என் மலர்
நீலகிரி
- வாழ்ந்து காட்டுவோம் திட்டம் மூலம் 6 தொழில் முனைவோருக்கு கடனுதவி வழங்கப்பட்டது.
- ஊராட்சி ஒன்றிய தலைவர் வழங்கினார்.
ஊட்டி,
நீலகிரி மாவட்டம், கோத்தகிரி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தமிழக அரசின் வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின்கீழ் தொழில்முனைவோருக்கான பயிற்சி தொடங்கியது.
இதில் வாழ்ந்து காட்டுவோம் திட்டம் மூலம் 6 தொழில் முனைவோருக்கு ரூ.38 லட்சம் மதிப்பில் 30 சதவீத மானியத்துடன் கூடிய வங்கிக் கடனுதவி வழங்கப்பட்டது.
மேலும் மகளிா் சுயஉதவிக் குழு உறுப்பினா்களுக்கு ரூ.70 ஆயிரம் வரை நுண்தொழில் நிறுவன நிதி கடன் திட்டம் மூலம் 10 பேருக்கு 5 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய்க்கான காசோலைகள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில், கோத்தகிரி ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவா் ராம்குமாா், மாவட்ட திட்ட செயல் அதிகாரி ரமேஷ் கிருஷ்ணன், செயல் அலுவலா்கள் தினேஷ்குமாா், ப்ரீத்தா மற்றும் தொழிற்சாா் வல்லுநா்கள், கோத்தகிரி வட்ட மகளிா் குழு உறுப்பினா்கள் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டாா்.
- பிளாஸ்டிக் ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
- நகராட்சி ஊழியா்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ஊட்டி,
கூடலூா் நகராட்சி சாா்பில் கடந்த ஒரு வாரமாக 'என் மண், என் தேசம்' நிகழ்ச்சி நடந்து வந்தது.
அப்போது மரக்கன்றுகள் நடுதல், மக்கள் பங்களிப்புடன் தூய்மைப் பணிகள், சுதந்திரப் போராட்ட தியாகிகளை கௌரவித்தல், பிளாஸ்டிக் ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இந்த நிலையில் 'என் மண், என் தேசம்' நிறைவுநாள் நிகழ்ச்சி தொரப்பள்ளியில் நடத்தப்பட்டது. இதில் நகராட்சி கமிஷனர் பிரான்சிஸ் சேவியா், நகா்மன்றத் தலைவா் பரிமளா, துணைத் தலைவா் சிவராஜ் மற்றும் நகா்மன்ற உறுப்பினா்கள், மாணவா்கள், மகளிா் சுயஉதவிக் குழுவினா் மற்றும் நகராட்சி ஊழியா்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- பசுந்தேயிலைக்கு குறைந்தபட்ச விலை நிர்ணயம் கோரி பல்வேறு கட்டங்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.
- மத்திய-மாநில அரசுகள் இதுவரை எந்தவித நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை.
ஊட்டி:
நீலகிரி மாவட்டத்தில் தேயிலை உற்பத்தி பிரதான தொழிலாக உள்ளது. அங்கு விளையும் பசுந்தேயிலை சிறப்பு வாய்ந்தது. எனவே இதற்கு நாடு முழுவதும் நல்ல கிராக்கி உள்ளது.
நீலகிரியில் விளையும் பசுந்தேயிலைக்கு போதிய கொள்முதல் விலை தரப்படுவது இல்லை. எனவே நீலகிரியில் வசிக்கும் தேயிலை விவசாயிகள் சங்கத்தினர் பசுந்தேயிலைக்கு குறைந்தபட்ச விலை நிர்ணயம் கோரி பல்வேறு கட்டங்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆனாலும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
இந்நிலையில் ஊட்டி இளம் படுகர் சங்க கட்டிடத்தில் சிறுகுறு தேயிலை விவசாயிகள் சங்க ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் நாக்குபெட்டா படுகர் நலச்சங்க ஒருங்கிணைப்பாளர் பாபு, தொதநாடு நல சங்க செயலாளர் மணிவண்ணன், பொருளாளர் போஜன், புறங்காடு சீமை தலைவர் தியாகராஜன், மேற்கு நாடு நலச்சங்க தலைவர் தாத்தன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ஆலோசனை கூட்டத்தின் முடிவில் சங்க நிர்வாகிகள் கூறியதாவது:-
நீலகிரியில் விளையும் பசுந்தேயிலைக்கு குறைந்தபட்ச விலை நிர்ணயம் கோரி மத்திய-மாநில அரசுக்கு தபால் அனுப்பும் போராட்டம் நடத்தினோம். அடுத்தபடியாக நீலகிரியில் 65 ஆயிரம் விவசாயிகளை திரட்டி போராட்டம் நடத்த முடிவு செய்தோம். மாவட்ட நிர்வாகம் தடுத்துவிட்டது. பின்னர் எங்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி ஊட்டி, சிறியூர், மசினகுடி கோவில்களுக்கு சென்று அங்கு வீற்றிருக்கும் அம்மன்களிடம் கோரிக்கை மனு கொடுத்து உள்ளோம்.
நீலகிரியில் விளையும் பசுந்தேயிலைக்கு குறைந்தபட்ச விலை நிர்ணயம் செய்யும் விஷயத்தில் மத்திய-மாநில அரசுகள் இதுவரை எந்தவித நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை.
எனவே மாவட்டம் முழுவதும் பொறங்காடு, குந்தா, மேற்குநாடு, தொதநாடு ஆகிய 4 சீமைகளை சேர்ந்த 400 கிராம விவசாயிகளை திரட்டி வருகிற செப்டம்பர் 1-ந்தேதி முதல் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடுவது என்று முடிவு செய்து உள்ளோம்.
நீலகிரியில் விளையும் பசுந்தேயிலைக்கு குறைந்தபட்ச விலை நிர்ணயம் செய்யும்வரை எங்களின் உண்ணாவிரத போராட்டம் தொடர்ந்து நடத்தப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
- 2 புலி குட்டிகளும் பிறந்து 2 வாரமே ஆனது தெரியவந்தது.
- புலி குட்டிகளின் உடல் உறுப்புகள் ஆரோக்கியமாக இருந்தது தெரியவந்தது.
மசினகுடி:
நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே முதுமலை புலிகள் காப்பகம் உள்ளது. 688 சதுர கி.மீ. பரப்பளவு கொண்ட முதுமலை வனப்பகுதியில் காட்டு யானைகள், புலிகள், கரடிகள், மான்கள், சிறுத்தைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் வசிக்கின்றன. இதுதவிர தெப்பக்காடு முகாமில் வளர்ப்பு யானைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இந்தநிலையில் முதுமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட சீகூர் வன சரகத்தில் உள்ள சிறியூர் வனப்பகுதியில் வனத்துறை ஊழியர்கள் நேற்று முன்தினம் மாலை ரோந்து சென்றனர். அப்போது அங்கு 2 புலி குட்டிகள் செத்து கிடந்தன. 2 புலி குட்டிகளும் பிறந்து 2 வாரமே ஆனது தெரியவந்தது. இதில் ஒரு புலி குட்டியின் உடல் மிகவும் அழுகிய நிலையில் காணப்பட்டது. இதுகுறித்து உடனே வனத்துறை ஊழியர்கள், புலிகள் காப்பக உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில் முதுமலை புலிகள் காப்பக துணை கள இயக்குனர் அருண் மற்றும் வனத்துறையினர், கால்நடை டாக்டர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று செத்த புலி குட்டிகளின் உடல்களை பார்வையிட்டனர். பின்னர் புலி குட்டிகளின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. இதில் புலி குட்டிகளின் உடல் உறுப்புகள் ஆரோக்கியமாக இருந்தது தெரியவந்தது. ஆனால், புலி குட்டிகள் எப்படி இறந்தது என்பது தெரியவில்லை.
இதேபோல் நேற்று ஊட்டி அருகே நடுவட்டம் பகுதியில் உள்ள தனியார் தேயிலை தோட்டத்தில் ஒரு புலி செத்து கிடந்தது. அது 7 வயது மதிக்கத்தக்க பெண் புலி என்பது தெரியவந்தது. ஆனால் அந்த புலி எப்படி இறந்தது என்பது தெரியவில்லை. மற்ற வனவிலங்குகளுடன் சண்டையிட்டதில் புலி இறந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. ஆனாலும் பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகு தான் புலி செத்ததற்கான காரணம் தெரியவரும் என்று வனத்துறையினர் தெரிவித்தனர்.
- லோயர் பஜார் சாலையில் உள்ள தடுப்பு சுவர் இடித்து சீரமைக்கப்பட்டது.
- இரட்டை பிள்ளையார் கோவில் தெருவில் அடிக்கடி மழை நீர் கால்வாய் அடைப்பு ஏற்பட்டது.
ஊட்டி,
ஊட்டி 21-வது வார்டுக்கு உட்பட்ட இரட்டை பிள்ளையார் கோவில் தெருவில் அடிக்கடி மழை நீர் கால்வாய் அடைப்பு ஏற்பட்டது.
எனவே லோயர் பஜார் சாலையில் உள்ள தடுப்பு சுவர் இடித்து சீரமைக்கப்பட்டது. ஆனால் அங்கு இடிபாடு பொருட்கள் அகற்றப்படவில்லை.
மேலும் ஒருசிலர் அங்கு குப்பை மூட்டைகளை வீசிவிட்டு செல்கின்றனர். இதனால் அங்கு குப்பை மலை போல தேங்கி கிடக்கிறது.
எனவே லோயர்பஜார் பகுதியில் இடிபாட்டு பொருட்கள் மற்றும் குப்பைகளை உடனடியாக அகற்ற வேண்டும் என்று அந்த பகுதியில் வசிக்கும் மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
- பள்ளி முதல்வர் ரங்கநாதன் தேசியக்கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்
- விழாவுக்கான ஏற்பாடுகளை பள்ளி தாளாளர் ஸ்ரீகவிதா ஆலோசனைப்படி அனைத்து ஆசிரியர்களும் செய்திருந்தனர்.
ஊட்டி
ஊட்டி நஞ்சநாடு, கப்பத்தொரையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா பள்ளியில் 77வது சுதந்திரதின விழா நடந்தது. அப்போது பள்ளி முதல்வர் ரங்கநாதன் தேசியக்கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். பின்னர் மாணவ,மாணவியரின் கண்கவர் கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.
ராமகிருஷ்ணா பள்ளியில் ஒவ்வொரு வாரமும் சிறப்பு பாடவேளை உருவாக்கி, அதன்மூலம் மாணவர்களுக்கு பேச்சு, பாட்டு, பொது அறிவு, கட்டுரை, ஓவியம் மற்றும் கைத்தொழில் ஆகியவை கற்று தரப்படுகி ன்றன. இவற்றில் சிறந்து விளங்கும் மாணவர்க ளுக்கு பதக்கம், சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. விழாவுக்கான ஏற்பாடுகளை பள்ளி தாளாளர் ஸ்ரீகவிதா ஆலோசனைப்படி அனைத்து ஆசிரியர்களும் செய்திருந்தனர்.
ஊட்டி,
தமிழ்நாடு விவசாயிகள் தொழிலாளர்கள் கட்சியின் மாநில தலைவரும், தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நல வாரிய தலைவருமான பொன்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
நீலகிரி மாவட்டத்தில் சமூக சேவையில் சிறப்பாக ஈடுபட்டு வரும் சமூக சேவகர் ஆரோக்கிய அருள் ஜேம்ஸ், தமிழ்நாடு விவசாயிகள் தொழிலாளர்கள் கட்சியின் நீலகிரி மாவட்ட தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஏற்கனவே கட்சியின் நீலகிரி மாவட்ட தலைவராக இருந்த குரூஸ் முத்து பிரின்ஸ், தமிழ்நாடு விவசாயிகள் தொழிலாளர்கள் கட்சியின் கோவை மத்திய மாவட்ட தலைவராக பொறுப்பேற்கிறார். அதேசமயம் அவர் நீலகிரி மாவட்டத்தின் தமிழக கட்டிட மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்கள் மத்திய சங்கத்தின் நீலகிரி மாவட்ட தலைவராக நீடிப்பார்.
புதிதாக நீலகிரி மாவட்டத் தலைவராக பொறுப்பேற்று இருக்கும் ஆரோக்கிய அருள் ஜேம்ஸ்-சுக்கு தோழமைக் கட்சியினர் மற்றும், தன்னார்வல தொண்டு நிறுவனங்களை சார்ந்தவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
- பல்வேறு நலத்திட்டங்களில் பயன்பெறுவோர்களும் இந்த திட்டத்தில் பங்கேற்கலாம்
- விடுபட்டவர்கள் முகாம் கலந்து கொண்டு பயன்பெறலாம்.
ஊட்டி,
நீலகிரி மாவட்ட கலெக்டர் அம்ரித் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
நீலகிரி மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமை தொகைக்கு 2 கட்டங்களாக விண்ணப்பதிவு முகாம்கள் நடத்தப்பட்டன.
இந்த நிலையில் கடுமையாக உடல் பாதிக்கப்பட்டு மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் பராமரிப்பு உதவித்தொகை பெறுவோர், வருவாய்த்துறையின் சமூக பாதுகாப்பு திட்டத்தின்கீழ் ஓய்வூதியம் பெறுவோர், இந்திராகாந்தி முதியோர் ஓய்வூதிய திட்டம், முதல்வரின் உழவர் பாதுகாப்பு திட்டம், அமைப்புசாரா தொழிலாளர் நல வாரியம் ஆகியவை மூலம் முதியோர் ஓய்வூதியம் பெறுவோர் குடும்பத்தில் தகுதிவாய்ந்த பெண்கள் விண்ணப்பிக்கலாம் என்று தமிழக முதல்வர் உத்தரவிட்டு உள்ளார்.
இதன்படி நீலகிரி மாவட்டத்தில் விடுபட்டவர்களுக்கான சிறப்பு முகாம் நாளை (18-ந் தேதி) முதல் 20-ந் தேதி வரை நடக்க உள்ளது.
எனவே கலைஞர் மகளிர் உரிமைத்தொகைக்கு விதிவிலக்கு அளிக்கப்பட்டு உள்ள மாற்று திறனாளிகளின் குடும்ப தலைவிகள், முதியோர் ஓய்வூதியம் பெறுவோர், குடும்பத்தில் தகுதிவாய்ந்த பெண்கள் மற்றும் ஏற்கனவே விண்ணப்பம் பதியாதவர்கள் ஆகியோர் இந்த முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.
- ஊட்டி-கோவை சாலை, ஊட்டி-மைசூர் மற்றும் கேரள மாநிலம் செல்லும் சாலைகளிலும் போக்குவரத்து அதிகமாக காணப்பட்டது.
- ஊட்டி நகரில் வியாபாரமும் களைகட்டியதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
ஊட்டி:
ஊட்டிக்கு நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.
பள்ளி தொடர் விடுமுறை, பண்டிகை விடுமுறைகள் 2 நாட்களுக்கு மேல் வந்தால் ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை அதிகரித்து காணப்படும்.
குறிப்பாக அண்டை மாநிலமான கர்நாடகம், கேரள மாநிலத்தில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் கூட்டமே அதிகமாக காணப்படும். இந்த நிலையில் வார விடுமுறையை தொடர்ந்து நேற்றுமுன்தினம் ஒருநாள் மட்டுமே பணி நாளாக இருந்தது.
நேற்று விடுமுறை என்பதால் பலரும் 4 நாட்கள் தொடர் விடுமுறை எடுத்துக்கொண்டு ஊட்டிக்கு கடந்த சனிக்கிழமை முதல் வரத் தொடங்கினர்.
இதனால் கடந்த 4 நாட்களாக முக்கிய சுற்றுலா தலங்களான தாவரவியல் பூங்கா, படகு இல்லம், தொட்டபெட்டா மற்றும் ரோஜா பூங்காவில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
சுற்றுலா பயணிகள் வாகனங்களால், ஊட்டி நகரின் முக்கிய சாலைகளான கமர்சியல் சாலை, எட்டின்ஸ் சாலை மற்றும் பூங்கா செல்லும் சாலைகளில் வாகன நெரிசல் காணப்பட்டது.
ஊட்டி-கோவை சாலை, ஊட்டி-மைசூர் மற்றும் கேரள மாநிலம் செல்லும் சாலைகளிலும் போக்குவரத்து அதிகமாக காணப்பட்டது.
மழை இன்றி தற்போது ஊட்டியில் வெயில் அடிக்கும் நிலையில் அனைத்து சுற்றுலா தலங்களிலும் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியுடன் வலம் வந்தனர்.
2 மாதங்களுக்கு பின்னர் ஊட்டியில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளனர். ஊட்டி நகரில் வியாபாரமும் களைகட்டியதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
கடந்த 4 நாட்களில் மட்டும் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஊட்டிக்கு வந்திருக்க வாய்ப்புள்ளது. ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவுக்கு கடந்த 12-ந்தேதி சனிக்கிழமை 9 ஆயிரத்து 743 பேரும், 13-ந் தேதியான ஞாயிற்றுக்கிழமை 13 ஆயிரத்து 676 பேரும், 14-ந் தேதி 10 ஆயிரத்து 865 பேரும் வந்திருந்தனர். நேற்று 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர்.
4 நாட்களுக்கு பிறகு சுற்றுலா பயணிகள் நேற்று மதியத்திற்கு பிறகு தங்களது சொந்த ஊர்களுக்கு புறப்பட தொடங்கினர். இதனால் சாலைகளிலும் வாகன போக்குவரத்து நெரிசல் அதிகமாக காணப்பட்டது.
- தமிழ் சினிமா படப்பிடிப்புகள் மட்டுமின்றி, கன்னடம், தெலுங்கு உள்பட பல்வேறு சினிமா படப்பிடிப்புகளும் நடந்து வருகிறது.
- நடிகர் யோகிபாபு மற்றும் பல்வேறு முன்ணி நட்சத்திரங்கள் பங்கேற்று நடித்த காட்சிகள் படமாக்கப்பட்டன.
ஊட்டி:
மலைப்பிரதேசமான நீலகிரி மாவட்டம் பசுமை நிறைந்தும், இயற்கை எழிலுடன் காணப்படுகிறது. தென்னிந்திய அளவில் சினிமா படப்பிடிப்புக்கு ஏற்ற இடமாக நீலகிரி உள்ளது.
இங்கு தமிழ் சினிமா படப்பிடிப்புகள் மட்டுமின்றி, கன்னடம், தெலுங்கு உள்பட பல்வேறு சினிமா படப்பிடிப்புகளும் நடந்து வருகிறது.
குன்னூர், கோத்தகிரி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் நிலவி வரும் சிதோஷ்ண நிலையும், இங்குள்ள இயற்கை காட்சிகளுக்காகவே அதிகளவிலான படப்பிடிப்புகள் நடைபெற்று வருகிறது.
குறிப்பாக, சூட்டிடங் மட்டம், தாவரவியல் பூங்கா உள்ளிட்ட இடங்களில் மிகப்பெரிய நடிகர்களின் திரைப்படங்களும் படமாக்கப்பட்டுள்ளன.
இந்தநிலையில் கடந்த ஒரு வாரமாக ஊட்டி சுற்று வட்டார பகுதியில் நகைச்சுவை நடிகர் யோகி பாபு, சார்லி, நடிககைள் வாணி போஜன், சம்யுக்தா ஆகியோர் நடிப்பில் பிரபல இயக்குனர் ராதாமோகன் இயக்கி வரும் சட்னி, சாம்பார் என்ற இணைய தொடருக்கான படப்பிடிப்பு நடந்து வருகிறது.
நேற்று காலை தேவர்சோலை பகுதியில் நடிகர் யோகிபாபு நடித்து வரும் வெப்சீரிஸ் படத்திற்கான படப்பிடிப்பு நடந்தது. அப்போது நடிகர் யோகிபாபு மற்றும் பல்வேறு முன்ணி நட்சத்திரங்கள் பங்கேற்று நடித்த காட்சிகள் படமாக்கப்பட்டன.
தங்கள் பகுதியில் சினிமா படப்பிடிப்பு நடந்ததை அறிந்ததும் அங்கு ஏராளமான பொதுமக்கள், சிறுவர்கள் அதிகளவில் குவிந்தனர். அவர்கள் சினிமா படப்பிடிப்பை பார்வையிட்டு மகிழ்ந்தனர்.
கடந்த 3 நாட்களுக்கு முன்னர் நடிகர் யோகி பாபு ஊட்டியில் நடந்த படப்பிடிப்பின் போது, அங்குள்ள சிறுவர்களுடன் சேர்ந்து கால்பந்து விளையாடினார்.
இதனை அவர் தனது டிவிட்டர் பக்கத்திலும் வெளியிட்டு இருந்தார். இதுகுறித்து படப்பிடிப்பு நிர்வாகத்தினர் கூறுகையில், சட்னி, சாம்பார் என்ற தலைப்பில் நடிகர்கள் யோகி பாபு, சார்லி, நடிகைகள் வாணிபோஜன், சம்யுக்தா உள்ளிட்டோர் நடித்த வெப் சீரிஸ் தொடருக்கான படப்பிடிப்பு நீலகிரியில் பல்வேறு பகுதிகளில் நடந்து வருகிறது. ஒரு வாரத்தில் படப்பிடிப்பு முடிந்து விடும். இந்தத் தொடரை இயக்குனர் ராதா மோகன் இயக்குகிறார் என்றனர்.
- இந்திராநகர் பகுதியில் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்களில் பொதுமக்கள் வசித்து வருகிறார்கள்.
- அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என்று நெல்லியாளம் நகராட்சிக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
ஊட்டி,
நீலகிரி பந்தலூர் பந்தலூர் அருகே தெருவிளக்குகள் அமைக்கக்கோரி பொதுமக்கள் தீப்பந்தங்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தெருவிளக்கு வசதி இல்லை பந்தலூர் அருகே உளள இந்திராநகர் பகுதியில் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்களில் பொதுமக்கள் வசித்து வருகிறார்கள். அடர்ந்த வனப்பகுதியை யொட்டி உள்ள இந்தப்பகுதியில் தெருவிளக்குகள் வசதி இல்லை. இதில் இரவு நேரங்களில் குடியிருப்புக்குள் புகும் யானைகள் நிற்பது கூட தெரிவதில்லை. மேலும் சிறுத்தைகளும் ஊருக்குள் புகுந்து விடுகின்றன. இதனால் இந்திரா நகர் பகுதியில் தெருவிளக்குகள் வசதி உள்பட அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என்று நெல்லியாளம் நகராட்சிக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். ஆனால் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இதனால் பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் மற்றும் பல்வேறு போராட்டங்கனை முன்னெடுத்தும் மாவட்ட நிர்வாகமும், நகராட்சி நிர்வாகவும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் நேற்று முன்தினம் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பாக மின்விளக்குகள் இல்லாத மின்கம்பங்களின் கீழ் தீப்பந்தங்கள் ஏந்தி போராட்டம் நடந்தது. இதில் ஏராளமான பொதுமக்கள் தீப்பந்தங்கள் ஏந்தியபடி கோஷங்கள் எழுப்பினர். இந்த போராட்டத்தில் செயலாளர் ராசி ரவிக்குமார், நிர்வாகி ரமேஷ், மாவட்ட குழு உறுப்பினர் வர்கீஸ், பந்தலூர் யூனிட் செயலாளர் ஜுனைஸ்பாபு மற்றும் பாபுட்டி, சாஜி, ரெஜிதா உள்பட பலர் கலந்கொண்டனர்.
- சுற்றுபுற சுகாதாரம் குறித்து விழிப்புணர்வு பேரணி மற்றும் முகாம் நடந்தது.
- விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியபடி ஊர்வலமாக சென்றனர்.
ஊட்டி,
நீலகிரி பந்தலூர் பந்தலூர் அருகே எருமாடு பஜாரில் சேரங்கோடு, நெலாக்கோட்டை, ஸ்ரீமதுரை ஊராட்சிகள் இணைந்து சுற்றுபுற சுகாதாரம் குறித்து விழிப்புணர்வு பேரணி மற்றும் முகாம் நடந்தது.
சேரங்கோடு ஊராட்சி தலைவர் லில்லி ஏலியாஸ் தலைமை தாங்கினார். கவுன்சிலர் அனிபா, நெலாக்கோட்டை ஊராட்சி தலைவர் டெர்மிளா, வட்டார வளர்ச்சி அலுவலர் அண்ணாதுரை, ஆணையாளர் குமார், துணைதலைவர் சந்திரபோஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேரணியில், பொதுமக்களும் வியாபாரிகளும் பிளாஸ்டிக்குகள் பயன்படுத்துவதையும் விற்பனை செய்வதையும் தவிர்க்க வேண்டும். குப்பைகளை பொது இடங்களில் கொட்டக்கூடாது உள்பட பல்வேறு விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியபடி ஊர்வலமாக சென்றனர்.






