என் மலர்tooltip icon

    நீலகிரி

    • பொதுமக்கள் தங்கள் வீடுகளில் இருந்தவாறு செல்போனில் எடுத்த வீடிேயா சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது.
    • வனத்துறையினா் யானையை அடா்ந்த வனப்பகுதிக்குள் விரட்டினா்.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்ட வனப்பகுதியில் சிறுத்தை, புலி, யானை, மான், காட்டெருமை, கரடி உள்பட பல்வேறு வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன.

    இந்த வனவிலங்குகள் அவ்வப்போது, உணவு மற்றும் தண்ணீர் தேடி வனத்தை விட்டு வெளியேறுவது வாடிக்கையாக நடந்து வருகிறது. வனத்தை விட்டு வெளியேறும் வனவிலங்குகள் வனத்தையொட்டி கிராம பகுதிகளுக்குள் நுழைந்து அங்குள்ள பொருட்களை சேதப்படுத்தி வருகிறது. தொடர்ந்து இதுபோன்று யானைகள் குடியிருப்புக்குள் சுற்றி திரிவதால் பொதுமக்கள் அச்சத்திலேயே உள்ளனர்.

    கூடலூர் அருகே தேவா்சோலை பஜாரை அடுத்து தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளிக்கு பின்புறம் வனப்பகுதி உள்ளது. சம்பவத்தன்று இந்த பள்ளியின் அருகே 2 காட்டு யானைகள் வந்தன.

    சிறிது நேரம் 2 யானைகளும் அங்குமிங்கும் சுற்றி கொண்டிருந்தன. திடீரென 2 யானைகளும் நேருக்கு நேர் நின்று கொண்டு ஒன்றுடன் ஒன்று ஆக்ரோஷமாக மோதிக்கொண்டன. தொடர்ந்து சில மணி நேரங்கள் இந்த சண்டை நீடித்தது.

    இதனை அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் தங்கள் வீடுகளில் இருந்தவாறு செல்போனில் வீடியோ எடுத்தனர். தற்போது இந்த காட்சிகள் சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது.

    ஓவேலி பேரூராட்சிக்குட்பட்ட பெரியசூண்டி பகுதிக்குள் சம்பவத்தன்று இரவு ஒற்றை காட்டு யானை நுழைந்தது. தொடா்ந்து, அப்பகுதியில் உலவிய யானை அங்கிருந்த ஆறுமுகம் என்பவரது வீட்டை இடித்து சேதப்படுத்தியது.

    இதில், வீட்டுக்குள் அமா்ந்து இரவு உணவு அருந்திக் கொண்டிருந்த ஆறுமுகம், குடும்பத்தாா் அலறியடித்து வெளியே ஓடி வந்தனா். யானை நிற்பதை பார்த்ததும் அதிர்ச்சியான அவர்கள் அங்கிருந்து சென்று அருகே உள்ள பகுதிகளில் தஞ்சம் அடைந்தனர். இதனைப் பாா்த்த அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்குத் தகவல் தெரிவித்தனா்.

    சம்பவ இடத்துக்கு வந்த வனத்துறையினா் யானையை அடா்ந்த வனப்பகுதிக்குள் விரட்டினா். இந்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

    • சுதந்திர தின விழா ஆகஸ்டு 15 அன்று ஊட்டி அரசுக் கலைகல்லூரி விளையாட்டு மைதானத்தில் நடைபெற உள்ளது.
    • 108 அவசர கால வாகனம் விழா நடைபெறும் இடத்தில் நிறுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், சுதந்திர தின விழாவிற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம் கலெக்டர் அம்ரித் தலைமையில் நடைபெற்றது.

    பின்னர் கலெக்டர் அம்ரித் தெரிவித்ததாவது:-

    நீலகிரி மாவட்டத்தில் சுதந்திர தின விழா ஆகஸ்டு 15 அன்று ஊட்டி அரசுக் கலைகல்லூரி விளையாட்டு மைதானத்தில் நடைபெற உள்ளது. மேலும் காவல்துறையினர் சுதந்திர தின விழா நடைபெறவுள்ள விளையாட்டு மைதானத்தில் அணி வகுப்பு நடத்துதல், பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளுதல், பொதுப்பணித்துறையினர் சார்பில் மேடை அலங்காரப் பணிகள் மேற்கொள்ளவும், தீயணைப்பு துறையினர் மைதானத்தில் பாதுகாப்புக்காக தீயணைப்பு வாகனத்தை நிறுத்தவும், தோட்டக்கலையின் மூலம் விழா மேடையில் பூந்தொட்டிகள் அலங்காரம் அமைக்கவும், நகராட்சித்துறையின் சார்பில் விழா நடைபெறும் இடத்தில் சுத்தம் செய்தல், குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மேற்கொள்ளவும், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் சார்பில் 108 அவசர கால வாகனம் விழா நடைபெறும் இடத்தில் நிறுத்தவும், பள்ளிக்கல்வித்துறை சார்பில் பள்ளி மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் மற்றும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் பழங்குடியினர் நடன நிகழ்ச்சி நடத்தப்பட வேண்டும்.

    எனவே, அனைத்து அலுவலர்களும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணிகளை சிறப்பாக மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். இக்கூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரபாகர், மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்தி பிரியதர்சினி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் உமாமகேஸ்வரி, கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் தனபிரியா (பொது), மணிகண்டன்(வளர்ச்சி), கண்ணன்(கணக்குகள்), தோட்டக்கலைத்துறை இணை இயக்குநர் ஷிபிலா மேரி, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சௌந்தர்ராஜன், கோட்டாட்சியர்கள் துரைசாமி (ஊட்டி), பூஷண குமார் (குன்னூர்), முகம்மது குது ரதுல்லா(கூடலூர்), மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கீதா, மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் செல்வகுமார், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) சாம்சாந்தகுமார், ஊட்டி நகராட்சி ஆணையாளர் ஏகராஜ், வட்டார போக்குவரத்து அலுவலர் தியாகராஜன், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் (பொ) ஷோபனா உட்பட அரசுத்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர். 

    100-க்கும் மேற்பட்ட வழக்குகளை போலீசார் பதிவு செய்து, சுமார் 1,25,000 ரூபாய் அபராதம் விதித்தனர்.

    கோத்தகிரி,

    கோத்தகிரி மற்றும் அதன் சுற்று வட்டார முக்கிய பகுதிகளில் போக்குவரத்து போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டு இருந்தனர்.

    அப்போது ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தை ஓட்டுதல், சீட் பெல்ட் அணியாமல் நான்கு சக்கர வாகனத்தை ஓட்டுதல், ஆவணம் இல்லாமல் வாகனத்தை ஓட்டுதல், குடித்து விட்டு வாகனத்தை ஓட்டுதல் போன்ற குற்றங்களுக்காக 100-க்கும் மேற்பட்ட வழக்குகளை போலீசார் பதிவு செய்து, சுமார் 1,25,000 ரூபாய் அபராதம் விதித்தனர்.

    • வெயிலின் தாக்கம் சற்று குறைந்து, இதமான குளிர்ந்த காலநிலை நிலவி வருகிறது.
    • மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    கோத்தகிரி,

    கோத்தகிரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 1 வார காலமாக வெயிலின் தாக்கம் சற்று அதிகமாக காணப்பட்டது. இதனால் வேலைக்கு செல்வோர் மற்றும் பள்ளி குழந்தைகள் என அனைவரும் சிரமப்பட்டு வந்தனர். இந்த நிலையில் கோத்தகிரி சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மதியம் சுமார் 2 மணி நேரம் பலத்த மழை கொட்டி தீர்த்தது. இதனால் அந்த பகுதியில் வெயிலின் தாக்கம் சற்று குறைந்து, இதமான குளிர்ந்த காலநிலை நிலவி வருகிறது. இது அங்கு வசிக்கும் பொதுமக்களிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    • சுற்றுலாபயணிகள் வாங்க ஆர்வம் காட்டி வருகிறார்கள்.
    • நீலகிரி மாவட்டத்தில் 4-ல் 3 பங்கு வனப்பகுதிகளை உடையது.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டத்தில் 4-ல் 3 பங்கு வனப்பகுதிகளை உடையது. இயற்கை வளம் செறிந்த மாவட்டம் என்பதால் இங்கு உள்ள பெருபாலான இடங்களில் பல்வேறு அரிய வகை மரங்கள் மற்றும் செடி,கொடிகள் தழைத்து வளர்ந்து அழகாக காட்சியளித்து வருகின்றன.

    ஊட்டியில் எங்கு பார்த்தாலும் மலைத்தொடர்கள், பள்ளத்தாக்குகள், நீர் நிலைகள், சோலைக் காடுகள், புல்வெளிகள், சுற்றுலாத் தலங்கள் என அனைத்து பகுதிகளும் பச்சைப் பசேலென காண்போரை கவர்ந்திழுக்கும்.

    அதிலும் குறிப்பாக ஊட்டியில் பைன் மரங்களை அதிகம் பார்க்க முடியும். இது அடர் பச்சை நிறத்தில் ஊசி போன்ற இலைகளுடன் உயரமாக வளர்ந்து நிற்கும். ஆங்கிலேயர் காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது.

    தேவதாரு என்று அழைக்கப்படும் பைன் மரங்கள், நீலகிரி மாவட்டத்தின் சுற்றுவட்டார பகுதிகளில் அதிகமாக உள்ளன. இது பார்ப்பதற்கு மிகவும் அழகாகக் காணப்படுவ தால், சுற்றுவட்டாரப் பகுதி களில் அதிகமாக நடவு செய்யப்பட்டு உள்ளது. இன்னும் சொல்லப்போ னால் ஊட்டி-கூடலூர் சாலையில் பைன் பாரஸ்ட் என்ற பெயரில் சுற்றுலாத் தலமே உள்ளது.

    பைன் மரங்களில் இருந்து கீழே விழும் காய்கள் அழகாக காட்சி அளிக்கும். எனவே இதனை அங்கு வசிக்கும் உள்ளூர்வா சிகள் சேகரித்து, அழகிய அலங்கார பொருட்களாக மாற்றி வியாபாரம் செய்து வருகினறனர்.

    அப்போது அவர்கள் பைன் மர காய்களுக்கு அழகான வடிவம் கொடுத்து மட்டுமின்றி பல்வேறு வர்ணங்கள் பூசி தத்ரூபமாக அலங்கார பொருட்களாக மாற்றுகின்றனர். இது ஊட்டியின் பல்வேறு பகுதிகளில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இவை சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்து உள்ளது. எனவே அவர்கள் பைன் மரக்காய் அலங்கார பொருட்களை ஆர்வத்துடன் விரும்பி உற்சாகமாக வாங்கி செல்கின்றனர்

    • பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்து வருகிறார்கள்.
    • விரைவில் சீர்செய்யும் பணிகள் தொடங்கும்.

    ஊட்டி,

    ஊட்டி நகராட்சிக்கு உட்பட்ட புதிய 16-வது வார்டு பகுதியில், மிஷனரிஹில் பகுதிக்கு செல்லும் ரோட்டில் உள்ள சாலையோரங்களில் நடக்கவே முடியாத அளவிற்கு முட்புதர்கள் வளர்ந்து நிறைந்து உள்ளன. இது அந்த வழியாக நடந்து செல்லும் பொதுமக்களுககு இன்னலை ஏற்படுத்தி வருகிறது.

    அந்த பகுதியில் வசிக்கும் மக்கள், நகராட்சிக்கு பலமுறை புகார் தெரி வித்தும், இதுவரை நட வடிக்கை எடுக்கப்ப டவில்லை. எனவே பொது மக்கள் விரக்தியின் விளிம்பி ல் உள்ளனர்.

    இதுகுறித்து ஊட்டி 16-வது வார்டு நகர மன்ற உறுப்பினர் கூறுகையில், ஊட்டி நகராட்சியில் ஆட்கள் பற்றாகுறை உள்ளது அங்கு விரைவில் சீர்செய்யும் பணிகள் தொடங்கும் என்று தெரிவித்து உள்ளார்.

    இதனால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்

    ஊட்டி நகராட்சி க்குட்பட்ட பெரும்பாலான சாலைகள் சீரமைக்க ப்படாமல் உள்ளது. இத னால் அங்கு பல இடங்க ளில் பள்ளங்கள் ஏற்பட்டு, பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. இதுதவிர சாலையோ ரங்களில் முட்புதர்கள் அடர்ந்து வளர்ந்து உள்ளன.

    சாலையோரங்களில் மழை நீர் வடிகால்கள் சீரமைக்கப்படவில்லை. எனவே மழைக்காலங்களில் சேறும் சகதியுமாக ரோ ட்டில் வெள்ளம் பெருக்கெ டுத்து ஓடுகிறது. எனவே நகராட்சி அதிகாரிகள் இந்த விஷயத்தில் உடன டியாக தலையிட்டு நடவ டிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    • போலீசார் வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.
    • விதிகளை மீறிய 35 பேர் மீது வழக்குப்பதிவு செய்யபட்டது.

    கோத்தகிரி

    கோத்தகிரி மலைப்பாதையில் விபத்துகள் ஏற்படாமல் தடுக்கும் வகையில் போக்குவரத்து போலீசார் வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருவதுடன், விதிகளை மீறும் வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்தநிலையில் நேற்று கோத்தகிரி போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் பதி தலைமையிலான போலீசார் வாகன சோதனை மேற்கொண்டனர். இதில் போக்குவரத்து விதிகளை மீறிய 51 வாகன ஓட்டிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அவர்களுக்கு ரூ.36 ஆயிரத்து 500 அபராதம் விதிக்கப்பட்டது. இதேபோல் கோத்தகிரி சப்-இன்ஸ்பெக்டர் யாதவ கிருஷ்ணன் மேற்கொண்ட வாகன சோதனையில், விதிகளை மீறிய 35 பேர் மீது வழக்குப்பதிவு செய்யபட்டது. அவர்களுக்கு ரூ.28 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. நேற்று ஒரே நாளில் போக்குவரத்து விதிகளை மீறிய 86 பேருக்கு ரூ.64 ஆயிரத்து 500 அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது.

    • 30-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
    • அமைச்சர் கா.ராமச்சந்திரன் தூய்மை பணியாளர்களை சந்தித்து குறைகளை கேட்டார்.

     குன்னூர்

    குன்னூர் அருகே ஜெகதளா பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளன. இங்கு 30-க்கும் மேற்பட்ட நிரந்தர மற்றும் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்தநிலையில் அந்த பகுதிக்கு வந்த அமைச்சர் கா.ராமச்சந்திரன் தூய்மை பணியாளர்களை சந்தித்து குறைகளை கேட்டார். அப்போது அவர்கள் சம்பளத்தை உயர்த்தி வழங்குமாறு கோரிக்கை விடுத்தனர். இதற்கு கவுன்சிலர் ஒருவர் தூய்மை பணியாளர்களிடம் கண்டனம் தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது. இதை கண்டித்து தூய்மை பணியாளர்கள் நேற்று பணியை புறக்கணித்து திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தின் போது, தூய்மை பணியாளர்களை கவுன்சிலர் தரக்குறைவாக பேசியதை கண்டித்தும், சம்பளத்தை உயர்த்தி வழங்க கோரியும் வலியுறுத்தினர். தொடர்ந்து அங்கு வந்த ஜெகதளா பேரூராட்சி தலைவர் பங்கஜம், இந்த பிரச்சினை குறித்து புகார் மனுவாக எழுதி தருமாறு தூய்மை பணியாளர்களிடம் கூறினார். மேலும் வார்டு கவுன்சிலர் மீது நடவடிக்கை எடுப்பதாகவும் கூறியதை அடுத்து பணியாளர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    • தற்போது உள்ள செயல் அலுவலர் 2 பேரூராட்சிகளில் பணியாற்றுகிறார்.
    • பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ் வழங்குவதில் காலதாமதம் ஏற்படுகிறது.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம் உலிக்கல் பேரூராட்சியில் பல ஆண்டுகளாக நிரந்தர செயல் அலுவலர் இல்லாததால் மக்கள் பணிகள் நிறைவடையாமல் உள்ளது.

    மேலும் பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ் வழங்குவதில் காலதாமதம் ஏற்படுகிறது. தற்போது உள்ள செயல் அலுவலர் 2 பேரூராட்சிகளில் பணியாற்றுகிறார். அவர் பெரும்பாலும் கீழ் குந்தா அலுவலகத்திலேயே உள்ளதால் பொதுமக்கள் தங்களது குறைகளை செயல் அலுவலரிடம் கூற 15 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கீழ்குந்தா பேரூராட்சி அலுவலகத்திற்கு செல்ல வேண்டிய நிலை ஏற்படுகிறது.

    எனவே பொதுமக்களின் பணிகளை விரைந்து முடிக்கவும், அவர்களுக்கு உரிய பிறப்பு இறப்பு சான்றிதழ் வழங்கவும் உடனடியாக உலிக்கல் பேரூராட்சி பகுதிக்கு நிரந்தர செயல் அலுவலர் பணிமடுத்தப்பட வேண்டும்.

    காலதாமதம் ஏற்பட்டால் அ.தி.மு.க சார்பாக 12-வது வார்டு உறுப்பினர் பாஸ்கரன் தலைமையில் பல கட்ட போராட்டங்கள் நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளதாக வார்டு உறுப்பினர் தெரிவித்துள்ளார்.

    • திடீரென இப்பகுதியில் இணைப்பு துண்டிக்கப்படுகிறது நெட்வொர்க் டவர் இல்லாதது இதற்கு காரணம் எனக் கூறப்படுகிறது.
    • பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம் பர்லியார் பஞ்சாயத்துக்கு உட்பட்ட சுற்றுலாத்தலங்களான டால்பின்நோஸ், லேம்ஸ் ராக் உள்ளிட்ட சுற்றுலா தலங்களுக்கு, தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.

    இதுதவிர பழங்குடியினர், தேயிலை தோட்ட தொழிலாளர்களும் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் செல்போன் கொண்டு செல்வோர் திடீரென இப்பகுதியில் இணைப்பு துண்டிக்கப்படுகிறது நெட்வொர்க் டவர் இல்லாதது இதற்கு காரணம் எனக் கூறப்படுகிறது.

    இப்பகுதியில் ஏற்படும் விபத்துக்கள் மற்றும் அசம்பாவிதங்கள் குறித்து சம்பந்தப்பட்ட துறையினருக்கு உடனடியாக தகவல் தெரிவிக்க முடியாத நிலை ஏற்படுகிறது. டவர் அமைப்பதற்கு இடத்தை கொடுக்க முன் வந்தும் எந்தவித நடவடிக்கையும் தற்போது வரை எடுக்கப்படாதது வேதனை அளிப்பதாக உள்ளது.

    எனவே சம்பந்தப்பட்ட துறையினர் அப்பகுதியில் செல்போன் டவர்களை அமைத்து பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் பயன்பெறும் வகையில் செல்போன் தொடர்பை விரைவாகப் பெற நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என அப்பகுதி மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

    • தேசிய நெடுஞ்சாலையில் அவ்வப்போது காட்டு யானைகள், காட்டெருமை போன்ற வன விலங்குகள் உலா வருவது வழக்கம்.
    • புலி சாலை ஓரத்தில் அமர்ந்திருப்பதை பார்த்த வாகன ஓட்டிகள் தங்களது வாகனங்களில் இருந்தபடியே புகைப்படம் எடுக்க தொடங்கினர்.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகம் வனப்பகுதி வழியாக கூடலூரில் இருந்து கர்நாடகா செல்லும் தேசிய நெடுஞ்சாலை உள்ளது.

    இந்த தேசிய நெடுஞ்சாலையில் அவ்வப்போது காட்டு யானைகள், காட்டெருமை போன்ற வன விலங்குகள் உலா வருவது வழக்கம்.

    இந்நிலையில் நேற்று மாலை தமிழ்நாடு எல்லை பகுதியான கக்கநல்லா சோதனை சாவடி அருகே சாலை ஓரத்திற்கு வந்த புலி ஒன்று நீண்ட நேரமாக சாலை ஓரத்தில் அமர்ந்து சாலையில் சென்ற வாகனங்களை பார்த்து படி எவ்வித அச்சமும் இன்றி ஒய்யாரமாக அமர்ந்திருந்தது.

    புலி சாலை ஓரத்தில் அமர்ந்திருப்பதை பார்த்த வாகன ஓட்டிகள் தங்களது வாகனங்களில் இருந்தபடியே புகைப்படம் எடுக்க தொடங்கினர்.

    எதையும் பொருட்படுத்தாத அந்த புலி சுமார் ஒரு மணி நேரம் அப்பகுதியில் அமர்ந்தபடி யாரையும் அச்சுறுத்தாமல் காட்சி தந்தது. வனத்திற்குள் சென்றது. வாகனங்கள் அதிக அளவு கூடியதால் அந்த புலி எழுந்து மீண்டும் வனப்பகுதிக்குள் சென்றது.

    இதைப் பார்த்த வாகன ஓட்டிகள் மற்றும் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர். ஒரு மணி நேரம் சாலை ஓரத்தில் போஸ் கொடுத்த புலியால் சிறிது நேரம் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.

    • உலகம் முழுவதும் புகழ் பெற்ற பாகன் தம்பதிகளான பொம்மன், பெள்ளியை நேரில் சந்தித்து பேசினார்.
    • முகாமில் உள்ள பாகன்கள் மற்றும் பழங்குடியின மக்கள் மற்றும் தன்னார்வ அமைப்பு பிரதிநிதிகளை சந்தித்து பேசினார்.

    ஜனாதிபதி திரவுபதி முர்மு பதவி ஏற்ற பிறகு முதன்முறையாக நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள முதுமலை புலிகள் காப்பகத்துக்கு இன்று மாலை வருகை தந்தார்.

    நீலிகிரி முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள யானைகளை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பார்வையிட்டார்.

    முகாமில் ஜனாதிபதி திரவுபதி முர்மு, ஆஸ்கர் விருது பெற்ற தி எலிபண்ட் விஸ்பரர்ஸ் ஆவணப்படத்தில் நடித்து உலகம் முழுவதும் புகழ் பெற்ற பாகன் தம்பதிகளான பொம்மன், பெள்ளியை நேரில் சந்தித்து பேசினார்.

    மேலும், ஆஸ்கர் விருது வென்ற தி எலிபாண்ட் விஸ்பரர்ஸ் ஆவணப்பட புகழ் 'பொம்மி' யானைக்கு கரும்பு வழங்கினார்.

    அதனை தொடர்ந்து முகாமில் உள்ள பாகன்கள் மற்றும் பழங்குடியின மக்கள் மற்றும் தன்னார்வ அமைப்பு பிரதிநிதிகளை சந்தித்து பேசினார்.

    ×