என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோத்தகிரி அருகே சுண்டட்டியில் புதிய சாலை அமைப்பதற்கு பூமி பூஜை
சுண்டட்டி பகுதிக்கு ரூ.30 லட்சம் மதிப்பிலான சாலை அமைப்பதற்கு பூமி பூஜை நிகழ்ச்சி நடந்தது.
அரவேணு,
கோத்தகிரி அருகே கொட்டநள்ளி கிராமத்தில் இருந்து சுண்டட்டிக்கு சாலை வசதி கேட்டு அப்பகுதி ெபாதுமக்கள் சார்பில் தி.மு.க மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் சுண்டட்டி முருகன், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கோரிக்கை மனு அனுப்பினார்.
அந்த மனு மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டதின் பேரில், மாவட்ட ஊராட்சித்தலைவர் பொன்தோஸ் பரிந்துரை செய்து கொட்டநள்ளி கிராமத்தில் இருந்து சுண்டட்டி பகுதிக்கு ரூ.30 லட்சம் மதிப்பிலான சாலை அமைப்பதற்கு பூமி பூஜை நிகழ்ச்சி நடந்தது.
இதில் கொடநாடு பஞ்சாயத்து தலைவர் சுப்பிகாரி, நெடுகுளா பஞ்சாயத்து தலைவர் சுகுணா சிவா மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
Next Story






