ஊட்டியில் அ.தி.மு.க மாநாடு விழிப்புணர்வு ஆட்டோ பேரணி-ஸ்டிக்கர் ஒட்டும் நிகழ்ச்சி

மாவட்ட செயலாளர் கப்பச்சி வினோத் தொடங்கி வைத்தார். நீலகிரி மாவட்டத்தில் இருந்து 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அதிமுக.,வினர் மதுரை மாநாட்டில் பஙகேற்பர் என்று தெரிவித்தனர்.
ஊட்டியில் அ.தி.மு.க மாநாடு விழிப்புணர்வு ஆட்டோ பேரணி-ஸ்டிக்கர் ஒட்டும் நிகழ்ச்சி
Published on

ஊட்டி,

ஊட்டியில் அ.தி.மு.க மாநாடு அழைப்பிதழ் ஸ்டிக்கர் ஒட்டும் நிகழ்ச்சி மற்றும் ஆட்டோ பேரணி நடந்தது. இதனை மாவட்ட செயலாளர் கப்பச்சி வினோத் தொடங்கி வைத்தார்.

அப்போது பேரணியில் சென்ற ஆட்டோக்களில் ஊட்டி நகர செயலாளர் சண்முகம் ஏற்பாட்டின்பேரில் அ.தி.மு.க மாநாட்டு ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டன.

ஆட்டோ பேரணியில் பங்கேற்ற நிர்வாகிகள், நீலகிரி மாவட்டத்தில் இருந்து 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அதிமுக.,வினர் மதுரை மாநாட்டில் பஙகேற்பர் என்று தெரிவித்தனர். இதில் முன்னாள் அவைத் தலைவர் தேனாடு லட்சுமணன், பொதுக்குழு உறுப்பினர் தேவராஜ் , பாசறை மாவட்ட செயலாளர் அக்கீம் பாபு, நகர இளைஞர் அணி செயலாளர் விசாந்த், மாவட்ட தொழிற்சங்க செயலாளர் ராஜகோபால், எம்ஜிஆர் நகர் மன்ற தலைவர் ஜெயராமன், நகர மன்ற உறுப்பினர் லயோக்குமார் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com