என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பெரம்பலூர் மாவட்டத்தில் சிறப்பாக செயல்படும் கிராம ஊராட்சிகளுக்கு உத்தமர் காந்தி விருது-கலெக்டர் ஸ்ரீவெங்கட பிரியா தகவல்
    X

    பெரம்பலூர் மாவட்டத்தில் சிறப்பாக செயல்படும் கிராம ஊராட்சிகளுக்கு உத்தமர் காந்தி விருது-கலெக்டர் ஸ்ரீவெங்கட பிரியா தகவல்

    • பெரம்பலூர் மாவட்டத்தில் சிறப்பாக செயல்படும் கிராம ஊராட்சிகளுக்கு உத்தமர் காந்தி விருது வழங்கபடும் என கலெக்டர் ஸ்ரீவெங்கட பிரியா தெரிவித்துள்ளார்
    • விருதுக்கான விண்ணப்பங்கள் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் மூலம் வெளியிடப்படும் இணையதளத்தில் பதிவேற்றம் செய்திடலாம் என மாவட்ட கலெக்டர் ஸ்ரீவெங்கட பிரியா தெரிவித்துள்ளார்.

    பெரம்பலூர்:

    தமிழக முதலமைச்சரின் சட்டமன்ற பேரவை விதிஎண்.110ன் கீழ் 2022-ம் ஆண்டு முதல் சிறந்த கிராம ஊராட்சிகளுக்கு உத்தமர் காந்தி விருது வழங்கிட நிதி ஒப்பளிப்பு செய்து ஆணை வெளியிடப்பட்டுள்ளது. அனைத்து கிராம ஊராட்சிகளிலும் வெளிப்படை தன்மையுடன் சிறந்த நிர்வாகத்தினை வழங்கி அனைத்து அடிப்படை வசதிகளையும் பூர்த்தி செய்து நீடித்த மற்றும் நிலைத்த வளர்ச்சி இலக்குகளை எட்டிடும் வகையில், சிறப்பாக செயல்படும் கிராம ஊராட்சிகளுக்கு உத்தமர் காந்தி விருது 2022-ம் ஆண்டு முதல் மீண்டும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும், கிராம ஊராட்சி தலைவர்களின் தலைமைப் பண்பினை வெளிக்கொணரும் வகையிலும், ஊராட்சிகளில் சிறந்த நிர்வாகத்தினை ஏற்படுத்திடும் வகையிலும், கிராம ஊராட்சி மன்றத்தலைவர்களை ஊக்குவிக்கும் பொருட்டும், இவ்வாண்டு முதல் மீண்டும் உத்தமர் காந்தி விருது மாவட்டத்திற்கு ஒன்று வீதம் 37 கிராம ஊராட்சிகளுக்கு ரூ.10 லட்சம் வீதம் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாதம்15-ஆம் தேதி சுதந்திர தினத்தன்று அல்லது ஏதேனும் ஒரு சிறப்பு தினத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட கிராம ஊராட்சிகளுக்கு தமிழக முதலமைச்சர் உத்தமர் காந்தி விருதுவழங்கி கவுரவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    எனவே, பெரம்பலூர் மாவட்டத்திற்குட்பட்ட அனைத்து கிராம ஊராட்சிகளிலும் விழிப்புணர்வு ஏற்படுத்தி விருதுக்கான விண்ணப்பங்கள் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் மூலம் வெளியிடப்படும் இணையதளத்தில் பதிவேற்றம் செய்திட மாவட்ட கலெக்டர் ஸ்ரீவெங்கட பிரியா தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×