என் மலர்
உள்ளூர் செய்திகள்

வேப்பந்தட்டை அருகே வீட்டில் இருந்த நகை-பணம் திருட்டு
- வேப்பந்தட்டை அருகே வீட்டில் இருந்த நகை-பணம் திருட்டு போனது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை, பணத்தை திருடிச் சென்ற மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகின்றனர்.
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள நெற்குணம் கிராமத்தை சேர்ந்தவர் சரோஜா (வயது 50). இவருக்கு 2 மகன்கள் உள்ளனர். நேற்று முன்தினம் 3 பேரும் வேலைக்கு சென்று விட்டு இரவு வீடு திரும்பியுள்ளனர். அப்போது வீட்டின் பூட்டு மற்றும் பீரோ திறக்கப்பட்ட நிலையில் இருந்துள்ளதை கண்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் பீரோவில் வைத்திருந்த 5 பவுன் நகை மற்றும் ரூ.700 ஆகியவை திருட்டு போயிருந்தது தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து சரோஜா அளித்த புகாரின் பேரில் கை.களத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை, பணத்தை திருடிச் சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
Next Story






