என் மலர்
உள்ளூர் செய்திகள்

அரசு பள்ளி தலைமையாசிரியை வீட்டில் 15 பவுன் நகை-பணம் கொள்ளை
- அரசு பள்ளி தலைமையாசிரியை வீட்டில் 15 பவுன் நகை-பணம் திருட்டு போனது
- இதுகுறித்து விசாரித்து கைரேகை பிரிவு போலீசார் தடயங்களை சேகரித்து வருகின்றனர்.
பொன்னமராவதி,
புதுக்கோட்டை மாவ ட்டம் பொன்னமராவதி வீட்டுவசதி வாரியக்குடியிருப்பு பகுதியில் வசித்து வருபவர் முத்துமேகலா(வயது52). இவர் கீழவேகுப்பட்டி அரசு தொடக்கப்பள்ளியில் தலைமையாசிரியராக பணிபுரிந்து வருகிறார். கணவர் இறந்தநிலையில் மகள் மற்றும் மகனுடன் வசித்து வருகிறார். இந்நிலையில் இவர் அதே பகுதியில் வசித்துவரும் சகோதரி வீட்டிற்கு சென்றுவிட்டார். பின்னர் வீடு திரும்பியபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 15 பவுன் தங்கநகை மற்றும் ரொக்கம் ரூ.10 ஆயிரம் திருட்டு போனது தெரியவந்தது.
இந்த சம்பவம் குறித்து உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் இதுகுறித்து விசாரித்து கைரேகை பிரிவு போலீசார் தடயங்களை சேகரித்து வருகின்றனர். ஏற்கனவே வேந்தன்பட்டி தாய் மகன் கொலை வீட்டில் திருட்டு, பொன்னமராவதி வலை யபட்டி வீட்டில் திருட்டு, அதனைத் தொடர்ந்து பொன்னமராவதி ஹவுசிங் போர்டில் தலைமையாசிரியர் வீட்டில் திருட்டு போன்ற சம்பவங்கள் மக்கள் மத்தியில் பயத்தை ஏற்படுத்தி வருவதால் காவல்துறையினர் விரைந்து குற்றவாளிகளை பிடிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் வலியுறுத்தி உள்ளனர்.






