என் மலர்
நீலகிரி
- அடிப்படை தேவைகளுக்கு நிதி ஒதுக்க கோரிக்கை
- அமைச்சர் கயல்விழி செல்வராஜ் நடவடிக்கை எடுப்பதாக உறுதி
ஊட்டி,
கூடலூர் ஒன்றிய தலைவர் கீர்த்தனா, தேவர்சோலை பேருராட்சி தலைவர் வள்ளி ஆகியோர் சென்னையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜை நேரில் சந்தித்து பேசினர்.
தொடர்ந்து அவர்கள் அளித்த கோரிக்கை மனுவில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் அதிகம் வசிக்கும் 5 பெரிய ஊராட்சிகளை கொண்ட கூடலூர் ஊராட்சி ஒன்றியத்தில் அடிப்படை தேவைகளை சிறப்பாக செய்து தர கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும்.
மேலும் அடிப்படை தேவைகளுக்கான கருத்துருக்கள் தயாரிக்கப்பட்டு மாவட்ட. நிர்வாகத்திடம் வழங்கபட்டு உள்ளது. அதற்கு தேவையான நிதியையும் ஒதுக்கீடு செய்து உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டு உள்ளது.
கோரிக்கை மனுவை படித்து பார்த்த ஆதிதிராவிடர் பழங்குடியின நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் இதுகுறித்து உரியநடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார்.
- குண்டும் குழியுமாக இருப்பதால் பொதுமக்கள் அவதி
- நிகழ்ச்சியில் ஜெகதளா பேரூராட்சி தலைவர் பங்கஜம் பங்கேற்பு
அருவங்காடு,
குன்னூர் ஊட்டி தேசிய நெடுஞ்சாலையில் அருவங்காடு- ஜெகதளா இடைேயேயான ரோடு குண்டும் குழியுமாக இருந்தது. எனவே அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வந்தனர். மேலும் அங்கு அடிக்கடி வாகன விபத்துகளும் நடந்தன.
எனவே அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் அருவங்காடு- ஜெகதளா ரோட்டை உடனடியாக சீரமைக்க கோரிக்கை விடுத்தனர். தொடர்ந்து அந்த சாலையை சீரமைக்க தற்போது ரூ.1.12 கோடி நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது.
இதையடுத்து அருவங்காடு- ஜெகதளா ரோட்டில் சாலை சீரமைப்பு பணிகள் தொடங்கியது.
இதற்கான நிகழ்ச்சியில் ஜெகதளா பேரூராட்சி செயல் அலுவலர் சதாசிவம், செயற்பொறியாளர் வின்சென்ட், பேரூராட்சி தலைவர் பங்கஜம், துணைத்தலைவர் ஜெய்சங்கர் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
- குழந்தைகளின் கல்விக்கு உதவும் வகையில் போலீசார் ரூ.3.75 லட்சம் நிதி திரட்டினர்
- மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரபாகா், சதீஷ் மனைவி அனிஷிதாவிடம் வழங்கி ஆறுதல்
ஊட்டி,
நீலகிரி மாவட்டம், பந்தலூா் தாலுகா, படிச்சேரி கிராமத்தைச் சோ்ந்தவா் சதீஷ் (வயது 45). இவா் சேரம்பாடி போலீஸ் நிலையத்தில் ஏட்டுவாக வேலை பார்த்தார். இவருக்கு மனைவி, 3 குழந்தைகள் உள்ளனா்.
இந்த நிலையில் சதீஷ் கடந்த 13-ந்தேதி காலை சுள்ளியோட்டில் இருந்து இருசக்கர வாகனத்தில் சேரம்பாடிக்கு புறப்பட்டு சென்றார். அப்போது லாரி மோதியதில் சதீஷ் உயிரிழந்தாா்.இந்த நிலையில் நீலகிரி மாவட்டத்தில் பணியாற்றும் போலீசார், விபத்தில் இறந்த சதீஸ் குழந்தைகளின் கல்விக்கு உதவும் வகையில் ரூ.3.75 லட்சம் நிதியை திரட்டினர். தொடர்ந்து அந்த தொகையை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரபாகா், சதீஷ் மனைவி அனிஷிதாவிடம் வழங்கி ஆறுதல் கூறினாா்.
- மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள் தொடங்கி வைத்தனர்
- குன்னூர் நகர இளைஞரணி துணை அமைப்பாளர் பிரவீன் உள்பட பலர் பங்கேற்பு
ஊட்டி,
நீலகிரி மாவட்டம், கீழ்கோத்தகிரி ஒன்றியம் குனியட்டி கிராமத்தில் இல்லந்தோறும் இளைஞரணி தி.மு.க உறுப்பினர் சேர்க்கை நடந்தது. மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் வினோத்குமார், ஒன்றிய செயலாளர் பீமன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
நிகழ்ச்சியில்குன்னியட்டி கிளை செயலாளர் குமார், ஊர் தலைவர் பெள்ளிராஜ், மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளர் சரத்குமார், ஒன்றிய இளைஞரணி மிதுன், குன்னூர் நகர இளைஞரணி துணை அமைப்பாளர் பிரவீன், மாவட்ட பொறியாளர் அணி துணை அமைப்பாளர் சந்திப், நகர மாணவரணி துணை அமைப்பாளர்வினோத் குமார், நகர ஆதிதிராவிடர் நலக்குழு துணை அமைப்பாளர் ஸ்ரீதர், தனசக்தி, சாஜு உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
- ஊட்டி அரசு குழந்தைகள் காப்பகத்தில் சர்வதேச பெண் குழந்தைகள் தின விழா
- அரசு அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ஊட்டி,
நீலகிரி மாவட்டம் ஊட்டி அன்னை சத்யா நினைவு அரசு குழந்தைகள் காப்பகத்தில் சர்வதேச பெண் குழந்தைகள் தின விழா நடந்தது. மாவட்ட கலெக்டர் அருணா தலைமை தாங்கி குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.
பின்னர் குழந்தைகள் பங்கேற்ற கலைநிகழ்ச்சிகள் நடந்தன. தொடர்ந்து அவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
கலெக்டர் அருணா நிகழ்ச்சியில் பேசியதாவது:-
மாணவியரிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சர்வதேச பெண் குழந்தைகள் தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இங்கு தங்கி படிக்கும் மாணவர்கள் அனைவரும் நன்றாக படித்து தேர்வுகளில் நல்ல மதிப்பெண்கள் பெறவேண்டும்.
படித்து முடித்துவிட்டு ஏதாவது ஒரு வேலைக்கு செல்லலாம் என நினைக்காமல் எந்த வேலைக்கு போக வேண்டும் என தீர்மானித்து விட்டு, அந்த குறிக்கோளை எட்டும் வகையில் படிக்க வேண்டும். படிப்புடன் தனித்திறமை, தைரியம், சுய ஒழுக்கம் ஆகியவற்றை பின்பற்றி வந்தால் வாழ்க்கையில் நாம் விரும்பிய இலக்குகளை எளிதில் எட்ட இயலும். மேலும் ஆசிரியர்கள், பெற்றோர் மற்றும் நண்பர்களிடம் மதிப்புடன் நடந்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்ந்து காப்பகத்தில் உள்ள சமையலறை, விடுதி அறைகள் மற்றும் உணவு பொருட்கள் வைப்பறை ஆகியவற்றை கலெக்டர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
நிகழ்ச்சியில் மாவட்ட சமூகநல அதிகாரி பிரவீணாதேவி, குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரி ஷோபனா, குழந்தைகள் நலக்குழு தலைவர் ஹேமந்த்ரோச் மற்றும் அரசு அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- பராமரிக்கப்படும் வளர்ப்பு யானைகளுக்கு 3 மாதங்களுக்கு ஒருமுறை உடல் எடை பார்க்கப்படுவது வழக்கம்.
- வனத்துறையின் எடை மையத்தில் வளர்ப்பு யானைகள் நிறுத்தப்பட்டு கணக்கெடுக்கப்பட்டது.
ஊட்டி:
நீலகிரி மாவட்டம் முதுமலை தெப்பக்காட்டில் வளர்ப்பு யானைகள் முகாம் உள்ளது.
இந்த முகாமில் 28 வளர்ப்பு யானைகள் பராமரிக்கப்பட்டு வந்தன.
இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு இங்கு பராமரிக்கப்பட்டு வந்த மூர்த்தி என்ற வளர்ப்பு யானை உடல்நலம் பாதிக்கப்பட்டு திடீரென உயிரிழந்தது.
தற்போது யானைகள் முகாமில், 27 வளர்ப்பு யானைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன.
இங்கு பராமரிக்கப்படும் வளர்ப்பு யானைகளுக்கு 3 மாதங்களுக்கு ஒருமுறை உடல் எடை பார்க்கப்படுவது வழக்கம்.
அதன்படி முதுமலை தெப்பக்காட்டில் உள்ள வளர்ப்பு யானைகளுக்கு உடல் எடை கணக்கெடுப்பு நேற்று நடந்தது.
இதற்காக முதுமலையில் இருந்து கூடலூர் தொரப்பள்ளிக்கு வளர்ப்பு யானைகள் அழைத்து வரப்பட்டது.
பின்னர் வனத்துறையின் எடை மையத்தில் வளர்ப்பு யானைகள் நிறுத்தப்பட்டு கணக்கெடுக்கப்பட்டது.
தெப்பக்காடு வனச்சரகர் பிரசாத் தலைமையிலான வனத்துறையினர், கால்நடை மருத்துவ குழுவினர் சங்கர், முதுமலை, சுஜய், சேரன், ரகு, மசினி, கிரி, செந்தில் வடிவு உள்பட 15 வளர்ப்பு யானைகளுக்கும் உடல் எடை சரிபார்க்கப்பட்டது.
இது குறித்து வனத்துறையினர் கூறும்போது,
கோடை காலத்தை விட தற்போது வளர்ப்பு யானைகளின் உடல் எடை சராசரியாக 130 கிலோ வரை அதிகரித்துள்ளது. மஸ்து உள்ளிட்ட காரணங்களால் மீதமுள்ள யானைகளின் உடல் எடை கணக்கெடுக்கவில்லை என தெரிவித்தனர்.
- இன்று காலை முதல் சாலையில் விழுந்த மரங்கள் மற்றும் மண் சரிவை அகற்றும் பணி நடந்து வருகிறது.
- பந்தலூர் அடுத்த சேரம்பாடி காபிகாடு பகுதியில் பலத்த மழை பெய்தது.
அரவேணு:
கோத்தகிரி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த ஒரு வார காலமாக கனமழை பெய்து வருகிறது.
இதனால் பெரும்பாலான பகுதிகளில் வீடுகளில் வெள்ள நீர் புகுந்தும் சாலைகளில் மண்சரிவுகள் ஏற்பட்டுள்ளது.
நேற்று மாலை முதல் நள்ளிரவு வரை கனமழை கொட்டி தீர்த்தது. இந்த மழைக்கு கோத்தகிரியில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் சாலையில் குஞ்சப்பனை பகுதியில் தொடர்ச்சியாக 3 இடங்களில் ராட்சத மரங்கள் முறிந்து சாலையின் நடுரோட்டில் விழுந்தது.
இதேபோல் 5-க்கும் மேற்பட்ட இடங்களில் மண்சரிவும் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து நெடுஞ்சாலை த்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து இன்று காலை முதல் சாலையில் விழுந்த மரங்கள் மற்றும் மண் சரிவை அகற்றும் பணி நடந்து வருகிறது.
மரங்கள் முறிவு, மண்சரிவு காரணமாக அந்த சாலையில் வாகனங்கள் செல்ல முடியாமல் 2 கி.மீ தூரத்திற்கு அணிவகுத்து நின்றன. இதனால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர்.
தொடர்ந்து அங்கு வந்த போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் சாலையில் இருந்த மரங்களை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர்.
பந்தலூர் அடுத்த சேரம்பாடி காபிகாடு பகுதியிலும் பலத்த மழை பெய்தது. மழைக்கு சாலையோரம் நின்ற ராட்சத மரம் வேரோடு சாய்ந்து சாலையின் குறுக்கே விழுந்தது. இதனால் அந்த சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் நீலகிரியில் இருந்து கேரளாவுக்கும், கேரளாவில் இருந்து நீலகிரிக்கும் வாகன போக்குவரத்து முடங்கியது.
இதையடுத்து தீயணைப்பு மற்றும் நெடுஞ்சாலைத் துறையினா் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சாலையில் கிடந்த மரத்தை வெட்டி அகற்றி அப்புறப்படுத்தினர்.
- ரூ.25 கோடி மதிப்பில் திட்டப்பணிகளை மேற்கொள்வது குறித்து ஆலோசனை
- திட்டங்களை 4 கட்டங்களாக செயல்படுத்துவதென முடிவெடுக்கப்பட்டு உள்ளது.
ஊட்டி,
தமிழகத்தில் செங்கல்பட்டு மற்றும் நீலகிரி ஆகிய 2 மாவட்டங்களில் சுற்றுலா மேம்பாட்டுப் பணிகளுக்காக மத்திய அரசு தலா ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்து உள்ளது. இதையடுத்து, நீலகிரி மாவட்டத்தில் சுற்றுலா மேம்பாட்டுக்குழு அமைக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் நீலகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் சுற்றுலா மேம்பாடு மற்றும் வளா்ச்சி குறித்த சுதேசி தா்ஷன் 2.0 மேம்பாட்டு குழுக்கூட்டம் நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் அருணா தலைமை வகித்தாா்.
இந்த கூட்டத்தில் நீலகிரி மாவட்டத்தில் மேற்கண்ட திட்டங்களை 4 கட்டங்களாக செயல்படுத்துவதென முடிவெடுக்கப்பட்டு உள்ளது.
இதில் முதல் கட்டமாக ரூ.25 கோடி மதிப்பில் திட்டப்பணிகளை மேற்கொள்வது குறித்து தனியாா் நிறுவனத்துடன் ஆலோசனை நடத்தப்பட்டது.
அப்போது பைக்காரா படகு இல்லம் மற்றும் அருவி ஆகிய 2 பகுதிகளில் வாகன நிறுத்துமிடம்-அணுகு சாலை, பழங்குடியினா் ஆராய்ச்சி மையத்துக்குத் தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் அணுகு சாலை மேம்பாட்டுப் பணிகள் ஆகியவை தொடர்பாக முக்கிய முடிவுகள் எட்டப்பட்டன.
இந்த கூட்டத்தில் உதவி இயக்குநா்கள் இப்ராஹிம்ஷா (பேரூராட்சிகள்), சாம்சாந்தகுமாா் (ஊராட்சி கள்), பொதுப்பணித் துறை செயற்பொறியாளா் அய்யாசாமி, தமிழ்நாடு சுற்றுலா வளா்ச்சிக் கழக மண்டல மேலாளா் புனேஸ்வரன், மாவட்ட சுற்றுலா அலுவலா் உமாசங்கா், உதவி சுற்றுலா அலுவலா் கோவிந்தராஜன் மற்றும் தமிழ்நாடு மின்வாரியம், நகராட்சி அதிகாரிகள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.
அருவங்காடு,
குன்னூர் நகராட்சியில் 30 வார்டுகள் உள்ளது. சுமார் 6000-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. நகரப் பகுதிக்கு குடிநீர் வினியோகம் செய்ய ரேலியா அணை மற்றும் பந்திமை அணை, எமரால்டு அணையில் இருந்தும் குடிநீர் குழாய்கள் மூலம் கொண்டுவரப்பட்டு கிரேசில் நீர் தேக்க தொட்டியில் சேகரித்து சுத்திகரிக்கப்பட்ட பின்னர் ஒவ்வொரு வார்டுகளுக்கும் முறை வைத்து குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் நகரப் பகுதியில் பொதுமக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் குன்னூர் அருகே உள்ள கரன்சி வனப்பகுதியில் தடுப்பணை கட்டப்பட்டு அங்கிருந்து குழாய்கள் மூலமாகவும் குடிநீர் நகரப் பகுதிக்கு கொண்டு வந்து விநியோகிக்கப்பட்டு வந்தது.
ஆனால் கடந்த சில நாட்களாக பரவலான மழை பெய்து வருவதால் இந்த தடுப்பனையில் தண்ணீர் அதிக அளவில் வந்து சேறும் சகதியும் ஆக மாறிவிட்டது.
தற்போது இங்கிருந்து நகரப் பகுதிக்கு குடிநீர் கொண்டு செல்ல இயலவில்லை. எனவே நகராட்சி நிர்வாகம் இந்தத் தடுப்பணையை தூர்வார வேண்டுமென குன்னூர் நகரவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- வனப்பகுதிக்கு செல்லாமல் தேயிலை தோட்டத்திற்குள் முகாம்
- குடியிருப்பு பகுதிக்கு வருமோ என பொதுமக்கள் அச்சம்
கோத்தகிரி,
கோத்தகிரி அருகே வனப்பகுதியில் இருந்து வழி தவறி வந்த ஒற்றை ஆண் காட்டு யானை குடியிருப்புகளுக்கு அருகே உள்ள தேயிலை தோட்டத்தில் முகாமிட்டுள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்தனர்.
நீலகிரி மாவட்டம், கோத்தகிரி அருகே குஞ்சப்பனை சுற்றுவட்டார கிராமங்களில் உணவு மற்றும் தண்ணீர் தேடி காட்டு யானைகள் சமவெளிப் பகுதியிலிருந்து மலைக்கிராமப் பகுதிகளுக்கு வந்து முகாமிட்டு உள்ளன. அந்த யானைகளில் சில யானைகள் அவ்வப்போது வழி தவறி வேறு கிராமப்பகுதிக்குள் நுழைந்து விடுகின்றன.
இந்நிலையில் வனப்ப குதியில் இருந்து வெளி யேறிய ஆண் காட்டு யானை ஒன்று குஞ்சபானை பகுதி யில் இருந்து தேயிலை தோட்டம் வழியாக முள்ளூர் கிராமப்பகுதிக்கு வந்ததுடன், திரும்பி வனப்பகுதிக்கு செல்லாமல் தேயிலை தோட்டத்திற்குள் முகாமிட்டு உலா வருகிறது.
முள்ளூர் பகுதியில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளதால் யானை குடியிருப்பு பகுதிக்கு வந்து விடுமோ என பொதுமக்கள் கடும் அச்சமடைந்துள்ளனர்.
குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழைந்து பொது மக்களை அச்சுறுத்தும் செயல்களில் ஈடுபடும் முன்பு, வனத்துறையினர் ரோந்து பணி மேற்கொண்டு அடர்ந்த வனப்பகுதிக்கு ஒற்றை காட்டு யானையை விரட்ட வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
- மத்திய மந்திரி உடன் விவசாயிகள் சந்திப்பு
- அதிகாரிகளுடன் கலந்து பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக வாக்குறுதி
ஊட்டி,
அண்ணாமலை பாதயாத்திரை நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக மத்திய மந்திரி பியூஸ்கோயல் வந்திருந்தார்.அப்போது அவரை நாக்குபெட்டா நலசங்க தலைவர்கள், தேயிலை தொழிற்சாலை உரிமையாளர் சங்கத்தினர் ஆகியோர் நேரில் சந்தித்தனர்.தொடர்ந்து நீலகிரி தேயிலைக்கு குறைந்தபட்ச கொள்முதல் விலை நிர்ணயம் செய்வது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனு அளிக்கப்பட்டது.
விவசாயிகளின் கோரிக்கை மனுக்களை படித்து பார்த்த பியூஸ்கோயல், இதுகுறித்து அதிகாரிகளுடன் கலந்து பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.நிகழ்ச்சியில் பா.ஜ.க மாவட்ட தலைவர் மோகன்ராஜ் உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
- 6 மணி நேரத்தில் தரமற்ற சாலை போட்டதாக குற்றச்சாட்டு
- அதிகாரிகள் விசாரித்து நடவடிக்கை எடுக்க கோரிக்கை
அருவங்காடு,
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ளது பேரட்டி ஊராட்சி. இந்த பஞ்சாயத்தில் 500-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளது.
சம்பவத்தன்று பேரட்டி பஞ்சாயத்து அலுவலகத்தில் இருந்து 600 மீட்டருக்கு தார் சாலை 6 மணி நேரத்தில் போடப்பட்டது. இப்பணியை மேற்கொள்ள எந்த திட்டத்தின் கீழ் இருந்து பணம் ஒதுக்கீடு செய்யப்பட்டது என பொதுமக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
மேலும் இச்சாலை பணி மேற்கொள்வது தொடர்பாக ஊராட்சி நிர்வாகம் மற்றும் ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் மட்டுமல்லாமல் பொதுமக்களுக்கு கூட தெரிவிக்கப்படவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.இது குறித்து பொதுமக்கள் கூறுகையில் பல ஆண்டுகளாக இச்சாலை குண்டும் குழியுமாக காணப்பட்டது.
இதனை சீரமைக்க வேண்டும் என பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளை வலியுறுத்தியும் எவ்வித பலனும் இல்லை. ஆனால் திடீரென எந்த ஒரு தகவல்களும் இல்லாமல் ஆறு மணி நேரத்தில் தூரத்திற்கு அவசர கதியில் தரமற்ற சாலை போடப்ப ட்டுள்ளதால் பொதுமக்க ளுக்கு சந்தேகம் எழுந்துள்ளது.
எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடு க்க வேண்டும் என கூறினர்.






