என் மலர்
நீங்கள் தேடியது "ஊட்டி மிஷினரி ஹில் சாலை"
- பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்து வருகிறார்கள்.
- விரைவில் சீர்செய்யும் பணிகள் தொடங்கும்.
ஊட்டி,
ஊட்டி நகராட்சிக்கு உட்பட்ட புதிய 16-வது வார்டு பகுதியில், மிஷனரிஹில் பகுதிக்கு செல்லும் ரோட்டில் உள்ள சாலையோரங்களில் நடக்கவே முடியாத அளவிற்கு முட்புதர்கள் வளர்ந்து நிறைந்து உள்ளன. இது அந்த வழியாக நடந்து செல்லும் பொதுமக்களுககு இன்னலை ஏற்படுத்தி வருகிறது.
அந்த பகுதியில் வசிக்கும் மக்கள், நகராட்சிக்கு பலமுறை புகார் தெரி வித்தும், இதுவரை நட வடிக்கை எடுக்கப்ப டவில்லை. எனவே பொது மக்கள் விரக்தியின் விளிம்பி ல் உள்ளனர்.
இதுகுறித்து ஊட்டி 16-வது வார்டு நகர மன்ற உறுப்பினர் கூறுகையில், ஊட்டி நகராட்சியில் ஆட்கள் பற்றாகுறை உள்ளது அங்கு விரைவில் சீர்செய்யும் பணிகள் தொடங்கும் என்று தெரிவித்து உள்ளார்.
இதனால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்
ஊட்டி நகராட்சி க்குட்பட்ட பெரும்பாலான சாலைகள் சீரமைக்க ப்படாமல் உள்ளது. இத னால் அங்கு பல இடங்க ளில் பள்ளங்கள் ஏற்பட்டு, பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. இதுதவிர சாலையோ ரங்களில் முட்புதர்கள் அடர்ந்து வளர்ந்து உள்ளன.
சாலையோரங்களில் மழை நீர் வடிகால்கள் சீரமைக்கப்படவில்லை. எனவே மழைக்காலங்களில் சேறும் சகதியுமாக ரோ ட்டில் வெள்ளம் பெருக்கெ டுத்து ஓடுகிறது. எனவே நகராட்சி அதிகாரிகள் இந்த விஷயத்தில் உடன டியாக தலையிட்டு நடவ டிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.






