என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஆலங்குடி அரசு மருத்துவமனையில் தேசிய சுகாதார கூடுதல் இயக்குநர் ஆய்வு
- ஆலங்குடி அரசு மருத்துவமனையில் தேசிய சுகாதார கூடுதல் இயக்குநர் ஆய்வு மேற்கொண்டார்
- மருத்துவமனையில் உள்ள எக்ஸ்ரேக்கு கம்ப்யூட்டர் பிரிண்டர் வாங்க தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
ஆலங்குடி:
ஆலங்குடி அரசு மருத்துவமனையில் தேசிய சுகாதார கூடுதல் இயக்குநர் டாக்டர் சேரன் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வில் அறந்தாங்கி சுகாதாரத் துணை இயக்குநர் டாக்டர் கலைவாணி, மருத்துவமனை தலைமை மருத்துவர் பெரியசாமி, மருத்துவர்கள் ஜோதி ராஜன், லதா, மணிவண்ணன் ஆகியோர் பங்ர்கேற்றனர். டாக்டர் சேரன் சித்த மருத்துவப்பகுதியில் உள்ள செயல்முறைகள், மருந்து இருப்பு ஆகியவற்றை கேட்டுறிந்தார்.பின்பு மூலிகைதோட்டத்தை பார்வையிட்டு பாராட்டினார். தொடர்ந்து மருத்துவமனையில் உள்ள எக்ஸ்ரேக்கு கம்ப்யூட்டர் பிரிண்டர் வாங்க தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். பின்பு குழந்தைகள் உள்நோயாளிகள் பகுதியில் கொடுக்கப்படும் சிகிச்சை முறைகள், குழந்தைகளின் உடல் முன்னேற்றம், அறுவை அறங்கில் செய்யப்படும் அறுவை சிகிச்சை, தீவிர சிகிச்சை பிரிவுகளை பார்வையிட்டு, தீவிர சிகிச்சை பிரிவை உடனடி திறக்க ஆவண செய்யப்படும் என்று கூறினார். ஆய்வகத்தை பார்வையிட்டு அங்கு செய்யப்படும் அனைத்து வித பரிசோதனைகளையும் கேட்டறிந்தார். பின்பு அனைத்து பகுதிகளையும் பார்வையிட்டு மருத்துவமனை சிறப்பாக செயல்படுவதாகவும் இதை மேம்படுத்த காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப நடவடிக்கை மேற்கொள்ளவும் கூறினார். இதில் செவிலியர் கண் காணிப்பாளர் ஜெயந்தி, செவிலியர்கள் வேலுமணி, செல்வகுமாரி, சசிரேகா, கலைச்செல்வி, ஜான், ராஜலட்சுமி, திவ்யா, லட்சுமி பிரபா, பூபாலன், மோனாபாய், சக்ரவர்த்தி, கதிரவன் ஆறுமுகம், மாரிச்செல்வி, ராஜேந்திரன், சிவசங்கரி ஆகியோர் கலந்துகொண்டனர்.






