என் மலர்tooltip icon

    புதுக்கோட்டை

    • டாஸ்மாக் பாரில் தகராறு
    • 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை காமராஜபுரத்தை சேர்ந்தவர் சசிகுமார் (வயது 33). இவருக்கும், புதுக்கோட்டையை சேர்ந்த குணா என்ற குணசேகரனுக்கும் (25). டாஸ்மாக் கடையில் மது அருந்தும்போது தகராறு ஏற்பட்டுள்ளது. இதை தொடர்ந்து குணா மற்றும் அவரது நண்பர்கள் சேர்ந்து அரிவாளால் வெட்டியதில் காயமடைந்த சசிகுமார் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது குறுத்து குணா உட்பட அவரது நண்பர்கள் 5 பேர் மீது புதுக்கோட்டை நகர போலீசார் வழக்கு பதிவு செய்து அவர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பொங்கலையொட்டி ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும்
    • இளைஞர்களுக்குள் கடும் போட்டி நிலவியது

    புதுக்கோட்டை:

    பொங்கல் பண்டிகையை முன்னிட்டு புதுக்கோட்டை - தஞ்சை மாவட்ட ங்களின் எல்லை கிராமங்களான மேற்பனைக்காடு, செரியலூர், வேம்பங்குடி, பைங்கால், ஆவணம், குருவிக்கரம்பை, சனாகரை, குலமங்கலம், நெயாவத்தெளி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் போர் தேங்காய் எனப்படும் தேங்காய் உடைக்கும் போட்டி நடைபெறுவது வழக்கம். அதே போல் இந்த ஆண்டும் போட்டிகள் நட ந்து வருகிறது.

    எதிர் எதிர் திசையில் இருவர் தங்கள் கைகளில் தேங்காய்களை நேருக்கு நேராக மோதிக் கொள்வதும், இந்த மோதலில் உடையும் தேங்காயை மோதி உடைத்தவர் எடுத்துக் கொள்வார். இந்த மோதலுக்கான ஒரு போர் தேங்காய் ரூ.300 முதல் ரூ.500 வரை விலை கொடுத்து வாங்கி வருகின்றனர். ஒரே தேங்காயயை ெ காண்டு பல தேங்காய்களை உடைத்து செல்பவர்களும் உண்டு. இதற்கென்றே தனித்துவம் வாய்ந்த தேங்காய்களை பொங்கலுக்கு மூன்று மாதங்களுக்கு முன்பே போட்டியில் பங்கேற்கும் வீரர்கள் வா ங்கி தயார் செய்துவிடுவார்கள்.

    இந்த போட்டியில் பல்வேறு கிராமங்களை சேர்ந்த இளைஞர்கள் பைகளில் தேங்காய்களுடன் வந்து விளையாட்டு போட்டியில் கலந்து கொண்டு தேங்காய்களை நேருக்கு நேர் மோத வைத்தனர்.

    இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

    • விளையாடிக் கொண்டிருந்த போது சம்பவம்
    • 3 வயது சிறுவன் கிணற்றில் விழுந்து உயிரிழந்தார்

    புதுக்கோட்டை:

    பொன்னமராவதி அருகே உள்ள சடையம்பட்டி படுதினிபட்டியை சேர்ந்தவர் அழகப்பன். இவருடைய மூன்று வயது மகன் ராகுல். வீட்டின் அருகே விளையாடிக்கொண்டிருந்த ராகுல் திடீரென மாயமானதை கண்டு உறவினர்கள் அதிர்ச்சியடைந்து அக்கம் பக்கத்தில் தேடினர். எங்கு தேடியும் சிறுவன் கிடைக்காததால் வீட்டின் அருகே உள்ள அவர்களுக்கு சொந்தமான கிணற்றில் சிறுவன் தவறி விழுந்து இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பெயரில் தீயணைப்பு துறை மற்றும் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறை நிலைய அலுவலர் சந்தானம் தலைமையிலான தீயணைப்பு படை வீரர்கள் கிணற்றுள் இறங்கி சிறுவன் உடலை மீட்டு காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • குளிக்க சென்ற போது சம்பவம்
    • ணற்றில் மூழ்கி வாலிபர் உயிரிழந்தார்

    புதுக்கோட்டை:

    விராலிமலை அருகே நம்பம்பட்டியை சேர்ந்த முருகேசன் மகன் கோபாலகிருஷ்ணன் (26).இவர் அருகில் உள்ள கிணற்றில் குளித்துக் கொண்டிருந்தார். அப் போது நீரில் மூழ்கி மூச்சு திணறி இறந்ததாக கூறப்படுகிறது. குளிக்க சென்றவர் நீண்ட நேரம் ஆகியும் திரும்பி வராததை தொடர்ந்து பெற்றோர்கள் தேடும்போது கிணற்றுக்கு மேலே அவரது உடை இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர் .இது குறித்து தீயணைப்பு நிலையத்திற்கு அளித்த தகவலை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் கிணற்றுக்குள் இறங்கி சகதியில் சிக்கியிருந்த கோபாலகிருஷ்ணனின் உடலை மீட்டு போலீசாரிடம் ஒப்படைத்தனர். இச்சம்பவம் குறித்து விராலிமலை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்
    • வாகன விபத்தில் 2 வாலிபர்கள் பலியானார்கள்

    புதுக்கோட்டை :

    புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை வடக்கு தெருவை சேர்ந்தவர் இளங்கோ மகன் கிருஷ்ணகுமார் (வயது35) இவர் விராலிமலை மதுரை தேசிய நெடுஞ்சாலையில் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். விராலூர் பெட்ரோல் பங்க் அருகே சென்றபோது எதிரே வந்த இருசக்கர வாகனம் இவர் மீது மோதியது. இதில் பலத்த காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் அதே இடத்தில் துடிதுடித்து பரிதாபமாக கிருஷ்ணகுமார் உயிரிழந்தார்.

    இதேபோல் முல்லையூர் பகுதியை சேர்ந்த சாமிக்கண்ணு மகன் பால்ராஜ் (21). இவர் இருசக்கர வாகனத்தில் விராலிமலை- கீரனூர் சாலையில் சென்று கொண்டிருந்தார். தாயகம் பள்ளி அருகே சென்ற போது எதிரே வந்த இருசக்க வாகனம் இவர் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே பால்ராஜ் துடிதுடித்து உயிரிழந்தார். தகவலறிந்த விராலிமலை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இரண்டு உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • வடகாடு-மாங்காடு ஏவி பாய்ஸ் அணியினர் முதல் பரிசு
    • வழுக்கு மரம் ஏறும் போட்டி நடைபெற்றது

    புதுக்கோட்டை:

    பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஆலங்குடி பகுதிகளில் பல்வே று கிராமங்களில் வழுக்கு மரம் ஏறும் போட்டி பாரம்பரியமாக நடத்த ப்பட்டு வருவ து வழக்கம். அதன்படி நேற்று பொங்கல் விழாவை முன் னிட்டு மாங் காடு கிராமத் தில் அப்பகுதி இளைஞர்களால் நடத்தப்ப ட்ட வழுக்கு மரம் ஏறும் போட்டியில் சுமார் 40 அடி உயரம் கொண்ட கிரீ ஸ்,விளக் கெண்ணெய், சோற்றுக்கற்றாழை மற்றும் வழுக்கும் தன் மை கொண்ட எண்ணெய்கள் ஊற்றப்பட்ட மரம் போட்டிக்காக அமை க்கப்பட்டிருந்தது. இந்த போட்டியில் ஒரு குழுவுக்கு ஐந்து பேர் வீதம் 4 குழுக்களை சேர்ந்த இளைஞர்கள் கலந்து கொண்டனர். போட்டியின் இறுதியில் மிகுந்த பார்வையாளர்களின் உற்சாகத்தோடு வடகாடு-மாங்காடு ஏவி பாய்ஸ் அணியினர் வெற்றி பெற்று 5000 ரூபாய் பரிசை வென்றனர்.

    • குடும்ப தகராறில் நடந்த விபரீதம்
    • விவசாயி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    புதுக்கோட்டை:

    ஆலங்குடி அருகே மைக்கேல்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் கண்ணன் (வயது 59). இவருக்கு மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கணவன், மனைவிக்கிடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்படுமாம். சம்பவத்தன்று ஏற்பட்ட தகராறில் மனவிரக்தியடைந்த கண்ணன். மது போதையில் வீட்டில் உள்ள மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் ஆலங்குடி போலீசாருக்கு தகவல் தெரிந்தனர். விரைந்து வந்த காவல் ஆய்வாளர் அழகம்மை மற்றும் போலீசார் உடலை மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். பின்னர் இச்சம்பவம் குறித்து பெறப்பட்ட புகாரின் பேரில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மகள் சுந்தராம்பாளை, நம்பன்பட்டியை சேர்ந்த பிச்சை பழனி என்பவருக்கு கடந்த 18 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொடுத்தார்.
    • செல்லத்துரை தனது மகளுக்கு இந்த ஆண்டும் ஒரு கட்டு கரும்பு, தேங்காய், பச்சரிசி, வெல்லம், பூ உள்ளிட்ட பொருட்களை கொண்டு சென்றார்.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே வடக்கு கொத்தக்கோட்டை கிராமத்தை சேர்ந்தவர் செல்லத்துரை (வயது 78). விவசாயமும், காய்கறி வியாபாரமும் செய்து வருகிறார். இவரது மனைவி அமிர்தவல்லி. இவர்களது மகள் சுந்தராம்பாளை, கொத்தக்கோட்டையில் இருந்து 17 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள நம்பன்பட்டியை சேர்ந்த பிச்சை பழனி என்பவருக்கு கடந்த 18 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொடுத்தார். இவர்களுக்கு திருமணம் முடிந்து சில ஆண்டுகள் குழந்தைகள் இல்லை. பின்னர் இவர்களுக்கு இரட்டை குழந்தைகள் பிறந்தன. அவர்களுக்கு 8 வயது ஆகின்றது. அன்றைய தினம் முதல் 9 ஆண்டுகளாக பொங்கல் சீர்வரிசை பொருட்களை செல்லத்துரை வழங்கி வருகிறார்.

    செல்லத்துரை தனது மகளுக்கு இந்த ஆண்டும் ஒரு கட்டு கரும்பு, தேங்காய், பச்சரிசி, வெல்லம், பூ உள்ளிட்ட பொருட்களை கொண்டு சென்றார். 78 வயதிலும் கையால் பிடிக்காமல் ஒருகட்டு கரும்பை தலையில் வைத்து சுமந்தநிலையில், 17 கி.மீ. தூரம் சைக்கிளை ஓட்டிச் சென்று மகளுக்கு சீர்வரிசை பொருட்களை வழங்கினார். இதனை அந்த வழியாக சென்றவர்கள் ஆச்சரியத்துடன் பார்த்து சென்றனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இந்த விவகாரம் தொடர்பாக 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
    • குற்றவாளிகளை விரைவில் பிடிக்க ஏதுவாக விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளதாக டிஜிபி தெரிவித்துள்ளார்.

    சென்னை:

    புதுக்கோட்டை மாவட்டம் முட்டுக்காடு ஊராட்சி வேங்கைவயலில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் கடந்த மாதம் 26-ம்தேதி மனிதக்கழிவு கலந்தது தொடர்பாக புகார் வந்தது. இதுகுறித்து வெள்ளனூர் போலீசார் விசாரணை நடத்தினர்.

    விசாரணையை தொடர்ந்து, இறையூர் அய்யனார் கோயிலுக்குள் வேங்கைவயல் பகுதி மக்களை செல்லவிடாமல் தடுத்தது, இரட்டைக்குவளை முறை பின்பற்றப்பட்டது குறித்து 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

    இந்த சம்பவத்தில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி உத்தரவிட்டுள்ளார். விசாரணையை தீவிரப்படுத்தி குற்றவாளிகளை விரைவில் பிடிக்க ஏதுவாக விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளதாக டிஜிபி தெரிவித்துள்ளார்.

    • வாகன சோதனையில் ஈடுபட்டனர்
    • புகையிலை பொருட்கள் கடத்தியவர் கைது செய்யப்பட்டார்.

    புதுக்கோட்டை

    அறந்தாங்கி அருகே நாகுடி போலீசார் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த நாகுடி பகுதியை சேர்ந்த பரோஷ்கானின்(வயது 38) மோட்டார் சைக்கிளை சோதனை செய்தனர். அதில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை இருந்தது தெரியவந்தது. இதையடுத்து ரூ.35 ஆயிரத்து 910 மதிப்புள்ள புகையிலை பொருட்களை நாகுடி போலீசார் பறிமுதல் செய்து, பரோஷ்கானை கைது செய்தனர்.

    • தகாத வார்த்தையில் அலுவலகத்தில் பேசியதாக
    • சுகாதாரத்துறை ஊழியர் கைது செய்யப்பட்டார்.

    புதுக்கோட்டை

    புதுக்கோட்டை சுகாதாரத்துறை துணை இயக்குனர் ராம்கணேஷ், கணேஷ்நகர் போலீசில் ஒரு புகார் அளித்தார். அதில், தனது அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக பணியாற்றும் கலியமூர்த்தி (வயது 55) குடிபோதையில் தகாத வார்த்தையில் அலுவலகத்தில் பேசியதாக கூறியிருந்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கலியமூர்த்தியை கைது செய்து பின்னர் பிணையில் விடுவித்தனர்.

    • போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்
    • ரூ.2 லட்சம் புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

    புதுக்கோட்டை

    புதுக்கோட்டை டவுன் போலீசார், அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகப்படும் படி சுற்றிதிரிந்த 3 பேரை பிடித்தனர். இதில் அவர்கள் ஒரு வீட்டில் புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து அந்த வீட்டில் போலீசார் சோதனை நடத்தினர். இதில் ரூ.2 லட்சத்து 20 ஆயிரம் மதிப்புள்ள 125 கிலோ புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இது தொடர்பாக காமராஜபுரத்தை சேர்ந்த ஆசாத் (வயது 23), திருச்சி ஆழ்வார்தோப்பை சேர்ந்த முகமது ஹனிபா(40) மற்றும் 18 வயது சிறுவன் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். ஒரு மொபட், 2 செல்போன்களை கைப்பற்றினர்.

    ×