என் மலர்tooltip icon

    நீலகிரி

    திருநங்கைகள் கலந்து கொண்டு குறைகளை தெரிவித்து பயன்பெறலாம் என்று கூறப்பட்டு உள்ளது.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்ட கலெக்டர் அம்ரித் வெளியிட்டு உள்ள அறிக்கையில் நீலகிரி மாவட்டத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் திருநங்கைகளின் குறைகளை நிவர்த்தி செய்ய ஏதுவாக, மாதந்தோறும் வெள்ளிக்கிழமைகளில் குறை தீர்க்கும் முகாம் நடக்கிறது.

    அதன்படி நீலகிரி மாவட்டம் ஊட்டி சமூக நல அலுவலகத்தில் வருகிற 11-ந் தேதி திருநங்கைகள் குறைதீர்ப்பு முகாம் நடக்க உள்ளது. இதில் திருநங்கைகள் கலந்து கொண்டு குறைகளை தெரிவித்து பயன்பெறலாம் என்று கூறப்பட்டு உள்ளது.

    • தமிழக சுற்றுலா அமைச்சர் ராமச்சந்திரன் ரூ.53.65 லட்சம் மதிப்பிலான பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகளை தொடங்கி வைத்தாா்.
    • விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு மஞ்சப்பைகள் வழங்கப்பட்டன.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டத்தில் நகராட்சி நிா்வாகம், குடிநீா் வழங்கல் துறை மற்றும் பேரூராட்சித் துறை சாா்பில் அதிகரட்டி பேரூராட்சியில் நகா்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் சேமந்தாடா முதல் பூசானிதுறை வரை ரூ.28.65 லட்சம் மதிப்பில் கான்கிரீட் சாலை பணிகள் முடிந்து உள்ளது

    இதேபோல சிறப்புப் பகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.25 லட்சம் மதிப்பில் தூரட்டி கிராமத்தில் தாா் சாலை பணிகள் முடிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் தமிழக சுற்றுலா அமைச்சர் ராமச்சந்திரன் ரூ.53.65 லட்சம் மதிப்பிலான பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகளை தொடங்கி வைத்தாா்.

    இதனைத் தொடா்ந்து, கேத்தி பேரூராட்சிக்கு உட்பட்ட தூரட்டியில் எம்.எல்.ஏ தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.10 லட்சம் மதிப்பில் சமுதாயக் கூட சமையலறை மேற்கூரை பணி, 2022-2023 நகா்ப்புற சாலை மேம்பாடு திட்டத்தின் கீழ் ரூ.87.50 லட்சம் மதிப்பில் அதிகரட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட காட்டேரி முதல் கேத்தி பாலாடா வரை மற்றும் கோடேரி கிராம தாா் சாலை மேம்பாட்டுப் பணி, தூய்மை இந்தியா திட்டம் 2.0 கீழ் ரூ.24.50 லட்சம் மதிப்பில் வளம் மீட்புப் பூங்காவில் கான்கிரீட் தரைத்தளம் மற்றும் மேற்கூரை அமைக்கும் பணி ஆகியவை உள்பட மொத்தம் ரூ.1.22 கோடி மதிப்பில் நடை பெற்று வரும் பல்வேறு வளா்ச்சி திட்டப் பணிகளையும் பாா்வையிட்டு ஆய்வு செய்தார்.

    அப்போது மேற்கண்ட பணிகளை விரைவாகவும், தரமாகவும் முடித்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வருமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் அறிவுறுத்தினாா்.

    முன்னதாக, அதிகரட்டி தோ்வு நிலை பேரூராட்சி வளம் மீட்புப் பூங்காவில் உரம் விற்பனை நிலையத்தை திறந்துவைத்த அமைச்சர், அங்கு உள்ள விவசாயிகளுக்கு உரங்களை வழங்கினார். மரக்கன்றுகளை நடவு செய்தார். ஜெகதளா, உலிக்கல், அதிகரட்டி ஆகிய பேரூராட்சிகளில் திடக்கழிவு மேலாண்மைப் பணிகளை ஆய்வு செய்த சுற்றுலா அமைச்சர் ராமச்சந்திரன், சிறப்பாகப் பணியாற்றிய தூய்மைப் பணியாளா்கள் 4 பேருக்கு உடை மற்றும் பாதுகாப்பு உபகரணங்களை வழங்கினாா்.

    இதனை தொடர்ந்து பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு மஞ்சப்பைகள் வழங்கப்பட்டன.

    நிகழ்ச்சியில் குன்னூா் வருவாய் கோட்டாட்சியா் பூஷணகுமாா், உதவி இயக்குநா் (பேரூராட்சிகள்) இப்ராகிம் ஷா, கேத்தி மற்றும் அதிகரட்டி பேரூராட்சி செயல் அலுவலா் (பொ) நடராஜன், ஜெகதளா பேரூராட்சி செயல் அலுவலா் சதாசிவம் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

    • கடந்த வாரம் நடந்து சென்ற பள்ளி சிறுமி மீது கற்பூர மரத்தின் சிறிய மரக்கிளை ஒடிந்து விழுந்தது.
    • பெரிய மரங்களை வெட்டி அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    கோத்தகிரி,

    கோத்தகிரி பேரூராட்சிக்கு உட்பட்ட கோவில்மேடு பகுதியில் சுமார் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இங்கு பழமை வாய்ந்த கிறிஸ்தவ ஆலயம், பள்ளிக்கூடம் உள்ளது.

    கோவில்மேடு பகுதியில் உள்ள ரோட்டில்100க்கும் மேற்பட்ட அதிக உயரத்துடன் கூடிய கற்பூர மரங்கள் உள்ளன. அதில் உள்ள காய்ந்த கிளைகள் அவ்வப்போது சாலையில் செல்லும் வாகனங்கள் மீது விழுகிறது.இந்த ரோட்டில் கடந்த வாரம் நடந்து சென்ற பள்ளி சிறுமி மீது கற்பூர மரத்தின் சிறிய மரக்கிளை ஒடிந்து விழுந்தது.

    இதில் சிறுமிக்கு கை, கால் மற்றும் தலையில் காயம் ஏற்பட்டு, அவர் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார். கோத்தகிரியில் தற்போது காற்றின் வேகம் அதிகரித்து காணப்படுகிறது. எனவே ரோட்டில் நிற்கும் கற்பூர மரங்கள், அங்கு உள்ள வீடுகளின் மேல் விழும் அபாயம் உள்ளது. எனவே கோவில்மேடு பகுதியில் அசம்பாவிதம் ஏற்படும் முன்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பெரிய மரங்களை வெட்டி அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    • அரசு நிர்ணயித்த ஊதியம் வழங்க கோரி போராட்டத்தில் ஈடுபட்டனா்.
    • போராட்டம் 5-வது நாளாக இன்றும் தொடரும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம், கூடலூா் நகராட்சியில் பணிபுரியும் ஒப்பந்தத் தொழிலாளா்களுக்கு அரசு நிா்ணயித்த ஊதியத்தை ஒப்பந்ததாரா் வழங்க வேண்டும் என வலியுறுத்தி துப்புரவுப் பணியாளா்கள் 4-வது நாளாக நேற்றும் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

    இதன் ஒரு பகுதியாக ஒப்பந்த துப்புரவுப் பணியாளா்கள் நகராட்சி அலுவலக வாயிலில் அமர்ந்து தா்ணா போராட்டம் நடத்தினா். ஒப்பந்த துப்புரவுப் பணியாளா்கள் கோரிக்கைகள் நிறைவேறும்வரை போராட்டம் தொடரும் என சங்க நிர்வாகிகள் தெரிவித்து உள்ளனா். அவர்களின் போராட்டம் 5-வது நாளாக இன்றும் தொடரும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    • புகழ் பெற்ற பாகன் தம்பதிகளான பொம்மன், பெள்ளியை நேரில் சந்திக்கிறார்.
    • ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் முதுமலையில் குவிக்கப்பட்டுள்ளனர்.

    ஊட்டி:

    ஜனாதிபதி திரவுபதி முர்மு பதவி ஏற்ற பிறகு முதன்முறையாக நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள முதுமலை புலிகள் காப்பகத்துக்கு இன்று மாலை வருகிறார்.

    இதற்காக அவர் டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் புறப்பட்டு கர்நாடக மாநிலம் மைசூர் விமான தளத்துக்கு மதியம் 2.30 மணிக்கு வருகிறார். பின்னர் அங்கிருந்து ராணுவ ஹெலிகாப்டரில் புறப்பட்டு, மாலை 3.30 மணிக்கு மசினகுடிக்கு வருகிறார்.

    அங்கிருந்து கார் மூலமாக சிறப்பு பாதுகாப்பு படையினருடன் 7 கிலோ மீட்டர் தூரம் உள்ள முதுமலை தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமுக்கு செல்கிறார்.

    முகாமில் ஜனாதிபதி திரவுபதி முர்மு, ஆஸ்கர் விருது பெற்ற தி எலிபண்ட் விஸ்பரர்ஸ் ஆவணப்படத்தில் நடித்து உலகம் முழுவதும் புகழ் பெற்ற பாகன் தம்பதிகளான பொம்மன், பெள்ளியை நேரில் சந்திக்கிறார்.

    அப்போது அவர்களை பாராட்டுவதோடு, அவர்களுடன் சிறிது நேரம் கலந்துரையாடுகிறார். அதனை தொடர்ந்து முகாமில் உள்ள பாகன்கள் மற்றும் பழங்குடியின மக்கள் மற்றும் தன்னார்வ அமைப்பு பிரதிநிதிகளை சந்தித்து பேசுகிறார்.

    பின்னர் முகாமில் உள்ள வளர்ப்பு யானைகளையும் பார்வையிடுகிறார். ஜனாதிபதி வரும் போது 12 வளர்ப்பு யானைகள் அனைத்தும் வரிசையாக நிற்கவைக்கப்பட உள்ளது.

    அப்போது அந்த யானைகளுக்கு ஜனாதிபதி, பழங்கள் மற்றும் உணவுகளை வழங்குகிறார். சிறிது நேரம் யானைகளை பார்வையிடும் அவர், தொடர்ந்து அந்த பகுதியில் உள்ள பழங்குடியின மாதிரி கிராமத்தையும் பார்வையிடுகிறார்.

    ஒரு மணி நேரம் முதுமலை தெப்பக்காடு யானைகள் முகாமில் ஜனாதிபதி திரவுபதி முர்மு இருக்கிறார்.

    அதன்பின்னர் நிகழ்ச்சிகளை முடித்து கொண்டு காரில் மசினகுடிக்கு செல்கிறார். அங்கிருந்து ஹெலிகாப்டரில் மைசூர் சென்று, அங்கிருந்து சென்னைக்கு புறப்பட்டு செல்கிறார்.

    ஜனாதிபதி வருகையை முன்னிட்டு கோவை மேற்கு மண்டல ஐ.ஜி. தலைமையில் 5 போலீஸ் சூப்பிரண்டுகள், 7 கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள், 18 துணை போலீஸ் சூப்பிரண்டுகள், 36 இன்ஸ்பெக்டர்கள் உள்பட ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் முதுமலையில் குவிக்கப்பட்டுள்ளனர்.

    முதுமலையில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு போலீசார் மசினகுடி, முதுமலை மற்றம் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமு க்குள்ளும் பலத்த பாதுகாப்புகள் போட ப்பட்டுள்ளது. இதுதவிர மசினகுடி-தெப்பக்காடு, தொரப்பள்ளி-தெப்பக்காடு சாலை, பந்திப்பூர்-தெப்பக்காடு சாலை உள்ளிட்ட சாலைகளிலும் நக்சல் தடுப்பு பிரிவினர் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியிலும் ஈடுபட்டனர்.

    இதேபோல் முதுமலை வனப்பகுதிக்குள் நக்சல் தடுப்பு பிரிவு போலீசார் மற்றும் வனத்துறையினர் ரோந்து பணி மேற்கொண்டனர். மசினகுடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சந்தேகப்படும் நபர்களின் நடமாட்டம் உள்ளரா எனவும் போலீசார் கண்காணித்தனர்.

    ஜனாதிபதி வருகையை முன்னிட்டு, மசினகுடி-தெப்பக்காடு சாலையில் இன்று மாலை மட்டும் சில மணி நேரங்கள் வாகன போக்குவரத்து நிறுத்தப்படும். ஆனால் மைசூர்-கூடலூர் சாலையில் வாகனங்கள் வழக்கம் போல இயங்கும். மேலும் ஜனாதிபதி வந்து செல்லும் வரை தமிழகம், கேரளா, கர்நாடக ஆகிய 3 எல்லை சாலைகளும் மூடப்படுகிறது எனவும் போலீசார் தெரிவித்தனர்.

    • 4171 பயிலும் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்படுகிறது.
    • 387 தன்னார்வலர்களை கொண்டு முதியோர் கல்வி 498 நபர்களுக்கு கற்பிக்கப்படுகிறது.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம், குன்னூர் புனித மரியன்னை பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பள்ளி கல்வித்துறையின் சார்பில், தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சியில், சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் தலைமை தாங்கி பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார்.

    பின்னர் அமைச்சர் ராமச்சந்திரன் பேசியதாவது:-

    தமிழ்நாடு முதல்-அமைச்சர் ஆட்சிப் பொறுப்பேற்றதில் இருந்து பள்ளிக் கல்வித்துறையின் சார்பில், பல்வேறு அரசு நலத்திட்டங்களை அறிவித்து, சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்கள். மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா பாடப்புத்தகங்கள், இலவச பஸ் பயண அட்டை, விலையில்லா மிதிவண்டி என பல்வேறு திட்டங்கள் தொடர்ந்து செயல்படுத்தி வருகிறார்கள்.

    பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் பள்ளிகளில் இருக்கக் கூடாது என்பதற்காக ஏராளமான திட்டங்கள் பள்ளிக் கல்வித்துறையின் மூலம் செயல்படுத்தி வருகி றார்கள்.

    நீலகிரி மாவட்டத்தில் 10,663 பள்ளி மாணவ, மாணவிகள் பயனடையும் வகையில், இலவச பஸ் பாஸ் வழங்கப்பட்டுள்ளது. மேலும் 387 தன்னார்வலர்களை கொண்டு முதியோர் கல்வி 498 நபர்களுக்கு கற்பிக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் உள்ள 38 மாவட்டங்களில், இத்திட்டத்தினை செயல்படுத்தும் வகையில் ரூ.33.56 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    நீலகிரி மாவட்டத்தில் கூடலூர், ஸ்ரீமதுரை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் முதல்- அமைச்சரின் காலை உணவு திட்டம் செப்டம்பர் 16, 2022 அன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

    மாவட்டத்தில் 63 ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிகளில் செயல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் 227 பள்ளிகளில் இத்திட்டம் விரிவுபடுத்தப்பட உள்ளது. இத்திட்டத்தின் மூலம் 12, 208 மாணவர்கள் பயன்பெற்றுள்ளனர். மேலும், 6 முதல் 12-ம் வகுப்பு வரை அரசு பள்ளியில் பயின்ற மாணவர்களுக்கு உயர்கல்வி பயில மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்படுகிறது.மேலும் நீலகிரி 2022-2023-ம் கல்வியாண்டில் 1737 மாணவர்களுக்கு, 2434 மாணவிகளுக்கு என மொத்தம் 4171 பயிலும் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்படுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார். நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்தி பிரியதர்சினி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அலுவலர் வெங்கடேஷ், மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் கீதா, குன்னூர் நகர்மன்ற தலைவர் ஷீலாகேத்ரின், குன்னூர் நகர்மன்ற துணைத்தலைவர் வாசிம்ராஜா, குன்னூர் ஊராட்சி ஒன்றிய தலைவர் சுனிதா நேரு, குன்னூர் வருவாய் கோட்டாட்சியர் பூஷண குமார், குன்னூர் வட்டா ட்சியர் கனிகசுந்தரம், குன்னூர் புனித மரியன்னை பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஜோஸ்பின் மேரி உள்பட அரசுத்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்

    • தலைவராக முத்துசாமி, துணை தலைவராக ஈஸ்வரன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
    • தி.மு.க. செயலாளர் பா.மு.முபாரக் நிர்வாகிகளுக்கு பொன்னாடை அணிவித்து வாழ்த்தினார்.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்ட திமுக நெசவாளர் அணிக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். தலைவராக முத்துசாமி, துணை தலைவராக ஈஸ்வரன், மாவட்ட அமைப்பாளராக எல்கில் ரவி, துணை அமைப்பாளர்களாக தியாகராஜன், பௌ்ளன், பிரபுதாஸ், மகேந்திரன், ராஜசேகர் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    இவர்கள் ஊட்டி கலைஞர் அறிவாலயத்தில் மாவட்ட தி.மு.க. செயலாளர் பா.மு.முபாரக்ைகை சந்தித்து பொன்னாடை அணிவித்து வாழ்த்து பெற்றனர்.

    நிகழ்ச்சிக்கு மாவட்ட துணை செயலாளர் ரவிகுமார், மாவட்ட பொருளாளர் நாசர் அலி, தலைமை செயற்குழு உறுப்பினர் முஸ்தபா, மாநில விளையாட்டு மேம்பாட்டு அணி துணை செயலாளர் வாசிம் ராஜா, குன்னூர் நகர செயலாளர் ராமசாமி, கோத்தகிரி ஒன்றிய செயலாளர் நெல்லை கண்ணன், பந்தலூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் சுஜேஷ், தலைமை பொதுக்குழு உறுப்பினர்கள் சதக்கத்துல்லா, பில்லன் தொரை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    நிகழ்ச்சியில் அமைப்பாளர்கள் காந்தல் ரவி, ராஜா, அன்வர் அப்துல்லா, விவேகானந்தன், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள் நாகராஜ், பத்மநாபன், ஊட்டி நகரமன்ற உறுப்பினர்கள் ரமேஷ், ரகுபதி, விஷ்னு, கஜேந்திரன், குன்னூர் நகரமன்ற உறுப்பினர்கள் ஜாகீர் உசேன், மணிகண்டன், மன்சூர், அப்துல் காதர், பந்தலூர் கிழக்கு ஒன்றிய துணை செயலாளர்கள் ஞானசேகர், சுபாசினி, மகளிர் அணி நிர்வாகிகள் மைமூனா, ஜெயந்தி உள்பட நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர். 

    • ஆடிப்பெருக்கன்று மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜைகள் நடந்தது.
    • சப்-இன்ஸ்பெக்டர் வனக்குமார் தலைமையிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    ஊட்டி,

    ஊட்டி மாரியமமன் கோவிலில் சிறப்பு பூஜைகள், ஆடிமாத முதல் நாளான கடந்த ஜுலை 17-ந் தேதியன்று தொடங்கி நடைபெற்று வருகிறது.

    தொடர்ந்து ஆடிப்பெருக்கு நாளான நேற்று காலை மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜைகள் நடத்தப்பட்டது. பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து சென்றனர்.

    தொடர்ந்து மாரியம்மன் திருக்கோவிலில் ஆடிப்பெருக்கு பண்டிகையை முன்னிட்டு அம்மன் திருவீதி உலா நடந்தது.

    நகரின் முக்கிய வீதிகள் வழியாக திருத்தேரோட்டம் நடந்தது. தேரோட்டத்தில் சப்-இன்ஸ்பெக்டர் வனக்குமார் தலைமையிலான போலீசார் திருத்தேர் வலம் வரும் பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.   

    மாநில, மாவட்ட, மண்டல் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

    ஊட்டி,

    கூடலூர்ஸ்ரீமதுரை பகுதியில் மக்கள் சந்திப்பு கூட்டம் மாவட்ட தலைவர்மோகன்ராஜ் ஆலோசனைபடி ஸ்ரீமதுரை மண்டல் தலைவர் சுதாகர் தலைமையில் நடந்தது. இதில் மாநில, மாவட்ட, மண்டல் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

    இதற்கிடையே பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக பாரதீய ஜனதா மாநில துணை தலைவர் நாராயணன் நீலகிரி மாவட்டம் வருகை தந்தார். அவருக்கு நீலகிரி மாவட்ட தலைவர் மோகன்ராஜ், மாவட்ட பொதுச்ெசயலாளர்கள் ஈஸ்வரன், பரமேஸ்வரன், வெங்கடேஸ், மாவட்ட பொருளாளர் தர்மன், நகர தலைவர் பிரவீன், மாவட்ட துணை தலைவர் பாபு உள்பட பலர் கலந்து கொண்டனர். 

    • நீலகிரி உள்பட பல்வேறு இடங்களிலும் ஒரு கிலோ தக்காளி ரூ.150க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதற்கு தொடர் மழையால் வரத்து குறைந்ததே காரணமாகும்.
    • மலைக்கிராமத்தில் தக்காளியை விளைவித்து குறைந்த விலைக்கு விற்பனை செய்து வரும் சகோதரர்களை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

    ஊட்டி:

    தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களிலும் கடந்த சில வாரங்களாகவே தக்காளியின் விலை புதிய உச்சத்தில் உள்ளது.

    தமிழகத்தின் பல இடங்களில் ரூ.130 முதல் ரூ.150 வரையும், வெளி மாநிலங்களில் சில இடங்களில் ரூ.200 என்ற அளவிலும் தக்காளியானது விற்பனையாகி வருகிறது.

    தக்காளியின் விலையை கட்டுப்படுத்தும் விதமாக தமிழக அரசு நடவடிக்கை எடுத்து ரேஷன் கடைகளில் கிலோ ரூ.60க்கு மக்களுக்கு விற்பனை செய்து வருகிறது.

    தக்காளி விலை உச்சத்தில் இருக்கும் நிலையில், நீலகிரி மாவட்டம் குந்தா பகுதியை சேர்ந்த சகோதரர்களான ராமன், புட்டுசாமி ஆகியோர் 2 சகோதரர்கள் தாங்கள் பயிரிட்டு அறுவடை செய்துள்ள தக்காளியை கிலோ ரூ.80க்கு விற்பனை செய்து ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளனர்.

    நீலகிரி உள்பட பல்வேறு இடங்களிலும் ஒரு கிலோ தக்காளி ரூ.150க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதற்கு தொடர் மழையால் வரத்து குறைந்ததே காரணமாகும்.

    இதற்கிடையே மலைக்கிராமத்தில் தக்காளியை விளைவித்து குறைந்த விலைக்கு விற்பனை செய்து வரும் சகோதரர்களை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

    இதுகுறித்து விவசாய சகோதரர்கள் கூறியதாவது:-

    விவசாயம் தான் எங்களுக்கு தொழில். இந்த பகுதியில் எல்லோரும் சாகுபடி செய்யும் மலைக்காய்கறிகளைத் தான் நாங்களும் சாகுபடி செய்து வந்தோம். வீட்டு தேவைக்காக ஒருமுறை தக்காளி பயிரிட்டோம். நல்ல விளைச்சல் தந்தது. இதனால் அடுத்து கொஞ்சம் அதிகமாக தக்காளியை பயிரிட்டோம்.

    ஏப்ரல் மாதம் மைசூரில் இருந்து 1000 தக்காளி நாற்றுகளை வாங்கி வந்து நடவு செய்தோம். அப்போது தக்காளி விலை ரூ.10 தான். கால நிலை மாற்றத்தால் 400 நாற்றுகள் பட்டுப்போயின.

    600 நாற்றுகள் உயிர் பிழைத்தன. செடி சாயாமல் இருக்க ரொம்ப சிரமப்பட்டு பந்தல் கட்டி பராமரித்தோம். எங்கள் உழைப்புக்கு இப்போது நல்ல பலன் கிடைத்து விட்டது.

    நீலகிரி மாவட்டத்தில் ரூ.150க்கு அதிகமாக தக்காளி விற்கும் நிலையில், உள்ளூர் மக்களுக்காக ரூ.80க்கு தக்காளியை நாங்கள் விற்பனை செய்து வருகிறோம்.

    குந்தா பகுதியில் நிலவும் சீதோஷ்ண நிலை தக்காளி விளைச்சலுக்கு ஏற்றது. மாட்டுச்சாண உரமிட்டு தக்காளியை சாகுபடி செய்தோம். இப்பகுதியில் வனவிலங்குகள் தொந்தரவு அதிகம். காட்டெருமை, கரடி, கடமான், குரங்குகள் கூட்டம் கூட்டமாக வரும்.

    வனவிலங்குகள் செடிகளை சேதப்படுத்தாமல் இருக்க இரவு, பகலாக காவல் காத்தோம். மேலும் தக்காளி செடிகளை பராமரிக்க நிறைய செலவு ஆகிறது.

    தக்காளி ரூ.200க்கு மேல் விற்றாலும் பரவாயில்லை. எங்களுக்கு கிலோவுக்கு ரூ.80 கிடைத்தால் போதும். ஆயிரம் கிலோவுக்கு மேல் தக்காளி அறுவடை செய்து உள்ளூர் மக்களுக்கு குறைந்த விலையில் கொடுத்திருக்கிறோம்.

    வெளியூரில் இருந்து எல்லாம் ஆட்கள் வந்து தக்காளியை அதிக விலைக்கு கேட்டார்கள்.

    உள்ளூர் மக்கள் தேவைக்கே பற்றாக்குறையாக உள்ள நிலையில், வெளியூரில் தக்காளியை விற்க மனமில்லை. குந்தா மக்களுக்கு நாங்கள் செய்யும் சேவையாகவே இதனை கருதுகிறோம்.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    இவர்களிடம் குந்தா மற்றும் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் போட்டி போட்டு வந்து தக்காளியை வாங்கி செல்கின்றனர். இதுகுறித்து குந்தாவை சேர்ந்த பெண்கள் கூறுகையில், நீலகிரி மாவட்டத்தில் ஒரு கிலோ தக்காளி ரூ.150-க்கும் மேல் விற்கப்படுகிறது. இது எங்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

    • பள்ளி குழந்தைகள் மற்றும் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
    • போலீசார் நடைமேடையில் வாகனம் நிறுத்துவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை.

    கோத்தகிரி,

    கோத்தகிரி காந்தி மைதானம்-ராம்சந்த் ரோட்டில் இடது புறம் லாரிகள் நிறுத்தும் இடமாகவும், வலது பக்கம் நடைமேடையும் உள்ளது. இது மிகவும் குறுகலான சாலை. எனவே வாகனங்கள் சிரமப்பட்டு சென்று வருகின்றன.

    காந்தி மைதானம்-ராம்சந்த் சாலையில் காலை, மாலை வேளைகளில் போக்குவரத்து அதிகமாக இருக்கும். இந்த நிலையில் அந்த பகுதியில் வசிக்கும் பலர் நடை மேடையில் வாகனங்களை நிறுத்தி செல்கின்றனர்.

    இதனால் அங்கு பொதுமக்கள் நடக்க முடியாமல் நடுரோட்டில் இறங்கி செல்ல வேண்டி உள்ளது. எனவே பள்ளி குழந்தைகள் மற்றும் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இதனால் அந்த பகுதியில் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.

    எனவே போக்குவரத்து போலீசார் இந்த விஷயத்தில் உடனடியாக தலையிட்டு நடைமேடையில் வாகனம் நிறுத்துவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    • பொற்கிழி மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி வருகிற செப்டம்பர் மாதம் நடக்க உள்ளது.
    • தகவலை நீலகிரி மாவட்ட தி.மு.க செயலாளர் பா.மு.முபாரக் தெரிவித்து உள்ளார்.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டத்தில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு பொதுக்கூட்டம், கட்சி முன்னோடிகளுக்கு பொற்கிழி மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி வருகிற செப்டம்பர் மாதம் நடக்க உள்ளது.

    இந்த நிலையில் நீலகிரி மாவட்ட தி.மு.க செயலாளர் பா.மு.முபாரக் தலைமையில் குன்னூர் நகர செயலாளர் ராமசாமி, பொதுக்குழு உறுப்பினர்கள் சதக்கத்துல்லா, எப்பநாடு தொரை ஆகியோர் சென்னைக்கு சென்று விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்தனர்.

    அப்போது நீலகிரி மாவட்டத்தில் செப்டம்பர் மாதம் நடக்க உள்ள கட்சி நிகழ்ச்சியில் பங்கேற்க வரும்படி அழைப்பு விடுக்கப்பட்டது. இதனை உதயநிதி ஸ்டாலின் ஏற்றுக்கொண்டார். மேற்கண்ட தகவலை நீலகிரி மாவட்ட தி.மு.க செயலாளர் பா.மு.முபாரக் தெரிவித்து உள்ளார்.

    ×