என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பெரம்பலூரில் கரும்பு வயல்களை நேரில் ஆய்வு செய்த கொள்முதல் குழுவினர்
    X

    பெரம்பலூரில் கரும்பு வயல்களை நேரில் ஆய்வு செய்த கொள்முதல் குழுவினர்

    • பெரம்பலூரில் கரும்பு வயல்களை கொள்முதல் குழுவினர் நேரில் ஆய்வு செய்தனர்
    • பெரம்பலூர் மாவட்டத்தில் 80 ஆயிரம் கரும்புகள் கொள்முதல் செய்வதற்கான வாய்ப்புகள் கண்டறியப்பட்டது

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டத்தில் பொங்கல் பரிசு தொகுப்பில் வழங்கு–வதற்காக செங்கரும்பு கொள்மு–தல் செய்யும் பணி மும்மு–ரமாக நடைபெற்று வருகி–றது. இதையடுத்து கரும்பை கொள்முதல் செய்வ–தற்காகவும், கரும்பு கொள் முதல் செய்யும் கரும்பு வயல்க–ளையும் கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் பாண்டி–யன் தலைமையிலான கூட்டுறவுத்துறை மற்றும் வேளாண்மை துறை அலு–வலர்கள் கொண்ட குழு–வினர் நேரில் பார்வை–யிட்டனர். அவர்கள் கரும்பு வயல்க–ளில் விவசாயிகளிடமிருந்து கரும்பை கொள்முதல் செய்வதற்காக வெட்டப்ப–டுகின்ற கரும்பு 6 அடிக்கு மேலே இருக்கின்றதா, கரும் புகள் நல்ல திரட்சியாக விளைந்த கரும்பாக இருக்கி–றதா என்ற ஆய்வு மேற் கொண்டனர்.

    பின்னர் மண்டல இணைப்பதிவாளர் பாண் டி–யன் கூறுகையில், பெரம்ப–லூர் மாவட்டத்தில் கூட்டு–றவுத்துறையின் கீழ் செயல்ப–டும் 281 நியாய விலைக்கடைகளுடன் ஒரு லட்சத்து 89 ஆயிரத்து 444 குடும்ப அட்டைகள் இணைக்கப்பட்டு உள்ள–தையும், குடும்ப அட்டைதா–ரர்களுக்கு தலா ஆயிரம் ரூபாய் வழங்குவதற்காக 18 கோடியே 94 லட்சத்து 44 ஆயிரம் தொகை திருச்சி மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கியிலிருந்து, பெரம்பலூர் மாவட்டத்தி–னுடைய திருச்சி மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கி கிளைகளுக்கு விடு–விக்கப்பட்டுள்ளது. குடும்ப அட்டைதாரர்க–ளுக்கு தேவையான கரும்பு கொள்முதல் செய்வதற்காக கரும்பு விளைவிக்கின்ற முன்னோடி விவசாயிகளை அழைத்து வந்து விவசாயிகள் விளைவிக்கின்ற கரும்பு தொடர்பான தகவல்களை பெற்று பெரம்பலூர் மாவட்டத்தில் 80 ஆயிரம் கரும்புகள் கொள்முதல் செய்வதற்கான வாய்ப்புகள் கண்டறியப்பட்டது.

    அதனைத் தொடர்ந்து, மீதம் தேவையான கரும்பு–களை அரியலூர் மாட்டத்தில் கொள்முதல் செய்ய முடிவுகள் எடுக்கப்பட் டுள்ளது என தெரிவித்தார்.


    Next Story
    ×