search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஈரோடு தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்-கார்த்திக் சிதம்பரம் பேட்டி
    X

    ஈரோடு தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்-கார்த்திக் சிதம்பரம் பேட்டி

    • ஈரோடு தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என கார்த்திக் சிதம்பரம் பேட்டி அளித்தார்
    • பெரும்பாலும் பா.ஜ.க. வின் பார்வை மேல்தட்டு மக்களை சார்ந்தே உள்ளது என்றார்

    பொன்னமராவதி:

    பொன்னமராவதி வர்த்தக சங்க மஹாலில் சிவகங்கை புதுக்கோட்டை மாவட்டங்கள் தமிழ்நாடு ஐஎன்டியூசி கட்டுமானம் அமைப்புசாரா மற்றும் அனைத்து பிரிவை சார்ந்த தொழிலாளர்கள் 17-வது மண்டல மாநாடு நடைபெற்றது. ஐஎன்டியூசி தமிழ்நாடு தலைவர் ஜெயநாதன் தலைமை வைத்தார். செயல் தலைவர்கள் மனோகரன், கதிர்வேல், குப்புச்சாமி, ஆதிகேசவன், முருகேசன், பொதுச்செயலாளர் களஞ்சியம் ஆகியோர் முன்னிலை வைத்தனர். பொதுச் செயலாளர்கள் அருண் பிரசாத், பலராமன், பெருமாள்சாமி, கல்யாண குமார், புவனேஸ்வரி ,நஞ்சப்பன், மாநிலத் துணைத் தலைவர் துளசிதாஸ், திருமயம் முன்னாள் எம்.எல்.ஏ. ராமசுப்புராம், மூத்த துணை தலைவர் சீனிவாசன், பொது செயலாளர் சேவியர் ஆகியோர் பேசினர். சிறப்பு விருந்தினராக சிவகங்கை தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் பேசினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, ஈரோடு இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ். இளங்கோவன் 50ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறுவார். பேனா சிலையை உடைப்பது சாதனை ஆகாது. பேனா எழுதிய எழுத்தை விட எல்லாரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய சிறந்த கருத்தை நான் கூறுவேன் என்று சீமான் சொன்னால் அதை ஏற்றுக்கொள்ள முடியாது.பெரும்பாலும் பா.ஜ.க. வின் பார்வை மேல்தட்டு மக்களை சார்ந்தே உள்ளது.ஒரே ஒரு பட்ஜெட் நாட்டின் தலையெழுத்தை தீர்மானிக்காது. பங்கு சந்தை மீது உள்ள நம்பிக்கை குறையும் போதெல்லாம் தங்க விலை உயர்வு இருக்கும்.அதானி பொய்யாக நிறுனத்தை உருவாக்கினார். என்பதை விசாரணை மூலமாகத்தான் தெளிவுபடுத்த வேண்டும்.பாராளுமன்ற கூட்டுக்குழு மூலமாக உண்மையை தெளிவுபடுத்த வேண்டும்.என்றார்.இதில் காங்கிரஸ் பொதுக்குழு உறுப்பினர் பழனியப்பன், வட்டார தலைவர் கிரிதரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


    Next Story
    ×