என் மலர்
பெரம்பலூர்
- பெரம்பலூர் மாவட்ட பள்ளி, கல்லூரி நிறுவனங்கள் மஞ்சப்பை விருது பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்
- விருது பெறுவோர்களுக்கு, முதல் பரிசாக ரூ.10 லட்சமும், இரண்டாம் பரிசாக ரூ.5 லட்சமும், மூன்றாம் பரிசாக ரூ. 3 லட்சமும் வழங்கப்படும்
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது, தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் மூலம் "மீண்டும் மஞ்சப்பை" பிரச்சாரத்தை முன்னெடுத்துச் செல்லும் வகையில் ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் நெகிழியின் தடையை திறம்பட செயல்படுத்தி தங்கள் வளாகத்தை பிளாஸ்டிக் இல்லாத வளாகமாக மாற்றும் சிறந்த பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் வணிக வளாகங்களுக்கு "மஞ்சப்பை விருதுகள்" வழங்கப்படவுள்ளது. அதனடிப்படையில் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களான பிளாஸ்டிக் கைப்பபைகளுக்கு மாற்றாக மஞ்சப்பை (மஞ்சள் துணி பை) போன்ற பாரம்பரியமான சுற்றுச்சூழலுக்கு உகந்த மாற்றுகளின் பயன்பாட்டை ஊக்குவித்து சிறப்பாக செயல்படுத்தும் 3 சிறந்த பள்ளிகள், 3 சிறந்த கல்லூரிகள் மற்றும் 3 சிறந்த வணிக வளாகங்களுக்கு இவ்விருதுகள் வழங்கப்படும். விருது பெறுவோர்களுக்கு, முதல் பரிசாக ரூ.10 லட்சமும், இரண்டாம் பரிசாக ரூ.5 லட்சமும், மூன்றாம் பரிசாக ரூ. 3 லட்சமும் வழங்கப்படும்.இதற்கான விண்ணப்பப் படிவங்கள் பெரம்பலூர் கலெக்டர் அலுவலக இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து மே மாதம் 1ம்தேதிக்குள் கலெக்டர் அலுவலகத்தில் சமர்பிக்கவேண்டும் என தெரிவித்துள்ளார்.
- பெரம்பலூர் மாவட்டத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு டோக்கன் வழங்கும் பணி தொடங்கப்பட்டது
- ஒரு ரேசன் கடையில் ஒரு நாளைக்கு 250 பேருக்கு பொங்கல் தொகுப்பு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
பெரம்பலூர்:
2023 ஆம் ஆண்டு தைப் பொங்கலை சிறப்பாக கொண்டாடிட, அனைத்து அரிசி குடும்ப அட்டைதார்களுக்கு ஆயிரம் ரூபாய் ரொக்கத்துடன் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் முழு நீள கரும்பு அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படவுள்ளது. இதன்படி பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள 282 ரேசன் கடைகள் மூலம் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும், இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கும் என மொத்தம் ஒரு லட்சத்து 90 ஆயிரத்து 317 குடும்ப அட்டை தாரர்களுக்கும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படவுள்ளது. ரேசன் கடை விற்பனையாளர், உதவியாளர்கள் மூலம் குடும்ப அட்டைதாரர்களின் வீடுகளுக்கு நேரில் சென்று பரிசு தொகுப்பு பெறுவதற்கான டோக்கன் வழங்கும் பணி நேற்று (3-ந் தேதி) துவங்கியது. இப்பணி வரும் 8ம்தேதி வரை நடைபெறுகிறது. இந்த டோக்கனில் எந்த தேதியில், எந்த நேரத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு பெற வரவேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பணியில் 300 பேர் ஈடுத்தப்பட்டுள்ளனர். இதனை தொடர்ந்து வரும் 9-ந் தேதி முதல் 13 -ந் தேதி வரை பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கப்படவுள்ளது. ஒரு ரேசன் கடையில் ஒரு நாளைக்கு 250 பேருக்கு பொங்கல் தொகுப்பு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
- ெபரம்பலூரில் பெண் மாயமானார்.
- போலீசார் இதுகுறித்து வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்
பெரம்பலூர்:
கூத்தங்குடி காலனி தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணியன்(வயது 38). இவரது மனைவி அசோதை (20). இவர்களுக்கு திருமணமாகி 2 ஆண்டுகள் ஆகின்றன. இந்நிலையில் இவர்களுக்கு இடையே குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் அசோதை கோபித்துக் கொண்டு தா.பழூர் அருகே பிள்ளையார்குளம் கிராமத்தில் உள்ள தனது தந்தை வீட்டிற்கு செல்வதாக கூறிச்சென்றுள்ளார். பின்னர் மீண்டும் அவர் வீட்டிற்கு திரும்பவில்லை. இதையடுத்து சுப்பிரமணியன் அவரது மாமனார் வீட்டுக்கு சென்று விசாரித்துள்ளார். ஆனால் அசோதை அங்கு வரவில்லை என்று கூறியுள்ளனர். இதையடுத்து உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீடுகளில் தேடியும் அவர் கிடைக்காததால், இது குறித்து தா.பழூர் போலீசில் சுப்பிரமணியன் கொடுத்த புகாரின்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் நிக்கோலஸ் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.
- பெரம்பலூர் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
- பாடாலூர் மாவட்ட கல்வியியல் மற்றும் பயிற்சி நிறுவனத்தில் பயிற்சி பெற்ற 8 கருத்தாளர்கள் கலந்து கொண்டு 123 ஆசிரியர்களுக்கு பயிற்சி அளித்தனர்
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் 1 முதல் 3-ம் வகுப்பு வரை பயிற்றுவிக்கும் ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சி 3-ம் கட்டமாக பெரம்பலூர் ராமகிருஷ்ணா பெண்கள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. பாடாலூர் மாவட்ட கல்வியியல் மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் மயில்வாகனன் தலைமை தாங்கினார். மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன உதவி பேராசிரியர் பழனிவேல் ராஜன், பாடாலூர் மாவட்ட கல்வியியல் மற்றும் பயிற்சி நிறுவன உதவி பேராசிரியர்கள் விஜயலட்சுமி, உமா, பெரம்பலூர் வட்டார வள மைய மேற்பார்வையாளர் தேவகி ஆகியோர் முன்னிலை வகித்தனர். முதல் நாள் பயிற்சியான நேற்று மாவட்ட கல்வி அலுவலர் (தொடக்க நிலை) அண்ணாதுரை பார்வையிட்டு ஆசிரியர்களுக்கு அறிவுரை வழங்கினார். வட்டார கல்வி அலுவலர் ஜோதிலட்சுமி பயிற்சியின் முக்கியத்துவத்தை எடுத்து கூறினார். பாடாலூர் மாவட்ட கல்வியியல் மற்றும் பயிற்சி நிறுவனத்தில் பயிற்சி பெற்ற 8 கருத்தாளர்கள் கலந்து கொண்டு 123 ஆசிரியர்களுக்கு பயிற்சி அளித்தனர். இந்த பயிற்சி இன்றும் (செவ்வாய்க்கிழமை), நாளையும் (புதன்கிழமை) நடைபெறுகிறது.
- மஞ்சள் சாகுபடியில் போதிய விலை கிடைக்காததால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.
- பொங்கல் பண்டிகையில் கரும்புக்கு அடுத்த இடத்தை பெறுவது மஞ்சள் குலை
பெரம்பலூர் :
மஞ்சள் சாகுபடி மஞ்சள் பல்வேறு மருத்துவ குணங்களை கொண்டுள்ளது. மஞ்சளில் பல்வேறு வகைகள் உள்ளன. அதில் சமையலுக்கு பயன்படுத்துகின்ற மஞ்சளை பெரம்பலூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் சாகுபடி செய்துள்ளனர். அறுவடைக்கு ஓரிரு மாதங்களே உள்ள நிலையில் மஞ்சளுக்கு தற்போது போதிய விலை இல்லாததால், அதனை சாகுபடி செய்த விவசாயிகள் கவலையில் உள்ளனர். மஞ்சள் குலை விற்பனை மேலும் பொங்கல் பண்டிகை வருகிற 15-ந்தேதி கொண்டாடப்படவுள்ளது. பொங்கல் பண்டிகையில் கரும்புக்கு அடுத்த இடத்தை பெறுவது மஞ்சள் குலை. மங்கலத்தின் சின்னமாக மஞ்சள் குலை விளங்குகிறது. பொங்கலிடும் பானையை சுற்றி மஞ்சள் குலையை கட்டி, பெண்கள் பொங்கல் இடுவது வழக்கம். இதனால் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மஞ்சள் குலையாவது நல்ல விலைக்கு விற்பனை ஆகுமா? என்ற எதிர்பார்ப்பில் விவசாயிகள் உள்ளனர்.
- 6 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டது
- பள்ளிகளில் திருத்தப்பட்ட அரையாண்டு தேர்வு விடைத்தாள்களை மாணவ, மாணவிகளுக்கு ஆசிரியர்கள் வழங்கினர்
பெரம்பலூர்:
தமிழகம் முழுவதும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளில் 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு கடந்த மாதம் அரையாண்டு தேர்வு நடந்தது. கடந்த 23-ந் தேதியுடன் அரையாண்டு தேர்வு முடிவடைந்து 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ-மாணவிகளுக்கு 12 நாட்களும், 6 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ-மாணவிகளுக்கு 9 நாட்களும் விடுமுறை விடப்பட்டிருந்தது. அதன்படி அரையாண்டு தேர்வு விடுமுறை முடிந்து நேற்று தமிழகம் முழுவதும் 6 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ-மாணவிகளுக்கு பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டது. அதன்படி பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களிலும் பள்ளிகள் திறக்கப்பட்டன. இதைத்தொடர்ந்து நேற்று காலை மாணவ-மாணவிகள் பள்ளிக்கு சென்றனர். பள்ளிகளில் திருத்தப்பட்ட அரையாண்டு தேர்வு விடைத்தாள்களை மாணவ, மாணவிகளுக்கு ஆசிரியர்கள் வழங்கினர். அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6, 7-ம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகளுக்கு 3-ம் பருவக்கால விலையில்லா பாடப்புத்தக்கங்களும், பாட குறிப்பேடுகளும் வழங்கப்பட்டன. 8, 9-ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா பாட குறிப்பேடுகள் வழங்கப்பட்டது.
- கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.
- இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.
பெரம்பலூர்:
மார்கழி மாத கிருத்திகையை முன்னிட்டு கோவில்களில் முருகப்பெருமானுக்கு பல்வேறு திரவியங்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் சுவாமி மலர் அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பின்னர் பிரகார பிரதட்சணம் செய்யப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.
- பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த ஆண்டில் 4,069 வழக்குகள் பதிவு என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்
- பெண்களுக்கு எதிரான குற்றம் புரிந்த வழக்கில் 205 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணி வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் தெரிவித்துள்ளதாவது:-பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த ஆண்டில் காவல் துறையினரின் சீரிய முயற்சி மற்றும் நடவடிக்கையால் குற்றங்கள் மற்றும் ஓரளவிற்கு விபத்துக்கள் தடுக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் உள்ள அனைத்து போலீஸ் ஸ்டேசன் மற்றும் இதர பிரிவு மூலம் மொத்தம் 4 ஆயிரத்து 69 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. இதில் குறிப்பாக வழிப்பறி, திருட்டு போன்ற வகையில் 286 குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் 105 வழக்குகள் கண்டுபிடிப்பு குற்றவாளிகளிடமிருந்த நகை, பணம், பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு குற்றவாளிகள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.பெண்குழந்தைகள் பாலியல் தொடர்பான 69 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 69 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 7 கற்பழிப்பு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 549 சாலை விபத்துக்கள் நடந்தது. இதில் 204 இறப்பு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் 224 பேர் இறந்துள்ளனர். காயம் ஏற்பட்டதாக 345 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் 723 பேர் காயமடைந்துள்ளனர்.அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா விற்ற வகையில் 17 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர், இதில் 9 வழக்குகள் முடிக்கப்பட்டுள்ளது. குட்கா விற்றதாக 272 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து விதிமுறையை மீறியதாக 2 லட்சத்து 49 ஆயிரத்து 779 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியது தொடர்பாக 166 வழக்குள் பதிவு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து குற்ற செயலில் ஈடுப்பட்டு வந்த 42 பேர் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.பெண்களுக்கு எதிரான குற்றம் புரிந்த வழக்கில் 205 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் உள்ள 128 ரவுடிகளில் 14 பேர் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். 43 திருந்தி வாழ்ந்து வருகின்றனர். 15 பேர் சிறையில் உள்ளனர். திருந்தி வாழும் பட்டியலில் 6 பேர் உள்ளனர். பல்வேறு காரணங்களால் 379 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். மது விலக்கு அமலாக்கப்பிரிவு மூலம் 925 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 922 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ளார்.
- பொங்கல் பானை தயாரிக்கும் பணி மும்மரம் நடைபெற்று வருகிறது
- பொங்கல் பண்டிகை வருகிற 15-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்படுகிறது
பெரம்பலூர்:
பெரம்பலூர் தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை வருகிற 15-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதையடுத்து, பெரம்பலூர் அருகே பாளையம் கிராமத்தில் பொங்கல் பானை தயாரிக்கும் பணியில் தொழிலாளிகள் மும்முரமாக ஈடுபட்ட வருகின்றனர்.
- மருதையாற்றில் சீமைக்கருவேல மரங்களை அகற்றி தூய்மைப்படுத்த கோரிக்கை விடுக்கப்பட்டது.
- விளையாட்டு மைதானம் அமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்
பெரம்பலூர்
பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, ரசுலாபுரத்தை சேர்ந்த பொதுமக்கள் போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கரிடம் கோரிக்கை மனு அளித்தனர். அதில், எங்கள் ஊரின் வழியாக ஓடும் மருதையாற்றில் வளர்ந்துள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்றி தூய்மைப்படுத்தி தர நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் எங்கள் ஊரின் மருதையாற்றின் குறுக்கே ரெயில்வே பாலம் உள்ளது. அந்த பாலம் முன்பு மழையால் அடித்து செல்லப்பட்டதில் பலர் இறந்தனர். அவர்களின் நினைவாக ஒரு நினைவு தூண் அமைத்து, பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். எங்கள் கிராமத்தில் இருந்து பள்ளி, கல்லூரிகளுக்கு அரியலூருக்கு காலையில் செல்ல கூடுதல் அரசு டவுன் பஸ் வசதி ஏற்படுத்தி தர வேண்டும். மேலும் ஊரில் இளைஞர்களுக்கு விளையாட்டு மைதானம் அமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறியிருந்தனர்.
- தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தை செயல்படுத்த வேண்டுகோள் விடுக்கப்பட்டது.
- அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகள் வைத்தனர்.
பெரம்பலூர்:
100 நாள் வேலையை பாதுகாத்திடவும், அனைவருக்கும் வேலையை உத்திரவாதப்படுத்தவும் தினக்கூலியை ரூ.600 ஆக உயர்த்தி, நகராட்சி, பேரூராட்சிகளில் 100 நாள் வேலையை விரிவுப்படுத்த வேண்டும். பெரம்பலூர் மாவட்டத்தில் சின்ன முட்லு நீர்த்தேக்கம் அமைக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். முறைகேடுகளை களைந்து தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தை செயல்படுத்த வேண்டும். வீடு இல்லாத அனைவருக்கும் இலவச வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும். விதவை, முதியோர், ஆதரவற்றோர் ஆகியோருக்கு உதவித்தொகை ரூ.1,000 பாரபட்சமின்றி வழங்கிட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வலியுறுத்தி பெரம்பலூர் மாவட்ட அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
- குரும்பலூரில் பருத்தி பஞ்சு அறுவடை செய்யபடுகிறது
- தொழிலாளர்கள் அறுவடை செய்யும் பணியில்மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
பெரம்பலூர் :
பெரம்பலூர்-துறையூர் சாலையில் குரும்பலூரில் ஒரு நிலத்தில் சாகுபடி செய்யப்பட்டிருந்த பருத்தி செடிகளில் இருந்து பஞ்சு அறுவடை செய்யும் பணியில் தொழிலாளர்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்






