என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கால்நடைகளின் ஓய்வெடுக்கும் அறையாக மாறிய கோத்தகிரி பஸ் நிலையம்
    X

    கால்நடைகளின் ஓய்வெடுக்கும் அறையாக மாறிய கோத்தகிரி பஸ் நிலையம்

    • கால்நடைகளால் மக்கள் மிகுந்த சிரமம் அடைகிறார்கள்.
    • கோத்திகிரி பஸ் நிலைய பகுதிகளில் சுற்றி திரியும் மாடுகளையும் பிடிக்க வேண்டும்.

    அரவேணு,

    நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் அண்ணா பஸ் நிலையம் அமைந்துள்ளது.

    இந்த பஸ் நிலையத்தில் மேட்டுப்பாளையம், ஊட்டி, குன்னூர் மற்றும் கோத்தகிரி சுற்றுவட்டாரங்களில் உள்ள கிராம பகுதிகளில் இருந்து பஸ்கள் இயக்கப்ப ட்டு வருகின்றன.

    ஒரு நாளைக்கு 100க்கும் மேற்பட்ட பஸ்கள் இந்த பஸ் நிலையத்தில் இருந்து செல்கிறது. இந்த பஸ் நிலையத்தை கோத்தகிரி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

    இப்படி அனைத்து தரப்பு மக்களும் பயன்படுத்தி வரும் இந்த பஸ் நிலையம் அண்மைக்காலமாக கால்நடைகளின் கூடாரமாக மாறி வருகிறது. பஸ் நிலைய பகுதிகளில் சுற்றி திரியும் ஆடு, மாடுகள் சாலைகளில் கிடக்கும் உணவுகளை தின்று விட்டு, நேராக பயணிகள் காத்திருக்கும் பகுதியில் வந்து ஆங்காங்கே படுத்து ஓய்வெடுத்து வருகின்றன.

    மாடுகள் படுத்து இருப்பதால் மக்கள் அந்த இடத்தை விட்டு சற்று தொலைவிலேயே அமர்ந்து இருக்கின்றனர்.

    மேலும் சில மாடுகள் பயணிகள் செல்ல முடியாத அளவுக்கு நடுவழியிலும் ஓய்வெடுக்கின்றன. இதனால் மக்கள் மிகுந்த சிரமத்திற்கு மத்தியிலேயே பஸ் நிலையத்தை பயன்படுத்தி வருகின்றனர். சில நேரங்களில் அசம்பாவித சம்பவங்களும் ஏற்பட்டு வருகிறது.

    கடந்த சில தினங்களுக்கு முன்பு கூட சென்னையில் தாயுடன் சென்ற, மாணவியை மாடு ஒன்று மூட்டி தூக்கி வீசிய சம்பவம் நிகழ்ந்தது. இந்த பஸ் நிலையத்திற்கு அதிகளவில் மாணவ, மாணவிகள் வந்து செல்கிறார்கள்.

    எனவே அதுபோன்ற சம்பவங்கள் ஏதும் நடப்பதற்கு முன்பாக கோத்திகிரி பஸ் நிலைய பகுதிகளில் சுற்றி திரியும் மாடுகளையும் பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

    Next Story
    ×