search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நீலகிரியில் சுற்றுலா மேம்பாட்டுக் குழு கூட்டம்- கலெக்டர் அருணா தலைமையில் நடந்தது
    X

    நீலகிரியில் சுற்றுலா மேம்பாட்டுக் குழு கூட்டம்- கலெக்டர் அருணா தலைமையில் நடந்தது

    • ரூ.25 கோடி மதிப்பில் திட்டப்பணிகளை மேற்கொள்வது குறித்து ஆலோசனை
    • திட்டங்களை 4 கட்டங்களாக செயல்படுத்துவதென முடிவெடுக்கப்பட்டு உள்ளது.

    ஊட்டி,

    தமிழகத்தில் செங்கல்பட்டு மற்றும் நீலகிரி ஆகிய 2 மாவட்டங்களில் சுற்றுலா மேம்பாட்டுப் பணிகளுக்காக மத்திய அரசு தலா ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்து உள்ளது. இதையடுத்து, நீலகிரி மாவட்டத்தில் சுற்றுலா மேம்பாட்டுக்குழு அமைக்கப்பட்டு உள்ளது.

    இந்த நிலையில் நீலகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் சுற்றுலா மேம்பாடு மற்றும் வளா்ச்சி குறித்த சுதேசி தா்ஷன் 2.0 மேம்பாட்டு குழுக்கூட்டம் நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் அருணா தலைமை வகித்தாா்.

    இந்த கூட்டத்தில் நீலகிரி மாவட்டத்தில் மேற்கண்ட திட்டங்களை 4 கட்டங்களாக செயல்படுத்துவதென முடிவெடுக்கப்பட்டு உள்ளது.

    இதில் முதல் கட்டமாக ரூ.25 கோடி மதிப்பில் திட்டப்பணிகளை மேற்கொள்வது குறித்து தனியாா் நிறுவனத்துடன் ஆலோசனை நடத்தப்பட்டது.

    அப்போது பைக்காரா படகு இல்லம் மற்றும் அருவி ஆகிய 2 பகுதிகளில் வாகன நிறுத்துமிடம்-அணுகு சாலை, பழங்குடியினா் ஆராய்ச்சி மையத்துக்குத் தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் அணுகு சாலை மேம்பாட்டுப் பணிகள் ஆகியவை தொடர்பாக முக்கிய முடிவுகள் எட்டப்பட்டன.

    இந்த கூட்டத்தில் உதவி இயக்குநா்கள் இப்ராஹிம்ஷா (பேரூராட்சிகள்), சாம்சாந்தகுமாா் (ஊராட்சி கள்), பொதுப்பணித் துறை செயற்பொறியாளா் அய்யாசாமி, தமிழ்நாடு சுற்றுலா வளா்ச்சிக் கழக மண்டல மேலாளா் புனேஸ்வரன், மாவட்ட சுற்றுலா அலுவலா் உமாசங்கா், உதவி சுற்றுலா அலுவலா் கோவிந்தராஜன் மற்றும் தமிழ்நாடு மின்வாரியம், நகராட்சி அதிகாரிகள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

    Next Story
    ×