என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பெரம்பலூர் மாவட்ட பள்ளி, கல்லூரி நிறுவனங்கள் மஞ்சப்பை விருது பெற விண்ணப்பிக்க அழைப்பு
    X

    பெரம்பலூர் மாவட்ட பள்ளி, கல்லூரி நிறுவனங்கள் மஞ்சப்பை விருது பெற விண்ணப்பிக்க அழைப்பு

    • பெரம்பலூர் மாவட்ட பள்ளி, கல்லூரி நிறுவனங்கள் மஞ்சப்பை விருது பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்
    • விருது பெறுவோர்களுக்கு, முதல் பரிசாக ரூ.10 லட்சமும், இரண்டாம் பரிசாக ரூ.5 லட்சமும், மூன்றாம் பரிசாக ரூ. 3 லட்சமும் வழங்கப்படும்

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது, தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் மூலம் "மீண்டும் மஞ்சப்பை" பிரச்சாரத்தை முன்னெடுத்துச் செல்லும் வகையில் ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் நெகிழியின் தடையை திறம்பட செயல்படுத்தி தங்கள் வளாகத்தை பிளாஸ்டிக் இல்லாத வளாகமாக மாற்றும் சிறந்த பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் வணிக வளாகங்களுக்கு "மஞ்சப்பை விருதுகள்" வழங்கப்படவுள்ளது. அதனடிப்படையில் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களான பிளாஸ்டிக் கைப்பபைகளுக்கு மாற்றாக மஞ்சப்பை (மஞ்சள் துணி பை) போன்ற பாரம்பரியமான சுற்றுச்சூழலுக்கு உகந்த மாற்றுகளின் பயன்பாட்டை ஊக்குவித்து சிறப்பாக செயல்படுத்தும் 3 சிறந்த பள்ளிகள், 3 சிறந்த கல்லூரிகள் மற்றும் 3 சிறந்த வணிக வளாகங்களுக்கு இவ்விருதுகள் வழங்கப்படும். விருது பெறுவோர்களுக்கு, முதல் பரிசாக ரூ.10 லட்சமும், இரண்டாம் பரிசாக ரூ.5 லட்சமும், மூன்றாம் பரிசாக ரூ. 3 லட்சமும் வழங்கப்படும்.இதற்கான விண்ணப்பப் படிவங்கள் பெரம்பலூர் கலெக்டர் அலுவலக இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து மே மாதம் 1ம்தேதிக்குள் கலெக்டர் அலுவலகத்தில் சமர்பிக்கவேண்டும் என தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×