என் மலர்
நீலகிரி
- சப்-இன்ஸ்பெக்டர் நிஷாந்தினி தலைமையிலான போலீசார் ரோந்து சென்றனர்.
- அங்கு சுற்றித்திரிந்த வாலிபர் ஒருவரை பிடித்து விசாரணை நடத்தினர்.
ஊட்டி
ஊட்டி மேற்கு போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் நிஷாந்தினி தலைமையிலான போலீசார் கலெக்டர் அலுவலகம் பகுதியில் நேற்று முன்தினம் ரோந்து சென்றனர். அப்போது சந்தேகப்படும் படி சுற்றித்திரிந்த ஒருவரை பிடித்து விசாரணை நடத்தினர். அதற்கு அவர் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தார். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவர் வைத்திருந்த பையை சோதனை செய்தபோது, அதில் கஞ்சா இருப்பது தெரியவந்தது. விசாரணையில் அவர் எட்டின்ஸ் சாலை பகுதியை சேர்ந்த ராஜன் (வயது 32) என்பதும், கஞ்சா விற்பனைக்கு வைத்திருந்ததும் தெரியவந்தது. தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 600 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
- 17 பிரிவுகளின் கீழ் சிறப்பாக செயல்படுவோருக்கு 45 விருதுகள் வழங்கப்பட உள்ளன.
- விருதுகள் சென்னையில் செப்டம்பா் 27-ந்தேதி நடைபெற உள்ள உலக சுற்றுலா தினவிழாவில் வழங்கப்படும்.
ஊட்டி,
தமிழக சுற்றுலாத் துறை அமைச்சா் கா.ராமசந்திரன் இருப்பதாவது:-
தமிழ்நாட்டில் சிறந்த சுற்றுலா ஏற்பாட்டாளா், உள்நாட்டு சுற்றுலா ஏற்பாட்டாளா், பயண பங்குதாரா், விமான பங்கு தாரா், தங்குமிடம், உணவகம், தமிழ்நாடு சுற்றுலா வளா்ச்சிக் கழகத்தின் உணவகம், தங்குமிடம் மற்றும் படகு இல்லம்,
சுற்றுலாவை ஊக்குவிக்கும் சிறந்த மாவட்டம், சுத்தமான சுற்றுலாத்தலம், சுற்றுலாப் பிரிவுகளின் ஏற்பாட்டாளா், சாகசம் மற்றும் தங்கும் முகாம்களுக்கான சுற்றுலா ஏற்பாட்டாளா், சமூக ஊடகங்களில் அதிக அளவு தாக்கத்தை ஏற்படுத்துபவா், சுற்றுலா வழிகாட்டி, தமிழகத்தின் சிறந்த சுற்றுலா விளம்பரம், சுற்றுலா மற்றும் விருந்தோம்பலில் சிறந்த கல்வி நிறுவனம் ஆகியவை உள்பட 17 பிரிவுகளின் கீழ் சிறப்பாக செயல்படுவோருக்கு 45 விருதுகள் வழங்கப்பட உள்ளன.
அதன்படி 2022-2023-ஆம் ஆண்டுக்கான சுற்றுலா விருதுகள் பெற விரும்பு வோர் விண்ணப்பிக்கலாம். இதற்காக அவர்கள் சுற்றுலா இணையதள முகவரியில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூா்த்தி செய்து வருகிற 15-ந்தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.
அப்படி அனுப்பப்படும் விண்ணப்பங்கள், விருது குழுவினரால் பரிசீலிக்கப் பட்டு தோ்வு செய்யப்படும் நபா்களின் விவரம் உரிய வா்களுக்கு தெரிவிக்கப்படும்.
இந்த விருதுகள் சென்னையில் செப்டம்பா் 27-ந்தேதி நடைபெற உள்ள உலக சுற்றுலா தினவிழாவில் வழங்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
- 2011-ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி 8 லட்சம் பழங்குடிகள் தமிழகத்தில் வாழ்ந்து வருகின்றனா்.
- கூடலூா், ஊட்டி பகுதிகளில் ரூ.25 கோடி செலவில் 3 விடுதிகள் கட்டப்பட்டு வருகின்றன.
ஊட்டி,
ஊட்டியில் சர்வதேச பூா்வீக குடிகள் தினம் கடைபிடிக்கப்பட்டது. மாவட்ட கலெக்டர் அம்ரித் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் பழங்குடியினர் நலத்துறை அமைச்சா் கயல்விழி செல்வராஜ் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு பழங்குடியின மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினாா்.
இதனை தொடர்ந்து அவர் நிகழ்ச்சியில் பேசியதாவது:-
உலகில் பழங்குடியினா் அதிகம் வசிக்கும் நாடுகளில் இந்தியா 2-வது இடத்தில் உள்ளது. இயற்கை வளங்களைப் பேணிக் காப்பதில் பழங்குடிகள் தலைமுறை தலைமுறையாக ஈடுபட்டு வருகின்றனா். 2011-ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி 8 லட்சம் பழங்குடிகள் தமிழகத்தில் வாழ்ந்து வருகின்றனா்.
பழங்குடிகளின் மக்கள் தொகை ஆண்டுதோறும் குறைந்து வருவது வருத்தம் அளிப்பதாக உள்ளது. தமிழக அரசு பழங்குடியினா் ஆணையம் அமைத்து உள்ளது. இதன் மூலம் பழங்குடிகளின் பிரச்னைகளுக்கு விரைவாக தீா்வு காண முடியும்.
தமிழகத்தில் உள்ள 48 பழங்குடியின தொழிற்கல்விக் கூடங்கள் மூலம் 30 ஆயிரம் மாணவா்கள் படித்து வருகின்றனா். அதேவேளையில், பழங்குடி மாணவா்களிடையே பள்ளி இடைநிற்றல் அதிகம் உள்ளது. திருச்சி, நாமக்கல் உள்ளிட்ட இடங்களில் ரூ.40 கோடியில் கல்லூரி விடுதிகள் கட்டப்பட்டு வருகின்றன. பழங்குடி மாணவா்களுக்கு இணையவழி நூலகமும் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த ஆண்டு 9 மாணவா்கள் வெளிநாடுகளில் கல்வி பயின்று வருகின்றனா்.
தாட்கோ நிறுவனம் மூலம் பழங்குடி மாணவா்களுக்கு ஓட்டல் மேனேஜ் மெண்ட் உள்ளிட்ட படிப்புகள் உடன் வேலையும் பெற்று தரப்படுகிறது. செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட இடங்களில் ரூ.539 கோடி செலவில் 14 ஆயிரம் வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன. கூடலூா், ஊட்டி பகுதிகளில் ரூ.25 கோடி செலவில் 3 விடுதிகள் கட்டப்பட்டு வருகின்றன. இப்பணிகள் விரைவில் முடிந்து, அங்கு மாணவ, மாணவியா் சோ்க்கப்படுவாா்கள். இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக தோடா் பழங்குடியின மக்களை உற்சாகப்படுத்தும் விதமாக, அமைச்சா் கயல்விழி செல்வராஜ் அவா்களுடன் சோ்ந்து நடனம் ஆடினாா். நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் பா.மு.முபாரக், மாவட்ட ஊராட்சி தலைவர் பொன்தோஸ், ஊராட்சி.ஒனாறிய தலைவர்கள் மாயன், கீர்த்தனா மற்றும் பழங்குடியின தலைவர்கள் கலந்து கொண்டனர்.
- எண்ணற்ற தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்.
- சிட்டுக்குருவிகளை பாதுகாப்பதில் நாம் கூடுதல் அக்கறை எடுத்துக்கொள்ள வேண்டும்
ஊட்டி,
தமிழகத்தில் சிட்டுக்குருவிகள் மனிதனுடன் ஒத்து வாழும் உயிரினமாக உள்ளது. ஆனால் தற்போது அவற்றின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. இதை தடுக்கும் வகையில் சமுக அமைப்புகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகின்றன.
இதன் ஒரு பகுதியாக நீலகிரி மாவட்டம் உதகை திருகாந்தல் மடத்தில் பேரூராதீனம் சாந்தலிங்க மருத்தாசல அடிகளார் முன்னிலையில் சிட்டுக்குருவிக்கு கூடு அமைக்கும் விழா தொடங்கி வைக்கப்பட்டது.
இதில் கோவை சிட்டுக்குருவி ஆர்வலர் பாண்டியராஜன், நித்யானந்தபாரதி உள்பட எண்ணற்ற தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் சமூக ஆர்வலர்கள் பேசும்போது, மனிதர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் கொசுக்களை அழிப்பதில் சிட்டுக்குருவிகளுக்கு அதிகம் பங்கு உண்டு. அவை கொசு முட்டை, புழு மற்றும் கொசுக்களை உணவாக உட்கொள்கின்றன.
முந்தைய காலத்தில் தினந்தோறும் காலையில் சேவலுக்கு அடுத்தபடியாக சிட்டுக் குருவிகளே அலாரமாக இருந்து வந்தன. அவற்றின் கீச் கீச் சப்தம் அதிகாலை நேரத்தில் இதமாகவும், புத்துணர்வு தரும் வகையிலும் இருக்கும்.
சிட்டுக்குருவி சுறுசுறுப்புக்கு பெயர்பெற்றது. அவை நம்முடன் வாழும் ஒரு அற்புத படைப்பு. இயற்கை விவசாயம் மூலமாகவே அவற்றின் எண்ணிக்கையை பெருக்க முடியும என்று பறவையியல் ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். எனவே சிட்டுக்குருவிகளை பாதுகாப்பதில் நாம் கூடுதல் அக்கறை எடுத்துக்கொள்ள வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.
- சாலையில் பயணம் செய்யும் வாகன ஓட்டிகள் மிகவும் அவதிப்படுகின்றனர்.
- ரோட்டை உடனடியாக சீரமைத்து தர வேண்டும் என கோரிக்கை விடுத்து உள்ளனர்
ஊட்டி,
ஊட்டி-பார்சன்ஸ்வேலி இடையே போக்குவரத்து சாலை உள்ளது. இதனை பழங்குடியின மக்கள் அதிகம் பயன்படுத்தி வருகின்றனர். இந்த ரோடு நீண்ட காலமாக பராமரிக்கப்படவில்லை.
எனவே அங்கு குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது.இதனால் கவக்காடுமந்து, அட்டக்கொரைமந்து, மலவதிமந்து, அகநாடுமந்து, குந்தக்கோடுமந்து, ஆனக்கல்மந்து, பில்லிமந்து, பென்னப்பால்மந்து, நத்தனேரிமந்து, கல்லக்கொரைமந்து, கொள்ளிக்கோடுமந்து, மேக்கோடுமந்து, துக்கார்மந்து, கல்மந்து, பார்சன்ஸ்வேலி, கவர்னர் சோலை, அகதநாடு உள்ளிட்ட பகுதியில் வசிக்கும் கிராம மக்கள் மிகவும் சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர். இதே போல அந்த சாலையில் பயணம் செய்யும் வாகன ஓட்டிகளும் அவதிப்படுகின்றனர்.
எனவே ஊட்டி -பார்சன்ஸ்வேலி இடையே பழங்குடியின மக்கள் அதிகம் பயன்படுத்தும் ரோட்டை உடனடியாக சீரமைத்து தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்
- பன்னாட்டு நிறுவனங்கள் இன்றைக்கும் பிளாஸ்டிக் கவர்களில் தான் அனைத்து பொருட்களையும் பேக்கிங் செய்கின்றனர்.
- தற்போது நாடு முழுவதும் அனைத்து பொருட்களின் விலையும் 30 சதவீதம் அதிகரித்து உள்ளது.
ஊட்டி,
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா ஊட்டியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
ஊட்டியில் உள்ள மார்க்கெட்கடைகளை இடமாற்றம் செய்யும் பிரச்சினையில் சுமூக தீர்வு ஏற்படுத்திய எம்.பி. ராஜாவுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்.
தமிழகம் முழுவதும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதனை மீறி விற்பனை செய்யும் கடைகளுக்கு அதிகாரிகள் ரூ.10 ஆயிரம் அபராதம் மற்றும் சீல் வைக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.பிளாஸ்டிக் பொருட்களுக்கு பதிலாக இதுவரை மாற்று பொருட்கள் அறிமுகம் செய்யப்படவில்லை. இந்த நிலையில் அரசாங்கம் பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனையில் ஈடுபடும் கடைகள் மீது நடவடிக்கை எடுப்பது ஏற்புடையது அல்ல.
பன்னாட்டு நிறுவனங்கள் இன்றைக்கும் பிளாஸ்டிக் கவர்களில் தான் அனைத்து பொருட்களையும் பேக்கிங் செய்து விற்பனை செய்து வருகின்றன.
ஆனால் அவர்கள் மீது அதிகாரிகள் எந்தவித நடவடிக்கைகளும் எடுப்பது இல்லை. இதற்கு மாறாக சிறு வியாபாரிகள் மீது மட்டும் அரசாங்கம் உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கிறது.
எனவே நீலகிரி மாவட்டத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் வைத்திருக்கும் கடைகளுக்கு அதிக அபராதம் விதிப்பதையும், கடைக்கு சீல் வைப்பதையும் அதிகாரிகள் உடனடியாக நிறுத்த வேண்டும். இதுதொடர்பாக வணிகர் சங்க பேரமைப்பு சார்பில் தமிழக முதல்-அமைச்சரை சந்தித்து முறையிட உள்ளோம்.
மத்திய அரசின் பொருளாதார கொள்கை தவறாக உள்ளது. இதனால் தற்போது நாடு முழுவதும் அனைத்து பொருட்களின் விலையும் 30 சதவீதம் அதிகரித்து உள்ளது. இது பொதுமக்களிடம் அதிகளவில் பாதிப்புகளை ஏற்படுத்தி உள்ளது.
எனவே நாடு முழுவதும் அனைத்து பொருட்களின் விலையை நிர்ணயம் செய்யும் வகையில் மத்திய-மாநில அரசுகள் சிறப்பு கமிட்டி அமைக்க வேண்டும். இதன்மூலம் அவற்றின் விலையை நிர்ணயம் செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- கண்மணி என்பவர் படித்த பெண்கள் இளைஞர்களுக்கு வேலை வாங்கி தருவதாக கூறியுள்ளார்.
- பாதிக்கப்பட்ட 50-க்கும் மேற்பட்டோர் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர்.
அரவேணு,
கோத்தகிரி கிருஷ்ணாபுதூரை சேர்ந்த பொதுமக்கள் ஊட்டி கலெக்டர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை கொடுத்து இருந்தனர். அந்த மனுவில் கிருஷ்ணாபுதூரை சேர்ந்த கண்மணி என்பவர் கலெக்டர் அலுவலகத்தில் வேலை பார்ப்பதாக கூறினார்.
அதே பகுதியில் வசிக்கும் 5-க்கும் மேற்பட்ட மகளிர் சுய உதவி குழுக்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் பொதுமக்களிடம் மத்திய அரசு திட்டத்தின் கீழ் ரூ.2 லட்சம் கடன் பெற்று தருவதாகவும், படித்த பெண்கள் இளைஞர்களுக்கு வேலை வாங்கி தருவதாக கூறி ஒவ்வொருவரிடமும் தலா ரூ.5 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை பெற்றார். இந்த வகையில் மட்டும் அந்த பெண் கடந்த 2018-ம் ஆண்டு முதல் 80-க்கும் மேற்பட்டோரிடம் லட்சக்கணக்கில் பணம் வசூலித்து விட்டு திருப்பி தராமல் மோசடி செய்து உள்ளார்.
எனவே, அவர் மீது நடவடிக்கை எடுத்து, எங்களின் பணத்தை மீட்டு தர வேண்டும் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.
இதையடுத்து அந்த மனு கோத்தகிரி போலீஸ் நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. இந்த நிலையில் கண்மணி நேற்று மதியம் வக்கீலுடன் வந்திருந்தார். தகவல் அறிந்ததும் பாதிக்கப்பட்ட 50-க்கும் மேற்பட்டோர் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர்.
அப்போது பண மோசடியில் ஈடுபட்ட பெண் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்
இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. அதன்பிறகு போலீசார் முற்றுகையிட்டவர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.
- தி.மு.க செயலாளர் பா.மு.முபாரக் தலைமையில் நிர்வாகிகள் கருணாநிதி சிலை மற்றும் உருவப்படத்துக்கு மரியாதை செலுத்தினர்.
- நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
ஊட்டி,
முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் நினைவுநாளையொட்டி ஊட்டி அறிவாலய வளாகத்தில் நீலகிரி மாவட்ட தி.மு.க செயலாளர் பா.மு.முபாரக் தலைமையில் நிர்வாகிகள் கருணாநிதி சிலை மற்றும் உருவப்படத்துக்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இதில் மாவட்ட துணை செயலாளர் ரவிகுமார், ஊட்டி நகர செயலாளர் ஜார்ஜ், மாநில விளையாட்டு மே்ம்பாட்டு அணி துணை செயலாளர் வாசிம்ராஜா, தலைமை பொதுக்குழு உறுப்பினர் சதக்கத்துல்லா, ஊட்டி நகரமன்ற தலைவர் வாணீஸ்வரி, ஊட்டி ஊராட்சி ஒன்றிய தலைவர் மாயன், மாவட்ட அமைப்பாளர்கள் இமயம் சசிகுமார், ராஜா, காந்தல் ரவி, எல்கில் ரவி, கர்ணன், தேவராஜ், யோகேஸ்வரன், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் நாகராஜ், ஊட்டி நகர அவை தலைவர் ஜெய கோபி, துணை செயலாளர்கள் ரீட்டாமேரி, பொருளாளர் அணில்குமார், மாவட்ட பிரதிநிதிகள் தம்பி இஸ்மாயில், கார்திக், வெங்கடேஷ், ராமசந்திரன், ஊட்டி நகரமன்ற உறுப்பினர்கள் ரமேஷ், விஷ்னு, கஜேந்திரன், ரகுபதி, செல்வராஜ், கீதா, நாகமணி, மேரி பிளோரீனா, வனிதா, பிரியா வினோதினி, பிளோ ரீனா, மாவட்ட அணி சா ர்பில் மேத்யூஸ், செல்வராஜ், மூர்த்தி, ஜெயராமன், தருமன், மார்கெட் ரவி, அமலநாதன், மத்தீன், ஆட்டோ ராஜன், தியாகு, பௌ்ளன், ஜோகி, சிவகுமார், வெங்கடேஷ், பாபு, அபு, ரகமத்துல்லா, மஞ்சுகுமார், கிட்டான், விஜயகுமார், ஊட்டி வடக்கு ஒன்றிய நிர்வாகிகள் குண்டன், ராஜூ, காளி, மூர்த்தி, தொ.மு.ச நிர்வாகிகள் ஆனந்தன், சந்திரன் உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
- கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் தொடர் போராட்டம் நடத்துவோம் என தெரிவித்துள்ளனர்.
- ஆயிரத்திற்கு மேற்பட்ட சுற்றுலா வாகன ஓட்டுனர்கள் கலந்து கொண்டு முழக்கங்களை எழுப்பினர்.
ஊட்டி,
நீலகிரி மாவட்டம் ஊட்டி, கூடலூர், குன்னூர், கோத்தகிரி உள்பட பல்வேறு இடங்களில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுற்றுலா வாகன டிரைவர்கள் உள்ளனர்.
இந்த நிலையில் மாவட்ட சுற்றுலா வாகன டிரைவர்கள் சார்பில் மாவட்டம் முழுவதும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று ஒருநாள் அடையாள வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்றது.
ஊட்டி ஏ.டி.சி. திடலில் நடந்த போராட்டத்திற்கு தலைவர் கோவர்த்தனன் தலைமை தாங்கினார். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறியதாவது:-
அனுமதிக்கப்பட்ட தூரத்தை விட அதிக தூரம் பயணித்துக் கொண்டிருக்கும் ஆட்டோக்களை தடுத்து நிறுத்த வேண்டும்.
தனியார் டாக்சிகள் சமவெளி பகுதியில் இருந்து சுற்றுலாப் பயணிகளை அழைத்து வந்து பேக்கேஜ் என்ற முறையில் அனைத்து சுற்றுலா தளங்களுக்கும் அழைத்து செல்வதால் சுற்றுலா வாகன ஓட்டுனர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. இதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சொந்த பயன்பாட்டிற்கு வாங்கப்பட்ட நான்கு சக்கரம் மற்றும் இரு சக்கர வாகனங்கள் வாடகைக்கு விடுபவர்கள் மீது சட்டபூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சுற்றுலா வாகனங்களுக்கு ஆன்லைன் மூலம் அபராதம் விதிப்பதை தவிர்க்க வேண்டும் சுற்றுலா வாகன டிரைவர்கள் பல்வேறு மனுக்களை ஊட்டி வட்டார போக்குவரத்து அலுவலரிடம் வழங்கிய போதிலும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.
இதனை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டோம். எங்களது கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளோம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
இதில் ஆயிரத்திற்கு மேற்பட்ட சுற்றுலா வாகன ஓட்டுனர்கள் கலந்து கொண்டு முழக்கங்களை எழுப்பினர். சுற்றுலா வாகன டிரைவர்கள் போராட்டத்தால் வாகனங்கள் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டன. இதனால் சுற்றுலா தலங்களுக்கு செல்ல முடியாமல் சுற்றுலா பயணிகள் சிரமம் அடைந்தனர்.
- மாவட்ட செயலாளர் கப்பச்சி வினோத் தொடங்கி வைத்தார்.
- நீலகிரி மாவட்டத்தில் இருந்து 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அதிமுக.,வினர் மதுரை மாநாட்டில் பஙகேற்பர் என்று தெரிவித்தனர்.
ஊட்டி,
ஊட்டியில் அ.தி.மு.க மாநாடு அழைப்பிதழ் ஸ்டிக்கர் ஒட்டும் நிகழ்ச்சி மற்றும் ஆட்டோ பேரணி நடந்தது. இதனை மாவட்ட செயலாளர் கப்பச்சி வினோத் தொடங்கி வைத்தார்.
அப்போது பேரணியில் சென்ற ஆட்டோக்களில் ஊட்டி நகர செயலாளர் சண்முகம் ஏற்பாட்டின்பேரில் அ.தி.மு.க மாநாட்டு ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டன.
ஆட்டோ பேரணியில் பங்கேற்ற நிர்வாகிகள், நீலகிரி மாவட்டத்தில் இருந்து 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அதிமுக.,வினர் மதுரை மாநாட்டில் பஙகேற்பர் என்று தெரிவித்தனர். இதில் முன்னாள் அவைத் தலைவர் தேனாடு லட்சுமணன், பொதுக்குழு உறுப்பினர் தேவராஜ் , பாசறை மாவட்ட செயலாளர் அக்கீம் பாபு, நகர இளைஞர் அணி செயலாளர் விசாந்த், மாவட்ட தொழிற்சங்க செயலாளர் ராஜகோபால், எம்ஜிஆர் நகர் மன்ற தலைவர் ஜெயராமன், நகர மன்ற உறுப்பினர் லயோக்குமார் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
- பொதுமக்கள் தங்கள் வீடுகளில் இருந்தவாறு செல்போனில் எடுத்த வீடிேயா சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது.
- வனத்துறையினா் யானையை அடா்ந்த வனப்பகுதிக்குள் விரட்டினா்.
ஊட்டி,
நீலகிரி மாவட்ட வனப்பகுதியில் சிறுத்தை, புலி, யானை, மான், காட்டெருமை, கரடி உள்பட பல்வேறு வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன.
இந்த வனவிலங்குகள் அவ்வப்போது, உணவு மற்றும் தண்ணீர் தேடி வனத்தை விட்டு வெளியேறுவது வாடிக்கையாக நடந்து வருகிறது. வனத்தை விட்டு வெளியேறும் வனவிலங்குகள் வனத்தையொட்டி கிராம பகுதிகளுக்குள் நுழைந்து அங்குள்ள பொருட்களை சேதப்படுத்தி வருகிறது. தொடர்ந்து இதுபோன்று யானைகள் குடியிருப்புக்குள் சுற்றி திரிவதால் பொதுமக்கள் அச்சத்திலேயே உள்ளனர்.
கூடலூர் அருகே தேவா்சோலை பஜாரை அடுத்து தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளிக்கு பின்புறம் வனப்பகுதி உள்ளது. சம்பவத்தன்று இந்த பள்ளியின் அருகே 2 காட்டு யானைகள் வந்தன.
சிறிது நேரம் 2 யானைகளும் அங்குமிங்கும் சுற்றி கொண்டிருந்தன. திடீரென 2 யானைகளும் நேருக்கு நேர் நின்று கொண்டு ஒன்றுடன் ஒன்று ஆக்ரோஷமாக மோதிக்கொண்டன. தொடர்ந்து சில மணி நேரங்கள் இந்த சண்டை நீடித்தது.
இதனை அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் தங்கள் வீடுகளில் இருந்தவாறு செல்போனில் வீடியோ எடுத்தனர். தற்போது இந்த காட்சிகள் சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது.
ஓவேலி பேரூராட்சிக்குட்பட்ட பெரியசூண்டி பகுதிக்குள் சம்பவத்தன்று இரவு ஒற்றை காட்டு யானை நுழைந்தது. தொடா்ந்து, அப்பகுதியில் உலவிய யானை அங்கிருந்த ஆறுமுகம் என்பவரது வீட்டை இடித்து சேதப்படுத்தியது.
இதில், வீட்டுக்குள் அமா்ந்து இரவு உணவு அருந்திக் கொண்டிருந்த ஆறுமுகம், குடும்பத்தாா் அலறியடித்து வெளியே ஓடி வந்தனா். யானை நிற்பதை பார்த்ததும் அதிர்ச்சியான அவர்கள் அங்கிருந்து சென்று அருகே உள்ள பகுதிகளில் தஞ்சம் அடைந்தனர். இதனைப் பாா்த்த அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்குத் தகவல் தெரிவித்தனா்.
சம்பவ இடத்துக்கு வந்த வனத்துறையினா் யானையை அடா்ந்த வனப்பகுதிக்குள் விரட்டினா். இந்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.
- சுதந்திர தின விழா ஆகஸ்டு 15 அன்று ஊட்டி அரசுக் கலைகல்லூரி விளையாட்டு மைதானத்தில் நடைபெற உள்ளது.
- 108 அவசர கால வாகனம் விழா நடைபெறும் இடத்தில் நிறுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஊட்டி,
நீலகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், சுதந்திர தின விழாவிற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம் கலெக்டர் அம்ரித் தலைமையில் நடைபெற்றது.
பின்னர் கலெக்டர் அம்ரித் தெரிவித்ததாவது:-
நீலகிரி மாவட்டத்தில் சுதந்திர தின விழா ஆகஸ்டு 15 அன்று ஊட்டி அரசுக் கலைகல்லூரி விளையாட்டு மைதானத்தில் நடைபெற உள்ளது. மேலும் காவல்துறையினர் சுதந்திர தின விழா நடைபெறவுள்ள விளையாட்டு மைதானத்தில் அணி வகுப்பு நடத்துதல், பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளுதல், பொதுப்பணித்துறையினர் சார்பில் மேடை அலங்காரப் பணிகள் மேற்கொள்ளவும், தீயணைப்பு துறையினர் மைதானத்தில் பாதுகாப்புக்காக தீயணைப்பு வாகனத்தை நிறுத்தவும், தோட்டக்கலையின் மூலம் விழா மேடையில் பூந்தொட்டிகள் அலங்காரம் அமைக்கவும், நகராட்சித்துறையின் சார்பில் விழா நடைபெறும் இடத்தில் சுத்தம் செய்தல், குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மேற்கொள்ளவும், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் சார்பில் 108 அவசர கால வாகனம் விழா நடைபெறும் இடத்தில் நிறுத்தவும், பள்ளிக்கல்வித்துறை சார்பில் பள்ளி மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் மற்றும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் பழங்குடியினர் நடன நிகழ்ச்சி நடத்தப்பட வேண்டும்.
எனவே, அனைத்து அலுவலர்களும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணிகளை சிறப்பாக மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். இக்கூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரபாகர், மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்தி பிரியதர்சினி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் உமாமகேஸ்வரி, கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் தனபிரியா (பொது), மணிகண்டன்(வளர்ச்சி), கண்ணன்(கணக்குகள்), தோட்டக்கலைத்துறை இணை இயக்குநர் ஷிபிலா மேரி, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சௌந்தர்ராஜன், கோட்டாட்சியர்கள் துரைசாமி (ஊட்டி), பூஷண குமார் (குன்னூர்), முகம்மது குது ரதுல்லா(கூடலூர்), மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கீதா, மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் செல்வகுமார், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) சாம்சாந்தகுமார், ஊட்டி நகராட்சி ஆணையாளர் ஏகராஜ், வட்டார போக்குவரத்து அலுவலர் தியாகராஜன், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் (பொ) ஷோபனா உட்பட அரசுத்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.






