என் மலர்
புதுக்கோட்டை
- ஈரோடு தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என கார்த்திக் சிதம்பரம் பேட்டி அளித்தார்
- பெரும்பாலும் பா.ஜ.க. வின் பார்வை மேல்தட்டு மக்களை சார்ந்தே உள்ளது என்றார்
பொன்னமராவதி:
பொன்னமராவதி வர்த்தக சங்க மஹாலில் சிவகங்கை புதுக்கோட்டை மாவட்டங்கள் தமிழ்நாடு ஐஎன்டியூசி கட்டுமானம் அமைப்புசாரா மற்றும் அனைத்து பிரிவை சார்ந்த தொழிலாளர்கள் 17-வது மண்டல மாநாடு நடைபெற்றது. ஐஎன்டியூசி தமிழ்நாடு தலைவர் ஜெயநாதன் தலைமை வைத்தார். செயல் தலைவர்கள் மனோகரன், கதிர்வேல், குப்புச்சாமி, ஆதிகேசவன், முருகேசன், பொதுச்செயலாளர் களஞ்சியம் ஆகியோர் முன்னிலை வைத்தனர். பொதுச் செயலாளர்கள் அருண் பிரசாத், பலராமன், பெருமாள்சாமி, கல்யாண குமார், புவனேஸ்வரி ,நஞ்சப்பன், மாநிலத் துணைத் தலைவர் துளசிதாஸ், திருமயம் முன்னாள் எம்.எல்.ஏ. ராமசுப்புராம், மூத்த துணை தலைவர் சீனிவாசன், பொது செயலாளர் சேவியர் ஆகியோர் பேசினர். சிறப்பு விருந்தினராக சிவகங்கை தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் பேசினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, ஈரோடு இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ். இளங்கோவன் 50ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறுவார். பேனா சிலையை உடைப்பது சாதனை ஆகாது. பேனா எழுதிய எழுத்தை விட எல்லாரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய சிறந்த கருத்தை நான் கூறுவேன் என்று சீமான் சொன்னால் அதை ஏற்றுக்கொள்ள முடியாது.பெரும்பாலும் பா.ஜ.க. வின் பார்வை மேல்தட்டு மக்களை சார்ந்தே உள்ளது.ஒரே ஒரு பட்ஜெட் நாட்டின் தலையெழுத்தை தீர்மானிக்காது. பங்கு சந்தை மீது உள்ள நம்பிக்கை குறையும் போதெல்லாம் தங்க விலை உயர்வு இருக்கும்.அதானி பொய்யாக நிறுனத்தை உருவாக்கினார். என்பதை விசாரணை மூலமாகத்தான் தெளிவுபடுத்த வேண்டும்.பாராளுமன்ற கூட்டுக்குழு மூலமாக உண்மையை தெளிவுபடுத்த வேண்டும்.என்றார்.இதில் காங்கிரஸ் பொதுக்குழு உறுப்பினர் பழனியப்பன், வட்டார தலைவர் கிரிதரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- புதுக்கோட்டை நகரில் ரூ.9 கோடியில் நிறுவப்பட்டுள்ள பூங்காவுக்குள் 10 அடி உயரத்தில் பேனா சிலை கட்டபட்டுள்ளது
- வருகின்ற மார்ச் மாதம் திறப்பு விழா
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை நகரில் கலைஞா் கருணாநிதி அரசு மகளிா் கல்லூரிக்கு எதிா்புறத்தில் இருந்த 5 ஏக்கா் காலியிடத்தில், தற்காலிகப் பேருந்து நிலையம் அவ்வப்போது செயல்பட்டு வந்தது. சா்க்கஸ், பொருள்காட்சிகளும் நடத்தப்பட்டு வந்தன.இந்த இடத்தில் நகராட்சியின் சாா்பில் பிரம்மாண்டமான பூங்கா கட்டுவதற்கான பணிகள் ஒருங்கிணைந்த நகா்ப்புற வளா்ச்சித் திட்டத்தின் கீழ் ரூ. 9 கோடி மதிப்பில் கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கின.நடைப்பயிற்சி, ஸ்கேட்டிங், சைக்கிளிங் பாதைகள், சிறுவா்களுக்கான அறிவியல், கணிதப் பூங்காக்கள், உள்வட்ட திறந்தவெளி பூங்கா உள்ளிட்டவை இங்கே அமைக்கப்படுகின்றன.இந்தப் பூங்காவை ஆய்வு செய்த கலெக்டர் கவிதா ராமு வரும் மாா்ச் மாதத்தில் திறக்கப்படும் என்றும் அறிவித்தாா்.இந்த நிலையில், பூங்காவின் நுழைவாயில் அருகே 10 அடி உயரத்தில் பேனா சிலை வைக்கப்பட்டிருக்கிறது. சுற்றிலும் நீரூற்று அமைக்கப்பட்டு வருகிறது.ஏற்கெனவே, முன்னாள் முதல்வா் கருணாநிதியின் பேனாவை, சென்னை கடற்பகுதியில் வைக்க தமிழக அரசு முயற்சித்து வருவதும் அதற்கு சூழலியலாளா்கள் எதிா்ப்பு தெரிவித்து பேசுபொருளாகியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.
- பா.ஜ.க. தேசிய செயலாளர் கைது செய்யபட்டார்
- அவருடன்சென்ற கட்சி நிர்வாகிகள் 13 பேரையும் கைதுசெய்து நாகுடி தனியார் மண்டபத்திற்கு அழைத்து சென்றனர்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே நாகுடியில் பா.ஜ.க. சார்பில் பாராளுமன்றத் தேர்தல் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பா.ஜ.க. சிறுபான்மை அணி தேசிய செயலாளர் வேலூர் இப்ராஹிம் கலந்து கொண்டு ஆலோசனை வழங்கினார். ஆலோசனைக் கூட்டத்தினை தொடர்ந்து கோட்டைப்பட்டினத்தில் உள்ள கட்சி நிர்வாகியை சந்திப்பதற்காக புறப்பட்டு உள்ளார். அதற்கு கோட்டைப்பட்டினம் பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படு கிறது. அதனையடுத்து வேலூர் இப்ராஹிம்மை அங்கு செல்லக் கூடாது என போலீசார் தடுத்துள்ளனர். ஆனால் தடுப்பையும் மீறி இப்ராஹிம் கட்சி நிர்வாகிகளுடன் காரில் புறப்பட்டுச் சென்றுள்ளார். இப்ராஹிம் சென்றால், கோட்டைப்பட்டினம் கடற்கரையோர கிராம பகுதியில் கலவரம்ஏதும் ஏற்பட்டுவிடக்கூடாது என்ற நோக்கில் போலீசார் அவரை பாதி வழியிலேயே தடுத்தி நிறுத்தினர். பின்னர் அவரிடம் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது. இதில் உடன்பாடு ஏற்படாததை தொடர்ந்து அவரை போலீ சார் கைது செய்தனர். மேலும் அவருடன்சென்ற கட்சி நிர்வாகிகள்13 பேரையும் கைதுசெய்து நாகுடி தனியார் மண்ட பத்திற்கு அழைத்து சென்ற னர். ேபாலீசார் தடுப்பை மீறிச் சென்ற பா.ஜ.க. தேசிய செயலாளர்வேலூர் இப்ராஹிம் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
- ஆலங்குடி அருகே பெண் மாயமானார்
- இவர் கடந்த 9ம் தேதி கல்லூரி சென்று வருவதாக கூறி சென்றவர் வீடு திரும்பவில்லை.
ஆலங்குடி:
ஆலங்குடி அருகே உள்ள குரும்பி வயலைச்சேர்ந்த சிவசாமி மகள் செந்தூரதேவி (வயது 19). இவர் புதுக்கோட்டை தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு பி.எஸ்.சி. படித்து வருகிறார். இவர் கடந்த 9ம் தேதி கல்லூரி சென்று வருவதாக கூறி சென்றவர் வீடு திரும்பவில்லை. பெண்ணின் பெற்றோர் உறவினர்களிடம் தேடிப் பார்த்தும் கிடைக்காததால் வடகாடு போலீசில் சிவசாமி மகன் செந்தூரபாண்டியன் கொடுத்த புகார் கொடுத்தனர். புகாரின் பேரில் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் வழக்கு பதிவு செய்து காணாமல் போன கல்லூரி பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.
- ஆலங்குடி மகளிர் காவல் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம் அடைந்தனர்
- இருவரும் வீட்டை விட்டு ஓடி ஆலங்குடி அருகே உள்ள கீழாத்தூர் நாடியம்மாள் கோவிலில் திருமணம் செய்து கொண்டனர்
ஆலங்குடி:
ஆலங்குடி கே.வி.எஸ். தெருவில் வசித்து வருபவர் ராமு மகன் வீராச்சாமி (வயது 32). இவர் படித்த பட்டதாரி ஆவார். மேலும் இவர் புதுக்கோட்டையில் ஜவுளி கடை வைத்து தொழில் செய்து வருகிறார். இவரும் புதுக்கோட்டை சந்தைப்பேட்டை தெற்கு பகுதியை சேர்ந்த கணேசன் மகள் முருகஜோதி (23) என்பவரும் கடந்த சில மாதங்களாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இருவரும் வீட்டை விட்டு ஓடி ஆலங்குடி அருகே உள்ள கீழாத்தூர் நாடியம்மாள் கோவிலில் திருமணம் செய்து கொண்டு ஆலங்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். இதையடுத்து அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் உஷா நந்தினி இரு குடும்பத்தாருக்கும் தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து வந்த இரு குடும்பத்தாரும் சமரசமாக பேசிக்கொண்டனர். பின்னர் இரு குடும்பத்தார்களும் போலீசாரிடம் சமரசம் எழுதிக் கொடுத்தனர். பின்னர் தஞ்சம் அடைந்த காதல் ஜோடிகளை இன்ஸ்பெக்டர் உஷா நந்தினி மணமக்களை மணமகன் வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.
- விசாரணை முடிவில் ஆசிரியர் ரமேஷ் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது உறுதி செய்யப்பட்டது.
- பாலியல் புகாரில் கைதான ஆசிரியர் ரமேசை சஸ்பெண்டு செய்து கல்வி அதிகாரி உத்தரவிட்டுள்ளார்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசலில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு அன்னவாசல், இலுப்பூர் உள்ளிட்ட சுற்று வட்டார கிராமப்பகுதிகளை சேர்ந்த சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகிறார்கள்.
இந்த பள்ளியில் உதவி தலைமை ஆசிரியராக வேலை பார்த்து வருபவர் ரமேஷ் (வயது 45). வேதியியல் ஆசிரியராகவும் இருந்து மாணவ, மாணவிகளுக்கு வகுப்புகள் எடுத்து வருகிறார். சபல புத்தி கொண்ட இவர் மாணவிகளிடம் அதிக நெருக்கம் காட்டி வந்துள்ளார். ஆசிரியர் மட்டுமின்றி உதவி தலைமை ஆசிரியர் என்ற அந்தஸ்தில் இருந்ததால் மாணவிகள் அச்சத்தில் அவரது நடவடிக்கைகளை சகித்துக் கொண்டு வந்துள்ளனர்.
இந்த நிலையில் ஆசிரியர் ரமேஷ் கடந்த மாதம் 7-ந்தேதி அதே பள்ளியில் பயிலும் மூன்று மாணவிகள் மற்றும் இரண்டு மாணவர்கள் என 5 பேரை சுற்றுலா அழைத்து செல்ல முடிவெடுத்தார்.
மாணவிகளை மட்டும் அழைத்து சென்றால் சந்தேகம் ஏற்படும் என்று கருதி, 2 மாணவர்களையும் அழைத்துக்கொண்டு, பள்ளி நிர்வாகம் மற்றும் பெற்றோருக்கு தெரியாமல் கொடைக்கானலுக்கு தனது காரில் சுற்றுலாவுக்கு அழைத்து சென்றுள்ளார்.
பின்னர் அங்கு இரண்டு அறைகளை வாடகைக்கு எடுத்த ஆசிரியர் ரமேஷ், அதில் ஒரு அறையில் தானும், மற்றொரு அறையில் மாணவ, மாணவிகளையும் தங்க வைத்துள்ளார். பின்னர் தன்னுடைய அறைக்கு மாணவி ஒருவரை அழைத்து அவருக்கு பாலியல் தொல்லைகள் அளித்துள்ளார். உனக்கு வேண்டியவற்றை வாங்கி தருவதாகவும், மதிப்பெண்களை உயர்த்தி வழங்குவதாகவும் ஆசை வார்த்தைகளை கூறியுள்ளார்.
இதையடுத்து கொடைக்கானலில் இருந்து ஊர் திரும்பும் வழியில் அங்கு நடந்த சம்பவங்கள் குறித்து யாரிடமும் கூறக்கூடாது என்று தெரிவித்ததோடு, கொடைக்கானலில் எடுத்த செல்போன் படங்களை அழித்து விட வேண்டும் என்றும் அறிவுறுத்தி உள்ளார்.
இருந்தபோதிலும் அச்சம் தவிர்த்த மாணவி ஒருவர் சுற்றுலா சென்ற இடத்தில் ஆசிரியர் ரமேஷ் தன்னிடம் பாலியல் சீண்டல்களில் ஈடுபட்டதாக தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். இதனால் அதிர்ந்துபோன அவர்கள் முதலில் பள்ளி நிர்வாகத்திடம் வந்து புகார் கூறி முறையிட்டுள்ளனர்.
அப்போதுதான் பள்ளி நிர்வாகத்தினருக்கே மாணவ, மாணவிகளை அழைத்துக்கொண்டு ஆசிரியர் கொடைக்கானல் சுற்றுலா சென்ற தகவல் தெரிந்துள்ளது. இதுபற்றி ஆசிரியர் ரமேஷிடம் பள்ளி நிர்வாகத்தினர் கேட்டபோது, தான் எந்த விதத்திலும் ஒழுங்கீனமாக நடக்கவில்லை என்று கூறியுள்ளார்.
அதன் பிறகு சுற்றுலா அழைத்துச் செல்லப்பட்ட மாணவிகளிடம் சுற்றுலா போனதை வெளியே சொல்லக்கூடாது என மிரட்டிய தகவலும் வெளியானது. அத்துடன் பள்ளி வளாகத்தில் உள்ள அறிவியல் ஆய்வகத்திற்கு மாணவிகள் சிலரை அழைத்து ஆசிரியர் ரமேஷ் தொடர்ந்து பாலியல் துன்புறுத்தல்கள் அளிப்பதை வாடிக்கையாக கொண்டிருந்ததாக தெரிகிறது.
இதனை வெளியில் யாரிடமாவது கூறினால் செய்முறை தேர்வில் மதிப்பெண்களை குறைத்து பெயில் ஆக்கி விடுவதாகவும், ஆபாசமான வார்த்தைகளை கூறி, வாய பொத்திக்கிட்டு இருக்க வேண்டும் என்றும் மாணவிகளை மிரட்டியுள்ளார். பொதுத்தேர்வுக்கு பயந்து மாணவிகளும் ஆசிரியருக்கு கட்டுப்பட்டு வந்துள்ளனர்.
பிரச்சினை பூதாகரமானதால் மாணவிகளின் பெற்றோர்கள் கல்வித்துறை அதிகாரிகளிடம் புகார் கொடுத்தனர். மேலும் ஆசிரியர் ரமேசுக்கு எதிராக மாணவர் அமைப்புகளும் போராட்டங்களுக்கு தயாராகி வந்தனர். ஆசிரியரால் பாதிக்கப்பட்ட மாணவிகளின் பெற்றோர் தங்களது பிள்ளைகளை தொடர்ந்து பள்ளிக்கு அனுப்பவும் தயக்கம் காட்டி வந்தனர்.
இந்தநிலையில் கடந்த 3 நாட்களாக கல்வித்துறை, வருவாய்துறை, காவல் துறை மற்றும் சமூகநலத்துறை அதிகாரிகள் சம்மந்தப்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் புகாரில் சிக்கியுள்ள ஆசிரியர் ரமேஷ் ஆகியோரிடம் தனித்தனியாக விசாரணை செய்தனர்.
விசாரணை முடிவில் ஆசிரியர் ரமேஷ் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து சமூக நல அலுவலர் கோகுலப்பிரியா கொடுத்த புகாரின் பேரில் கீரனூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் ஆசிரியர் ரமேஷ் மீது போக்சோ உள்ளிட்ட 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர்.
மேலும் நேற்று இரவு உதவி தலைமை ஆசிரியரும், ஆசிரியருமான ரமேஷை போலீசார் கைது செய்தனர். இன்று அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இதற்கிடையே பாலியல் புகாரில் கைதான ஆசிரியர் ரமேசை சஸ்பெண்டு செய்து கல்வி அதிகாரி உத்தரவிட்டுள்ளார்.
மாணவ, மாணவிகளுக்கு பாதுகாப்பாக இருக்க வேண்டிய ஆசிரியர் ஒருவரே ஒரு மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த சம்பவமும் பள்ளி நிர்வாகம் மற்றும் பெற்றோருக்கு தெரியாமல் ஐந்து மாணவ மாணவிகளை சுற்றுலாவுக்கு அழைத்துச் சென்று அதன் பின்பு அது குறித்து வெளியே சொல்லக்கூடாது என மிரட்டிய சம்பவமும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சமீப காலமாக மாணவிகளுக்கு எதிரான பாலியல் அத்துமீறல்களை சற்றும் தயக்கமின்றி வெளிக்காட்டி வரும் ஆசிரியர்களின் முயற்சிகளுக்கு கடிவாளம் போடும் வகையில் பள்ளிக் கல்வித்துறை மற்றும் காவல் துறையினர் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதே ஒட்டுமொத்த பெற்றோர் களின் கோரிக்கையாக உள்ளது.
- கந்தர்வகோட்டை பேருந்து நிலையத்தில் தரைத்தளத்தை சீரமைப்பதற்கான பூமி பூஜை நடைபெற்றது
- தரைத்தளத்தை சீரமைக்க ரூ.35 லட்சம் ஒதுக்கீடு செய்யபட்டுள்ளது
கந்தர்வகோட்டை:
கந்தர்வகோட்டை பேருந்து நிலையத்தில் தரைத்தளம் மிகவும் சிதிலமடைந்து, குண்டும் குழியுமாக மழைக்காலங்களில் மழை நீர் தேங்கி குளம் போல் காணப்பட்டது. இதனால் பயணிகளுக்கும், பேருந்து ஓட்டுனர்களுக்கும் பல்வேறு இடையூறுகள் ஏற்பட்டது. இந்த நிலையில் கந்தர்வகோட்டை பொதுமக்கள் மற்றும் வர்த்தக சங்கம் உள்ளிட்ட அமைப்புகளின் வேண்டுகோளை ஏற்று கந்தர்வகோட்டை சட்டமன்ற உறுப்பினர் சின்னத்துரை தனது சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து பேருந்து நிலைய தரைத்தளத்தை சீரமைக்க ரூ.35 லட்சம் ஒதுக்கீடு செய்தார். அதற்கான பூமி பூஜை சட்டமன்ற உறுப்பினர் சின்னத்துரை தலைமையில் பேருந்து நிலையத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் ஒன்றிய குழு தலைவர் கார்த்திக் மழவராயர், துணைத் தலைவர் செந்தாமரை குமார், ஊராட்சி மன்ற தலைவர் தமிழ்ச்செல்வி, துணை தலைவர் வெங்கடேசன், ஒன்றிய குழு உறுப்பினர் ராஜேந்திரன், தி.மு.க. நகரச் செயலாளர் ராஜா, அரசு ஒப்பந்தக்காரர் ராஜ்குமார், வார்டு உறுப்பினர்கள் முத்துராமன், வினோதா, சாமிநாதன், ரவி, ஊராட்சி ஒன்றிய பொறியாளர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- ஆலங்குடி அரசு மருத்துவமனையில் தேசிய சுகாதார கூடுதல் இயக்குநர் ஆய்வு மேற்கொண்டார்
- மருத்துவமனையில் உள்ள எக்ஸ்ரேக்கு கம்ப்யூட்டர் பிரிண்டர் வாங்க தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
ஆலங்குடி:
ஆலங்குடி அரசு மருத்துவமனையில் தேசிய சுகாதார கூடுதல் இயக்குநர் டாக்டர் சேரன் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வில் அறந்தாங்கி சுகாதாரத் துணை இயக்குநர் டாக்டர் கலைவாணி, மருத்துவமனை தலைமை மருத்துவர் பெரியசாமி, மருத்துவர்கள் ஜோதி ராஜன், லதா, மணிவண்ணன் ஆகியோர் பங்ர்கேற்றனர். டாக்டர் சேரன் சித்த மருத்துவப்பகுதியில் உள்ள செயல்முறைகள், மருந்து இருப்பு ஆகியவற்றை கேட்டுறிந்தார்.பின்பு மூலிகைதோட்டத்தை பார்வையிட்டு பாராட்டினார். தொடர்ந்து மருத்துவமனையில் உள்ள எக்ஸ்ரேக்கு கம்ப்யூட்டர் பிரிண்டர் வாங்க தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். பின்பு குழந்தைகள் உள்நோயாளிகள் பகுதியில் கொடுக்கப்படும் சிகிச்சை முறைகள், குழந்தைகளின் உடல் முன்னேற்றம், அறுவை அறங்கில் செய்யப்படும் அறுவை சிகிச்சை, தீவிர சிகிச்சை பிரிவுகளை பார்வையிட்டு, தீவிர சிகிச்சை பிரிவை உடனடி திறக்க ஆவண செய்யப்படும் என்று கூறினார். ஆய்வகத்தை பார்வையிட்டு அங்கு செய்யப்படும் அனைத்து வித பரிசோதனைகளையும் கேட்டறிந்தார். பின்பு அனைத்து பகுதிகளையும் பார்வையிட்டு மருத்துவமனை சிறப்பாக செயல்படுவதாகவும் இதை மேம்படுத்த காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப நடவடிக்கை மேற்கொள்ளவும் கூறினார். இதில் செவிலியர் கண் காணிப்பாளர் ஜெயந்தி, செவிலியர்கள் வேலுமணி, செல்வகுமாரி, சசிரேகா, கலைச்செல்வி, ஜான், ராஜலட்சுமி, திவ்யா, லட்சுமி பிரபா, பூபாலன், மோனாபாய், சக்ரவர்த்தி, கதிரவன் ஆறுமுகம், மாரிச்செல்வி, ராஜேந்திரன், சிவசங்கரி ஆகியோர் கலந்துகொண்டனர்.
- ஆலங்குடியில் உண்டியல் திருட்டு போனது
- புகாரின் படி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆலங்குடி:
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி நகரில் உள்ள சிவன் கோவில் கும்பாபிஷேக விழாவிற்கு நகரில் ஆங்காங்கே கடைகளில் வைத்து பொதுமக்கள் வருபவர்களிடம் உண்டியல் வசூல் செய்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில நாட்களாக நகரின் சில கடைகளில் உள்ள உண்டியல்களில் திருட்டுப் போவதாக கோவில் நிர்வாகிகள் சார்பில் கூறப்பட்டது. இந்நிலையில் வழக்கம்போல் தனியார் டைல்ஸ் கடையில் வைத்திருந்த உண்டியலில் சுமார் 4500 ரூபாய் இருக்கும் என கூறப்படுகிறது. இதை மர்மநபர் உண்டியலுடன் திருடி விட்டனர். இதுகுறித்து ஆலங்குடி போலீசில் புகார் மனு கொடுத்தனர். புகாரின் படி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ஆலங்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் ரேஷன் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது
- ரேஷன்கடை தொடர்பான குறைதீர் முகாமில் பொது மக்கள் தங்களது குறைகளை மனுக்களாக அளித்தனர்.
ஆலங்குடி:
ஆலங்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் தனி வட்டாட்சியர் குடிமை பொருள் வளங்கள் அதிகாரி பெரியநாயகி தலைமையில் ரேஷன் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது. வட்ட வழங்கல் முதுநிலை வருவாய் அலுவலர் ரவிக்குமார் முன்னிலை வகித்தார். ரேஷன்கடை தொடர்பான குறைதீர் முகாமில் பொது மக்கள் தங்களது குறைகளை மனுக்களாக அளித்தனர். இதில் பொதுமக்கள் கலந்து கொண்டு குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், பெயர் தீக்கம், முகவரி மாற்றம், புதிய குடும்ப அட்டை, நகல் அட்டை அங்கீகாரச் சான று ரேஷன் கடைகள் குறித்து புகார், மொபைல் மாற்றம் மற்றும் இதர சேவைகள் குறித்த மனுக்கள் ஆகிய சேவைகள் வேண்டி கோரிக்கை மனுக்களை அளித்தனர். முகாமில் தனி வருவாய் ஆய்வாளர் கணேசன், இளநிலை வருவாய் ஆய்வாளர் ஜானகி ஆகியோர் கலந்துகொண்டு மனுக்களை பெற்றனர். இதேபோல் மாவட்டத்தில் உள்ள அனைத்து தாலுகாவிலும் ரேஷன் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது.
- ஆலங்குடி அருகே உருட்டு கட்டையால் தாக்கி வாலிபர் படுகாயம் அடைந்தார்
- ராஜமாணிக்கம் தலைமறைவானதால் போலீசார் தேடி வருகின்றனர்.
ஆலங்குடி:
ஆலங்குடி அருகே உள்ள கலிபுல்லா நகரைச்சேர்ந்தவர் செபஸ்தியான் மகன் அந்தோணிசாமி (வயது 44). கலிபுல்லா நகர் ஏ.டி. காலனியை சேர்ந்தவர் கணேசன் மகன்களான புஷ்பராஜ் (48), ராஜமாணிக்கம் ஆகிய இருவரும் அந்தோணிசாமி வீட்டின் அருகில் உள்ள ஆர்எஸ்பதி மரத்தை இருவரும் சேர்ந்து வெட்டியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அந்தோணிசாமி ஏன் மரத்தை வெட்டுகிறீர்கள் என்று கேட்டுள்ளார். அதற்கு புஷ்பராஜ் மற்றும் ராஜமாணிக்கம் உருட்டு கட்டையால் அந்தோணிசாமியை தாக்கியுள்ளனர். மேலும் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் அந்தோணிசாமியை மீட்டு ஆலங்குடி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்த்தனர். இதுகுறித்து அந்தோணிசாமி ஆலங்குடி போலீசாரிடம் கொடுத்த புகாரின் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நதியா வழக்கு பதிவு செய்து புஷ்பராஜை கைது செய்தனர். பின்னர் ஆலங்குடி மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி விஜயபாரதி முன்பு ஆஜர்ப்படுத்தி புதுக்கோட்டை சிறையில் அடைத்தனர். இதில் ராஜமாணிக்கம் தலைமறைவானதால் போலீசார் தேடி வருகின்றனர்.
- பனை வெல்லம் விற்பனை கூட்டுறவு மையத்தில் கதர் கிராம தொழில் வாரிய தலைமை அலுவலர் ஆய்வு செய்தார்
- பனை மரங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் வகையில் 5 இலட்சம் எண்ணிக்கையிலான பனை விதைகள் கொள்முதல் செய்யப்பட்டு, 20 மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவ ட்டம், நகராட்சி க்குட்பட்ட கோவில்பட்டியில், தமிழ்நாடு மாநில பனை வெல்லம் மற்றும் தும்பு விற்பனை கூட்டுறவு இணையத்தின் மூலம் பனை வெல்லம் பொருட்கள் பேக்கிங் செய்து நியாய விலைக்கடைகளுக்கு அனுப்புதல், கும்பகோணம் மற்றும் விழுப்புரம் மண்டத்திற்குட்பட்ட அரசு பேருந்துகளை தூய்மை செய்வதற்காக பனை துடைப்பான்கள் தயார் செய்யப்பட்டு அனுப்பப்படுகிறது. மேலும் பனை மரங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் வகையில் 5 இலட்சம் எண்ணிக்கையிலான பனை விதைகள் கொள்முதல் செய்யப்பட்டு, 20 மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அதன்படி மாவட்ட கலெக்டர் கவிதா ராமு முன்னிலையில், கதர் கிராம தொழில் வாரிய தலைமைச் செயல் அலுவலர்சங்கர், நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். மேலும் கஜா புயலால் பாதிக்கப்பட்ட அலுவலக மற்றும் உற்பத்தி கூட கட்டடங்களை புதுப்பிக்கும் வகையில் ரூ.35 இலட்சம் மதிப்பீட்டில் மாநில இணையத்தின் சொந்த நிதியிலிருந்து அமைக்கப்பட்டு வரும் கட்டுமானப் பணிகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இக்கட்டுமானப் பணிகள் அனைத்தும் விரைவில் முடித்திடவும், இங்கு உற்பத்தி செய்யப்படும் பொருட்களை அதிக அளவிலான பொதுமக்கள் பெற்று பயனடையவும் நடவடிக்கை மேற்கொள்ள கதர் கிராம தொழில் வாரிய தலைமைச் செயல் அலுவலர்அறிவுறுத்தினார். இந்நிகழ்வில், மண்டல துணை இயக்கு நர்கள் ஜி.பாலகுமரன் (திருச்சி), அருணாச்சலம் (மதுரை), உதவி இயக்குநர் பி.கோபாலகிருஷ்ணன், திட்ட அலுவலர் என்.ஆறுமுகம், வட்டாட்சியர் விஜய லெட்சுமி மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.






