search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    புதுக்கோட்டையில் பொங்கல் பானை விற்பனை ஜோர்
    X

    புதுக்கோட்டையில் பொங்கல் பானை விற்பனை ஜோர்

    • புதுக்கோட்டையில் பொங்கல் பானை விற்பனை நடைபெறுகிறது
    • கிராமங்களில் பழமை மாறாமல் மண்ணால் செய்யப்பட்ட பொங்கல் பானைகளில் பொங்கல் வைத்து வழிபடுகின்றனர்

    புதுக்கோட்டை:

    தமிழகத்தில் மிக முக்கியமான விழாவான பொங்கல் திருநாளை ஒவ்வொரு தமிழர்களும் தங்களது இல்லங்களில் சிறப்பாக கொண்டாடுவார்கள். பண்டைக் காலங்களில் அனைவரும் பொங்கல் திருநாளில் மண்பானையால் செய்யப்பட்ட பொங்கல் பானையை பயன்படுத்தி வந்தனர். தற்சமயம் நகரங்களில் பொங்கல் பானை வைத்து பொங்கலிடுவது குறைந்து சில்வர் மற்றும் பித்தளை பாத்திரங்களை வைத்து வழிபட்டு வருகின்றனர்.

    ஆனால் இன்றும் கிராமங்களில் பழமை மாறாமல் மண்ணால் செய்யப்பட்ட பொங்கல் பானைகளில் பொங்கல் வைத்து வழிபடுகின்றனர். பொங்கல் திருநாளை முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை பகுதியில் 10க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் ஆயிரக்கணக்கான அடுப்பு, மற்றும் பொங்கல் பானைகளை விற்பனைக்கு கொண்டு வந்துள்ளனர். அதனை பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த பெண்கள் மகிழ்ச்சியுடன் வாங்கி செல்கின்றனர்.


    Next Story
    ×