search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    சாப்பாட்டு தட்டுடன் அரசு கல்லூரி மாணவர்கள் ஊர்வலம்- புதுக்கோட்டை எஸ்.பி. அலுவலகம் முன்பு தர்ணா
    X

    சாப்பாட்டு தட்டுடன் அரசு கல்லூரி மாணவர்கள் ஊர்வலம்- புதுக்கோட்டை எஸ்.பி. அலுவலகம் முன்பு தர்ணா

    • விடுதியில் தரமற்ற உணவு வழங்குவதாக கூறி மாணவர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர்.
    • கழிப்பறை வசதி மற்றும் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் எதுவும் செய்து தரப்படவில்லை.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை நகரின் மையப்பகுதியில் அரசு மன்னர் கலைக்கல்லூரியும், அதன் அருகிலேயே ஆதிதிராவிடர் நல மாணவர்கள் விடுதியும் செயல்பட்டு வருகிறது. இங்கு ஏராளமான வெளியூர் மற்றும் அக்கம்பக்கத்து கிராமங்களை சேர்ந்த மாணவர்கள் தங்கி பயின்று வருகிறார்கள்.

    இந்நிலையில் இன்று காலை விடுதியில் தங்கியிருக்கும் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட உணவில் புழுக்கள் இருப்பதாக புகார் எழுந்தது. இதையடுத்து காலை உணவை புறக்கணித்த 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் விடுதியில் இருந்து சாப்பாட்டு தட்டுகளுடன் விடுதியை விட்டு வெளியே வந்தனர்.

    பின்னர் அவர்கள் ஊர்வலமாக சென்று, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் முன்பாக தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். இது குறித்து மாணவர்கள் தெரிவிக்கையில், புதுக் கோட்டை அரசு மன்னர் கலைக்கல்லூரி ஆதி திராவிடர் அரசு மாணவர் நல விடுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்கி படித்து வருகின்றோம்.

    எங்களுக்கு அரசு வழங்கக்கூடிய எந்த ஒரு சலுகையும் இதுவரை வழங்கப்படவில்லை. கழிப்பறை வசதி மற்றும் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் எதுவும் செய்து தரப்படவில்லை. உணவு சுகாதாரமற்ற முறையில் வழங்கப்படுகிறது. இதுகுறித்து பலமுறை மாவட்ட நிர்வாகத்திடம் புகார் கூறியும் அவர்கள் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தெரிவித் தனர்.

    இதுபற்றிய தகவல் அறிந்த போலீசார் விரைந்து சென்று மாணவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். மேலும் இது தொடர்பாக 5 மாணவர்களை மட்டும் பேச்சுவார்த்தைக்காக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு அழைத்து சென்றனர். மாணவர்கள் சாப்பாட்டு தட்டுகளுடன் போராட்டத் தில் ஈடுபட்டது புதுக்கோட் டையில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    Next Story
    ×