என் மலர்tooltip icon

    புதுக்கோட்டை

    • திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவில் மாசிப்பெருந்திருவிழா வருகிற 26-ந்தேதி பூச்சொரிதலுடன் தொடங்குகிறது
    • 13-ந் தேதி தேரோட்டமும் நடைபெறுகிறது.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை அருகே உள்ள திருவப்பூரில் மிகவும் புகழ் பெற்ற முத்து–மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இங்கு ஆண்டு–தோறும் மாசிபெருந்திருவிழா பூச்சொ–ரிதல் மற்றும் தேரோட்டத்து–டன் விமரிசையாக நடைபெறும். மாசி பெருந்திருவிழாவை முன்னிட்டு வருகிற 26-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) பூச்சொரிதல் விழாவும் அடுத்த மாதம் (மார்ச்) 13-ந் தேதி தேரோட்டமும் நடைபெறுகிறது. விழாவையொட்டி பூச் சொரிதல் விழாவுடன் கூடிய தேரோட்டம் காப்பு–கட்டுதலுடன் தொடங்கி நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டும் மாசிப் பெருந்திருவிழாவின் தொடக்கமாக பூச்சொரிதல் விழா 26ந்தேதி நடக்கிறது. இதையொட்டி முத்துமாரி–யம்மனுக்கு சிறப்பு அபி–ஷேகம், வழிபாடுகள் நடை–பெறவுள்ளது புதுக்கோட்டை மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதியை சேர்ந்த திரளான பக்தர்கள் விரதம் இருந்து கோவிலுக்கு ஊர்வலமாக பால்குடம் எடுத்து வந்து, சிறப்பு வழிபாடு நடத்தி தங்களது நேர்த்திக் கடனை செலுத்துவார்கள். இதேபோல பக்தர்கள் அலகு குத்தியும், பறவை காவடி எடுத்தும், தம்பதிகள் கரும்புத் தொட்டில் கட்டி கோவிலுக்கு மேள தாளங்கள், வாண வேடிக்கைகள் முழங்க, ஆட்டம், பாட்டத்துடன் ஊர்வ–லமாக எடுத்து வந்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்து–வார்கள். விழாவையொட்டி பந்தல்கள் அமைக்கப்பட்டு, கோவிலுக்கு நேர்த்திக்கடன் செலுத்த ஊர்வலமாக செல்லும் பக்தர்களுக்கு அன்னதானம் மற்றும் நீர் மோர், பானகம் வழங்கப்படும். இதைத்தொடர்ந்து இரவு புதுக்கோட்டை மற்றும் சுற்று வட்டார பகு–தியை சேர்ந்த திரளான பக்தர்கள் தங்கள் பகுதியில் இருந்து அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் பூக்களை கோவி–லுக்கு ஊர்வலமாக எடுத்து வந்து அம்மன் சன்னதியில் பூக்களை சார்த்தி வழிபட்டுச் செல்வார்கள். தொடர்ந்து 27-ந்தேதி அதிகாலையில் பூப்பிரித்தல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. 13.03.2023 அன்று அம்மன் தேரோட்டமும், அதனைத்தொடர்ந்து 05.03.2023 அன்று இரவு காப்புகட்டுதல் நிகழ்ச்சியுடன் 15 நாள் திருவிழா தொடங்குகிறது. விழா நாட்களில் தினமும் காலை, மாலையில் முத்து–மாரியம்மன் வீதிஉலா நடைபெறும். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான 8-ம் நாள் (12.03.2023) அன்று பொங்கல் வைத்து பக்தர்கள் வழிபடுவார்கள். 9-ம் நாள் திருவிழாவன்று (13.03.2023) மாலை தேரோட்டம் நடைபெற உள்ளது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து நிலைக்கு கொண்டு செல்வார்கள். மாசிப்பெருந் திருவிழா 21.03.2023 தேதி காப்புக்களைதலுடன் நிறைவு பெறுகிறது. விழாவுக் கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் செய்து வருகின்றனர்.

    • தண்டவாளத்தில் தலை வைத்து முதியவர் தற்கொலை செய்து கொண்டார்.
    • தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த பட்டுக்கோட்டை ெரயில்வே போலீசார். உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    அறந்தாங்கி:

    புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அண்ணாநகர் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (60), இவர் இரும்புக்கடை ஒன்றில் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் கடந்த ஒரு வார காலமாக சற்று மனநிலை பாதிக்கப்பட்டிருந்த அவர் நேற்று ரெத்தினக்கோட்டைக்கு தனது மிதிவண்டியில் சென்று அருகே இருந்த தண்டவாளத்தில் தலை வைத்து படுத்துள்ளார். அப்போது அவ்வழியாக காரைக்குடியிலிருந்து திருவாரூர் மார்க்கமாக சென்ற ெரயில் அவர் மீது ஏரியுள்ளது. இதில் கிருஷ்ணமூர்த்தியின் தலை துண்டிக்கப்பட்டு அங்கேயே துடிதுடித்து உயிரிழந்தார். இதனையறிந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக காவத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த பட்டுக்கோட்டை ெரயில்வே போலீசார். உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மன நிலை பாதிக்கப்பட்ட நிலையில் ெரயில்வே தண்டவாளத்தில் தலை வைத்து தற்கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


    • கறம்பக்குடி அருகே விஷம் குடித்து விவசாயி தற்கொலை செய்து கொண்டார்
    • கணவன், மனைவி இருவருக்கிடையே அடிக்கடி சண்டை வருவதாக கூறப்படுகிறது

    கறம்பக்குடி:

    புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி ஒன்றியம் கூப்புடையான் கொள்ளை கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன்(வயது 52 ). விவசாயியான இவர் தனது மனைவி மேனகாவுடன் வாழ்ந்து வந்தார். இவர்களுக்கு ஒரு மகன் ஒரு மகள் உள்ளனர். இந்த நிலையில் கணவன் மனைவி இருவருக்கிடையே அடிக்கடி சண்டை வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் பாலசுப்பிரமணியன் வயலுக்கு அடிக்கும் பூச்சி மருந்தை குடித்து மயங்கி கிடந்தார். இதை கண்ட குடும்பத்தினர் அவரை மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து அவரது மகன் ராஜ்குமார் மலையூர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததின் பெயரில் காவல் நிலைய உதவி ஆய்வாளர் திருஞானம் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • ஆலங்குடி அருகே குளத்தில் வாலிபர் பிணம் மீட்கபட்டது
    • இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்

    ஆலங்குடி:

    ஆலங்குடி-புதுக்கோட்டை சாலையில் தனியார் மஹால் அருகே சாம்பிராணி குளம் உள்ளது. அருகில் இருந்த கட்டிடத்தின் கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டிருந்த நபர் குளத்தில் ஆண் சடலம் ஒன்று மிதப்பதைக் கண்டுள்ளார். இதுகுறித்து உடனடியாக ஆலங்குடி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஆலங்குடி டி.எஸ்.பி. தீபக்ரஜினி மற்றும் இன்ஸ்பெக்டர் அழகம்மை உள்ளிட்ட காவல்துறையினர், தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். நிலைய அலுவலர் சரவணகுமார் தலைமையில் விரைந்து வந்த தீயணைப்பு மற்றும் மீட்பு குழுவினர் சடலத்தை மீட்டனர். இதையடுத்து சடலத்தை புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் போலீசார் கடந்த பத்து நாட்கள் வரை ஆலங்குடி மற்றும் இதர காவல் நிலையங்களில் காணாமல் போனவர்களின் பட்டியலைக் கொண்டு விசாரித்து வருகின்றனர். இந்நிலையில் பிரேத பரிசோதனைக்கு பிறகு தான் அவர் யார் எந்த ஊரை சேர்ந்தவர் என்பது தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர். மேலும் மக்கள் நடமாட்டமும் நெடுஞ்சாலைப் போக்குவரத்தும் நிறைந்த பகுதியில் மிதந்த சடலத்தால் அவர் நீரில் தவறி விழுந்து உயிரிழந்தாரா, இல்லை தற்கொலை செய்து கொண்டாரா என போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    • ஆலங்குடி காவல் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம் அடைந்தனர்
    • இதுகுறித்து ஆலங்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் அழகம்மை இரு விட்டாருக்கும் தகவல் தெரிவித்தனர்

    ஆலங்குடி:

    ஆலங்குடி அருகே உள்ள வேங்கிடகுளம் ஊராட்சி மைக்கேல்பட்டியை சேர்ந்தவர் தேவநேசன் மகள் ஜோஸ் ஆஸ்லி. (வயது 22). பி.எட். பட்டதாரியான இவர் கடந்த 12ஆம் தேதி வீட்டை விட்டு ஓடி விட்டதாக ஆலங்குடி போலீசில் தந்தை புகார் கொடுத்தார். ஆலங்குடி போலீசார் தேடிவந்தனர். இந்நிலையில் தஞ்சாவூர் மாவட்டம் திருக்கானூர்பட்டி மாதா கோவில் தெருவை சேர்ந்த சின்னப்பன் மகன் லெனின் என்பவரும் ஜோஸ் ஆஸ்லியும் காதலித்து வந்துள்ளனர். இதையடுத்து இருவரும் ஆலங்குடி போலீஸ் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தனர். இதுகுறித்து ஆலங்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் அழகம்மை இரு விட்டாருக்கும் தகவல் தெரிவித்தனர். மாப்பிள்ளை வீட்டார் சமாதானம் தெரிவித்து எழுதி கொடுத்துவிட்டு காதல் ஜோடியை அழைத்து சென்றனர். பெண் வீட்டார் கொடுத்த புகாரை வாபஸ் பெற்று கொண்டனர்.

    • விடுதியில் தரமற்ற உணவு வழங்குவதாக கூறி மாணவர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர்.
    • கழிப்பறை வசதி மற்றும் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் எதுவும் செய்து தரப்படவில்லை.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை நகரின் மையப்பகுதியில் அரசு மன்னர் கலைக்கல்லூரியும், அதன் அருகிலேயே ஆதிதிராவிடர் நல மாணவர்கள் விடுதியும் செயல்பட்டு வருகிறது. இங்கு ஏராளமான வெளியூர் மற்றும் அக்கம்பக்கத்து கிராமங்களை சேர்ந்த மாணவர்கள் தங்கி பயின்று வருகிறார்கள்.

    இந்நிலையில் இன்று காலை விடுதியில் தங்கியிருக்கும் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட உணவில் புழுக்கள் இருப்பதாக புகார் எழுந்தது. இதையடுத்து காலை உணவை புறக்கணித்த 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் விடுதியில் இருந்து சாப்பாட்டு தட்டுகளுடன் விடுதியை விட்டு வெளியே வந்தனர்.

    பின்னர் அவர்கள் ஊர்வலமாக சென்று, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் முன்பாக தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். இது குறித்து மாணவர்கள் தெரிவிக்கையில், புதுக் கோட்டை அரசு மன்னர் கலைக்கல்லூரி ஆதி திராவிடர் அரசு மாணவர் நல விடுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்கி படித்து வருகின்றோம்.

    எங்களுக்கு அரசு வழங்கக்கூடிய எந்த ஒரு சலுகையும் இதுவரை வழங்கப்படவில்லை. கழிப்பறை வசதி மற்றும் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் எதுவும் செய்து தரப்படவில்லை. உணவு சுகாதாரமற்ற முறையில் வழங்கப்படுகிறது. இதுகுறித்து பலமுறை மாவட்ட நிர்வாகத்திடம் புகார் கூறியும் அவர்கள் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தெரிவித் தனர்.

    இதுபற்றிய தகவல் அறிந்த போலீசார் விரைந்து சென்று மாணவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். மேலும் இது தொடர்பாக 5 மாணவர்களை மட்டும் பேச்சுவார்த்தைக்காக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு அழைத்து சென்றனர். மாணவர்கள் சாப்பாட்டு தட்டுகளுடன் போராட்டத் தில் ஈடுபட்டது புதுக்கோட் டையில் பரபரப்பை ஏற்படுத்தியது. 

    மனுவின் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக கோட்டாட்சியர் உறுதி கூறியுள்ளார்.

    கந்தர்வகோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் அரவம்பட்டி கிராமத்தில் அம்பலக்காரதெருவில் 40க்கும் மேற்பட்ட குடும்பங்கள் கடந்த மூன்று தலைமுறைகளாக குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். இவர்கள் குடியிருந்து வரும் இடத்திற்கு இதுவரை மனை பட்டா வழங்காமல் உள்ளது. இந்நிலையில் இவர்களுக்கு அரசு இலவச மனை பட்டா கேட்டு ஊராட்சி மன்றம் சார்பில் ஊராட்சி மன்ற தலைவர் சிவரஞ்சனி சசிகுமார், துணைத் தலைவர் அருண்பிரசாத் ஆகியோர் புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் முருகேசனிடம் கோரிக்கை மனு அளித்தனர். மனுவின் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக கோட்டாட்சியர் உறுதி கூறியுள்ளார்.

    சாலை மறியல் காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    அறந்தாங்கி:

    மணமேல்குடி தாலுகா கிருஷ்ணாஜி பட்டினம் ஊராட்சிக்குட்பட்ட திருமங்களப்பட்டினத்தில் சுமார் 150க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்நிலையில்இங்கு முறையான தார்ச்சாலை, குடிநீர் வசதி, பேருந்து நிறுத்தம் போன்ற அடிப்படை வசதிகள் இல்லையென கூறப்படு கிறது. இப்பகுதியில் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட தார்ச்சாலை மிகவும் பழுதடைந்த நிலையில் குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் சாலையை கடந்து செல்லும் வாகன ஓட்டிகளும், அப்பகுதி பொதுமக்களும் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இது குறித்து இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி பொதுமக்கள், சாலை சீரமைக்கப்படாததை கண்டித்து, எஸ்டிபிஐ கட்சியுடன் இணைந்து திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். கிருஷ்ணாஜி பட்டினம் கிழக்கு கடற்கரை சாலையில் இந்த மறியல் போராட்டம் நடைபெற்றதை தொடர்ந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனை அறிந்து அங்கு வந்த மணமேல்குடி போலீ சார் மறியலில் ஈடுட்ட பொது மக்களுடன் சமாதான பேச்சு வார்த்தையில் ஈடுபட்ட னர். இந்த சமாதான பேச்சு வார்த்தையில் உட ன்பாடு எட்டவில்லை. இதனால் சாலை மறியலில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர். இந்த சாலை மறியல் காரணமாக அப்பகுதியில் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது. 

    போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கினர்

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலம் மற்றும் புதுக்கோட்டை மன்னர் கல்லூரி இணைந்து தொழில்நெறி வழிகாட்டும் கண்காட்சியினை நடத்தின. மன்னர் கல்லுாரியில் நடைபெற்ற இந்த தொழில்நெறி வழிகாட்டும் கண்காட்சி மற்றும் கருத்த ரங்கத்தினை, மாவட்ட கலெக்டர் கவிதா ராமு தொடங்கி வைத்து பார்வையிட்டார், அதன் பின்னர் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கி, தகவல் கையேட்டினை வெளியிட்டார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர்கள் மோ.மணிகண்டன், பெ.வேல்முருகன், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் கி.கருணாகரன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் ஜி.அமீர் பாஷா, மன்னர் கல்லூரி முதல்வர் திருச்செல்வம், முன்னாள் படைவீரர் நல அலுவலர் விஜயகுமார், மாவட்ட தொழில் மைய பொதுமேலாளர் ரவிச்சந்திரன், வட்டாட்சியர் விஜயலெட்சுமி உள்ளிட்ட ஏராளமான மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

    கல்வெட்டு வாசிப்பு பயிற்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில், சுற்றுலாத்துறையின் சார்பில், இடைக்கால தமிழ் எழுத்துகள் மற்றும் கல்வெட்டு வாசிப்பு பயிற்சி பெற்ற கல்லூரி மாணவ, மாணவியர்கள், ஆசிரியர்கள், பத்திரிகையாளர்களுக்கு, மாவட்ட கலெக்டர் கவிதா ராமு பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார். உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு, கல்லூரி மாணவ, மாணவியர்கள், ஆசிரியர்கள், பத்திரிகையாளர்கள் ஆகியோர்களுக்கு இடைக்கால தமிழ் எழுத்துகள் மற்றும் கல்வெட்டு வாசிப்பு பயிற்சியை காரைக்குடி பல்கலைக்கழக பேராசிரியர்இராசவேலு, புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வு கழக நிறுவனர் மணிகண்டன், தலைவர் கரு.இராஜேந்திரன், அருங்காட்சியக ஓய்வு பெற்ற உதவி இயக்குநர் ஜெ.ராஜாமுகமது ஆகியோர் வழங்கினார்கள். இந்நிகழ்வில் மாவட்ட சுற்றுலா அலுவலர் பே.முத்துசாமி, தொல்லியல் ஆய்வு கழக நிறுவனர் மணிகண்டன், சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளார் சாலை செந்தில் மற்றும் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர். 

    பேரணியில் ஏராளமான மாணவ, மாணவிகள் கைகளில் மெழுகுதிரி ஏந்தி அமைதியுடன் கலந்து கொண்டனர்.

    ஆலங்குடி:

    துருக்கி - சிரியாவின் ஏற்பட்ட பூகம்பத்தால் கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாகி 35 ஆயிரத்திற்கும் அதிகமா னோர் பலியானார்கள். பூகம்பத்தில் பலியானர்க ளுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, ஆலங்குடி வம்பனில் உள்ள அற்புதா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, நாட்டு நல பணி திட்டம் சார்பில் அமைதி பேரணி நடைபெற்றது. முதல்வர் ஜான் மார்ட்டீன், துணை முதல்வர் மெட்டில்டா, திட்ட அலுவலர் முத்து மீனா ஆகியோர் தலைமையில் நடைபெற்ற அமைதி பேரணியில் ஏராளமான மாணவ, மாணவிகள் கைகளில் மெழுகுதிரி ஏந்தி அமைதியுடன் கலந்து கொண்டனர். அமைதி பேரணியானது, பேரூந்து நிலையத்தில் துவங்கி பழைய நீதிமன்ற வளாகம், அரச மரம் பஸ் நிறுத்தம், வட காடு, முக்கம் வழியாக சந்தைப்பேட்டை பஸ் நிறுத்தத்தில் நிறைவடைந்தது. பேரணியில் துணை பேராசிரியர்கள் கமலா வைஜெயந்திமாலா, கலை ச்செல்வம் சத்தியமூர்த்தி, பிரவீன், அருள் அனுசியா புளோரா கிருஸ்டி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஆலங்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் அழகம்மை தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். 

    • கையில் தேசியக்கொடியுடன் விராலிமலை வட்டார வளர்ச்சி அலுவலகம் எதிர்ப்புறம் உள்ள மேல்நிலை நீர்த் தேக்க தொட்டி மீது அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார்.
    • ஆக்கிரமிப்புகள் அகற்றுவதற்கான நடவடிக்கை துரிதப்படுத்தப்படும் என்று அதிகாரிகள் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது.

    விராலிமலை:

    புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே அமைந்துள்ளது கொடும்பாளூர் சத்திரம் கிராமம். இங்குள்ள நீர்ப்பிடிப்பு பகுதியில் சிலர் ஆக்கிரமித்து வணிக நிறுவனம், கடைகள், குடியிருப்பு என கட்டி நீண்ட நாட்களாக இருந்து வருகின்றனர். இதனால் நீர் வழித்தடங்களில் பல்வேறு சிரமங்கள் எழுந்தன.

    இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் காந்தியவாதி செல்வராஜ் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஆக்கிரமிப்புகளை அகற்றி தருமாறு வருவாய்த் துறை மற்றும் உள்ளாட்சித் துறையினருக்கு அறிவுரை வழங்கி இருந்தனர்.

    இதனைத் தொடர்ந்து கடந்த 2020 ஆம் ஆண்டு ஆக்கிரமிப்பை அகற்ற சென்ற அதிகாரிகளுடன் ஆக்கிரமிப்பாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு நீதிமன்றத்திற்கு சென்று குறிப்பிட்ட கால தடையாணையினை பெற்றனர். அந்த தடையாணை காலம் தற்போது முடிவடைந்துள்ளது.

    எனவே உடனடியாக அந்த ஆக்கிரமிப்புகளை அகற்றித் தருமாறு கோரி காந்தியவாதி செல்வராஜ் இன்று காலை கையில் தேசியக்கொடியுடன் விராலிமலை வட்டார வளர்ச்சி அலுவலகம் எதிர்ப்புறம் உள்ள மேல்நிலை நீர்த் தேக்க தொட்டி மீது ஏறினார். பின்னர் அங்கு அமர்ந்துகொண்டு போராட்டத்தில் ஈடுபட்டார்.

    தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் லாவகமாக மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியின் படிகளில் ஏறி அவர் பின்னால் சென்று அவரை கட்டியணைத்து அசம்பாவிதம் ஏற்படாமல் தடுத்தனர். தொடர்ந்து அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி கீழே அழைத்து வந்தனர்.

    இதனை தொடர்ந்து வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் அவரது கோரிக்கை தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு நீர் நிலை ஆக்கிரமிப்புகள் அகற்றுவதற்கான நடவடிக்கை துரிதப்படுத்தப்படும் என்று அதிகாரிகள் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது. காந்தியவாதியின் இந்த திடீர் போராட்டம் விராலிமலையில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    ×