search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "complaind"

    • தாசில்தாரிடம் மலைவாழ் மக்கள் புகார் அளித்துள்ளனர்
    • தாங்கள் அச்சுறுத்தப்படுவதாக அந்த புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டு உள்ளது

    உப்பிலியபுரம்,

    உப்பிலியபுரம் ஒன்றியம், பச்சைமலை தென்புறநாடு ஊராட்சிக்குட்பட்ட கம்பூர் கிராமத்தில் கடந்த 100 வருடங்களுக்கு மேலாக வசித்து வரும் மலைவாழ் கிராம மக்கள், தாங்கள் வசிக்கும் வீட்டுமனைப் பகுதிகளை தனி நபர் ஒருவர் சொந்தம் கொண்டாடுவதாகவும் , பழைய வீட்டினை இடித்துவிட்டு புதிய வீடு கட்டுவதை தடுத்து நிறுத்துவதாகவும், அப்பகுதியில் சாலை வசதியினை தடுப்பதாகவும் துறையூர் தாசில்தார் புஷ்பராணியிடம் புகார் மனு அளித்தனர்.

    வாழ்வாதாரத்தை இழக்கும் சூழ்நிலையில் தாங்கள் இருப்பதாகவும், சுமார் 20 வீடுகளுக்கு பத்திரபதிவு , மனைப்பட்டா, வீட்டுவரி ரசீது, குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை அனைத்தும் இருந்தும் தனிநபரின் ஆக்கிரமிப்பு தங்களை அச்சுறுத்துவதாகவும் உள்ளதால், தக்க நடவடிக்கை எடுக்க வேண்டி, சமூக ஆர்வலர்கள் முன்னிலையில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதனால் பச்சைமலை கம்பூர் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது .

    • போலீஸ் பிடியிலிருந்து தப்பிக்க புகார் கொடுத்த கில்லாடி பெண்
    • டி.ஜி.பி. தகவலுக்கு பின் விடுவிக்கப்பட்டனர்

    திருச்சி, 

    திருச்சி செசன்ஸ் கோர்ட்டு காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஒரே நாள் இரவில் 3 பூட்டிய வீடுகளில் கதவை உடைத்து நகை, பணம் கொள்ளை அடிக்கப்பட்டது.பின்னர் நடத்தப்பட்ட விசாரணையில் இந்த கொள்ளையில் ராஜஸ்தான் மாநில கும்பலைச் சேர்ந்த சங்கர், ரத்தன் ஆகிய இரு–வரையும் திருச்சி மாநகர தனிப்படை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்களிடமிருந்து 50 பவுன் நகை கைப்பற்றப்பட்டது. மேலும் கொள்ளை அடித்த 250 பவுன் நகை–களை, ராஜஸ்தான் மாநி–லம் அஜ்மீரில் உள்ள பன்னாலால், சானியா தம்பதி–யரிடம் கொடுத்து வைத்திருப்பதாக கைதான இருவரும் வாக்குமூலம் அளித்தனர்.அதைத்தொடர்ந்து திருச்சி கண்டோன்மெண்ட் உதவி போலீஸ் கமிஷனர் கென்னடி, உறையூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மோகன், சப்-இன்ஸ்பெக்டர் உமா சங்கரி மற்றும் 10 போலீசார் அடங்கிய தனிப்படையினர் இரு தினங்களுக்கு முன்பு ராஜஸ்தான் மாநிலம் அஜ் மீர் புறப்பட்டு சென்ற–னர். பின்னர் அந்த தம்பதியை கைது செய்ய திட்டமிட்டனர். அப்போது பண்ணா லால் தப்பி ஓடி விட்டார். அவரது மனைவி சானியா திருச்சி போலீஸ் பிடியில் சிக்கினார்.அவரிடம் கொள்ளை–யர்கள் சங்கர், ரத்தன் கொடுத்த திருட்டு நகைகள் குறித்து விசாரணை செய்த போது நகைகளை உருக்கி விற்று விட்டதாக கூறியுள்ளார். மேலும் அதற்கு பதிலாக பணமாக தருகிறோம் என்று கூறியுள் ளனர். இதனை நம்பிய போலீசார் பணத்தை வாங் கிக்கொண்டு புறப்படுவ–தற்காக காத்திருந்தனர்.ஆனால் சானியாவோ தன்னை கைது செய்யாமல் இருக்க தமிழக போலீசார் ரூ.25 லட்சம் லஞ்சம் கேட் பதாக அஜ்மீர் போலீ–சில் புகார் அளித்தார். உடனே புகாரின் பேரில் ராஜஸ் தான் மாநில லஞ்ச ஒழிப்பு போலீசார் திருச்சி தனிப்படை போலீ–சாரை விசாரணை வளை–யத்துக்குள் கொண்டு வந்தனர். சுமார் 12 மணி நேரம் லஞ்ச ஒழிப்பு போலீ–சாரின் விசாரணை வளையத்துக்குள் இருந்து இவர்கள் சிக்கி தவித்தனர்.இதுபற்றி தகவல் அறிந்த திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் சத்தியப்பிரியா, உடனடியாக தமிழக டி.ஜி.பி. சைலேந்திரபாபுவுக்கு தகவல் தெரிவித்தார். உடனே அவர் ராஜஸ்தான் போலீசாரிடம் தொடர்பு கொண்டு கொள்ளையர்கள் கைது செய்யப்பட்டதற்கான ஆவணங்களை அனுப்பி வைத்தார்.அதன் பேரில் திருச்சி தனிப்படை போலீ–சார் ராஜஸ்தான் போலீ–சார் பிடியிலிருந்து விடுவிக்கப் பட்டனர். கைதான கொள் ளையர்கள் இருவரும் ெரயில் நிலையங்களில் தங்கியிருந்து பெட்ஷீட் விற்பது போன்று தெருக்களில் வந்து பூட்டிய வீடுகளில் கைவரிசை காட்டி வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    குற்றம் செய்ததாக ஒப்புக்கொள்ள வேண்டும் என்று மிரட்டுவதாக கலெக்டரிடம் புகார் மனு

    புதுக்கோட்டை

    புதுககோட்டை இறையூர் கிராமத்தில் வேங்கைவயலில் குடிநீர் தொட்டி அசுத்தம் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக வெள்ளனூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வந்தனர். அதன்பின் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றம் செய்யப்பட்டது. இதையடுத்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் இந்த வழக்கை விசாரித்து வருகின்றனர். இந்த நிலையில் குடிநீர் தொட்டியில் அசுத்தம் கலந்த சம்பவத்தில் பாதிப்படைந்த அப்பகுதியை சேர்ந்த பட்டியலின மக்கள் புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து புகார் மனு அளித்தனர். அந்த மனு குறித்து அவர்கள் கூறியதாவது:- குடிநீர் தொட்டி அசுத்தம் செய்யப்பட்ட சம்பவத்தில் எங்கள் பகுதியை சேர்ந்த இளைஞர்களை போலீசார் விசாரணைக்கு அழைத்து சென்று மிரட்டியும், ஆசை வார்த்தை கூறியும் அசுத்தம் செய்ததாக ஒப்புக்கொள்ள வலியுறுத்தினர். இதற்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாறியது.இந்த நிலையில் சி.பி.சி.ஐ.டி. போலீசாரும் எங்கள் பகுதியை சேர்ந்தவர்களிடம் விசாரணை நடத்தும் போது உங்களில் யாராவது ஒருவர் ஒத்துக்கொள்ளுங்கள் என வலியுறுத்தினார்கள். விசாரணை என்கிற பெயரில் எங்கள் பகுதியை சேர்ந்தவர்களை காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை துன்புறுத்தி வருகின்றனர். இதனால் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளோம். நாங்கள் கூறும் நபர்களிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் சரியாக விசாரணை நடத்துவதில்லை. நேர்மையாக விசாரித்து உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடித்து கைது செய்ய வேண்டும். அதற்காக கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • 24 மணி நேரத்திற்குள் தெரிவிக்கலாம்
    • இணையவழி மூலம் மோசடி குறித்து பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது

    பெரம்பலூர்:

    பொதுமக்கள் யாரும் வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி பணம் அனுப்பி வைக்க கூறினாலோ, பரிசு பொருட்கள் விழுந்துள்ளதாகவும், குறைந்த வட்டியில் கடன் தருவதாகவும், ஆன்லைன் ரம்மி, லோன் ஆப் போன்றவற்றில் ஆசை வார்த்தைகளை கூறினாலும், அதனை நம்பி யாரும் ஏமாற வேண்டாம். மேலும் இணையவழி மூலம் பண மோசடி புகார்களுக்கு பொதுமக்கள் 24 மணி நேரத்திற்குள் "1930" என்ற இலவச அழைப்பு எண்ணை அழைத்து புகார் தெரிவிக்கவும். சைபர் குற்றங்களுக்கு www.cybercrime.gov.in என்ற இணையதளத்தில் புகார் பதிவிடவும் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஷ்யாம்ளா தேவி தெரிவித்தார்.

    • கலெக்டர் ரமண சரஸ்வதி அறிவிப்பு
    • பொங்கல் பரிசு தொகுப்பு தொடர்பான புகார்கள் தெரிவிக்க தொலைபேசி எண் அறிவிக்கப்பட்டுள்ளது

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டத்தில் உள்ள 2,46,210 குடும்ப அட்டைத்தாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணி தொடங்கியது. அரியலூர் ரயில் நிலையம் அருகேயுள்ள நியாய விலைக் கடையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கலெக்டர் பெ.ரமணசரஸ்வதி, குடும்ப அட்டைதாரர்களுக்கு பச்சரிசி, சர்க்கரை, முழுகரும்பு மற்றும் ரூ.1,000 ரொக்கம் என பொங்கல் தொகுப்பை வழங்கி தொடக்கி வைத்தார்.அப்போது, அரியலூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் 465 நியாய விலை கடைகள் மூலம் 2,46,210 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படவுள்ளது. பொங்கல் பரிசு தொகுப்பை சுலபமாக பெறும் வகையில், அனைவருக்கும் டோக்கன்கள் வழங்கப்பட்டுள்ளது. ஜன.13 ஆம் தேதி வேலை நாள்களாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, டோக்கனில் குறிப்பிட்டுள்ள தேதி, நேரம் அடிப்படையில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும். பொங்கல் பரிசுத் தொகுப்பு தொடர்பான புகார்கள் ஏதேனும் இருப்பின் மாவட்ட ஆட்சியர் அலுவலக 04329 -228321 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் என கலெக்டர் தெரிவித்தார்.  நிகழ்ச்சியில், கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் தீபாசங்கரி, மாவட்ட வழங்கல் அலுவலர் ரவிச்சந்திரன், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக மண்டல மேலாளர் சிற்றரசு மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

    ரேஷன் கடைகளில் வழங்கப்படும் பொருட்களின் அளவு குறைந்தால் எஸ்.எம்.எஸ். மூலம் புகார் தெரிவிக்கலாம் என்று மாவட்ட வருவாய்த்துறையினர் தெரிவித்துள்ளனர்.
    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டம் முழுவதும் 7 லட்சத்துக்கும் மேற்பட்ட ரேஷன் கார்டுகள் உள்ளன. இவர்களுக்கு அரிசி, சர்க்கரை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வழங்க ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரேஷன் கடைகள் செயல்பட்டு வந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில் ரேஷன் கடைகளில் வழங்கப்படும் பொருட்களின் எடை அளவு குறைவாக இருப்பதாக அடிக்கடி பொதுமக்கள் புகார் தெரிவித்து கொண்டிருக்கின்றனர்.

    இதுதொடர்பாக அங்குள்ள ஊழியர்களுக்கும், பொதுமக்களுக்கும் இடையே பல்வேறு பிரச்சினைகளும் ஏற்படுகிறது. இதனால் இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையிலும், முறைகேடுகளை தடுக்கும் வகையிலும், பொருட்களின் அளவு சரியாக இருப்பதற்காகவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    அதன்படி ரேஷன் கடை முறைகேடுகள் குறித்து திருப்பூர் பல்லடம் ரோட்டில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும், மாவட்ட குறைதீர்க்கும் அலுவலரான, மாவட்ட வருவாய் அதிகாரி அலுவலகத்திற்கு எழுத்து மூலமாகவும், தொடர்பு எண்ணுடனும் பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம்.

    மேலும், 99809-04040 என்ற எண்ணுக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பி புகார் செய்யலாம். இதுபோல் இலவச தொடர்பு எண்ணான 1967, 1800 425 5901 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம். இதனை பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

    இந்த தகவலை மாவட்ட வருவாய்த்துறையினர் தெரிவித்துள்ளனர். 
    ×