search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஊட்டியில் பைன் மரக்காய்களை கொண்டு அலங்கார பொருட்கள்
    X

    ஊட்டியில் பைன் மரக்காய்களை கொண்டு அலங்கார பொருட்கள்

    • சுற்றுலாபயணிகள் வாங்க ஆர்வம் காட்டி வருகிறார்கள்.
    • நீலகிரி மாவட்டத்தில் 4-ல் 3 பங்கு வனப்பகுதிகளை உடையது.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டத்தில் 4-ல் 3 பங்கு வனப்பகுதிகளை உடையது. இயற்கை வளம் செறிந்த மாவட்டம் என்பதால் இங்கு உள்ள பெருபாலான இடங்களில் பல்வேறு அரிய வகை மரங்கள் மற்றும் செடி,கொடிகள் தழைத்து வளர்ந்து அழகாக காட்சியளித்து வருகின்றன.

    ஊட்டியில் எங்கு பார்த்தாலும் மலைத்தொடர்கள், பள்ளத்தாக்குகள், நீர் நிலைகள், சோலைக் காடுகள், புல்வெளிகள், சுற்றுலாத் தலங்கள் என அனைத்து பகுதிகளும் பச்சைப் பசேலென காண்போரை கவர்ந்திழுக்கும்.

    அதிலும் குறிப்பாக ஊட்டியில் பைன் மரங்களை அதிகம் பார்க்க முடியும். இது அடர் பச்சை நிறத்தில் ஊசி போன்ற இலைகளுடன் உயரமாக வளர்ந்து நிற்கும். ஆங்கிலேயர் காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது.

    தேவதாரு என்று அழைக்கப்படும் பைன் மரங்கள், நீலகிரி மாவட்டத்தின் சுற்றுவட்டார பகுதிகளில் அதிகமாக உள்ளன. இது பார்ப்பதற்கு மிகவும் அழகாகக் காணப்படுவ தால், சுற்றுவட்டாரப் பகுதி களில் அதிகமாக நடவு செய்யப்பட்டு உள்ளது. இன்னும் சொல்லப்போ னால் ஊட்டி-கூடலூர் சாலையில் பைன் பாரஸ்ட் என்ற பெயரில் சுற்றுலாத் தலமே உள்ளது.

    பைன் மரங்களில் இருந்து கீழே விழும் காய்கள் அழகாக காட்சி அளிக்கும். எனவே இதனை அங்கு வசிக்கும் உள்ளூர்வா சிகள் சேகரித்து, அழகிய அலங்கார பொருட்களாக மாற்றி வியாபாரம் செய்து வருகினறனர்.

    அப்போது அவர்கள் பைன் மர காய்களுக்கு அழகான வடிவம் கொடுத்து மட்டுமின்றி பல்வேறு வர்ணங்கள் பூசி தத்ரூபமாக அலங்கார பொருட்களாக மாற்றுகின்றனர். இது ஊட்டியின் பல்வேறு பகுதிகளில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இவை சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்து உள்ளது. எனவே அவர்கள் பைன் மரக்காய் அலங்கார பொருட்களை ஆர்வத்துடன் விரும்பி உற்சாகமாக வாங்கி செல்கின்றனர்

    Next Story
    ×