என் மலர்
பெரம்பலூர்
- மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது
- பெரம்பலூரில் நாளை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது
பெரம்பலூர்:
பெரம்பலூர் துணை மின் நிலையத்தில் நாளை (செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதையொட்டி பெரம்பலூர் நகர பகுதிகளான புதிய பஸ் நிலையம், பழைய பஸ் நிலையம், சங்குபேட்டை, மதனகோபாலபுரம், துறைமங்கலம், மின் நகர், நான்கு ரோடு, பாலக்கரை, எளம்பலூர் சாலை, ஆத்தூர் சாலை, வடக்கு மாதவி சாலை, துறையூர் சாலை, அரணாரை, மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை, ஆலம்பாடி ரோடு, அண்ணா நகர், கே.கே.நகர், அபிராமபுரம், வெங்கடேசபுரம் மற்றும் கிராமிய பகுதிகளான எளம்பலூர், சிட்கோ, சமத்துவபுரம், இந்திரா நகர், போலீஸ் குடியிருப்பு, அருமடல், அருமடல் பிரிவு ரோடு ஆகிய பகுதிகளில் காலை 9.45 மணி முதல் பராமரிப்பு பணிகள் நிறைவடையும் வரை மின்வினியோகம் இருக்காது என்று பெரம்பலூர் நகர் உதவி செயற்பொறியாளர் முத்தமிழ்செல்வன் தெரிவித்துள்ளார்.
- அடிக்கடி சாலை விபத்துகள் நடைபெறும் பகுதிகளை போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு செய்தார்.
- மாவட்டத்தில் சாலை விபத்துகள் ஏற்படாத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்தார்.
பெரம்பலூர்
பெரம்பலூர் மாவட்டத்தில் அடிக்கடி சாலை விபத்துகள் நடைபெறும் பகுதிகளை போலீஸ் சூப்பிரண்டு ஷியாம்ளா தேவி நேற்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் அந்த பகுதிகளில் சாலை விபத்துகள் நடைபெறுவதை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்தார்.
இதைத்தொடர்ந்து அவர் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சாலை விபத்தில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சென்று பார்வையிட்டு ஆறுதல் கூறினார். மேலும் அவர் மாவட்டத்தில் சாலை விபத்துகள் ஏற்படாத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்தார்.
- மது அருந்தும் கூடாரமாக ரேஷன் கடை மாறிய நிலை உள்ளது.
- சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதனை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பெரம்பலூர்
பெரம்பலூர் மாவட்டம், குரும்பலூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பாளையம் கிராமத்தில் ரேஷன் கடை உள்ளது. பாளையம் ஏரிக்கு செல்லும் வழியில் டாஸ்மாக் கடை உள்ளதால், அங்கு மது பாட்டில்கள் வாங்கி வரும் மது பிரியர்கள், இந்த ரேஷன் கடையில் பட்டப்பகலில் அமர்ந்து மது அருந்துகின்றனர். சிலர் மது போதையில் தகாத வார்த்தைகள் பேசிக்கொண்டு, அந்த வழியாக செல்பவர்களிடம் வேண்டுமென்றே தகராறில் ஈடுபடுவதும் வாடிக்கையாக உள்ளது.
குறிப்பாக விடுமுறை நாட்களில் மது அருந்தும் கூடாரமாக ரேஷன் கடை மாறி உள்ளது. இதனால் அந்த வழியாக பொதுமக்கள் செல்ல முடியவில்லை. மது போதையில் சிலர் ரேஷன் கடையில் வாந்தி எடுத்து விடுகின்றனர். இதனால் மறுநாள் கடை திறக்கும்போது துர்நாற்றம் வீசுகிறது. மேலும் மது பிரியர்களில் சிலர் தற்போது புதிதாக அமைக்கப்பட்டுள்ள பயணிகள் நிழற்குடைகளில் அமர்ந்தும் மது அருந்துகின்றனர். இதனால் பயணிகள் நிழற்குடைக்கு செல்ல அச்சமடைந்து சாலையில் நின்று காத்திருந்து பஸ் ஏறி செல்கின்றனர். பெண் பயணிகள் கடும் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர்.
இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டிய சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் கண்டும், காணாதது போல் சென்று விடுவதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். எனவே இனிமேலாவது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதனை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- பேரளி பகுதியில் நாளை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.
- நாளை காலை 9.45 மணி முதல் பராமரிப்பு பணிகள் நிறைவடையும் வரை மின்சார வினியோகம் இருக்காது
பெரம்பலூர்
பெரம்பலூரில் உள்ள தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக அலுவலகத்தின் உதவி செயற்பொறியாளர் முத்தமிழ்ச்செல்வன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:- பெரம்பலூரை அடுத்த பேரளியில் உள்ள துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (திங்கட்கிழமை) நடைபெற உள்ளது. எனவே இந்த துணை மின் நிலையத்தில் இருந்து மின் வினியோகம் பெறும் பேரளி, மருவத்தூர், க.எறையூர், நெடுவாசல், ஒதியம், பனங்கூர், குரும்பாபாளையம், அசூர், சித்தளி, பீல்வாடி, செங்குணம், கவுல்பாளையம், கல்பாடி, கீழப்புலியூர், சிறுகுடல், வாலிகண்டபுரம், அருமடல், கே.புதூர், எஸ்.குடிகாடு ஆகிய பகுதிகளுக்கு நாளை காலை 9.45 மணி முதல் பராமரிப்பு பணிகள் நிறைவடையும் வரை மின்சார வினியோகம் இருக்காது. இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.
- பெரம்பலூரில் கரும்பு வயல்களை கொள்முதல் குழுவினர் நேரில் ஆய்வு செய்தனர்
- பெரம்பலூர் மாவட்டத்தில் 80 ஆயிரம் கரும்புகள் கொள்முதல் செய்வதற்கான வாய்ப்புகள் கண்டறியப்பட்டது
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டத்தில் பொங்கல் பரிசு தொகுப்பில் வழங்கு–வதற்காக செங்கரும்பு கொள்மு–தல் செய்யும் பணி மும்மு–ரமாக நடைபெற்று வருகி–றது. இதையடுத்து கரும்பை கொள்முதல் செய்வ–தற்காகவும், கரும்பு கொள் முதல் செய்யும் கரும்பு வயல்க–ளையும் கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் பாண்டி–யன் தலைமையிலான கூட்டுறவுத்துறை மற்றும் வேளாண்மை துறை அலு–வலர்கள் கொண்ட குழு–வினர் நேரில் பார்வை–யிட்டனர். அவர்கள் கரும்பு வயல்க–ளில் விவசாயிகளிடமிருந்து கரும்பை கொள்முதல் செய்வதற்காக வெட்டப்ப–டுகின்ற கரும்பு 6 அடிக்கு மேலே இருக்கின்றதா, கரும் புகள் நல்ல திரட்சியாக விளைந்த கரும்பாக இருக்கி–றதா என்ற ஆய்வு மேற் கொண்டனர்.
பின்னர் மண்டல இணைப்பதிவாளர் பாண் டி–யன் கூறுகையில், பெரம்ப–லூர் மாவட்டத்தில் கூட்டு–றவுத்துறையின் கீழ் செயல்ப–டும் 281 நியாய விலைக்கடைகளுடன் ஒரு லட்சத்து 89 ஆயிரத்து 444 குடும்ப அட்டைகள் இணைக்கப்பட்டு உள்ள–தையும், குடும்ப அட்டைதா–ரர்களுக்கு தலா ஆயிரம் ரூபாய் வழங்குவதற்காக 18 கோடியே 94 லட்சத்து 44 ஆயிரம் தொகை திருச்சி மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கியிலிருந்து, பெரம்பலூர் மாவட்டத்தி–னுடைய திருச்சி மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கி கிளைகளுக்கு விடு–விக்கப்பட்டுள்ளது. குடும்ப அட்டைதாரர்க–ளுக்கு தேவையான கரும்பு கொள்முதல் செய்வதற்காக கரும்பு விளைவிக்கின்ற முன்னோடி விவசாயிகளை அழைத்து வந்து விவசாயிகள் விளைவிக்கின்ற கரும்பு தொடர்பான தகவல்களை பெற்று பெரம்பலூர் மாவட்டத்தில் 80 ஆயிரம் கரும்புகள் கொள்முதல் செய்வதற்கான வாய்ப்புகள் கண்டறியப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, மீதம் தேவையான கரும்பு–களை அரியலூர் மாட்டத்தில் கொள்முதல் செய்ய முடிவுகள் எடுக்கப்பட் டுள்ளது என தெரிவித்தார்.
- பெரம்பலூரில் இளையோர் தலைமைத்துவம் மற்றும் சமுதாய முன்னேற்ற பயிற்சி முகாம் நடைபெற்றது
- பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் டாக்டர் பாரிவேந்தர் ரூ.4 ஆயிரம் மதிப்புள்ள விளையாட்டு பொருட்களை பயிற்சியில் பங்கேற்றவர்களுக்கு வழங்கி சிறப்புரையாற்றினார்
பெரம்பலூர்:
இந்திய அரசு இளைஞர் நலம் மற்றும் விளையாட்டுத் துறையின் பெரம்பலூர் மாவட்ட நேரு யுவ கேந்திராவின் சார்பில் பெரம்பலூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இளையோர் தலைமைத்துவம் மற்றும் சமுதாய பயிற்சி முகாம் நடைபெற்றது. இதில் பெரம்பலூர் எம்.எல்.ஏ. பிரபாகரன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு குத்துவிளக்கு ஏற்றி பங்கேற்றவர்களுக்கு பயிற்சி உபகரணங்கள் வழங்கி சிறப்புரையாற்றினார். இதில் பெரம்பலூர் மாவட்ட மகளிர் திட்ட இயக்குநர் கருப்பசாமி, மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் லெனின், ஸ்ரீராமகிருஷ்ணா கல்வி நிறுவனங்களின் செயலாளர் விவேகானந்தன் ஆகியோர் பேசினர். இதனை தொடர்ந்து பல்வேறு தலைப்புகளில் அரசுத்துறை அலுவலர்கள் கருத்துரைகளை வழங்கினர். முகாமில் பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் டாக்டர் பாரிவேந்தர் ரூ.4 ஆயிரம் மதிப்புள்ள விளையாட்டு பொருட்களை இளையோர் மன்றத்திற்கும் பயிற்சியில் பங்கேற்றவர்களுக்கு சான்றிதழ்களையும் வழங்கி சிறப்புரையாற்றினார். முகாமில் பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டத்தை சார்ந்த நேரு யுவ கேந்திரா அலுவலகத்துடன் இணைத்துகொண்டு செயல்படுகின்ற மன்ற பொறுப்பாளர்கள் 50-க்கும் மேற்பட்ட இளையோர்கள் பங்கேற்று பயிற்சி பெற்றார்கள். முன்னதாக அனைவரையும் நேரு யுவ கேந்திராவின் மாவட்ட இளையோர் அலுவலர் கீர்த்தனா வரவேற்றார். முடிவில் நேரு யுவ கேந்திராவின் கணக்காளர் தமிழரசன் நன்றி கூறினார்.
- பெரம்பலூரில் சாலை விரிவாக்கப் பணிகள் ஆய்வு செய்யப்பட்டது
- ஆய்வின்போது சாலைப்பணிகள் தரத்துடனும், விரைவாகவும் உரிய காலத்தில் முடிக்கவேய்டும் என அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டத்தில் நெடுஞ்சாலைத்துறை மூலம் நடைபெற்று வரும் பணிகளான துறைமங்கலம் பங்களா சாலையின் தரம், அருமடல் செல்லும் சாலை அகலப்படுத்தும் மற்றும் மேம்பாடு செய்யும் பணியின் தரத்தினையும் நெடுஞ்சாலைதுறை தரக்கட்டுப்பாட்டு இயக்குநர் கோதண்டராமன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின்போது சாலைப்பணிகள் தரத்துடனும், விரைவாகவும் உரிய காலத்தில் முடிக்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
மேலும் சாலைகளின் ஓரத்தின் இருபுறமும் மரக்கன்றுகள் நட்டு அவைகளை உரிய காலத்தில் பராமரிக்கவும், சாலைப்பாதுகாப்பு முறைகளை கடைபிடிக்கவும் அறிவுறுத்தினார். ஆய்வின்போது நெடுஞ்சாலை துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கண்காணிப்பு பொறியாளர் சத்தியபிரகாஷ், பெரம்பலூர் கோட்டப்பொறியாளர் கலைவாணி, உதவிக்கோட்ட பொறியாளர் மாயவேலு, உதவிபொறியாளர் ஆறுமுகம் மற்றும் தரக்கட்டுப்பாட்டு கோட்டப்பொறியாளர் சீனிவாசன் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.
- சேவை குறைபாடு காரணமாக பாதிக்கப்பட்ட வக்கீலுக்கு தனியார் நிறுவன ஊழியர்கள் நிவாரணம் வழங்க உத்தரவிடபட்டுள்ளது
- செல்போன் பழுதினை நீக்கவேண்டுமானால் ரூ. 7 ஆயிரத்து 200 தந்தால் தான் பழுதினை நீக்கி தரமுடியும் எனசர்வீஸ் சென்டர் கிளை மேலாளர் கூறியுள்ளார்
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகா, கிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர் வக்கீல் பாண்டியன். இவர் கடந்த 2020ம் ஆண்டு ஜனவரி 2ம்ததி சாம்சங் செல்போன் ரூ.15 ஆயிரம் செலுத்தி அமேசான் விற்பனை நிறுவனம் மூலம் வாங்கினார். இந்த செல்போன் பழுது ஏற்பட்டதையடுத்து கடந்த 2021ம் ஆண்டு ஜூலை மாதம் 12ம்தேதி பெரம்பலூரில் உள்ள சாம்சாங் செல்போன் கிளை சர்வீஸ் சென்டர் சென்று செல்போனை பழுது நீக்க கோரிக்கை விடுத்தார். அப்போது சர்வீஸ் சென்டர் மேலாளர் செல்போனை பழுதுநீக்க ரூ. 236 ஆகும் என கூறி போனை வாங்கிவைத்துக்கொண்டு பழுதினை சரி செய்து மறுநாளான 13ம்தேதி கொடுத்தார். ஆனால் செல்போனை பெற்றுக்கொண்டு சென்ற ஒரு மணிநேரத்தில் மீண்டும் செல்போன் பழுது ஏற்பட்டது.
இதனால் சர்வீஸ் சென்டர் கிளை மேலாளரிடம் சென்று வக்கீல் பாண்டியன் ஏன் செல்போன் மீண்டும் பழுதாகிவிட்டது. இதனை சரி செய்து தரவேண்டும் என கூறியுள்ளார். அந்த செல்போனை பெற்று பரிசோதனை செய்த கிளை மேலாளர் செல்போனை சரி செய்ய ரூ. 7 ஆயிரத்து 200 தரவேண்டும் என கூறினார். அதற்கு செல்போனுக்கு வாரண்டி உள்ளது, ஆகையால் நீங்கள் இலவசமாக செல்போனை சரி செய்து தரவேண்டும் என வக்கீல் பாண்டியன் கூறியுள்ளார். ஆனால் இலவசமாக சரி செய்யமுடியாது எனவும், வேண்டுமென்றால் எங்களது ஹரியானாவில் உள்ள சாம்சங் இண்டியா எலக்ட்ரானிக்ஸ் மேலாளரிடம் கேட்டு பார்க்கிறேன் என கூறியுள்ளார்
. பின்னர் செல்போன் பழுதினை நீக்கவேண்டுமானால் ரூ. 7 ஆயிரத்து 200 தந்தால் தான் பழுதினை நீக்கி தரமுடியும் எனசர்வீஸ் சென்டர் கிளை மேலாளர் கூறியுள்ளார். இதனால் சர்வீஸ் சென்டரில் செல்போனை சரியாக பழுதுநீக்கி தரவில்லை. மேலும் கூடுதல் பணம் கேட்கின்றனர். எனவே இலவசமாக செல்போனை பழுதுநீக்கி தர நடவடிக்கை எடுக்கவேண்டும் என வக்கீல் பாண்டியன் ஹரியானாவில் உள்ள சாம்சங் இண்டியா எலக்ட்ரானிக்ஸ் மேலாளருக்கு கடிதம் அனுப்பினார். ஆனால் பாதிக்கப்பட்ட பாண்டியனுக்கு எந்தவித பதில் மனு அளிக்காமலும், அலைக்கலைப்பு செய்ததோடு, செல்போனை பழுதுநீக்கி தரவில்லை. செல்போனையும் தரவில்லை. இதனால் மனஉளைச்சல் அடைந்த வக்கீல் பாண்டியன் பெரம்பலூர் மாவட்ட நுகர்வோர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
வழக்கை விசாரித்த நீதிபதி ஜவகர், நீதிமன்ற உறுப்பினர்கள் திலகா, முத்துக்குமரன் ஆகியோர் சேவை குறைபாடு புரிந்த செல்போன் நிறுவனம் மற்றும் சர்வீஸ் சென்டர் கிளை மேலாளர் ஆகியோர் பாதிக்கப்பட்ட மனுதாரர் வக்கீல் பாண்டியனுக்கு நிவாரண தொகையாக ரூ.20 ஆயிரமும், வழக்கு செலவு தொகை ரூ.10 ஆயிரமும் வழங்கவேண்டும் என உத்தரவிட்டனர்.
- கார் விபத்தில் சிங்கப்பூர் புறப்பட்டு சென்ற குழந்தை உள்பட 2 பேர் பலியானர்
- டிப்பர் லாரி ஒன்று திடீரென்று வலதுபுறமாக திரும்பி ரோட்டின் குறுக்கே கடந்துள்ளது
பெரம்பலூர்:
கள்ளக்குறிச்சி உகையூர் பகுதியை சேர்ந்த செல்வா என்பவரின் மனைவி மகேஸ்வரி(வயது22), இவர்களின் மகள் சாருநேத்ரா(5) மற்றும் கடலுார் மாவட்டம் வேப்பூர் சேர்வராயன் குப்பத்தை சேர்ந்த ரஞ்சித்குமார்(27) ஆகியோர் சிங்கப்பூர் செல்வதற்காக காரில் புறப்பட்டு சென்றனர். காரை முத்துசாமி(37) என்பவர் ஓட்டி வந்துள்ளார். இவர்களை வழி அனுப்புவதற்காக ஜெயவேல், நாகமுத்து ஆகியோர் உடன் சென்றனர்.
கார் பாடாலுார் அருகே திருவன்குறிச்சி அருகே சென்று கொண்டிருந்த போது, திருச்சியில் இருந்து சென்னை நோக்கி சென்ற டிப்பர் லாரி ஒன்று திடீரென்று வலதுபுறமாக திரும்பி ரோட்டின் குறுக்கே கடந்துள்ளது. இதனை எதிர்பாராத கார் டிரைவர் முத்துசாமி விபத்தினை தவிர்க்க முயன்றுள்ளார். ஆனால் அதற்குள் டிப்பர் லாரியின் பின்புறமாக மோதி கார் விபத்துக்குள்ளானது.
டிப்பர் லாரி மீது கார் மோதிய விபத்தில் சம்பவ இடத்திலேயே ரஞ்சித்குமார் பரிதாபமாக உயிரிழந்தார். விபத்தில் காயமடைந்த பெரம்பலூர் குளக்கானத்தம் பகுதியை சேர்ந்த டிப்பர் லாரி டிரைவர் மகா பிரபு(47) உள்ளிட்ட அனைவரையும், அருகில் உள்ளவர்கள் மீட்டு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட 5 வயது குழந்தை சாருநேத்ரா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். மற்றவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து குறித்து பாடாலுார் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- பெரம்பலூர் கோவில்களில் ஆருத்ரா தரிசன விழா கொண்டாடப்பட்டது
- சப்பரத்தில் நடராஜர்- சிவகாமி அம்பாள் உற்சவ சிலைகள் வைக்கப்பட்டு வண்ண மலர்களால் அலங்காரம் செய்து ஆருத்ரா தரிசன திருவீதி உலா நடந்தது.
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டம், செட்டிகுளம் ஏகாம்பரேஸ்வரர் கோயிலில் திருவாதிரையை முன்னிட்டு நடராஜபெருமான்- சிவகாமி அம்பாளுக்கு அபிஷேகமும், மகாதீபாராதனையும் நடந்தது.இதைத்தொடர்ந்து சப்பரத்தில் நடராஜர்- சிவகாமி அம்பாள் உற்சவ சிலைகள் வைக்கப்பட்டு வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டது. பின்னர் ஆருத்ரா தரிசன திருவீதி உலா நடந்தது. ஊர்வலம் மேளதாளத்துடன் சன்னதி தெரு, கடைவீதி, மேற்கு தெரு, வடக்குத் தெரு வழியாக சென்று மீண்டும் ஏகாம்பரேஸ்வரர் கோவிலை அடைந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் மற்றும் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.
இதே போல் பெரம்பலூரில் உள்ள பிரசித்தி பெற்ற அகிலாண்டேசுவரி சமேத பிரம்மபுரீசுவரர் கோவிலில் 40-வது ஆண்டு திருவாதிரை திருவிழா தொடங்கி 2 நாட்கள் விமரிசையாக நடைபெற்றது. இதனை முன்னிட்டு நடராஜ பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகளை திருச்செங்கோடு சுவாமிநாத சிவாச்சாரியார் முன்னிலையில் கோவில் அர்ச்சகர் கவுரிசங்கர் நடத்தினார். இதைத்தொடர்ந்து நடராஜ பெருமான்- சிவகாமி அம்பாள் உற்சவ சிலைகள் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு ஆருத்ரா தரிசன உற்சவமும், மகாதீபாராதனையும் நடந்தது.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதையடுத்து நடராஜபெருமான் மற்றும் சிவகாமி அம்பாள் திருமேனிகள் சப்பரத்தில் வைக்கப்பட்டு, எடத்தெரு, செக்கடித்தெரு, பெரியதெற்குத்தெரு, கடைவீதி வழியாக ஆருத்ரா தரிசன காட்சி, சுவாமி திருவீதி உலா நடந்தது. திருவாதிரை விழாவிற்கான ஏற்பாடுகளை பெரம்பலூர் நகர சோழிய வேளாளர் சமூகத்தினர் மற்றும் இளைஞரணி நிர்வாகிகள் செய்திருந்தனர்.
- பெரம்பலூர் மாவட்டத்தில் சிறப்பாக செயல்படும் கிராம ஊராட்சிகளுக்கு உத்தமர் காந்தி விருது வழங்கபடும் என கலெக்டர் ஸ்ரீவெங்கட பிரியா தெரிவித்துள்ளார்
- விருதுக்கான விண்ணப்பங்கள் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் மூலம் வெளியிடப்படும் இணையதளத்தில் பதிவேற்றம் செய்திடலாம் என மாவட்ட கலெக்டர் ஸ்ரீவெங்கட பிரியா தெரிவித்துள்ளார்.
பெரம்பலூர்:
தமிழக முதலமைச்சரின் சட்டமன்ற பேரவை விதிஎண்.110ன் கீழ் 2022-ம் ஆண்டு முதல் சிறந்த கிராம ஊராட்சிகளுக்கு உத்தமர் காந்தி விருது வழங்கிட நிதி ஒப்பளிப்பு செய்து ஆணை வெளியிடப்பட்டுள்ளது. அனைத்து கிராம ஊராட்சிகளிலும் வெளிப்படை தன்மையுடன் சிறந்த நிர்வாகத்தினை வழங்கி அனைத்து அடிப்படை வசதிகளையும் பூர்த்தி செய்து நீடித்த மற்றும் நிலைத்த வளர்ச்சி இலக்குகளை எட்டிடும் வகையில், சிறப்பாக செயல்படும் கிராம ஊராட்சிகளுக்கு உத்தமர் காந்தி விருது 2022-ம் ஆண்டு முதல் மீண்டும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கிராம ஊராட்சி தலைவர்களின் தலைமைப் பண்பினை வெளிக்கொணரும் வகையிலும், ஊராட்சிகளில் சிறந்த நிர்வாகத்தினை ஏற்படுத்திடும் வகையிலும், கிராம ஊராட்சி மன்றத்தலைவர்களை ஊக்குவிக்கும் பொருட்டும், இவ்வாண்டு முதல் மீண்டும் உத்தமர் காந்தி விருது மாவட்டத்திற்கு ஒன்று வீதம் 37 கிராம ஊராட்சிகளுக்கு ரூ.10 லட்சம் வீதம் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாதம்15-ஆம் தேதி சுதந்திர தினத்தன்று அல்லது ஏதேனும் ஒரு சிறப்பு தினத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட கிராம ஊராட்சிகளுக்கு தமிழக முதலமைச்சர் உத்தமர் காந்தி விருதுவழங்கி கவுரவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, பெரம்பலூர் மாவட்டத்திற்குட்பட்ட அனைத்து கிராம ஊராட்சிகளிலும் விழிப்புணர்வு ஏற்படுத்தி விருதுக்கான விண்ணப்பங்கள் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் மூலம் வெளியிடப்படும் இணையதளத்தில் பதிவேற்றம் செய்திட மாவட்ட கலெக்டர் ஸ்ரீவெங்கட பிரியா தெரிவித்துள்ளார்.
- போலீசாரின் சிறப்பு முகாமில் 21 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது.
- மீதமுள்ள மனுக்களின் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
பெரம்பலூர்
பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் சிறப்பு மனு முகாம் நேற்று முன்தினம் நடைபெற்றது. முகாமிற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஷியாம்ளா தேவி தலைமை தாங்கினார். மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் மதியழகன், பாண்டியன், போலீஸ் துணை சூப்பிரண்டுகள் தங்கவேல், வளவன், சஞ்சீவ்குமார், ஜனனி பிரியா ஆகியோர் பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றனர்.
மேலும் முகாமில் மாவட்டத்தில் உள்ள அனைத்து போலீஸ் நிலையங்களை சேர்ந்த போலீசாரும், சிறப்பு பிரிவு போலீசாரும் கலந்து கொண்டனர். இந்த சிறப்பு மனு முகாம் மூலம் பெறப்பட்ட 28 மனுக்களில், 21 மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டது. மீதமுள்ள மனுக்களின் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.






