என் மலர்tooltip icon

    பெரம்பலூர்

    • 1 முதல் 5-ம் வகுப்பு மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட்டன.
    • மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள் வினியோகிக்கப்பட்டன.
    பெரம்பலூர்:


    தமிழகம் முழுவதும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ- மாணவிகளுக்கு கடந்த மாதம் அரையாண்டு தேர்வு முடிந்து 24-ந்தேதி முதல் கடந்த 4-ந்தேதி வரை விடுமுறை விடப்பட்டிருந்தது. 12 நாட்கள் அரையாண்டு தேர்வு விடுமுறை முடிந்து தமிழகம் முழுவதும் 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ-மாணவிகளுக்கு நேற்று பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டன. அதன்படி பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகள் திறக்கப்பட்டன.

    விடுமுறை முடிந்து விட்டதால் நேற்று வழக்கம் போல் காலையில் பள்ளிக்கு மாணவ-மாணவிகள் ஆர்வமுடன் சென்றனர். அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு 3-ம் பருவக்கால விலையில்லா பாடப்புத்தக்கங்கள் வினியோகிக்கப்பட்டன. ஏற்கனவே 6 முதல் 12-ம் வகுப்ப வரை பயிலும் மாணவ-மாணவிகளுக்கு அரையாண்டு தேர்வு விடுமுறை முடிந்து கடந்த 2-ந்தேதி பள்ளிகள் திறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.




    • தேர்தல் வாக்குறுதிகளை படிப்படியாக தமிழக முதல்வர் நிறைவேற்றுகிறார் என போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் பேசினார்
    • இதன் மூலம் 1991 மகளிர் சுய உதவிக்குழுக்களை சேர்ந்த 23,307 மகளிர் பயன்பெற்றுள்ளனர்

    பெரம்பலூர்:

    கூட்டுறவுத்துறையின் சார்பில் பெரம்பலுார் மாவட்டத்தில் உள்ள 23,307 மகளிருக்கு வழங்கப்பட்ட ரூ.47.64 கோடி மதிப்பிலான சுயஉதவிக்குழு கடன் தள்ளுபடி செய்யப்பட்டதற்கான ஆணைகள் வழங்கும் நிகழ்ச்சி போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர், கலெக்டர் வெங்கட பிரியா தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ. பிரபாகரன், மாவட்ட ஊராட்சிக்குழுத்தலைவர் ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்நிகழ்ச்சியில் அமைச்சர் பேசியதாவது, முதலமைச்சர் அளித்த தேர்தல் வாக்குறுதிகளை ஆட்சிப்பொறுப்பே ற்றத்திலிருந்து படிப்படியாக செய்து வருகிறார். அதில் கூட்டுறவு சங்கங்களில் மகளிர் சுய உதவிக்குழுக்கள் பெற்ற கடன் ரத்து செய்யப்படும் என அறிவித்தார்.

    அதனை தொடர்ந்து மகளிர் சுய உதவிக்குழுக்கள் பெற்ற கடன்கள் தள்ளுபடி என்கிற அறிவிப்பினை உறுதி செய்யும் விதமாக இன்று மகளிர் சுய உதவிக்குழுக்கள் கடன் தள்ளுபடிக்கான ஆணை வழங்கப்பட்டுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தி ல் ரூ.47.64 கோடி கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் 1991 மகளிர் சுய உதவிக்குழுக்களை சேர்ந்த 23,307 மகளிர் பயன்பெற்றுள்ளனர். மகளிர் அரசுப் பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்யும் திட்டம், புதுமைப் பெண் திட்டம், நான் முதல்வன் திட்டம் போன்ற முத்தாய்ப்பான திட்டங்கள் பல உள்ளன. இப்படி பெண்களின் முன்னேற்றத்தில் மிகுந்த அக்கறை கொண்டு, பெண்களுக்கு உரிய மரியாதை அளித்து அவர்களை வாழ்வில் உயர்த்தும் பல்வேறு திட்டங்கள் தமிழ்நாடு முதலமைச்சர் பொற்கால ஆட்சியில்தான் செயல்படுத்தப்படுகின்றது.

    இவ்வாறு தெரிவித்தார். நிகழ்ச்சியில், 23,307 மகளிருக்கு வழங்கப்பட்ட ரூ.47.64கோடி மதிப்பிலான சுயஉதவிக்குழு கடன் தள்ளுபடி செய்யப்பட்டதற்கான ஆணைகள் வழங்கும் நிகழ்ச்சியை துவக்கி வைக்கும் விதமாக 373 மகளிருக்கு ரூ.1.29 கோடி மதிப்பிலான கடன் தள்ளுபடி செய்யப்பட்டதற்கான ஆவணங்களை அவர் வழங்கினார். இந்நிகழ்வின்போது மாவட்ட வருவாய் அலுவலர் அங்கையற்கண்ணி, வருவாய் கோட்டாட்சியர் நிறைமதி, இணைப் பதிவாளர் (கூட்டுறவு சங்கம்) பாண்டியன், வேப்பூர் ஒன்றிய குழு தலைவர் பிரபா செல்லப்பிள்ளை பேரூராட்சித் தலைவர் சங்கீதா மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.


    • பாலையூர் வேதபுரீஸ்வரர் கோவிலில் ஆருத்ரா தரிசன விழா நடைபெற்றது
    • விழாவையொட்டி வேத மந்திரங்கள் மற்றும் மங்கள வாத்தியம் முழங்க வேதபுரீஸ்வரர் வேதநாயகி திருக்கல்யாணம் நடைபெற்றது.

    வேப்பந்தட்டை:

    பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள பாலையூரில் வேதநாயகி சமேத வேதபுரீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆருத்ரா தரிசன விழாவையொட்டி வேதநாயகி சமேத வேதபுரீஸ்வரருக்கு திருக்கல்யாண வைபவம் நேற்று நடைபெற்றது. விழாவையொட்டி வேத மந்திரங்கள் மற்றும் மங்கள வாத்தியம் முழங்க வேதபுரீஸ்வரர் வேதநாயகி திருக்கல்யாணம் நடைபெற்றது. தொடர்ந்து இன்று வெள்ளிகிழமை காலை கோவில் வளாகத்தில் உள்ள நடராஜர் சன்னதியில் ஆருத்ரா தரிசன விழா நடைபெற்றது. விழாவையொட்டி நடராஜருக்கு பால், பழம், சந்தனம், பன்னீர், மஞ்சள் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து சிறப்பு அலங்காரம் செய்து மகாதீப ஆராதனை காண்பிக்கப்பட்டது. இதில் பாலையூர் மற்றும் பல்வேறு ஊர்களில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி கும்பிட்டனர். விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் திருவாதிரை பிரசாதம் வழங்கப்பட்டது.




    • வேப்பந்தட்ையில் வீட்டின் மேற்கூறை விழுந்து 4 பேர் காயம் அடைந்தனர்.
    • இந்த சம்பவம் தொடர்பாக அரும்பாவூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வேப்பந்தட்டை:

    பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள அன்னமங்கலம் எம்.ஜி.ஆர் நகரை சேர்ந்தவர் செந்தில்குமார்(வயது41). விவசாயியான இவர் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு அரசு வழங்கிய தொகுப்பு வீட்டில் வசித்து வந்தார். நேற்று அவரது மனைவி காமாட்சி, உறவினர்கள் அரசலூரை சேர்ந்த கண்ணன், சங்கர் ஆகிய 4 பேரும் வீட்டில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். அப்போது வீட்டின் மேற்கூறையில் உள்ள சிமெண்ட் பூச்சி திடீரென உதிர்ந்து கீேழ விழுந்தது. அதில் 4 பேரும் காயமடைந்தனர். பின்னர் அவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக அரும்பாவூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


    • மங்களமேட்டில் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். 
    • போலீசார் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை செய்து வருகின்றனர்.

    அகரம்சீகூர்:

    அகரம்சீகூர் அடுத்து பெரம்பலூர் மாவட்டம் மங்களமேடு மெயின் ரோடுவை சேர்ந்த சுரேஷ் இவரது மனைவி தையல் நாயகி (வயது 45)இவர்களது மகள் ரேஷ்மா (வயது 14). இவருக்கு தோல் அலர்ஜியின் காரணமாக கடந்த 8-மாதத்திற்க்கு முன்பு உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்து இறந்து விட்டதாக தெரிகிறது. இதன் காரணமாக தையல் நாயகி மன உளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் தையல் நாயகியின் கணவர் சுரேஷ் தனது இளையமகள் ஜெயஸ்ரீ என்பவரை சென்னையில் உள்ள விடுதியில் சென்று விட்டு விட்டு காலையில் வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டில் உள்ள மின்விசிறியில் சுடிதாரால் தூக்கு மாட்டி பிணமாக தொங்கியதை கண்டு அதிர்ச்சியடைந்த அவர் மங்களமேடு காவல்துறையினர்க்கு தகவல் கொடுத்தார். தகவலின் பேரில் மங்களமேடு காவல்துறையினர் நேரில் சென்று உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை செய்து வருகின்றனர்.


    • பெண்கள், குழந்தைகளுக்கு பாதுகாப்பான மாவட்டம் என்ற சூழலை உருவாக்குவேன் என பெரம்பலூர் புதிய எஸ்.பி. சியாமளாதேவி உறுதி அளித்துள்ளார்
    • பெரம்ப–லூர் மாவட்ட 24-வது போலீஸ் சூப்பிரண்டாக ச.ஷியாமளா தேவி நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார்

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பரண்டாக பணியில் இருந்த மணி, சென்னைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இதையடுத்து சென்னையில் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு பிரிவு துணை கமிஷன–ராக பணியாற்றி வந்த ச.ஷியா–மளா தேவி பெரம்ப–லூர் மாவட்ட போலீஸ் சூப்பி–ரண்டாக நியமிக்கப்பட் டார். இதையடுத்து பெரம்ப–லூர் மாவட்ட 24-வது போலீஸ் சூப்பிரண்டாக ச.ஷியாமளா தேவி நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார். இவர் பெரம்ப–லூர் மாவட்ட 6-வது பெண் போலீஸ் சூப்பிரண்டு என்பது குறிப் பிடத்தக்கது. பின்னர் அவர் நிருபர்களிடம் கூறிய–தாவது:- பெரம்பலூர் மாவட்டத்தில் குற்றச்சம்பங்களை தடுத்து, பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் மிக–வும் பாதுகாப்பான மாவட் டம் என்ற சூழலை உரு–வாக்குவேன். சாலை விபத் துகள், போக்குவரத்து நெரிசல் இல்லாத மாவட்ட–மாகவும் மாற்றுவேன். ரவுடிகள், சமூக விரோ–திகளை ஒடுக்கப்பட்டு பொதுமக்கள் அமைதியாக வாழும் வகையில் உறுதியான நடவடிக்கைகளை எடுப் பேன் என்றார். இதையடுத்து வாரந் தோறும் புதன்கிழ–மைக–ளில் மாவட்ட போலீஸ் சூப்பி–ரண்டு அலுவலகங்களில் நடைபெறும் சிறப்பு மனு விசாரணை மற்றும் குறைதீர்க்கும் முகாமை பார்வையிட்டு ஆய்வு செய்த போலீஸ் சூப்பி–ரண்டு ச.ஷியாமளா தேவி பொதுமக்களிடம் இருந்து புகார் மனுக்கள் பெற்ற–தோடு, அவர்களிடம் குறை–களையும் கேட்டறிந்தார். அதுமட்டுமின்றி புகார் மனுக்கள் அளிக்க வருகை தரும் பொதுமக்களிடம் கனிவாக பேசி பிரச்சி–னைகளை தீர்த்து வைக்கு–மாறும், அவர்களுக்கு குடிநீர், பிஸ்கட் போன்ற உணவுப்பொருட்களை வழங்குமாறும் போலீசா–ருக்கு அறிவுரைகள் வழங்கி–னார்.


    • ஆசிரியர்களுக்கு நடைபெற்று வரும் எண்ணும் எழுத்தும் பயிற்சி வகுப்பை ஆய்வு செய்தனர்.
    • மாணவர்களிடம் அடிப்படை திறன்களை எவ்வாறு கொண்டு சேர்க்க வேண்டும் என்பது பற்றி அறிவுறுத்தினர்

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் ஸ்ரீ ராமகிருஷ்ணா பெண்கள் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடந்து வரும் ஆசிரியர்களுக்கான எண்ணும் எழுத்தும் பயிற்சியை அரசு தேர்வுகள் இயக்கக இயக்குநர் உஷாராணி பார்வையிட்டு ஆய்வு செய்தார். பள்ளிகல்வித்துறை மூலம் பெரம்பலூர் வட்டார வளமையம் சார்பில் ஒன்று முதல் மூன்றாம் வகுப்பு வரை பயிற்றுவிக்கும் ஆசிரியர்களுக்கு 3 நாட்கள் நடைபெறும் எண்ணும் எழுத்தும் பயிற்சி மூன்றாம் கட்ட பயிற்சி நடந்தது வருகிறது. இந்த பயிற்சியில் 123 ஆசிரியர்கள் கலந்துகொண்டு பயிற்சி பெறுகின்றனர். இந்நிலையில் பயிற்சியை அரசு தேர்வுகள் இயக்கக இயக்குநர் உஷாராணி பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது இப்பயிற்சியின் முக்கியத்துவம் பற்றியும், மாணவர்களிடம் அடிப்படை திறன்களை எவ்வாறு கொண்டு சேர்க்க வேண்டும் என்பது பற்றியும் எடுத்துக்கூறி புத்தகத்தில் உள்ள கருத்துகள் மட்டுமின்றி புதுப்புது உத்திகளை வகுப்பறையில் பயன்படுத்தவேண்டும் என ஆசிரியர்களுக்கு இயக்குநர் அறிவுறுத்தினார். பாடாலூர் மாவட்ட கல்வியியல் மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் மயில்வாகனன், ஒருங்கிணைப்பாளர் விஜயலட்சுமி, வட்டார கல்வி அலுவலர் அருண்குமார், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கணேசன், வட்டார வளமைய மேற்பார்வையாளர்கள் தேவகி, வஹிதாபானு ஆகியோர் உடனிருந்தனர்.


    • வேப்பந்தட்டை அருகே வீட்டில் இருந்த நகை-பணம் திருட்டு போனது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை, பணத்தை திருடிச் சென்ற மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகின்றனர்.

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள நெற்குணம் கிராமத்தை சேர்ந்தவர் சரோஜா (வயது 50). இவருக்கு 2 மகன்கள் உள்ளனர். நேற்று முன்தினம் 3 பேரும் வேலைக்கு சென்று விட்டு இரவு வீடு திரும்பியுள்ளனர். அப்போது வீட்டின் பூட்டு மற்றும் பீரோ திறக்கப்பட்ட நிலையில் இருந்துள்ளதை கண்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் பீரோவில் வைத்திருந்த 5 பவுன் நகை மற்றும் ரூ.700 ஆகியவை திருட்டு போயிருந்தது தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து சரோஜா அளித்த புகாரின் பேரில் கை.களத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை, பணத்தை திருடிச் சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.


    • பூலாம்பாடி-பாடாலூர் பகுதிகளில் நாளை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.
    • தகவலை மின்வாரிய உதவி செயற்பொறியாளர்கள் கலியமூர்த்தி (கிருஷ்ணாபுரம்), ரவிகுமார் (சிறுவாச்சூர்) ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

    பெரம்பலூர் :

    பெரம்பலூர் மாவட்டத்தில் அ.மேட்டூர், புதுக்குறிச்சி ஆகிய துணை மின் நிலையங்களில் நாளை (வெள்ளிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதையொட்டி அ.மேட்டூர் துணை மின் நிலையத்தை சார்ந்த மலையாளப்பட்டி, கொட்டாரக்குன்று, பூமிதானம், கோரையாறு, கவுண்டர்பாளையம், அ.மேட்டூர், அரும்பாவூர், பெரிய சாமி கோவில், அரசடிக்காடு, மேலக்குணங்குடி, வேப்படி, பாலக்காடு, சீனிவாசபுரம், பூலாம்பாடி ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் பராமரிப்பு பணிகள் நிறைவடையும் வரை மின்சாரம் இருக்காது. இதேபோல் புதுக்குறிச்சி துணை மின் நிலையத்தில் இருந்து மின்வினியோகம் பெறும் புதுக்குறிச்சி, காரை, சிறுகன்பூர், கொளக்காநத்தம், பாடாலூர், சாத்தனூர், சா.குடிக்காடு, அயினாபுரம், அணைப்பாடி, இரூர், தெற்கு மாதவி, ஆலத்தூர் கேட், வரகுபாடி, அ.குடிக்காடு, தெரணி, தெரணிபாளையம், நல்லூர், திருவளக்குறிச்சி ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் பராமரிப்பு பணிகள் நிறைவடையும் வரை மின்சாரம் இருக்காது என மின்வாரிய உதவி செயற்பொறியாளர்கள் கலியமூர்த்தி (கிருஷ்ணாபுரம்), ரவிகுமார் (சிறுவாச்சூர்) ஆகியோர் தெரிவித்துள்ளனர்.




    • லிப்ட் ஆபரேட்டரின் உதவியுடன் அமைச்சர், எம்.எல்.ஏ. மற்றும் உடனிருந்த அதிகாரிகள் உள்பட அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
    • கலெக்டர் அலுவலகம் மற்றும் அரசு அலுவலகங்களில் உள்ள லிப்டுகளை பராமரிக்க செய்யுமாறு அமைச்சர் அறிவுறுத்தினார்.

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் மற்றும் அதிகாரிகள் உள்ளிட்டோர் பயன்படுத்தும் வகையில் லிப்ட் வசதி செய்து தரப்பட்டுள்ளது. இதன் மூலம் மாற்றுத்திறனாளிகள், வயது முதிர்ந்தோர் அதிக அளவில் பயனடைந்து வந்தனர்.

    இந்நிலையில் கலெக்டர் அலுவலக வாளத்தில் உள்ள கூட்டரங்கில் பெரம்பலூரில் மாவட்ட அளவில் நடைபெற்ற கலைத் திருவிழா போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்குதல், கூட்டுறவுத் துறையின் மூலம் மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு கடன் தள்ளுபடி செய்யப்பட்டதற்கான ஆணை வழங்குதல் உள்ளிட்ட அரசு நிகழ்ச்சிகள் இன்று நடைபெற்றது.

    இதில் பங்கேற்பதற்காக இன்று காலை போக்குவரத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார். அவருடன் பெரம்பலூர் தொகுதி எம்.எல்.ஏ. பிரபாகரனும் உடனிருந்தார். இவர்கள் இருவரும் மேல் தளத்திற்கு செல்வதற்காக அங்கு இருந்த லிப்டில் ஏறி சென்றனர்.

    அப்போது திடீரென லிப்டின் இயக்கம் தடைபட்டு நின்றது. இதனால் அவர்கள் வெளியேற முடியாமல் உள்ளேயே சிக்கிக்கொண்டனர். இதனையடுத்து ஆபத்து மற்றும் அவசர கால கதவின் வழியே, சிக்கிக்கொண்ட அனைவரையும் வெளியேற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

    சுமார் 30 நிமிடங்களாக நடந்த போராட்டத்திற்கு பின் லிப்ட் ஆபரேட்டரின் உதவியுடன் அமைச்சர், எம்.எல்.ஏ. மற்றும் உடனிருந்த அதிகாரிகள் உள்பட அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

    இந்த நிலையில் கலெக்டர் அலுவலகம் மற்றும் அரசு அலுவலகங்களில் உள்ள லிப்டுகளை பராமரிக்க செய்யுமாறு அமைச்சர் அறிவுறுத்தினார். இந்த சம்பவத்தால் கலெக்டர் அலுவலகம் 30 நிமிடங்கள் பரபரப்பாக காணப்பட்டது.

    • வேப்பந்தட்டை வட்டத்திற்குட்பட்ட அரசு பள்ளிகளில் கலெக்டர் ஆய்வு செய்தார்
    • ஒவ்வொருவரும் வாழ்க்கையில் முன்னேற கல்வி என்பது மிக அவசியமானது என கலெக்டர் உரையாற்றினார்.

    அகரம்சீகூர்:

    அகரம்சீகூர் அடுத்து பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டத்திற்குட்பட்ட வாலிகண்டபுரம் மற்றும் ரஞ்சன்குடி அரசு மேல்நிலைப்பள்ளிகளில் பள்ளிகளின் செயல்பாடுகள் மற்றும் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் செயல்படுத்தும் விதம் குறித்து கலெக்டர் ஸ்ரீவெங்கட பிரியா பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் மாணவர்களிடம் உரையாற்றுகையில், ஒவ்வொருவரும் வாழ்க்கையில் முன்னேற கல்வி என்பது மிக அவசியமானது. மேல்நிலை கல்வி பயிலும் மாணவ, மாணவிகள் உயர் கல்வியில் என்ன படிக்கலாம் என்பது குறித்த புரிதலையும், இன்றைய கால சூழலுக்கு ஏற்ப என்னென்ன உயர்கல்வி படிப்புகள் உள்ளது, என்ன படித்தால் என்ன வேலைக்கு செல்ல வாய்ப்புகள் உள்ளது என ஒவ்வொன்றும் உங்களுக்கு நான் முதல்வன் திட்டத்தின் மூலம் விளக்கப்படும். நான் முதல்வன் திட்டம் மாணவ செல்வங்களில் உயர்ந்த வாழ்க்கைக்கு வழிகாட்டும் உன்னத திட்டம். உங்களின் உடல் ஆரோக்கியத்தை பேணிக்காக்க சத்துணவு, உங்கள் கல்வி வளர்ச்சிக்கு வழிகாட்ட தகுதியான ஆசிரியப் பெருமக்கள், தரமான பாடப்புத்தகங்கள், அரசின் இதர இலவச திட்டங்கள் என உங்களின் வளர்ச்சியின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு அனைத்து திட்டங்களும் செயல்படுத்தப்படுகின்றது. இதனை நல்ல முறையில் பயன்படுத்தி கல்வியில் சிறந்தவர்களாக, சமுதாயத்தில் உயர்ந்தவர்களாக அனைவரும் உருவாக மனமார வாழ்த்துகின்றேன். இவ்வாறு தெரிவித்தார். பின்னர் பள்ளிகளின் சத்துணவு கூடங்களில் மாணவ, மாணவிகளுக்கு வழங்குவதற்காக தயார் செய்யப்படும் சத்துணவின் தரம் குறித்தும், சமையலுக்கு பயன்படுத்தப்படும் உணவுப் பொருட்களின் தரம் குறித்தும் கலெக்டர் ஆய்வு செய்தார். இந்த ஆய்வில், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவழகன், மாவட்ட கல்வி அலுவலர் அண்ணாதுரை, தலைமையா சிரியர்கள் செல்வராஜ், ராஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • முறைசாரா தொழிலாளர்களுக்கும் பொங்கல் தொகுப்பு வழங்க வேண்டும் என சிஐடியூ சார்பில் கோரிக்கை வைத்தனர்
    • சி.ஐ.டி.யூ. சார்பில் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் கலெக்டர் அலுவலகம் முன்பு சிஐடியூ சார்பில் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு சிஐடியூ மாவட்ட தலைவர் ரெங்கநாதன் தலைமை வகித்தார். மாவட்ட பொருளாளர் ரெங்கராஜ் முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் அகஸ்டின் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி பேசினார். இதில் கட்டுமானம், வீட்டுவேலை, தையல், சுமைப்பணி, சலவை, அமைப்புசாரா, ஆட்டோ, சாலைப்போக்குவரத்து தொழிலாளர்கள் ஆகிேயார்களுக்கும் பொங்கல் தொகுப்பு வழங்கவேண்டும், பென்சன் தொகையை மாதம் ரூ. 3 ஆயிரமாக உயர்த்தி வழங்கவேண்டும், பெண் தொழிலாளர்களுக்கு 55 வயதில் பென்சன் வழங்கவேண்டும், நலவாரிய குளறுபடிகளை சரிசெய்து எளிமைப்படுத்தவேண்டும், முத்தரப்பு கமிட்டிகளை உத்தரவாதப்படுத்தவே ண்டும் போன்ற கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கோஷமிட்டனர். இதில் சிஐடியூ மற்றும் முறைசார தொழிலாளர்கள் பலர் கலந்துகொண்டனர்.

    ×