என் மலர்
நீலகிரி
- சிறுத்தை பூனை ஒன்று வாகனம் மோதியதில் பலத்த காயமடைந்து இறந்து கிடந்தது.
- வனத்துறையினர் சிறுத்தைப் பூனையின் உடலை மீட்டுச் சென்றனர்.
கோத்தகிரி,
நீலகிரி கோத்தகிரி அருகே உள்ள கோடநாடு அண்ணாநகர் செல்லும் சாலையில் நேற்று காலை சிறுத்தை பூனை ஒன்று வாகனம் மோதியதில் பலத்த காயமடைந்து இறந்து கிடந்தது. இதைக் கண்ட அப்பகுதி மக்கள் கோத்தகிரி வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறையினர் சிறுத்தைப் பூனையின் உடலை மீட்டுச் சென்றனர்.
பின்னர் கால்நடை மருத்துவர் உடற்கூறு ஆய்வு செய்த பின் சிறுத்தை பூனையின் உடல் புதைக்கப்பட்டது. இது குறித்து வனத்துறையினர் தெரிவிக்கையில் சிறுத்தைப் பூனை சாலையைக் கடக்க முயற்சி செய்த போது, அடையாளம் தெரியாத வாகனம் அதன் மீது மோதியதில் பலத்த காயமடைந்து சிறுத்தை பூனை உயிரிழந்துள்ளது. இரவு நேரத்தில் வாகனங்களை இயக்கும் போது வனவிலங்குகள் சாலையைக் கடக்கின்றனாவா எனப் பார்த்து எச்சரிக்கையுடன் வாகனங்களை இயக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.
- நினைவு தூண் முழுவதும் தேசிய கொடியை கொண்டு முழுவதுமாக அலங்கரிக்கப்பட்டுள்ளது.
- சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் தங்கள் செல்போனிலும் புகைப்படம் எடுத்து செல்கின்றனர்.
ஊட்டி,
இன்று நாடு முழுவதும் சுதந்திர தினம் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. சுதந்திர தினத்தையொட்டி பல்வேறு நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டு வருகிறது.
நீலகிரி மாவட்டம் குன்னூரில் உள்ள ராணுவ பயிற்சி கல்லூரி அருகே போரில் உயிரிழந்த ராணுவ வீரர்களின் நினைவாக போர் நினைவு தூண் அமைக்கப்பட்டுள்ளது.
சுதந்திர தினத்தையொட்டி அந்த நினைவு தூண் முழுவதும் தேசிய கொடியை கொண்டு முழுவதுமாக அலங்கரிக்கப்பட்டுள்ளது. இதனை அந்த வழியாக சென்ற சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் உள்பட அனைவரும் பார்த்து ரசித்து, அதனை தங்கள் செல்போனிலும் புகைப்படம் எடுத்து செல்கின்றனர்.
அரவேணு,
கோத்தகிரி அருகே கொட்டநள்ளி கிராமத்தில் இருந்து சுண்டட்டிக்கு சாலை வசதி கேட்டு அப்பகுதி ெபாதுமக்கள் சார்பில் தி.மு.க மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் சுண்டட்டி முருகன், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கோரிக்கை மனு அனுப்பினார்.
அந்த மனு மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டதின் பேரில், மாவட்ட ஊராட்சித்தலைவர் பொன்தோஸ் பரிந்துரை செய்து கொட்டநள்ளி கிராமத்தில் இருந்து சுண்டட்டி பகுதிக்கு ரூ.30 லட்சம் மதிப்பிலான சாலை அமைப்பதற்கு பூமி பூஜை நிகழ்ச்சி நடந்தது.
இதில் கொடநாடு பஞ்சாயத்து தலைவர் சுப்பிகாரி, நெடுகுளா பஞ்சாயத்து தலைவர் சுகுணா சிவா மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
- மலை ரெயிலிலும் பயணித்து சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
- சிறப்பு மலை ரெயில் வருகிற 27-ந் தேதி வரை இயக்கப்பட உள்ளது.
ஊட்டி,
மலைகளின் அரசியான நீலகிரி மாவட்டம் இயற்கை காட்சிகள் நிறைந்த வனப்ப குதிகள் மற்றும் எண்ணற்ற சுற்றுலா தலங்களை உள்ளடக்கிய பகுதியாகும்.
இங்கு நிலவும் சுற்றுலா தலங்களை பார்க்கவும், இயற்கை அழகினை ரசிக்க வும் தினந்தோறும் நாட்டின் பல்வேறு பகுதிகள் மட்டுமி ன்றி வெளிநாடு களில் இருந்தும் சுற்றுலா பயணி கள் குவிந்து வருகின்றனர்.
சுற்றுலா பயணிகள் சுற்றுலா தலங்களை கண்டு ரசித்து, இங்கு நிலவக்கூடிய சீதோஷ்ண நிலையையும் அனுபவித்து செல்கிறா ர்கள்.
தற்போது சுதந்திர தின தொடர் விடுமுறை விடப்ப ட்டுள்ளது. இதன் காரண மாக கடந்த சனிக்கிழமை முதலே நீலகிரி மாவட்டத்தி ற்கு சுற்றுலா பயணிகள் வருகை கணிசமாக அதிகரி த்துள்ளது. நேற்று ஞாயிற்று க்கிழமை என்பதால் மாவ ட்டத்தில் உள்ள அனைத்து சுற்றுலா தலங்களிலும் கூட்டம் அலைமோதியது.
ஊட்டி தாவரவியல் பூங்காவிற்கு வந்திருந்த சுற்றுலா பயணிகள், அங்கு பூந்தொட்டிகளில் பூத்து குலுங்கிய மலர்களை பார்வையிட்டு கண்டு ரசித்தனர். மேலும் அதன் முன்பு நின்று புகைப்படமும் எடுத்து கொண்டனர்.
பின்னர் குடும்பத்தி னருடன் தாவரவியல் பூங்கா புல்வெளி தரையில் அமர்ந்து பேசி மகிழ்ந்தனர். இதேபோல் ஊட்டி படகு இல்லம், தொட்டபெட்டா மலைசிகரம், ரோஜா பூங்கா, குன்னூர் சிமஸ் பூங்கா உள்பட மாவட்டத்தில் உள்ள அனைத்து சுற்றுலா தலங்களிலும் மக்கள் கூட்டமாகவே காணப்ப ட்டது.
ஊட்டிக்கு வரும் சுற்று லா பயணிகள் அனைவருமே மலைரெயிலில் பயணிக்க விரும்புவார்கள். வனத்தின் நடுவே வரும் ரெயிலில், அங்குள்ள இயற்கை காட்சிகள், நீர்வீழ்ச்சிகள், நீருற்றுகள், வனவிலங்குகள் போன்றவற்றை ரெயிலில் இருந்தபடியே பார்த்து செல்லலாம் என்பதால் பெரும்பாலானவர்கள் அந்த ரெயிலிலேயே பயணி க்க விரும்புவர்.
நேற்று நீலகிரிக்கு வந்திருந்த சுற்றுலா பயணி கள் பெரும்பா லானோர் மலை ரெயிலிலேயே பயணித்தனர். சுற்றுலா பயணிகள் வசதிக்காக சனி மற்றும் ஞாயிற்றுக்கிழ மைகளில் சிறப்பு மலை ரெயிலும் இயக்கப்படுகிறது.
வருகிற 27-ந் தேதி வரை இந்த ரெயில் இயக்கப்பட உள்ளது. நேற்று சுற்றுலா வந்தவர்களில் பெரும்பா லனோர் ரெயிலிலேயே பயணித்து நீலகிரிக்கு சென்றனர். அப்போது அவ ர்கள் பல்வேறு இயற்கை காட்சிகளை ரசித்தபடி பயணித்தனர். மேலும் சிறப்பு மலைரெயில் முன்பு நின்று புகைப்படமும் எடுத்து கொண்டனர்.
- கால்நடைகளால் மக்கள் மிகுந்த சிரமம் அடைகிறார்கள்.
- கோத்திகிரி பஸ் நிலைய பகுதிகளில் சுற்றி திரியும் மாடுகளையும் பிடிக்க வேண்டும்.
அரவேணு,
நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் அண்ணா பஸ் நிலையம் அமைந்துள்ளது.
இந்த பஸ் நிலையத்தில் மேட்டுப்பாளையம், ஊட்டி, குன்னூர் மற்றும் கோத்தகிரி சுற்றுவட்டாரங்களில் உள்ள கிராம பகுதிகளில் இருந்து பஸ்கள் இயக்கப்ப ட்டு வருகின்றன.
ஒரு நாளைக்கு 100க்கும் மேற்பட்ட பஸ்கள் இந்த பஸ் நிலையத்தில் இருந்து செல்கிறது. இந்த பஸ் நிலையத்தை கோத்தகிரி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
இப்படி அனைத்து தரப்பு மக்களும் பயன்படுத்தி வரும் இந்த பஸ் நிலையம் அண்மைக்காலமாக கால்நடைகளின் கூடாரமாக மாறி வருகிறது. பஸ் நிலைய பகுதிகளில் சுற்றி திரியும் ஆடு, மாடுகள் சாலைகளில் கிடக்கும் உணவுகளை தின்று விட்டு, நேராக பயணிகள் காத்திருக்கும் பகுதியில் வந்து ஆங்காங்கே படுத்து ஓய்வெடுத்து வருகின்றன.
மாடுகள் படுத்து இருப்பதால் மக்கள் அந்த இடத்தை விட்டு சற்று தொலைவிலேயே அமர்ந்து இருக்கின்றனர்.
மேலும் சில மாடுகள் பயணிகள் செல்ல முடியாத அளவுக்கு நடுவழியிலும் ஓய்வெடுக்கின்றன. இதனால் மக்கள் மிகுந்த சிரமத்திற்கு மத்தியிலேயே பஸ் நிலையத்தை பயன்படுத்தி வருகின்றனர். சில நேரங்களில் அசம்பாவித சம்பவங்களும் ஏற்பட்டு வருகிறது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு கூட சென்னையில் தாயுடன் சென்ற, மாணவியை மாடு ஒன்று மூட்டி தூக்கி வீசிய சம்பவம் நிகழ்ந்தது. இந்த பஸ் நிலையத்திற்கு அதிகளவில் மாணவ, மாணவிகள் வந்து செல்கிறார்கள்.
எனவே அதுபோன்ற சம்பவங்கள் ஏதும் நடப்பதற்கு முன்பாக கோத்திகிரி பஸ் நிலைய பகுதிகளில் சுற்றி திரியும் மாடுகளையும் பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
- சுதந்திர தின விழாவினை முன்னிட்டு நீலகிரியில் ஒட்டுமொத்த சுகாதார பணிகள் மேற்கொள்ளப்பட்டது
- உள்ளாட்சி அமைப்புகளில் பணிபுரிபவர்கள் உள்பட மொத்தம் 4716 நபர்கள் கலந்து கொண்டனர்.
ஊட்டி,
நீலகிரி மாவட்டத்தில் உள்ள 4 நகராட்சிகள், 11 பேரூராட்சிகள் மற்றும் 4 ஊராட்சி ஒன்றிய பகுதிகள் உள்ளன.
இந்த பகுதிகளில் 75-வது சுதந்திர தின நிறைவு விழாவினை முன்னிட்டு எனது தாய்மண் எனது தேசம் என்ற நிகழ்வின் ஒருபகுதியாக ஒட்டுமொத்த சுகாதார பணிகள் மேற்கொள்ளப்பட்டது.
இச்சுகாதார பணியானது நீலகிரி மாவட்டத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகள் உள்ளிட்ட முக்கிய சாலைகளிலும், நீர்நிலை பகுதிகளிலும், வனப்பகுதிகளிலும், சோதனை சாவடிக்கு ஒட்டிய பகுதிகளிலும் மற்றும் இதர முக்கியமான பகுதிகளிலும் மேற்கொள்ளப்பட்டது.
தூய்மை பணியில் நீலகிரி மாவட்டத்தில் அனைத்து உள்ளாட்சி அமைப்புகளில் பணிபுரியும் 1178 தூய்மை பணியாளர்கள் , 1607 மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள், 98 அரசு சாரா தொண்டு நிறுவனத்தினர், 252 மாணவர்களும், 1581 அரசு அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், தன்னார்வலர்கள் என மொத்தம் 4716 நபர்கள் கலந்து கொண்டனர்.
தூய்மை பணியின் போது 1152 கிலோ பிளாஸ்டிக் குப்பைகள் மற்றும் 7 ஆயிரத்து 898 கிலோ இதர குப்பைகள் என மொத்தம் 9 ஆயிரத்து 50 கிலோ குப்பைகள் சேகரிக்கப்பட்டு தூய்மை ப்படுத்தப்பட்டன.
தூய்மை பணியின் போது நீலகிரி மாவட்ட த்திற்கு வருகை தந்த சுற்று லா பயணிகள் மற்றும் உள்ளுர் பொது மக்களிடையே பிளாஸ்டிக் ஒழிப்பு தொடர்பான விழி ப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு நீலகிரியை பிளாஸ்டிக் இல்லாத மாவட்டமாக மாற்றுவதற்கு அனைத்து தரப்பினரும் முழு ஒத்து ைழப்பு அளிக்க வேண்டும் என கேட்டு கொள்ள ப்பட்டது."
- கலைஞர் நூற்றாண்டு விழா நினைவுத்தூண் திறந்து வைக்கப்பட்டது.
- எதிர்கட்சி உறுப்பினர்களை பேசவிடாமல் அவர்களது ஒலிபெருக்கி இணைப்பை துண்டித்து விட்டனர்.
ஊட்டி,
நீலகிரி மாவட்டம் ஊட்டி காந்தல் பகுதியில் கலைஞர் நூற்றாண்டு விழா நினைவுத்தூண் திறப்பு விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் விழா நடந்தது. விழாவுக்கு ஊட்டி நகர செயலாளர் ஜார்ஜ் தலைமை தாங்கினார்.
விழாவில் தி.மு.க துணை பொதுச்செயலாளரும், நீலகிரி எம்.பியுமான ஆ.ராசா கலந்து கொண்டு கலைஞர் நூற்றாண்டு விழா நினைவுத்தூணை திறந்து வைத்து, கட்சி கொடியேற்றி வைத்தார். அதனை தொடர்ந்து.பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளும் வழங்கினார்.
இதேபோல் கோத்தகிரி ஒன்றிய தி.மு.க சார்பில் ஒன்றிய செயலாளர் நெல்லை கண்ணன் தலைமையில் கோத்தகிரி ஜக்கனாரை பள்ளியில் நடந்த விழாவிலும் பங்கேற்று, 500 மலைவாழ் மக்களுக்கும் நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
விழாவில் ஆ.ராசா எம்.பி. பேசியதாவது:-
பாராளுமன்றத்தில் மணிப்பூர் விவகாரம் குறித்து எதிர்க்கட்சிகள் பேசியபோது, எதிர்கட்சி உறுப்பினர்களை பேசவிடாமல் அவர்களது ஒலிபெருக்கி இணைப்பை துண்டித்து விட்டனர்.
அந்தளவுக்கு பா.ஜ.கவினர் ஜனநாயகத்திற்கு எதிராக நடந்து கொள்கின்றனர்.பா.ஜ.க ஆட்சியில் மதவெறி உச்ச கட்டத்தை எட்டியுள்ளது. அவர்களை வீட்டிற்கு அனுப்ப வேண்டிய நேரம் வந்து விட்டது.
தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, ஆந்திரா போன்ற மாநிலங்களில் திராவிட மொழிகளைக் கொண்ட ஆட்சி நடைபெறுகிறது. திராவிடம் என்பது மதத்திற்கும், சாதிக்கும் எதிரானது.
வருகிற பாராளுமன்ற தேர்தலில் மோடியை வீட்டிற்கு அனுப்ப இந்தியர்களாகிய நாம் ஒன்றிணைய வேண்டும்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இதில் மாவட்ட செயலாளர் முபாரக், சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன், மாவட்ட துணை செயலாளர் ரவிகுமார், மாவட்ட பொருளாளர் நாசர் அலி, தலைமை செயற்குழு உறுப்பினர் முஸ்தபா, பொதுக்குழு உறுப்பினர் சதக்கத்துல்லா, ஊட்டி நகரமன்ற தலைவர் வாணீஸ்வரி, ஊட்டி நகரமன்ற உறுப்பினர்கள் தம்பி இஸ்மாயில், எல்கில் ரவி, செல்வராஜ், ரீட்டா மேரி, பிரியா வினோதினி, மேரி பிளோரீனா, திவ்யா, உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- கூட்டத்திற்கு துணை தலைவர் செல்வராஜ் தலைமை தாங்கினார்.
- ராம்சந்த் முதல் சக்திமலை செல்லும் சாலை மிகவும் குறுகலாக இருப்பதால் அந்த சாலையில் வாகனங்கள் நிறுத்த தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்க செய்யவேண்டும்
அரவேணு,
நீலகிரி கோத்தகிரி ப்ளுமவுண்டன் நுகர்வோர் பாதுகாப்பு சங்கத்தின் மாதாந்திர செயற்குழு கூட்டம் சங்க அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்திற்கு துணை தலைவர் செல்வராஜ் தலைமை தாங்கினார்.
பொருளாளர் மரியம்மா, துணை தலைவர் ஜெயந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.கூட்டத்தில் செயலாளர் முகமது சலீம் அமைப்பின் கடந்த மாத செயல்பாடுகள் மற்றும் வரும் காலங்களில் அமைப்பின் செயல்பாடுகள் குறித்து கூறினார்.
தொடர்ந்து கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
ப்ளுமவுண்டன் நுகர்வோர் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் மாணவர்களுக்கு ஒரு நாள் விழிப்புணர்வு வகுப்பு நடத்துவது.
வன விலங்குகள் ஆபத்து இருப்பதால் நகரின் முக்கிய பகுதிகளில் புதர் செடிகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வலியுறுத்துவது.
கோத்தகிரி பகுதியில் உள்ள குடிநீர் தரத்தை அறிந்து கொள்ள ஒரு நாள் இலவச குடிநீர் பரிசோதனை முகாம் நடத்த அதிகாரிகளிடம் வலியுறுத்துவது, ராம்சந்த் முதல் சக்திமலை செல்லும் சாலை மிகவும் குறுகலாக இருப்பதால் அந்த சாலையில் வாகனங்கள் நிறுத்த தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்க செய்யவேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் ஆலோசகர் பிரவின், செயற்குழு உறுப்பினர்கள் தெரசா, பியூலா, சங்கீதா, ரோஸ்லின், ஷாஜகான், பிரேம் செபாஸ்டியன், விபின் குமார், சுரேஸ் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். முடிவில் கூடுதல் செயலாளர் பீட்டர் அனைவருக்கும் நன்றி கூறினார்.
- சந்தேகம் அடைந்த அச்சரா சம்பவம் குறித்து தனது தந்தைக்கு தகவல் கொடுத்தார்.
- குழந்தையை ஊட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு சென்றனர்.
ஊட்டி:
நீலகிரி மாவட்டம் பந்தலூர் இந்திரா நகரை சேர்ந்தவர் ரவி (வயது48). டாஸ்மாக் ஊழியர். இவரது மகள் அச்சரா (19). கல்லூரி மாணவி.
சம்பவத்தன்று ரவி வழக்கம் போல் வேலைக்கு சென்றுவிட்டார். வீட்டில் அச்சரா மட்டும் தனியாக இருந்தார்.
அப்போது பர்தா அணிந்தபடி கையில் குழந்தையுடன் பெண் ஒருவர் திடீரென அச்சராவின் வீட்டிற்குள் வந்தார். உடனே அச்சரா நீங்கள் யார்? என்ன வேண்டும் என கேட்டார்.
அதற்கு அவர், எனக்கு 2 குழந்தைகள் உள்ளன. ஒரு குழந்தைக்கு உடல் நலம் சரியில்லை. அதனால் குழந்தையை பஸ் நிலையத்தில் படுக்க வைத்து விட்டு வந்துள்ளேன்.
இந்த குழந்தையை நீங்கள் கொஞ்சம் நேரம் வைத்திருந்தால், உடல் நலம் பாதிக்கப்பட்ட எனது மற்றொரு குழந்தையை ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றுவிட்டு வருவேன்.
பின்னர் வந்து குழந்தையை பெற்றுக்கொள்கிறேன் என தெரிவித்தார். இதை உண்மை என நம்பி அச்சராவும், குழந்தையை கொடுங்கள் நீங்கள் வரும் வரை நான் பார்த்துக்கொள்கிறேன் என்றார். இதையடுத்து இளம்பெண் அச்சராவிடம் குழந்தையை கொடுத்து விட்டு அங்கிருந்து சென்றுவிட்டார்.
நீண்ட நேரமாகியும் இளம்பெண் திரும்பி வரவே இல்லை. இதனால் சந்தேகம் அடைந்த அச்சரா சம்பவம் குறித்து தனது தந்தைக்கு தகவல் கொடுத்தார். அவரும் வந்து மகளிடம் விசாரித்து விட்டு, அவர் கூறிய தகவல் படி பஸ் நிலையம் முழுவதும் அந்த பெண்ணை தேடி பார்த்தார்.
ஆனால் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இதுகுறித்து ரவி தேவாலா போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்து, விசாரணை நடத்தினர்.
அப்போது இளம்பெண் ஒப்படைத்தது பிறந்து ஒரு வாரமே ஆன ஆண்குழந்தை என்பது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் தனியாக இருந்த கல்லூரி மாணவியிடம் குழந்தையை கொடுத்த சென்ற பெண் யார்? எதற்காக குழந்தையை கொடுத்தார்? அதற்கான காரணம் என்ன? என்பது குறித்து விசாரிக்கின்றனர்.
மேலும் அந்தபகுதிகளில் சி.சி.டி.வி கேமிராக்கள் இருக்கிறதா என்பதை பார்த்து, அதில் ஏதாவது தகவல்கள் கிடைக்கிறதா என்பதையும் சேகரித்து வருகிறன்றனர்.
இதற்கிடையே சைல்டு லைன் அமைப்பிற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் அங்கு வந்து, குழந்தையை மீட்டு பந்தலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று பரிசோதனை செய்தனர்.
தொடர்ந்து குழந்தையை ஊட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு சென்றனர். இந்த சம்பவம் பந்தலூர் சுற்றுவட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- கூடலூர் அருகே முதுமலை புலிகள் காப்பகத்தில் உலக யானைகள் தினம் கொண்டாடப்பட்டது.
- வனத்துறை சார்பில் மசினகுடியில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
ஊட்டி,
நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே முதுமலை புலிகள் காப்பகத்தில் உலக யானைகள் தினம் கொண்டாடப்பட்டது.
தெப்பக்காடு யானைகள் முகாமில் 28 வளர்ப்பு யானைகள் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டு, ஊட்டச்சத்து உணவுகள் வழங்கப்பட்டது.
முன்னதாக முகாமில் யானைகளின் முக்கியத்துவம் குறித்து அறிவதற்காக மசினகுடி, கார்குடி பள்ளிக்கூட மாணவ-மாணவிகள் வரவழைக்கப்பட்டனர்.அதன் பிறகு அங்கு வந்திருந்த மாணவர்களிடம் யானையின் முக்கியத்துவம், யானைகளால் மனிதர்களுக்கு உள்ள பயன்கள், மேலும் யானைகளால் காடுகள் வளர்ச்சி அடை வது, பல்வேறு புதிய தாவரங்கள் உருவாவது குறித்து வனச்சரகர்கள் தயானந்தன், ஜான் பீட்டர் ஆகியோர் எடுத்து ரைத்தனர்.
இதைத்தொடர்ந்து அங்கு தயார் செய்யப்பட்டிருந்த சிறப்பு உணவுகளான ராகி, கேழ்வரகு, அரிசி, தாது உப்பு, பழங்கள், தேங்காய், கரும்பு, போன்ற சிறப்பு உணவுகள் வழங்கி யானைகள் தினம் கொண்டாடப்பட்டது.
பின்னர் தமிழக-கர்நாடகா எல்லையான கக்க நல்லாவில் சுற்றுலா பயணிகளுக்கு யானைகளை பாதுகாப்பது குறித்து மாணவர்கள், வனத்துறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். அப்போது யானைகள் உருவம் கொண்ட முகமூடியை அணிந்து இருந்தனர்.
இதேபோல் வனத்துறை சார்பில் மசினகுடியில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பின்னர் மாணவர்களிடம் வனத்துறையினர் பேசும்போது, யானைகளை பாதுகாப்பது வனப்பகுதியை பாதுகாப்பதாகும்.
மனிதர்கள் பட்டாசு வெடித்தல், விரட்டி அடித்தல் போன்ற நிகழ்வுகளால் யானைக்கு கோபம் வந்து மனித-வனவிலங்கு மோதல் ஏற்படுகிறது. யானைகளால் எந்த தொந்தரவும் வராது என்றனர்.
- துணியை கொடிகம்பியில் போடும்போது எதிர்பாரத விதமாக அர்ஜூன் பிரபுவை மின்சாரம் தாக்கியது.
- கோத்தகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
அரவேணு,
கோத்தகிரி அருகே உள்ள குமரன் நகரை சேர்ந்தவர் வேலு. இவரது மனைவி பரமேஸ்வரி. இவர்களுக்கு அர்ஜூன் பிரபு(24) என்ற மகன் உள்ளார்.
அர்ஜூன்பிரபு கூலிவேலைக்கு சென்று வந்தார். அர்ஜூன் பிரபுவுக்கு கடந்த மாதம் தான் திருமணம் நடைபெற்றது. இதையடுத்து அவர், தனது மனைவி மற்றும் தாயுடன் குமரன் நகரில் வசித்து வந்தார்.
அர்ஜூன் பிரபு நேற்று வேலைக்கு சென்று விட்டு, வீட்டிற்கு வந்தார். பின்னர் குளித்து விட்டு துணியை அங்குள்ள கொடிகம்பியில் போட்டார்.அப்போது எதிர்பாரத விதமாக அவரை மின்சாரம் தாக்கியது.
இதில் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து கோத்தகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
- மாரியம்மன் கோவில் பின்புறம் ஒரு பஜனை சபை செயல்பட்டு வருகிறது.
- பஜனை கூடத்தின் சாவியை கடந்த 9-ந் தேதி கோகுல்ராஜிடம் வாங்கியுள்ளார்.
ஊட்டி,
ஊட்டி மாரியம்மன் கோவில் பின்புறம் ஒரு பஜனை சபை செயல்பட்டு வருகிறது. இங்கு கிரீன்பீல்ட் பகுதியைச் சேர்ந்த கோகுல்ராஜ்(வயது 75) என்பவர் பணியாற்றி வருகிறார். விழா காலங்கள் மற்றும் முக்கியமான நேரங்களில் இங்குள்ள பஜனை சபை கூடத்தில் வழிபாடு நடக்கும். இந்த நிலையில் பஜனை சபை கூடத்தில் உள்ள அம்மன் சிலைக்கு பூஜை செய்ய வேண்டும் என்று ஊட்டி அனந்தகிரி பகுதியை சேர்ந்த அஸ்வின் என்பவரது மனைவி ஸ்வீட்டி பெட்ரீசியா(25) என்பவர் பஜனை கூடத்தின் சாவியை கடந்த 9-ந் தேதி கோகுல்ராஜிடம் வாங்கியுள்ளார். இதன் பின்னர் பூஜை முடிந்து சாவியை ஒப்படைத்து விட்டார்.
இந்த நிலையில் நேற்றுமுன்தினம் கோகுல்ராஜ் பஜனை சபை கூடத்திற்கு சென்றபோது அம்மன் கழுத்தில் அணியப்பட்ட 4 கிராம் தங்கத்தாலியை காணவில்லை. அப்போதுதான் அவருக்கு, அம்மன் கழுத்தில் இருந்த தங்கத்தாலி திருட்டு போய் இருப்பது தெரியவந்தது."
"இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், ஊட்டி மத்திய போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் முரளிதரன், சப்-இன்ஸ்பெக்டர் வனகுமார் தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் கடந்த 9-ந்தேதி அம்மன் சிலைக்கு பூஜை செய்ய வேண்டும் என்று வந்த ஸ்வீட்டி பெட்ரீசியா தங்கத்தாலியை திருடி சென்றது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து நேற்று போலீசார், அவரை கைது செய்தனர். பின்னர் தங்கத்தாலியை மீட்டு அவரை, ஊட்டி கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்"






