search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பச்சைமலை கிராம மக்களின் வீட்டு மனையை தனிநபர் ஆக்கிரமிக்க முயற்சி
    X

    தாசில்தாரிடம் மனு அளித்த பச்சைமலை கம்பூர் கிராம மக்கள் 

    பச்சைமலை கிராம மக்களின் வீட்டு மனையை தனிநபர் ஆக்கிரமிக்க முயற்சி

    • தாசில்தாரிடம் மலைவாழ் மக்கள் புகார் அளித்துள்ளனர்
    • தாங்கள் அச்சுறுத்தப்படுவதாக அந்த புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டு உள்ளது

    உப்பிலியபுரம்,

    உப்பிலியபுரம் ஒன்றியம், பச்சைமலை தென்புறநாடு ஊராட்சிக்குட்பட்ட கம்பூர் கிராமத்தில் கடந்த 100 வருடங்களுக்கு மேலாக வசித்து வரும் மலைவாழ் கிராம மக்கள், தாங்கள் வசிக்கும் வீட்டுமனைப் பகுதிகளை தனி நபர் ஒருவர் சொந்தம் கொண்டாடுவதாகவும் , பழைய வீட்டினை இடித்துவிட்டு புதிய வீடு கட்டுவதை தடுத்து நிறுத்துவதாகவும், அப்பகுதியில் சாலை வசதியினை தடுப்பதாகவும் துறையூர் தாசில்தார் புஷ்பராணியிடம் புகார் மனு அளித்தனர்.

    வாழ்வாதாரத்தை இழக்கும் சூழ்நிலையில் தாங்கள் இருப்பதாகவும், சுமார் 20 வீடுகளுக்கு பத்திரபதிவு , மனைப்பட்டா, வீட்டுவரி ரசீது, குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை அனைத்தும் இருந்தும் தனிநபரின் ஆக்கிரமிப்பு தங்களை அச்சுறுத்துவதாகவும் உள்ளதால், தக்க நடவடிக்கை எடுக்க வேண்டி, சமூக ஆர்வலர்கள் முன்னிலையில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதனால் பச்சைமலை கம்பூர் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது .

    Next Story
    ×