என் மலர்
புதுக்கோட்டை
- பூங்காவில் இந்த பேனா சின்னம் வைப்பது முன்கூட்டியே திட்டமிடப்பட்டது.
- 5 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்படும் இந்த பூங்காவில் 10 அடி உயரத்தில் பேனா நினைவு சின்னம் அமைக்கப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை நகராட்சி பூங்காவில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நினைவாக 10 அடி உயரத்தில் பேனா நினைவு சின்னம் அமைக்கப்பட்டுள்ளது.
புதுக்கோட்டையில் கலைஞர் கருணாநிதி அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி எதிரே நகராட்சி சார்பில் ரூ.9¼ கோடியில் பூங்கா அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. 5 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்படும் இந்த பூங்காவில் 10 அடி உயரத்தில் பேனா சிலை வடிவத்தில் நினைவு சின்னம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த சிலையை சுற்றி நீரூற்று போன்றும், வட்ட வடிவில் நீரில் மீன்கள் காணப்படும் வகையில் அதன் மேல் சிறிய பாலம் போன்று அமைத்து பேனா அருகே மக்கள் சென்று பார்க்கும் வகையில் அமைக்கப்படுகிறது.
இந்த பேனா சின்னம் குறித்து நகராட்சி அதிகாரிகள் கூறுகையில், 'புதுக்கோட்டை நகராட்சி பூங்காவில் பேனா ஒரு அடையாள சின்னமாகவும், மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நினைவாகவும் இது அமைக்கப்பட்டுள்ளது. பூங்காவில் இந்த பேனா சின்னம் வைப்பது முன்கூட்டியே திட்டமிடப்பட்டது' என்றனர்.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு நினைவு சின்னமாக சென்னையில் கடலில் பேனா நினைவுச் சின்னம் வைக்க திட்டமிட்டு அதற்கு ஆதரவும், எதிர்ப்பு இருந்து வருகிற நிலையில், தற்போது புதுக்கோட்டையில் பேனா நினைவு சின்னம் அமைக்கும் பணி நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
- மாணவிகளின் உடல்களை வாங்க மறுத்து உறவினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
- பள்ளி தலைமை ஆசிரியர் உள்பட 3 ஆசிரியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் பிலிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவிகள், தமிழரசி, சோபியா, இனியா, லாவண்யா ஆகிய 4 மாணவிகள் இன்று காலையில், கரூர் மாவட்டம் மாயனூரில் உள்ள காவிரி ஆற்றில் குளித்தபோது, ஆற்றின் சுழலில் சிக்கி உயிரிழந்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீசார் ஆற்றில் மூழ்கிய மாணவிகளின் சடலங்களை மீட்டனர்.
உயிரிழந்த மாணவிகளின் உடல்கள் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. ஆனால் மாணவிகளின் உடல்களை வாங்க மறுத்து உறவினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பெற்றோர்கள் வருவதற்கு முன்பாக பிரேத பரிசோதனை முடிக்கபட்டதால் வாங்க மறுத்தனர். புதுக்கோட்டை இலுப்பூரில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மாணவிகளை விளையாட்டுப் போட்டிக்கு அழைத்து சென்ற ஆசிரியர்களின் கவனக்குறைவால் மாணவிகளின் உயிர் பறிபோனதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்நிலையில் மாணவிகள் இறந்த விவகாரத்தில் பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் விளையாட்டு போட்டிக்கு அழைத்துச் சென்ற இரண்டு ஆசிரியர்கள் என 3 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
- புதுக்கோட்டை, திருமயம் பகுதிகளில் நாளை மின் நிறுத்தப்படுகிறது.
- இத்தகவலை செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை துணை மின் நிலையத்தில் நாளை (வியாழக்கிழமை) பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இதையொட்டி ராஜகோபாலபுரம், கம்பன் நகர், பெரியார் நகர், பூங்கா நகர், கூடல் நகர், லட்சுமி நகர், பாரிநகர், சிவகாமி ஆச்சிநகர், சிவபுரம், தேக்காட்டூர், கவிநாடு, அகரப்பட்டி, பெருமாநாடு, திருவரங்குளம், வல்லத்திராக்கோட்டை, நச்சாந்துப்பட்டி, நமணசமுத்திரம், கனக்கம்பட்டி, அம்மையாப்பட்டி, ஆட்டாங்குடி, கடையக்குடி, லேணாவிலக்கு, எல்லைப்பட்டி, செல்லுக்குடி மற்றும் பெருஞ்சுனை ஆகிய இடங்களில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் வினியோகம் இருக்காது. மேற்கண்ட தகவலை மின்சார வாரிய அலுவலகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருமயம் துணைமின் நிலையத்தில் மாதந்திர பராமாரிப்பு பணிகள் நாளை நடைபெற உள்ளது. எனவே இங்கிருந்து மின் வினியோகம் பெறும் திருமயம், மணவாளன்கரை, இளஞ்சாவூர், ராமச்சந்திரபுரம், கண்ணங்காரைக்குடி, ஊனையூர், சவேரியர்புரம், குளத்துப்பட்டி, பட்டணம், மலைக்குடிப்பட்டி, மாவூர், கோனாபட்டு, துளையானூர், தேத்தாம்பட்டி, கே.பள்ளிவாசல், பி.அழகாபுரி, நெய்வாசல், நல்லூர், வாரியப்பட்டி, ராங்கியம், கொல்லக்காட்டுப்பட்டி, கண்ணனூர், மேலூர், அம்மன்பட்டி, அரசம்பட்டி, வி.லெட்சுமிபுரம், ஏனப்பட்டி, விராச்சிலை, பெல் நிறுவனம் உள்ளிட்ட பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் வினியோகம் இருக்காது என்று திருமயம் கோட்ட உதவி செயற்பொறியாளர் ராமநாதன் தெரிவித்துள்ளார்.
- கந்தர்வகோட்டை அருகே கபடி போட்டி நடைபெற்றது
- இதில் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 70க்கும் மேற்பட்ட அணிகள் கலந்து கொண்டு விளையாடினர்.
கந்தர்வகோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் அரவம்பட்டியில் 26 ஆம் ஆண்டு மாநில அளவிலான மாபெரும் கபடி போட்டி நடைபெற்றது. போட்டியை கந்தர்வகோட்டை காவல் ஆய்வாளர் செந்தில் மாறன் தொடங்கி வைத்தார். இதில் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 70க்கும் மேற்பட்ட அணிகள் கலந்து கொண்டு விளையாடினர். போட்டியில் வெற்றி வெற்று முதல் இடத்தை பிடித்த சென்னம்பட்டி அணியினருக்கு ரூபாய் 40 ஆயிரத்தை பா.ஜ.க. விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவு மாநில செயலாளர் ராமச்சந்திரன் வழங்கினார். இரண்டாம் இடத்தை முதுகுளம் அணியினரும், மூன்றாம் இடத்தை கோமாபுரம் அணியினரும், நான்காம் இடத்தை அரவம்பட்டி அணியினரும் பிடித்தனர். போட்டியில் விளையாடிய அணிகளுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் பா.ஜ.க. ஒன்றிய தலைவர் தவமணி, ஊராட்சி மன்ற தலைவர் சிவரஞ்சனி சசிகுமார், துணைத் தலைவர் அருண் பிரசாத், சந்திரன், அரவை மதியழகன் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை விழா கமிட்டியினர், கிராம இளைஞர்கள் மற்றும் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.
- வீட்டின் பூட்டை உடைத்து 1½ பவுன் நகை திருடியவர் கைது செய்யப்பட்டார்
- தோட்டத்தில் வேலை முடிந்து வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது.
விராலிமலை:
இலுப்பூர் அருகே உள்ள போலம்பட்டியை சேர்ந்தவர் கோகுலகிருஷ்ணன் (வயது 28). இவர் நேற்று தோட்டத்திற்கு சென்ற நிலையில் அவரது மனைவி சிவகாமி வீட்டை பூட்டி விட்டு கோகுல கிருஷ்ணனுக்கு சாப்பாடு எடுத்துக்கொண்டு தோட்டத்திற்கு சென்றிருந்தார். இந்தநிலையில் நேற்று மாலை தோட்டத்தில் வேலை முடிந்து வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவும் உடைக்கப்பட்டு கிடந்தது. மேலும் அதிலிருந்த 1½ பவுன் செயின் திருடப் பட்டிருந்தது தெரியவந்தது. பின்னர் இதுகுறித்து கோகு–லகிருஷ்ணன் இலுப்பூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் விசா–ரணை நடத்தியதில், செயினை திருடியது இலுப்பூர் மேலப்பட்டியை சேர்ந்த செல்வம் மகன் ராஜாபாண்டி (21) என்பது தெரியவந்தது. இதனையடுத்து ராஜபாண்டியை கைது செய்த போலீசார் சிறையில் அடைத்தனர்.
- இலுப்பூர் அருகே ரேஷன் கடையில் வழங்கப்பட்ட செறிவூட்டப்பட்ட அரிசியால் பொதுமக்கள் அச்சமடைந்தனர்
- மாவட்ட வழங்கல் அலுவலர் சரவ–ணன் மற்றும் வட்ட வழங்கல் அலுவலர் துரை–ராஜ், உள்ளிட்டோர் அரிசிகளை பார்வையிட்டு ரேஷன் கடையில் வழங்கப்பட்ட அரிசி செறிவூட்டப்பட்ட அரிசி என்று பொதுமக்களிடம் எடுத்து–கூறி அதன் நன்மைகளை விளக்கி கூறினர்.
விராலிமலை:
புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் அருகே வெட்டுக்காடு ஊராட்சி போலம்பட்டியில் ேரஷன் கடை செயல்பட்டு வருகிறது. போலம்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த குடும்ப அட்டைதாரர்கள் இந்த கடையில் ரேஷன் பொருட்களை வாங்கி செல்கின்றனர். இந்நிலையில், ரேஷன் கடையில் நேற்று இலவச அரிசி வழங்கப்பட்டது. அரிசியை பொதுமக்கள் வாங்கிச் சென்று பார்த்த–போது அரிசியில் மற்றொரு அரிசியைபோல் ஏதோ பொருள் கலந்திருப்பது தெரியவந்தது. இதனால் பொதுமக்கள் அச்சமடைந்தனர். இதனையடுத்து ரேஷன் கடையில் வாங்கிய அரி–சியை மீண்டும் பொதுமக்கள் ரேஷன் கடை ஊழியரிடம் கொண்டு காண்பித்து இது–குறித்து கேட்டுள்ளனர். அப்போது ஊழியர் இது–குறித்து அதிகாரிகளுக்கு தகவல் அளித்துள்ளார். தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு வந்த மாவட்ட வழங்கல் அலுவலர் சரவ–ணன் மற்றும் வட்ட வழங்கல் அலுவலர் துரை–ராஜ், உள் ளிட்டோர் விரைந்து வந்து அரிசிகளை பார்வையிட்டு ரேஷன் கடையில் வழங்கப் பட்ட அரிசி செறிவூட்டப்பட்ட அரிசி என்றும், இது பள்ளிகளுக்கு வழங்கப்ப–டுபவை என்றும் பொதுமக்களிடம் எடுத்து–கூறி அதன் நன்மைகளை விளக்கி கூறினர். இதனால் நிம்மதியடைந்த பொது–மக்கள் அந்த அரிசியை பெற்றுச்சென்றனர்.
- கந்தர்வகோட்டையில் புல்வாமா நினைவு தினம் அனுசரிக்கபட்டது
- 2019 பிப்ரவரி 14ல் தீவிரவாதிகளின் தற்கொலை படையால் மத்திய ரிசர்வ் போலீஸ் படையைச் சேர்ந்த 40 வீரர்கள் உயிர் தியாகம் செய்தனர்.
கந்தர்வகோட்டை:
ஜம்மு காஷ்மீரின் புல்வாமா பகுதியில் 2019 பிப்ரவரி 14ல் தீவிரவாதிகளின் தற்கொலை படையால் மத்திய ரிசர்வ் போலீஸ் படையைச் சேர்ந்த 40 வீரர்கள் உயிர் தியாகம் செய்தனர். இதனை நினைவு கூறும் வகையில் கந்தர்வகோட்டை பேருந்து நிலையம் அருகே உயிர் நீத்த வீரர்களின் உருவப் படங்களை வைத்து அவர்களின் வீரத்தை போற்றும் வகையில் அப்பகுதி இளைஞர்கள் விக்னேஷ் குமார் தலைமையில் கையில் மெழுகுவர்த்தி ஏந்தி மவுன அஞ்சலி செலுத்தினர்.காதலர் தினத்தை கொண்டாடும் இளைஞர்கள் மத்தியில் நாட்டின் தேசபக்தியை கொண்டாடும் இந்த இளைஞர்களை சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் பாராட்டினர்.
புதுக்கோட்டை,
துருக்கி, சிரியாவில் நிலநடுக்கம் காரணமாக ஏராளமான மக்கள் பலியான நிலையில் தொடர்ந்து மீட்பு பணி நடைபெற்று வருகிறது. பல ஆயிரக்கணக்கான மக்கள் பாதிப்படைந்து வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கின்றனர். அவர்களுக்கு உலக நாடுகள் உதவி செய்து வருகின்றன. இந்த நிலையில் துருக்கி மக்களுக்கு நிவாரணமாக தாங்கள் உண்டியலில் சேமித்த பணத்தை அரசு பள்ளி மாணவர்கள் 2 பேர் தனது தந்தையுடன் வந்து புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் வழங்கினர். இது பற்றிய விவரம் வருமாறு:- புதுக்கோட்டை காமராஜபுரம் 25-ம் வீதியை சேர்ந்தவர் அக்பர் அலி (வயது 43). எலக்ட்ரீசியன். இவரது மனைவி பைரோஸ். இவர்களுக்கு அப்துல் மாலிக் (12), அப்துல் ரகுமான் (10) ஆகிய 2 மகன்கள் உள்ளனர். இவர்களில் அப்துல் மாலிக் 6-ம் வகுப்பும், அப்துல் ரகுமான் 4-ம் வகுப்பும் புதுக்கோட்டையில் அரசு உயர் தொடக்கப்பள்ளியில் படித்து வருகின்றனர். இவர்கள் வீட்டில் பெற்றோர் கொடுக்கும் சிறு, சிறு பணத்தை உண்டியலில் சேமித்து வைப்பதை பழக்கமாக கொண்டுள்ளார். இந்த நிலையில் துருக்கியில் நில நடுக்கத்தால் மக்கள் பாதிப்படைந்த நிலையில் அவர்களுக்கு நிவாரணமாக தங்களால் முடிந்த உதவியை செய்ய அவர்கள் எண்ணினர். இதற்காக உண்டியலில் அவர்கள் சேமித்த பணத்தை நிவாரணமாக கொடுக்க முன்வந்து தனது தந்தையிடம் தெரிவித்துள்ளனர். இருவரும் தனித்தனியாக வைத்திருந்த உண்டியலில் சேமித்த பணத்தை எடுத்துள்ளனர். இதில் அப்துல் மாலிக் ரூ.600-ம், அப்துல்ரகுமான் ரூ.700-ம் சேமித்திருக்கின்றனர். இந்த பணத்தோடு தனது தந்தையின் பங்களிப்பு ரூ.800 உடன் சேர்த்து ரூ.2,100-ஐ கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மாவட்ட வருவாய் அதிகாரி செல்வியிடம் துருக்கி மக்களுக்காக நிவாரண நிதியாக வழங்கினர். இதனை பெற்றுக்கொண்ட அவர், அரசு மூலம் அந்த பணத்தை அனுப்பி வைக்க நடவடிக்கை எடுப்பதாக கூறினார். மேலும் மாணவர்களின் இந்த செயலை கண்டு அங்கிருந்த அனைவரும் பாராட்டினர்.
புதுக்கோட்டை
புதுககோட்டை இறையூர் கிராமத்தில் வேங்கைவயலில் குடிநீர் தொட்டி அசுத்தம் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக வெள்ளனூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வந்தனர். அதன்பின் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றம் செய்யப்பட்டது. இதையடுத்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் இந்த வழக்கை விசாரித்து வருகின்றனர். இந்த நிலையில் குடிநீர் தொட்டியில் அசுத்தம் கலந்த சம்பவத்தில் பாதிப்படைந்த அப்பகுதியை சேர்ந்த பட்டியலின மக்கள் புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து புகார் மனு அளித்தனர். அந்த மனு குறித்து அவர்கள் கூறியதாவது:- குடிநீர் தொட்டி அசுத்தம் செய்யப்பட்ட சம்பவத்தில் எங்கள் பகுதியை சேர்ந்த இளைஞர்களை போலீசார் விசாரணைக்கு அழைத்து சென்று மிரட்டியும், ஆசை வார்த்தை கூறியும் அசுத்தம் செய்ததாக ஒப்புக்கொள்ள வலியுறுத்தினர். இதற்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாறியது.இந்த நிலையில் சி.பி.சி.ஐ.டி. போலீசாரும் எங்கள் பகுதியை சேர்ந்தவர்களிடம் விசாரணை நடத்தும் போது உங்களில் யாராவது ஒருவர் ஒத்துக்கொள்ளுங்கள் என வலியுறுத்தினார்கள். விசாரணை என்கிற பெயரில் எங்கள் பகுதியை சேர்ந்தவர்களை காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை துன்புறுத்தி வருகின்றனர். இதனால் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளோம். நாங்கள் கூறும் நபர்களிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் சரியாக விசாரணை நடத்துவதில்லை. நேர்மையாக விசாரித்து உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடித்து கைது செய்ய வேண்டும். அதற்காக கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.
ஆலங்குடி,
ஆலங்குடி அருகே உள்ள வேங்கிடகுளம் ஊராட்சி மைக்கேல்பட்டி யை சேர்ந்த தேவநேசன் மகள் ஜோஸ் ஆஸ்லி (வயது 22). பி.எட்., படித்து முடித்து வீட்டில் இருந்து வந்த இவர் திடீர் என மாயமானார். பல இடங்களில் உறவினர்கள் ேதடிப்பார்த்தும் எந்த தகவலும் கிடைக்கவில்லை. இது குறித்து ஆலங்குடி போலீசில், தந்ைத தேவனேசன்கொடுத்த புகாரின் பேரில் போலீஸ் சப் -இன்ஸ்பெக்டர் கிருஷ்ண மூர்த்தி வழக்குப்பதிவு செய்து கல்லூரி பட்டதாரி பெண்ணை தேடி வருகிறார்.
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை மாவட்டத்தில் 1-19 வயதுடைய 5,23,811 குழந்தைகளுக்கும், 20 முதல் 30 வயதுடைய 1,27,870 மகளிருக்கும் என மொத்தமாக 6,51,681 பேருக்கு குடற்புழு நீக்க மருந்து வழங்கப்பட்டது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அங்கன்வாடி மையங்கள், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள், அரசு, தனியார்கல்லூரிகளில், பயிற்சி பெற்ற ஆசிரியர்கள், சுகாதார செவிலியர்கள், சுகாதார ஆய்வாளர்கள், மருத்துவ அலுவலர்கள் ஆகியோர்மேற்பார்வையில் குடற்புழு நீக்க மாத்திரை வழங்கப்பட்டது. விடுபட்டுள்ள குழந்தைகளுக்கு வரும் 21-ந் தேதி வழங்கப்படும்.குழந்தைகள் வளர்ச்சியும், ஆரோக்கியமும் நன்றாகவும் பள்ளி வருகையில் முன்னேற்றமும் இருக்கும் என்பதால் இவ்வாய்ப்பினை பயன்படுத்தி தகுதியுடைய அனைவரும் இம் மாத்திரையினை உட்கொண்டு நல் ஆரோக்கியத்தினை பெற்றிடும்படி மாவட்ட கலெக்டர் கேட்டுக்கொ ண்டுள்ளார்.
ஆலங்குடி,
ஆலங்குடி அருகே உள்ள அரண்மனைக்கொல்லை மல்லிகை, முல்லை பூ செடிகளை வெட்டி சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்தால் போக்குவரத்து பாதிக்க ப்பட்டது.அரண்மனைக் கொல்லைய சேர்ந்தவர் சண்முகவடிவேல் (வயது 45). விவசாயியான இவரும், இவரது தம்பி செந்தில் வடிவேலும், அதே பகுதியில் உள்ள தோட்டத்தில் சுமார் ஒரு ஏக்கர் பரப்பளவில் மல்லிகை, முல்லை பூ செடிகள் நட்டு பூ மகசூல் செய்து வந்தனர்.இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த பாண்டியன் உள்பட சிலர் மல்லிகை, முல்லை பூ செடிகளை அரிவாள் கொண்டு வெட்டி சேதப்ப டுத்தியதாக கூறப்படுகிறது. சுமார் 500-க்கும் மேற்பட் பூச்செடிகள் வெட்டி சேதப்படுத்தப்பட்டுள்ளது.பூச்செடிகளை வெட்டி யவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கீரமங்கலம் காவல் நிலையத்தில்சண்மு கவடிவேல் புகார்கொடு த்துள்ளார். ஆனால் நடவடிக்கை எடுக்கப்ப டவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த விவசாயி சண்முகவடிவேலும், அவரது உறவினர்களும், கீரமங்கலம் பஸ் நிலையம் அருகே திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதுகுறித்து தகவல் அறிந்து அங்கு வந்த அறந்தாங்கி டி.எஸ்.பி. தினேஷ்குமார், கீரமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன், வடகாடு இன்ஸ்பெக்டர் ஜெகதீஷ், கீரமங்கலம் வருவாய் ஆய்வாளர் ரவி, கிராம அலுவலர் தனலட்சுமி ஆகிேயார மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். பேச்சு வார்த்தையில் பாதிக்கப்பட்ட இடத்திற்கு வந்து பார்வையிட்டு பின்னர் விசாரணை நடத்தி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்என்று அவர்கள் உறுதி அளித்ததை தொடர்ந்து மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.திடீர் மறியல் போரா ட்டத்தால், கீரமங்கலம் பஸ் நிலையம் அருகே சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.






