75-வது சுதந்திர தின நிறைவு விழாவையொட்டி நீலகிரியில் 9 டன் குப்பைகள் அகற்றம்

சுதந்திர தின விழாவினை முன்னிட்டு நீலகிரியில் ஒட்டுமொத்த சுகாதார பணிகள் மேற்கொள்ளப்பட்டது உள்ளாட்சி அமைப்புகளில் பணிபுரிபவர்கள் உள்பட மொத்தம் 4716 நபர்கள் கலந்து கொண்டனர்.
75-வது சுதந்திர தின நிறைவு விழாவையொட்டி நீலகிரியில் 9 டன் குப்பைகள் அகற்றம்
Published on

ஊட்டி,

நீலகிரி மாவட்டத்தில் உள்ள 4 நகராட்சிகள், 11 பேரூராட்சிகள் மற்றும் 4 ஊராட்சி ஒன்றிய பகுதிகள் உள்ளன.

இந்த பகுதிகளில் 75-வது சுதந்திர தின நிறைவு விழாவினை முன்னிட்டு எனது தாய்மண் எனது தேசம் என்ற நிகழ்வின் ஒருபகுதியாக ஒட்டுமொத்த சுகாதார பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

இச்சுகாதார பணியானது நீலகிரி மாவட்டத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகள் உள்ளிட்ட முக்கிய சாலைகளிலும், நீர்நிலை பகுதிகளிலும், வனப்பகுதிகளிலும், சோதனை சாவடிக்கு ஒட்டிய பகுதிகளிலும் மற்றும் இதர முக்கியமான பகுதிகளிலும் மேற்கொள்ளப்பட்டது.

தூய்மை பணியில் நீலகிரி மாவட்டத்தில் அனைத்து உள்ளாட்சி அமைப்புகளில் பணிபுரியும் 1178 தூய்மை பணியாளர்கள் , 1607 மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள், 98 அரசு சாரா தொண்டு நிறுவனத்தினர், 252 மாணவர்களும், 1581 அரசு அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், தன்னார்வலர்கள் என மொத்தம் 4716 நபர்கள் கலந்து கொண்டனர்.

தூய்மை பணியின் போது 1152 கிலோ பிளாஸ்டிக் குப்பைகள் மற்றும் 7 ஆயிரத்து 898 கிலோ இதர குப்பைகள் என மொத்தம் 9 ஆயிரத்து 50 கிலோ குப்பைகள் சேகரிக்கப்பட்டு தூய்மை ப்படுத்தப்பட்டன.

தூய்மை பணியின் போது நீலகிரி மாவட்ட த்திற்கு வருகை தந்த சுற்று லா பயணிகள் மற்றும் உள்ளுர் பொது மக்களிடையே பிளாஸ்டிக் ஒழிப்பு தொடர்பான விழி ப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு நீலகிரியை பிளாஸ்டிக் இல்லாத மாவட்டமாக மாற்றுவதற்கு அனைத்து தரப்பினரும் முழு ஒத்து ைழப்பு அளிக்க வேண்டும் என கேட்டு கொள்ள ப்பட்டது."

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com