என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோத்தகிரி அருகே ஒற்றை யானை உலா
- வனப்பகுதிக்கு செல்லாமல் தேயிலை தோட்டத்திற்குள் முகாம்
- குடியிருப்பு பகுதிக்கு வருமோ என பொதுமக்கள் அச்சம்
கோத்தகிரி,
கோத்தகிரி அருகே வனப்பகுதியில் இருந்து வழி தவறி வந்த ஒற்றை ஆண் காட்டு யானை குடியிருப்புகளுக்கு அருகே உள்ள தேயிலை தோட்டத்தில் முகாமிட்டுள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்தனர்.
நீலகிரி மாவட்டம், கோத்தகிரி அருகே குஞ்சப்பனை சுற்றுவட்டார கிராமங்களில் உணவு மற்றும் தண்ணீர் தேடி காட்டு யானைகள் சமவெளிப் பகுதியிலிருந்து மலைக்கிராமப் பகுதிகளுக்கு வந்து முகாமிட்டு உள்ளன. அந்த யானைகளில் சில யானைகள் அவ்வப்போது வழி தவறி வேறு கிராமப்பகுதிக்குள் நுழைந்து விடுகின்றன.
இந்நிலையில் வனப்ப குதியில் இருந்து வெளி யேறிய ஆண் காட்டு யானை ஒன்று குஞ்சபானை பகுதி யில் இருந்து தேயிலை தோட்டம் வழியாக முள்ளூர் கிராமப்பகுதிக்கு வந்ததுடன், திரும்பி வனப்பகுதிக்கு செல்லாமல் தேயிலை தோட்டத்திற்குள் முகாமிட்டு உலா வருகிறது.
முள்ளூர் பகுதியில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளதால் யானை குடியிருப்பு பகுதிக்கு வந்து விடுமோ என பொதுமக்கள் கடும் அச்சமடைந்துள்ளனர்.
குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழைந்து பொது மக்களை அச்சுறுத்தும் செயல்களில் ஈடுபடும் முன்பு, வனத்துறையினர் ரோந்து பணி மேற்கொண்டு அடர்ந்த வனப்பகுதிக்கு ஒற்றை காட்டு யானையை விரட்ட வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.






