search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பொங்கல் பரிசு  தொகுப்பு தொடர்பான புகார்கள் தெரிவிக்க தொலைபேசி எண்
    X

    பொங்கல் பரிசு தொகுப்பு தொடர்பான புகார்கள் தெரிவிக்க தொலைபேசி எண்

    • கலெக்டர் ரமண சரஸ்வதி அறிவிப்பு
    • பொங்கல் பரிசு தொகுப்பு தொடர்பான புகார்கள் தெரிவிக்க தொலைபேசி எண் அறிவிக்கப்பட்டுள்ளது

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டத்தில் உள்ள 2,46,210 குடும்ப அட்டைத்தாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணி தொடங்கியது. அரியலூர் ரயில் நிலையம் அருகேயுள்ள நியாய விலைக் கடையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கலெக்டர் பெ.ரமணசரஸ்வதி, குடும்ப அட்டைதாரர்களுக்கு பச்சரிசி, சர்க்கரை, முழுகரும்பு மற்றும் ரூ.1,000 ரொக்கம் என பொங்கல் தொகுப்பை வழங்கி தொடக்கி வைத்தார்.அப்போது, அரியலூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் 465 நியாய விலை கடைகள் மூலம் 2,46,210 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படவுள்ளது. பொங்கல் பரிசு தொகுப்பை சுலபமாக பெறும் வகையில், அனைவருக்கும் டோக்கன்கள் வழங்கப்பட்டுள்ளது. ஜன.13 ஆம் தேதி வேலை நாள்களாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, டோக்கனில் குறிப்பிட்டுள்ள தேதி, நேரம் அடிப்படையில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும். பொங்கல் பரிசுத் தொகுப்பு தொடர்பான புகார்கள் ஏதேனும் இருப்பின் மாவட்ட ஆட்சியர் அலுவலக 04329 -228321 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் என கலெக்டர் தெரிவித்தார். நிகழ்ச்சியில், கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் தீபாசங்கரி, மாவட்ட வழங்கல் அலுவலர் ரவிச்சந்திரன், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக மண்டல மேலாளர் சிற்றரசு மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

    Next Story
    ×