்கும் ஊராட்சி ஒன்றியத்தின் தலைமையிடமாக கொத்தமங்கலம் ஊராட்சியை அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தி தமிழக சுற்றுச்சூழல்துறை அமைச்சரும், ஆலங்குடி சட்டமன்ற உறுப்பினருமான சிவ. வீ. மெய்யநாதனிடம் கொத்தமங்கலத்தைச் சார்ந்த அனைத்துக் கட்சியினர் மற்றும் பொதுமக்களும் மனு அளித்திருந்தனர்.
இது தொடர்பாக கடந்த டிசம்பர் மாதம் கொத்தமங்கலத்தில் நடைபெ ற்ற கொத்தமங்கலம் ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறு மலர்ச்சி திட்டத்தின் தொடக்க விழாவின்போது அமைச்சர் மெய்யநாதன் மேடையிலேயே ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அமைக்க போதுமான இடம் கொத்தமங்கலத்தில் இருந்தால் காட்டுங்கள், ஒன்றியம் அமைப்பது தொடர்பாக முடிவு எடுப்போம் என பேசி இருந்தார்.
இதனையடுத்து கொத்தமங்கலம் கிராமத்தில் உள்ள அனைத்துக் கட்சியினரும் இணைந்து கொத்தமங்கலத்தை தலைமையிடமாகக் கொண்டு புதிய ஊராட்சி ஒன்றியம் அமைக்க வேண்டும் என்று ஊர் கூட்டம் நடத்தி முடிவு எடுக்கப்பட்டது.இப்போது திமுகவைச் சேர்ந்த ஊராட்சி மன்றத் தலைவர் சாந்தி வளர்மதி, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுக்கோட்டை மா வட்டச் செயலாளர் செங்கோடன், அதிமுகவின் திருவரங்குளம் தெற் கு ஒன்றியச் செயலாளர் பாண்டியன் பாஜகவின் புதுக்கோரட்டை கிழக்கு மாவட்ட பொதுச் செயலாளர் பார்த்திபன், மதிமுக ஒன்றிய கவுன்சிலர் விஜயா செல்வராஜ், காங்கிரஸ் மற்றும் நாம்தமிழர் உள்ளிட்ட அனைத்து கட்சியின் பிரமுகர்களும் ஓரணியில் நின்று புதிய ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கான இடத்தினை அடையாளம் கண்டு தூய்மை பணியை தொடங்கி வைத்தனர்.
கொத்தமங்கலம் ஊராட்சியில் கட்சி பாகுபாடு இன்றி எந்த வித கரு த்து வேறுபாடும் இன்றி, ஒற்றுமையுடன் செயல்பட்டு வரும் கொத்த மங்கலம் ஊராட்சி மக்களின் செயல் ஆலங்குடி சுற்றுவட்டார பகுதிக ளில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
- ஆலங்குடி கோர்ட்டில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது
- புது பானையில் பொங்கல் வைத்து சூரிய பகவானை வணங்கினர்
புதுக்கோட்டை
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் உள்ள உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்ற வளாகத்தில் நீதிபதி விஜய பாரதி தலைமையில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது. புது பானையில் பொங்கல் வைத்து சூரிய பகவானை வணங்கினர். அரசு வழக்குறைஞர் கண்ணதாசன் மற்றும் வழக்குறைஞர் சங்க தலைவர் எஸ்.பி.ராஜா, செயலாளர் ராஜ்குமார், பொருளாளர் நாகராஜ், ஒருங்கிணைப்பாளர் சண்முகம் ஆகியோர் முன்னிலையில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது.
- புதுக்கோட்டை சந்தைப் பேட்டையில் புகழ்பெற்ற ஆட்டுச்சந்தை நேற்று இரவே தொடங்கியது.
- கடலூர் மாவட்டம் வேப்பூரில் வாரந்தோறும் வெள்ளிக்கிழமைகளில் ஆட்டுச்சந்தை நடைபெறும்.
புதுக்கோட்டை:
தமிழகத்தில் பண்டிகை மற்றும் திருவிழா காலங்களில் இறைச்சி விற்பனை வழக்கத்தைவிட அதிகரிப்பது வாடிக்கையான ஒன்றாகும். இதற்காக பல்வேறு ஊர்களில் கால்நடை சந்தைகள் கூட்டப்படும். அவ்வாறான காலங்களில் அண்டை மாவட்டங்களை சேர்ந்தவர் தங்களது ஆடு, மாடுகளை விற்பனைக்கு கொண்டு வருவது தொன்று தொட்டு நடந்து வருகிறது.
அந்த வகையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பிரசித்தி பெற்ற கால்நடை சந்தைகள் களை கட்ட தொடங்கியுள்ளன. ஆன்மீக மாதங்களாக கருதப்படும் கார்த்திகை, மார்கழியில் பொதுவாகவே இறைச்சி விற்பனை கடும் சரிவை சந்திக்கும்.
பெரும்பாலானவர்கள் கோவில்களுக்கு பாதயாத்திரை, மாலை அணிந்து விரதம் இருந்து செல்வது போன்றவற்றால் இறைச்சியை தவிர்த்து விடுவார்கள்.
தற்போது அவை நிறைவுறும் நிலையில் இறைச்சி விற்பனை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் முன்னோட்டமாகவும், பொங்கல் பண்டிகையையொட்டியும் ஆங்காங்கே கால்நடை சந்தைகள் போடப்பட்டு வருகிறது.
புதுக்கோட்டை சந்தைப் பேட்டையில் புகழ்பெற்ற ஆட்டுச்சந்தை நேற்று இரவே தொடங்கியது. இங்கு திருச்சி, புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, திண்டுக்கல் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் இருந்து ஆடு வளர்ப்போர் ஏராளமானோர் சந்தைக்கு வந்திருந்தனர்.
கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் விவசாயிகள் சார்பில் வாகனங்களில் அழைத்து வரப்பட்ட பல்வேறு ரகங்களிலான ஆடுகளுக்கு விலை நிர்ணயித்து விற்பனை தொடங்கியது. அதனை வாங்கி செல்வதற்காக வந்திருந்த வியாபாரிகள் பாரம்பரிய முறைப்படி கைகளை துண்டால் மறைத்து விலை பேசினர்.
ஏற்கனவே கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பெருந்தொற்று காரணமாக கால்நடை சந்தைகள் செயல்படாத நிலைக்கு தள்ளப்பட்டு இருந்தன. இதனால் ஆடு, மாடு வளர்ப்போரின் எண்ணிக்கையும் கணிசமாக குறைந்திருந்தது.
இந்த நிலையில் தற்போது எந்தவித கட்டுப்பாடுகளும் இல்லாத நிலை உருவாகி இருப்பதால் கால்நடை வளர்ப்போர் மற்றும் அதனை சார்ந்த தொழிலில் ஈடுபட்டுள்ளோர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். புதுக்கோட்டை சந்தையில் ரூ.8 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரையிலான ஆடுகள் விற்பனை ஆனது. அதன்படி இன்று மட்டும் ரூ.2 கோடிக்கு ஆடுகள் விற்பனையாக வர்த்தகம் நடைபெற்றதாக விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் கூறினர்.
தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற ஆட்டு சந்தைகளில் கிருஷ்ணகிரி மாவட்டம் குண்டாரப் பள்ளியில் வியாழக்கிழமைகளில் நடைபெறும் ஆட்டு சந்தை முக்கியமானதாகும். இயற்கை வளம் சூழ்ந்த அப்பகுதியில் வளர்க்கப்படும் ஆடுகளுக்கு அதிக அளவில் பசுந்தீவனம் வழங்கப்படுவதால் அதன் இறைச்சி சுவை மிகுந்ததாக கருதப்படுகிறது.
மலை ஆடு என்ற ரகத்திலான இதனை வாங்குவதற்காக தமிழகத்தின் உள்ள பல்வேறு மாவட்டங்கள் மட்டுமின்றி கர்நாடகா, ஆந்திராவில் இருந்தும் அதிக எண்ணிக்கையில் வியாபாரிகள் வருகிறார்கள்.
அந்த வகையில் இன்று பொங்கலையொட்டி நேற்று தொடங்கிய ஆட்டு சந்தை இன்று வரை களை கட்டி காணப்பட்டது. குறைந்தபட்சம் ரூ.12 ஆயிரத்தில் இருந்து ரூ.32 ஆயிரம் வரை ஆடுகள் விற்பனையானது. அந்த அடிப்படையில் இந்த குண்டாரப்பள்ளி சந்தையில் ஒரே நாளில் ரூ.8 கோடிக்கு ஆடுகள் விற்பனை நடைபெற்றுள்ளது. இதில் சுமார் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள், வியாபாரிகள் வருகை தந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
கடலூர் மாவட்டம் வேப்பூரில் வாரந்தோறும் வெள்ளிக்கிழமைகளில் ஆட்டுச்சந்தை நடைபெறும். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடலூர், கள்ளக்குறிச்சி, புதுச்சேரி, காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து விவசாயிகள் கொண்டு வந்திருந்த ஆடுகள் ரூ.12 ஆயிரம் முதல் ரூ.35 ஆயிரம் வரை விற்பனையானது.
குறிப்பாக சந்தை தொடங்கிய 5 மணி நேரத்தில் இதுவரை இல்லாத அளவாக ரூ.5 கோடிக்கு ஆடுகள் விற்பனையாகி உள்ளது. இதேபோல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற ஆட்டு சந்தைகளில் ரூ.20 கோடிக்கு ஆடுகள் விற்பனையானது.
- வன்னியன் விடுதியில் ஜல்லிகட்டு நடைபெறும் இடத்தில் வருவாய் கோட்டாச்சியர் ஆய்வு செய்தார்
- 63 ஆண்டுகளாக தற்காலிக வாடிவாசல் அமைக்கப்பட்டு நடை பெற்று வந்த ஜல்லிக்கட்டு இந்தாண்டு புதிய வாடிவாசலில் நடைபெற உள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள வன்னியன்விடுதி கிராமத்தில் மாயன் பெருமாள் கோவில் 63-ம் ஆண்டு ஜல்லிக் கட்டு விழா வரும் 17-ம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக அமைச்சர் சி.வி.மெய்யநாதன் தலைமையில் கடந்த செப்டம்பர் 3-ம் தேதி புதிய வாடி வாசல் கட்டுவதற்கான பூமி பூஜை நடைபெற்றது.
அப்போது இந்தாண்டு புதிய வாடிவாசலில் இருந்து மாடுகள் அவிழ்ந்து விடப்பட்டு ஜல்லிகட்டு நடைபெற வேண்டும். எனவே வாடிவாசல் கட்டுமான பணிகளை விரைந்து முடிக்க அரசு அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். அதன்படி வாடிவாசல் கட்டுமான பணி நிறைவடைந்தது. இதனால் 63 ஆண்டுகளாக தற்காலிக வாடிவாசல் அமைக்கப்பட்டு நடை பெற்று வந்த ஜல்லிக்கட்டு இந்தாண்டு புதிய வாடிவாசலில் நடைபெற உள்ளது.
இந்தாண்டு ஜல்லிகட்டிற்கான ஏற்பாடுகளை வருவாய் கோட்டாட்சியர் முருகேசன், ஆலங்குடி வட்டாட்சியர் செந்தில் நாயகி உள்ளிட்ட வருவாய்த்துறையினர் வாடிவாசல் ஜல்லிக்கட்டு நடைபெறும் இடத்தை ஆய்வு செய்தனர்.
- அரசு பள்ளி தலைமையாசிரியை வீட்டில் 15 பவுன் நகை-பணம் திருட்டு போனது
- இதுகுறித்து விசாரித்து கைரேகை பிரிவு போலீசார் தடயங்களை சேகரித்து வருகின்றனர்.
பொன்னமராவதி,
புதுக்கோட்டை மாவ ட்டம் பொன்னமராவதி வீட்டுவசதி வாரியக்குடியிருப்பு பகுதியில் வசித்து வருபவர் முத்துமேகலா(வயது52). இவர் கீழவேகுப்பட்டி அரசு தொடக்கப்பள்ளியில் தலைமையாசிரியராக பணிபுரிந்து வருகிறார். கணவர் இறந்தநிலையில் மகள் மற்றும் மகனுடன் வசித்து வருகிறார். இந்நிலையில் இவர் அதே பகுதியில் வசித்துவரும் சகோதரி வீட்டிற்கு சென்றுவிட்டார். பின்னர் வீடு திரும்பியபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 15 பவுன் தங்கநகை மற்றும் ரொக்கம் ரூ.10 ஆயிரம் திருட்டு போனது தெரியவந்தது.
இந்த சம்பவம் குறித்து உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் இதுகுறித்து விசாரித்து கைரேகை பிரிவு போலீசார் தடயங்களை சேகரித்து வருகின்றனர். ஏற்கனவே வேந்தன்பட்டி தாய் மகன் கொலை வீட்டில் திருட்டு, பொன்னமராவதி வலை யபட்டி வீட்டில் திருட்டு, அதனைத் தொடர்ந்து பொன்னமராவதி ஹவுசிங் போர்டில் தலைமையாசிரியர் வீட்டில் திருட்டு போன்ற சம்பவங்கள் மக்கள் மத்தியில் பயத்தை ஏற்படுத்தி வருவதால் காவல்துறையினர் விரைந்து குற்றவாளிகளை பிடிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் வலியுறுத்தி உள்ளனர்.
- கறம்பக்குடி தாலுக்கா அலுவலகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்
- சாலை மறியல் செய்ய முயன்ற கம்யூனிஸ்ட் கட்சியினரை போலீசார் மற்றும் வருவாய் துறையினர் பேச்சுவார்த்தைக்கு தாலுக்கா அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றனர்.
கறம்பக்குடி:
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி ஒன்றியம் கரு தெற்கு தெரு ஊராட்சியில் குடிநீர் பிரச்சினை, 100 நாள் வேலையை முழுமையாக தர வேண்டும், சாலை வசதி செய்து தர வேண்டும் மற்றும் ஊராட்சியில் உள்ள நடுநிலைப் பள்ளியில் கட்டிடத்தை புதுப்பித்து தர வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கறம்பக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு சாலை மறியல் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இதன்படி சாலை மறியல் செய்ய முயன்ற கம்யூனிஸ்ட் கட்சியினரை போலீசார் மற்றும் வருவாய் துறையினர் பேச்சுவார்த்தைக்கு தாலுக்கா அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றனர். ஆனால் பேச்சுவார்த்தைக்கு ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் அங்கு யாரும் வரவில்லை. இதனால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கறம்பக்குடி தாலுக்கா அலுவலக நுழைவுவாயில் முன்பு அமர்ந்து காத்திருப்பு போராட்டம் செய்தனர். அப்போது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.
இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து கறம்பக்குடி வட்டாட்சியர் இராமசாமி, கறம்பக்குடி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கருணாகரன், திலகவதி, ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து காத்திருப்பு போராட்டம் கைவிடப்பட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கலைந்து சென்றனர்.
- புதுக்கோட்டையில் பொங்கல் பானை விற்பனை நடைபெறுகிறது
- கிராமங்களில் பழமை மாறாமல் மண்ணால் செய்யப்பட்ட பொங்கல் பானைகளில் பொங்கல் வைத்து வழிபடுகின்றனர்
புதுக்கோட்டை:
தமிழகத்தில் மிக முக்கியமான விழாவான பொங்கல் திருநாளை ஒவ்வொரு தமிழர்களும் தங்களது இல்லங்களில் சிறப்பாக கொண்டாடுவார்கள். பண்டைக் காலங்களில் அனைவரும் பொங்கல் திருநாளில் மண்பானையால் செய்யப்பட்ட பொங்கல் பானையை பயன்படுத்தி வந்தனர். தற்சமயம் நகரங்களில் பொங்கல் பானை வைத்து பொங்கலிடுவது குறைந்து சில்வர் மற்றும் பித்தளை பாத்திரங்களை வைத்து வழிபட்டு வருகின்றனர்.
ஆனால் இன்றும் கிராமங்களில் பழமை மாறாமல் மண்ணால் செய்யப்பட்ட பொங்கல் பானைகளில் பொங்கல் வைத்து வழிபடுகின்றனர். பொங்கல் திருநாளை முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை பகுதியில் 10க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் ஆயிரக்கணக்கான அடுப்பு, மற்றும் பொங்கல் பானைகளை விற்பனைக்கு கொண்டு வந்துள்ளனர். அதனை பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த பெண்கள் மகிழ்ச்சியுடன் வாங்கி செல்கின்றனர்.






