என் மலர்tooltip icon

    நீலகிரி

    ஊட்டி அருகே உள்ள புகர் என்ற பகுதியில் குறைந்தபட்ச வெப்ப நிலை மைனஸ் 5 டிகிரி செல்சியசாக குறைந்ததால் தண்ணீர் பனிகட்டியானது.
    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் வழக்கமாக பனி காலம் நவம்பர் மாதத்தில் தொடங்கும். இந்த ஆண்டு மழை காரணமாக டிசம்பர் மாதம் பிற்பகுதியில் பனி காலம் தொடங்கியது. தற்போது உறைபனி காலமாக மாறியுள்ளது. இந்த கடும் பனி காலம் மார்ச் மாதம் வரை நீடிக்கும்.

    ஊட்டி நகர பகுதியில் நேற்று காலை அதிகபட்ச வெப்பநிலை 8 டிகிரி செல்சியசாகவும், குறைந்த பட்ச வெப்ப நிலை 1 டிகிரி செல்சியசாகவும் பதிவானது. நகரில் பிற பகுதிகளில் 3 டிகிரி செல்சியசாகவும் பதிவானது.

    ஊட்டி அருகே உள்ள புகர் என்ற பகுதியில் குறைந்தபட்ச வெப்ப நிலை மைனஸ் 5 டிகிரி செல்சியசாக குறைந்தது. இதனால் பாசன குழாய்களில் தண்ணீர் உறைந்து பனிக்கட்டியாகியுள்ளது. வெப்ப நிலை மேலும் குறைய வாய்ப்புள்ளதால் இந்த பகுதியில் தண்ணீர் வினியோகம் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.ஊட்டியில் மாலை நேரத்திலேயே குளிரின் தாக்கம் அதிகமாக உள்ளது. இதனால் சாலைகள் வெறிசோடி காணப்படுகிறது. பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் சாலையோரம் தீ மூட்டி குளிர் காய்ந்து வருகிறார்கள்.

    கடும் பனியால் சில தேயிலைச்செடிகள், காய்கறி மற்றும் மலர்ச்செடிகள் கருகி வருகிறது.

    புல்வெளிகள் வெண்பட்டு போர்த்தியது போன்று பனி கொட்டியது. காஷ்மீர் மலைத்தொடர்போல் நீலகிரி காட்சி அளிக்கிறது. தோட்டத்தொழிலாளர்கள் கம்பளி அடை அணிந்து வேலை பார்த்து வருகிறார்கள். வெளி இடங்களுக்கு வேலைக்கு செல்வோர் கடும் அவதியடைந்துள்ளனர். பொரும்பாலானோர் வீட்டிலேயே முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

    வெப்ப நிலை மைனஸ் 5 டிகிரி செல்சியாக குறைந்ததால் குழந்தைகள், முதியவர்களின் உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளது. காலை நேரங்களில் டீசல் உறைந்து விடுவதால் வாகனங்களை இயக்குவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை குறைந்து விட்டது. இதனால் தங்கும் விடுதி மற்றும் ஓட்டல்கள் வெறிச்சோடி காணப்படுகிறது.

    பனி படர்ந்த இயற்கை சூழலை பார்க்க சில சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டி வருகிறார்கள். அவர்கள் மட்டுமே மாவட்டத்தின் பல பகுதிகளுக்கு சென்று புல்வெளியில் படர்ந்துள்ள உறைபனியை கண்டு ரசித்து வருகிறார்கள்.

    குன்னூரில் உறைபனியால் இரவு நேரங்களில் ஜீரோ டிகிரி செல்சியஸ் பதிவாகிறது. வெலிங்டன் ஜிம்கானா, எடப்பள்ளி, பந்துமை, பகாசுரன் மலை அடிவாரப்பகுதிகளில், உறைபனியால் கடந்த 2 நாட்களாக, இரவு நேரங்களில் ஜீரோ டிகிரி செல்சியஸ் வரை பதிவாகியுள்ளது.
    ஊட்டியில் உறைபனி கொட்ட தொடங்கி உள்ளதால் பொதுமக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியில் வரமுடியாமல் தவிக்கின்றனர்.

    ஊட்டி, ஜன.12-

    நீலகிரி மாவட்டம் முழுவதும் கடந்த சில நாட்களாக கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. காலை மற்றும் பகல் நேரங்களிலும் வெப்பநிலை குறைந்து குளிர் நிலவுகிறது. இதனால் பொதுமக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியில் வரமுடியாமல் தவிக்கின்றனர்.

    மேலும் வெளியில் செல்பவர்களும், வேலைக்கு செல்பவர்களும் சுவர்ட்டர் அணிந்து கொண்டு செல்கின்றனர்.

    தற்போது உறைபனியும் கொட்ட தொடங்கி உள்ளதால் இரவு நேரங் களில் கடுங்குளிர் நிலவுகிறது.

    பொதுமக்கள் குளிரில் இருந்து தப்பித்து கொள்ள தீ முட்டி குளிர் காய்ந்து வருகின்றனர். உறைபனி கொட்டி வருவதால் ஊட்டியில் உள்ள அனைத்து சுற்றுலா தலங்களிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் குறைவாகவே உள்ளது.

    ஊட்டி தாவரவியல் பூங்கா, குதிரைப்பந்தய மைதானம், காந்தல், தலைகுந்தா உள்ளிட்ட பகுதிகளில் சாலையோரம் நிற்கும் வாகனங்கள், புல்வெளிகள் மீது உறைபனி படர்ந்து ரம்மியமாக காணப்படுகிறது.

    இது அந்த வழியாக நடந்து செல்பவர்களின் உள்ளத்தை கொள்ளை கொள்கிறது. இதனை அவர்கள் தங்கள் செல்போனில் போட்டோ பிடித்து செல்கின்றனர்.

    தொடர்ந்து உறைபனி கொட்டி வருவதால் மலைக்காய்கறிகள், தேயிலை செடிகள் கருகி வருகின்றன. இதனால் விவசாயிகள் பெரிதும் கவலையடைந்துள்ளனர். இன்று காலை கடுமையான குளிர் உள்ளதால் பள்ளிக்கு செல்லும் மாணவ, மாணவிகள், வேலைக்கு செல்வோர் கடும் அவதியடைந்து வருகிறார்கள்.

    பனிப்பொழிவால், ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, கூடலூர், பந்தலூர், குந்தா தாலுகா பகுதிகளில் உள்ள பல தேயிலை தோட்டங்கள் கருகியுள்ளன. நீலகிரியில் ஒரு லட்சத்து 63 ஆயிரத்து 368 ஏக்கர் பரப்பில், தேயிலை சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது. இந்தாண்டு பனியின் தாக்கம் அதிகமாக உள்ளதால், மகசூல் குறைந்துள்ளது.

    தற்போது ஊட்டியில் வெப்பநிலை 1 டிகிரி செல்சியசாக பதிவாகி உள்ளது.

    நீலகிரி மாவட்டத்தில் 19-ந்தேதி 774 மையங்களில் போலியோ சொட்டு மருந்து முகாம் நடத்தப்படும் என்று அம்மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா கூறி உள்ளார்.
    ஊட்டி:

    நீலகிரி மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியதாவது:-

    தீவிர போலியோ சொட்டு மருந்து முகாம் பணிகளுக்காக அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார மையங்கள், தனியார் மருத்துவமனைகள், பள்ளிக்கூடங்கள், சத்துணவு மையங்கள், அங்கன்வாடி மையங்கள், சத்திரங்கள் மற்றும் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகள் ஆகிய இடங்களில் முகாம்கள் நடைபெற உள்ளது.

    அருகாமையிலுள்ள மாவட்டங்களின் எல்லை பகுதிகள், குடிசை பகுதிகள், பணி நிமித்தமாக இடம்பெயர் மக்கள் வாழும் பகுதிகள் ஆகிய இடங்களில் சிறப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவ்வாறு தேர்வு செய்யப்பட்டுள்ள 774 மையங்களில், 5 வயதிற்குட்பட்ட 41,858 குழந்தைகளுக்கு இச்சொட்டு மருந்து வழங்கப்பட உள்ளது. இப்பணிகளின் பொது சுகாதாரத் துறை பணியாளர்களுடன் பிற துறை பணியாளர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் ரோட்டரி சங்கங்கள் என முகாம் ஒன்றுக்கு 4 பேர்கள் வீதம் பல்வேறு துறைகளை சேர்ந்த 3096 பணியாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

    மேலும் பஸ் நிலையங்கள், ரெயில் நிலையங்கள், கோவில்கள் மற்றும் மக்கள் கூடுமிடங்களில் உள்ள குழந்தைகளுக்கு நடமாடும் குழுக்கள் மூலம் சொட்டு மருந்து வழங்கப்படும். ஏதேனும் காரணங்களுக்காக விடுபடும் குழந்தைகள் அடுத்து வரும் 2 நாட்களில் இப்பணியாளர்கள் மூலம் வீடு வீடாக சென்று பார்வையிடப்பட்டு சொட்டு மருந்து வழங்கப்பட உள்ளது.

    அரசால் வழங்கப்படும் போலியோ சொட்டு மருந்து மிகவும் தரமானது. பாதுகாப்பானது உலக சுகாதார நிறுவனத்தின் அங்கீகாரம் பெற்றது. போலியோ சொட்டு மருந்து வழங்குவதன் மூலம் குழந்தைகளுக்கு எந்த விதமான பின் விளைவுகளும் ஏற்படாது.

    எனவே, பெற்றோர்கள் தங்களின் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு ஏற்கனவே எத்தனை முறை போலியோ சொட்டு மருந்து கொடுத்திருந்தாலும் போலியோ சொட்டு மருந்து முகாம் 19-ந்தேதி அன்று காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை முகாம்களுக்கு அழைத்து சென்று போலியோ சொட்டு மருந்து கொடுத்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    நீலகிரி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக 1 டிகிரி செல்சியசாக வெப்ப நிலை பதிவாகியுள்ளது. இதே நிலை நீடித்தால் மைனஸ் டிகிரிக்கு வெப்ப நிலை விரைவில் செல்ல வாய்ப்பு உள்ளதாக அதிகாரிகள் கூறினர்.
    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக உறைபனி காலம் தாமதமாக தொடங்கியது. ஊட்டி, தலைகுந்தா, வேலிவியூ உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அதிகாலை உறைபனி வாட்டியது. அதிகபட்ச வெப்பநிலை 18 டிகிரி செல்சியசாகவும், குறைந்த பட்சம் 6 டிகிரி செல்சியசாகவும் சில நாட்கள் நிலவியது.

    அவலாஞ்சி, முக்கூர்த்தி போன்ற பகுதிகளில் உறைபனி சற்று அதிகமாக இருந்தது. இதனால் தோட்டத்தொழிலாளர்கள் வேலைக்கு செல்ல முடியாமல் அவதியடைந்தனர். பல இடங்கள் வெண்பட்டாடை போர்த்தியது போன்று அடர்ந்த பனி காணப்பட்டது. இதனால் தேயிலை மற்றும் மலர்ச்செடிகள் கருகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

    தேயிலைச்செடிகளுக்கு மலார் என்ற செடிகளால் மூடி பாதுகாத்து வருகிறார்கள். இதேபோன்று ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் உள்ள மலர்ச்செடிகளுக்கும் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    நேற்று முன்தினம் முதல்  வெள்ளிக்கிழமை வரை தொடர்ந்து 2 நாட்களாக 1 டிகிரி செல்சியசாக வெப்ப நிலை பதிவாகியுள்ளது. இதே நிலை நீடித்தால் மைனஸ் டிகிரிக்கு வெப்ப நிலை விரைவில் செல்ல வாய்ப்பு உள்ளதாக அதிகாரிகள் கூறினர்.

    மாவட்டத்தின் பல பகுதி காஷ்மீர்போல் காட்சி அளிக்கிறது. பனியின் தாக்கம் அதிகமாக உள்ளதால் பொதுமக்கள் வெளியே வர முடியாமல் வீட்டுக்குள்ளேயே முடங்கியுள்ளனர். சுற்றுலா பயணிகள் வருகை வெகுவாக குறைந்து காணப்பட்டது. பஸ், ரெயில்களில் கூட்டம் குறைவாக இருந்தது.

    டீசல் உறைந்து விடுவதால் பஸ், லாரி உள்ளிட்ட வாகனங்கள் இயக்க சிரமம் ஏற்பட்டது. உறைபனியில் இருந்து தப்பிக்க பொதுமக்கள் தெருக்களில் தீ மூட்டி குளிர் காய்ந்தனர். உறை பனி வாட்டுவதால் பொதுமக்கள் நடமாட்டம் இன்றி தெரு மற்றும் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது.
    கோத்தகிரி அருகே பழங்குடியினர் கிராமத்தில் அண்ணன்- தம்பி கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோத்தகிரி:

    நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் உள்ளது மெட்டுக்கல் மலை கிராமம். இது அடர்ந்த வனப்பகுதியில் உள்ளது. இங்கு 10 இருளர் குடும்பத்தினர் மட்டுமே வசித்து வருகிறார்கள்.

    நேற்று இரவு இந்த பகுதியை சேர்ந்த அண்ணன்- தம்பிக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஒருவருக்கு ஒருவர் மாறி மாறி கடுமையாக தாக்கிக்கொண்டனர். இதில் பலத்த காயம் அடைந்த அண்ணன், தம்பி இருவரும் அடுத்தடுத்து உயிரிழந்தனர். தொலை தொடர்பு மற்றும் போக்குவரத்து இல்லாத பகுதி என்பதால் உடனே போலீசுக்கு தகவல் தெரிவிக்க முடியவில்லை.

    மலை கிராமத்தில் இருந்து இன்று காலை கீழ் இறங்கிய சிலர் இது குறித்து போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். சிறுத்தை, புலி, யானை, கரடி உள்ளிட்ட கொடிய மிருகங்கள் வசிக்கும் அடர்ந்த வனப்பகுதி என்பதால் போலீசார் சம்பவ இடத்துக்கு செல்ல முடியவில்லை.

    இது குறித்து அதிரடிப்படைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதிரடிப்படை வீரர்கள் கொடிய விலங்குகளை சமாளிக்க நவீன ஆயுதங்களுடள் வனப்பகுதிக்குள் சென்றுள்ளனர்.

    கோத்தகிரி போலீசார் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் மெட்டுக்கல் மலைகிராமத்தின் கீழ் காத்திருக்கிறார்கள்.

    சம்பவ இடத்துக்கு சென்ற அதிரடிப்படை வீரர்கள் திரும்பிய பின்னரே கொலையானவர்கள் பெயர் விபரம் மற்றும் எதற்காக கொலை நடந்தது என்பது குறித்து தெரியவரும் என்று போலீசார் கூறினர்.

    நீலகிரியில்வேலைநிறுத்த போராட்டத்தால்வங்கிகள், தபால் அலுவலகங்கள் வெறிச்சோடின. சாலை மறியலில் ஈடுபட்ட 290 பேரைபோலீசார்கைது செய்தனர்.
    ஊட்டி:

    மத்திய, மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில்உள்ள காலிபணியிடங்களைநிரப்ப வேண்டும், புதியஓய்வூதிய திட்டத்தைகைவிட்டு பழையஓய்வூதிய திட்டத்தைஅமல்படுத்த வேண்டும்,தொழிலாளர்களுக்கு குறைந்தபட்சஊதியம்ரூ.21 ஆயிரம் நிர்ணயம் செய்து வழங்க வேண்டும், பொதுத்துறை நிறுவனங்களான வங்கி,ரெயில்வே,பாதுகாப்புத்துறைகளைதனியார்மயமாக்கும்போக்கினை கைவிட வேண்டும், மத்திய, மாநில அரசு ஊழியர்களின் வருமான வரி உச்சவரம்பைரூ.7 லட்சமாக உயர்த்த வேண்டும்,

    தொழிலாளர்களுக்குஎதிராக தொழிலாளர்நல சட்டங்களைதிருத்தியதை திரும்பபெற வேண்டும் என்பது உள்பட 12அம்ச கோரிக்கைகளைவலியுறுத்தி நாடு முழுவதும் பொது வேலைநிறுத்தம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. ஊட்டிஎல்.ஐ.சி. அலுவலகத்துக்கு நேற்று ஊழியர்கள் மிகவும் குறைந்தஎண்ணிக்கையிலேயேவருகை தந்தனர். பெரும்பாலான ஊழியர்கள்வராததால், அலுவலகம் மற்றும் பணம் செலுத்தும்கவுண்ட்டர்வெறிச்சோடி இருந்தது. அலுவலகம் முன்புவேலைநிறுத்த போராட்டம்குறித்த அறிவிப்புநோட்டீஸ்ஒட்டப்பட்டு இருந்தது.

    நீலகிரி மாவட்டம் முழுவதும் 181 தபால் அலுவலகங்கள் உள்ளன.ஊட்டி தலைமை தபால்அலுவலகத்தில் ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டதால், அலுவலகம்வெறிச்சோடி கிடந்தது. சில தபால் அலுவலகங்களில் ஒருசிலரே பணிக்குவந்திருந்தனர். இதனால் நகர் மற்றும் கிராமப்புறங்களில்உள்ள தபால்அலுவலகங்கள் மூடப்பட்டு இருந்தன. அதனால் தபால் பட்டுவாடா,பதிவு தபால்அனுப்புவது, சிறுசேமிப்பில் இருந்து பணம் எடுப்பது, மணியார்டர் போன்ற பணிகள் பெரிதும்பாதிக்கப்பட்டது.ஊட்டி தலைமை தபால்அலுவலகம் முன்பு அஞ்சலக ஊழியர்கள் கோரிக்கைகளை வலியுறுத்திகோ‌‌ஷங்களைஎழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    ஊட்டிமத்திய பஸ்நிலையத்தில் இருந்து வெளியிடங்கள் மற்றும் கிராமப்புறங்களுக்குஅரசு பஸ்கள்வழக்கம்போல் இயக்கப்பட்டன. ஆட்டோக்கள், லாரிகள் வழக்கம்போல் இயங்கின. நீலகிரியில் மொத்தம் உள்ள 95 வங்கிகளில், சில வங்கிகளைதவிர பெரும்பாலானவங்கிகளுக்கு ஊழியர்கள் பணிக்கு வராமல்வேலைநிறுத்த போராட்டத்தில்ஈடுபட்டனர். இதனால் பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகள் வெறிச்சோடி இருந்தது.ஏ.டி.எம்.களில்ஏற்கனவேபணம் நிரப்பப்பட்டுஇருந்ததால்வாடிக்கையாளர்கள் மற்றும்சுற்றுலா பயணிகள்ஏ.டி.எம்.கார்டுபயன்படுத்தி பணத்தைஎடுத்து சென்றனர்.

    வேலைநிறுத்தத்தால்வங்கி சேமிப்பு கணக்கில்பணம் செலுத்துவது, காசோலை எடுப்பது,பண பரிமாற்றம்போன்ற பணிகள்பாதிக்கப்பட்டன.ஐ.என்.டி.யு.சி.,ஏ.ஐ.டி.யு.சி.,சி.ஐ.டி.யு.,எல்.பி.எப்,எச்.எம்.எஸ். உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் சார்பில், விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்,பச்சை தேயிலை கிலோவுக்குரூ.30 நிர்ணயம் செய்ய வேண்டும், நீலகிரிமலை காய்கறிகளுக்குகுறைந்தபட்சவிலை நிர்ணயம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஊட்டிஏ.டி.சி. பகுதியில் சாலை மறியல் போராட்டம் நடந்தது. அப்போது தொழிற்சங்கத்தினர்அரசு பஸ்சைமறித்து சாலையில்அமர்ந்துகோ‌‌ஷங்களைஎழுப்பி போராட்டத்தில்ஈடுபட்டனர். அங்குபாதுகாப்பு பணியில்ஈடுபட்டபோலீசார்12 பெண்கள் உள்பட 60பேரை கைதுசெய்து வேனில்ஏற்றி சென்றனர்.

    கூடலூர் புதிய பஸ் நிலையம் முன்புதொ.மு.ச.,சி.ஐ.டி.யு.,மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்டு உள்ளிட்டஎதிர்கட்சியைசேர்ந்த தொழிற்சங்கத்தினர் மத்திய அரசை கண்டித்துகோ‌‌ஷங்களைஎழுப்பினர். தொடர்ந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது பொதுத்துறைநிறுவனங்களை தனியாருக்குவிற்காதேஎன பல்வேறுகோ‌‌ஷங்களைஎழுப்பியவாறு தேசிய நெடுஞ்சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து அங்குமுன்னெச்சரிக்கையாக பாதுகாப்புக்குநின்றிருந்தபோலீசார், மறியலில் ஈடுபட்டமார்க்சிஸ்ட்கம்யூனிஸ்டு செயற்குழுஉறுப்பினர்வாசுதலைமையில்ஒன்றிய செயலாளர்குஞ்சுமுகமது,தொ.மு.ச.மண்டல பொதுச்செயலாளர்நெடுஞ்செழியன் உள்பட 15பேரை கைதுசெய்துதனியார் திருமணமண்டபத்தில் தங்க வைத்தனர்

    இதனிடையே கேரளாவில் முழு வேலைநிறுத்த போராட்டம்நடைபெற்றது. இதனால் கூடலூர்-கேரளாவுக்கு பஸ்கள், தனியார் வாகனங்கள்இயக்கப்படவில்லை. கர்நாடகாவில் இருந்து வந்தஅரசு பஸ்கள்கூடலூரில்நிறுத்தப்பட்டது. இதனால் பயணிகள் சிரமத்துக்குஆளாகினர். பின்னர் மாலை 6மணிக்கு பிறகுபஸ் போக்குவரத்து தொடங்கியது. இதேபோல்பந்தலூரில்தோட்ட தொழிலாளர்களின்கண்டன பேரணிநடைபெற்றது.

    மத்திய அரசின் தொழிலாளர் நலவிரோத போக்கைகண்டித்தும், தொழிலாளர்நல சட்டங்களைதிருத்தம்செய்வதை கைவிடவேண்டும். பணி நேரத்தை 9 மணி நேரமாக உயர்த்துவதைஎதிர்த்து கண்டன பேரணிமேங்கோரேஞ்சில்புறப்பட்டுபந்தலூர்பஜாரைவந்தடைந்தது. இதில்ஏராளமானவர்கள்கலந்து கொண்டனர். தொடர்ந்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்குபி.டபுள்யு.யு.சி. பொதுச்செயலாளர் சுப்பிரமணியம் தலைமை தாங்கினார்.ஏ.ஐ.டி.யு.சி. தலைவர்பாலகிரு‌‌ஷ்ணன்,எல்.பி.எப்.துணை பொதுச்செயலாளர்மாடசாமி,சி.ஐ.டி.யு. செயலாளர்ரமே‌‌ஷ்,ஐ.என்.டி.யு.சி.லோகநாதன்,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டுமாவட்ட செயலாளர்பாஸ்கரன்ஆகியோர் பேசினர். பின்னர் மறியலில் ஈடுபட முயன்றனர். இதைத்தொடர்ந்து 40 பேரைபோலீசார்கைது செய்தனர்.

    கோத்தகிரி பஸ் நிலையத்தில் அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு எல்.பி.எப். மாநில தலைவர் செல்வராஜ் தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யு. மாவட்ட தலைவர் சுந்தரம், ஏ.ஐ.டி.யு.சி. நீலகிரி மண்டல பொது செயலாளர் சையது இப்ராஹிம், ஜனநாயக வாலிபர் சங்க தாலூகா செயலாளர் மணிகண்டன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் மகே‌‌ஷ் வரவேற்றார்.

    ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்க்க கூடாது, குறைந்தபட்ச ஓய்வூதியத்தை 10 ஆயிரம் ரூபாயாக நிர்ணயம் செய்ய வேண்டும், பச்சை தேயிலைக்கு குறைந்தபட்ச கொள்முதல் விலையாக ரூ.30 நிர்ணயம் செய்ய வேண்டும் என்பது உள்பட 20-க்கும் மேற்பட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோ‌‌ஷங்களை எழுப்பினர். பின்னர் பஸ் நிலையம் பகுதியில் கோ‌‌ஷங்களை எழுப்பியவாறு சற்று தூரம் சென்ற அவர்கள் திடீரென சாலையின் குறுக்கே அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் பஸ்நிலையம் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து மறியலில் ஈடுபட்ட தொழிற்சங்கத்தினர் 40 பேரையும் கோத்தகிரி இன்ஸ்பெக்டர் வேல்முருகன் தலைமையிலான போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் அருகிலிருந்த மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர்.

    மஞ்சூர், குன்னூர், கோத்தகிரி, தேவாலா, கூடலூர் உள்பட மாவட்டம் முழுவதும் சாலை மறியலில் ஈடுபட்ட 290பேர் கைதுசெய்யப்பட்டனர்.

    குன்னூர் பஸ் நிலையத்தில் லைசென்ஸ் இல்லாமல் செயல்பட்ட 4 கடைகளுக்கு தலா ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.
    குன்னூர்:

    நீலகிரி மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் டாக்டர்.தங்க விக்னேஷ், குன்னூர் உணவு பாதுகாப்பு துறை அதிகாரி கோவிந்தராஜன், ஊட்டி உணவு பாதுகாப்புதுறை அதிகாரி சிவராஜ், கூடலூர் உணவு பாதுகாப்பு துறை அதிகாரி செந்தில்குமார் ஆகியோர் தலைமையிலான குழுவினர் குன்னூர் பஸ் நிலையத்தில் உள்ள கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

    அப்போது கடைகளில் காலாவதியான மற்றும் லேபிள் இல்லாமல் உணவு பொருட்கள் விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த பொருட்களை பறிமுதல் செய்து கடை உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்தனர்.

    மேலும் குன்னூர் பஸ் நிலையத்தில் உரிமங்கள் இல்லாமல் செயல்பட்ட 4 கடைகளுக்கும் அபராதம் விதிக்கப்பட்டது.

    இது குறித்து உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர். தங்க விக்னேஷ் கூறியதாவது:

    நீலகிரி மாவட்ட கலெக்டரின் அறிவுரையின் பேரில் குன்னூர் பஸ் நிலையத்தில் உள்ள கடைகளில் பாக்கெட் செய்யப்பட்ட உணவு பொருட்களில் காலாவதி தேதி உள்ளிட்ட விவரங்கள் அடங்கிய லேபிள் ஒட்டப்பட்டுள்ளதா? என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டோம்.

    அப்போது 20 கடைகளில் காலாவதியான மற்றும் லேபிள் இல்லாமல் உணவு பொருட்கள் விற்கப்படுவது தெரியவந்தது.

    இதையடுத்து அதனை பறிமுதல் செய்து கடைக்காரர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. இதேபோல் பஸ் நிலையத்தில் லைசென்ஸ் இல்லாமல் செயல்பட்ட 4 கடைகளுக்கு தலா ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

    பொதுமக்கள் உணவு பாதுகாப்பு மற்றும் லேபிள் உள்ள உணவு பொருட்களை மட்டுமே வாங்க வேண்டும். கலப்படம் மற்றும் லேபிள் இல்லாமல் பொருட்கள் விற்பது தெரிய வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் இதுகுறித்து பொதுமக்கள் 9444042322 என்ற வாட்ஸ்சப் எண்ணிற்கு தகவல் தெரிவிக்கலாம் என்றார்.
    கோத்தகிரியில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி சிறுத்தைப்பூனை உயிரிழந்தது.
    கோத்தகிரி:

    கோத்தகிரியில் ராம்சந்த் சதுக்கம் பகுதியில் இருந்து மி‌‌ஷன் காம்பவுண்டு பகுதிக்கு செல்லும் சாலையோரத்தில் நேற்று முன்தினம் இரவு 9.30 மணியளவில் சிறுத்தைப்பூனை உயிரிழந்து கிடப்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் கோத்தகிரி வனவர் சக்திவேல் தலைமையிலான வனத்துறையினர் நேரில் சென்று பார்வையிட்டனர்.

    அப்போது அந்த வழியாக சென்ற அடையாளம் தெரியாத வாகனம் மோதி சிறுத்தைப்பூனை உயிரிழந்திருப்பது தெரியவந்தது. பின்னர் கால்நடை டாக்டர் ராஜன் வரவழைக்கப்பட்டு, சிறுத்தைப்பூனையின் உடல் பரிசோதனை செய்யப்பட்டது. அதன்பிறகு அதே பகுதியில் உடல் தீ வைத்து எரிக்கப்பட்டது. இதுகுறித்து வனத்துறையினர் கூறும்போது, அடையாளம் தெரியாத வாகனம் மோதி உயிரிழந்தது 1 வயதுடைய பெண் சிறுத்தைப்பூனை ஆகும். வனவிலங்குகள் சாலையை கடப்பதால், இரவில் டிரைவர்கள் கவனமுடன் வாகனங்களை ஓட்டி செல்ல வேண்டும் என்றனர்.
    கோத்தகிரியில் கோத்தர் இன மக்களின் கம்பட்டராயர் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதில் கோத்தர் இன மக்கள் பாரம்பரிய நடனமாடி மகிழ்ந்தனர்.
    கோத்தகிரி:

    கோத்தர்கள் பெருமளவில் வாழ்ந்த மலை பகுதியாக இருந்த காரணத்தால் கோத்தர், கிரி என்ற பெயர் நாளடைவில் கோத்தகிரி என்று மாறியதாக கூறப்படுகிறது. இந்த கோத்தர் இன மக்களின் குல தெய்வமான அய்யனோர் அம்மனோர் கோவில் கோத்தகிரி நேரு பூங்கா வளாகத்தின் ஒரு பகுதியில் அமைந்துள்ளது. இந்த கோவில் நூற்றாண்டுகள் பழமை வாய்ந்ததாகும். இந்த கோவிலில் ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே ஜனவரி மாதத்தில் கம்பட்டராயர் பண்டிகை நடைபெறுவது வழக்கம்.

    இந்த ஆண்டிற்கான பண்டிகை கோத்தகிரியில் இருந்து குன்னூர் செல்லும் சாலையில் அமைந்துள்ள கோத்தர் இன மக்கள் வசிக்கும் கிராமமான புது கோத்தகிரியில் கடந்த 4-ந் தேதி பிறை கழித்தல் என்ற நிகழ்ச்சியுடன் தொடங்கியது. தொடர்ந்து இந்த பண்டிகை வருகிற 15-ந் தேதி வரை நடைபெறுகிறது. பண்டிகையை முன்னிட்டு அந்த கிராம மக்கள் தங்கள் வீடுகளை சுத்தப்படுத்தி தங்களது விரதத்தை தொடங்கினர். முதல் நாளில் கம்பட்டராயர் கோவில் முன்புறம் இரவு நேரத்தில் தீ மூட்டி அதனை சுற்றி கோத்தர் இன மக்கள் தங்களது கலாசார பாரம்பரிய நடனமாடி கம்பட்டராயரை வழிபட்டு வந்தனர்.

    நேற்று முன்தினம் நான்கு ஊர் பூசாரிகள் உள்பட விரதம் இருந்து வரும் இளைஞர்கள் தங்களது கிராமத்தில் உள்ள கோவிலின் கூரையை புதுப்பிப்பதற்காக வனப்பகுதிக்கு சென்று மூங்கில் மற்றும் இலை, தழைகளை சேகரித்து வந்தனர். இதனை தொடர்ந்து கோவிலில் உள்ள சுமார் 100 கிலோ எடைகொண்ட கல்லை விரதம் இருந்து வந்த ஊர் பூசாரிகள் உள்பட மொத்தம் 11 பேர் தங்களது வலது கை நடுவிரல்களால் மட்டும் தூக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. 11 விரல்களால் மட்டும் தூக்கப்படும் இந்த கோவில் கல் சாதாரணமாக சுமார் 4 அடி முதல் 8 அடி உயரம் வரை நிலத்திலிருந்து மேலே எழும். இந்த கோவில் கல் எழும் உயரத்தை வைத்து அந்த ஆண்டு கிராமம் எவ்வளவு செழிப்பாக இருக்கும் என்பது குறித்து தெரிந்து கொள்வது இவர்களின் ஐதீகமாக உள்ளது.

    இதனையடுத்து மதியம் 2 மணி முதல் வனப்பகுதியிலிருந்து கொண்டு வரப்பட்ட மூங்கில் உள்ளிட்ட பொருட்களை கொண்டு தங்களது கிராம கோவிலின் மேற்கூரையை புதுப்பித்தனர்.

    நேற்று காலை புது கோத்தகிரி மக்கள் அனைவரும் தங்களது கலாசார உடையணிந்து கோத்தகிரியில் உள்ள அய்யனோர் அம்மனோர் கோவிலுக்கு வந்தனர். அங்கு ஊர் பூசாரிகள் ரங்கன், கிரு‌‌ஷ்ணன், கனகராஜ், லட்சுமணன் ஆகிய 4 பேர் தலைமையில் ஆதி கோவிலின் நடை திறக்கப்பட்டு தீபம் ஏற்றி, தூபம் காட்டி கம்பட்டராயரை வழிபட்டனர்.

    இதனை தொடர்ந்து கோத்தர் இன மக்கள் அனைவரும் கடவுளை வழிபட்ட பிறகு கோவிலின் முன் புறம் உள்ள நடுகல்லை சுற்றி தங்களது பாரம்பரிய இசைக்கருவிகள் முழங்க பாரம்பரிய நடனமாடி மகிழ்ந்தனர். இந்த நிகழ்விற்கு பின் ஆண்டிற்கு ஒரு முறை மட்டுமே திறக்கப்படும் புதுகோத்தகிரியில் உள்ள கோவில் மீண்டும் பூட்டப்பட்டது.

    இன்று (திங்கட்கிழமை) புதுகோத்தகிரியில் உள்ள கோவிலில் சாமை அரிசி சாப்பாடு, பட்டாணி, அவரை, தட்டப்பயிறு ஆகியவற்றை கொண்டு உப்பு சாம்பார் செய்து அதனுடன் நெய் சேர்த்து கடவுளுக்கு படையலிட்டு வழிபட்ட பின் கிராம மக்கள் அனைவருக்கும் அதே உணவை அன்னதானமாக வழங்குகின்றனர். நாளை மற்றும் நாளை மறுநாள் தங்களது கிராம கோவிலில் பகல் நேரத்தில் ஆண்கள், மற்றும் பெண்கள் தனித்தனி குழுவாக பாரம்பரிய நடனமாடி வழிபாடும் நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.

    இது குறித்து கோவில் பூசாரிகள் தெரிவிக்கையில் வருடந்தோறும் பொங்கல் பண்டிகை சமயத்தில் எங்களது பாரம்பரிய பண்டிகையான கம்பட்டராயர் பண்டிகை கொண்டாடப்படுகிறது. புது கோத்தகிரி கோக்காலில் பண்டிகை நடைபெறுவது போலவே மாவட்டத்தில் உள்ள மொத்தம் 7 கோக்காலிலும் இந்த பண்டிகையை கோத்தர் இன மக்கள் வெகு சிறப்பாக கொண்டாடி மகிழ்வார்கள். இந்த பண்டிகையில் பங்கேற்பதற்காக வெளி மாநிலம், மற்றும் வெளி நாடுகளில் பணி புரியும் கோத்தர் இன மக்கள் கூட விடுமுறை எடுத்து பண்டிகையில் வந்து கலந்து கொள்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது என்று தெரிவித்தார்.

    கோத்தகிரி நேரு பூங்கா வளாகத்திலுள்ள குல தெய்வம் கோவிலில் கோத்தர் இன மக்கள் தங்களது பாரம்பரிய உடையணிந்து வந்து நடனமாடி மகிழ்ந்ததை பூங்காவிற்கு வந்த சுற்றுலா பயணிகளும், வெளி நாட்டினரும், பொதுமக்கள் பலரும் கண்டு ரசித்தனர்.
    நீலகிரி மாவட்டத்தில் மாவட்ட பஞ்சாயத்து, 4 ஒன்றியத்தை திமுக கைப்பற்றி உள்ளது.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தல்களில் மாவட்டத்திலுள்ள 6 மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பதவியிடங்களில் தி.மு.க. கூட்டணி 5 இடங்களிலும், அ.தி.மு.க. ஒரு இடத்திலும் வெற்றி பெற்றது. இதன்மூலம் நீலகிரி மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பதவியை தி.மு.க. கைப்பற்றியது.

    மாவட்டத்திலுள்ள ஊட்டி,குன்னூர், கோத்தகிரி, கூடலூர் ஆகிய 4 ஊராட்சி ஒன்றியங்களிலும் தி.மு.க. கூட்டணியே பெரும் பான்மை பெற்றுள்ளது. 4 ஊராட்சி ஒன்றியத் தலைவர் பதவியிடங்களும் தி.மு.க. வசமாகியுள்ளன.

    அத்துடன் மாவட்டத்திலுள்ள 35 கிராம ஊராட்சித் தலைவர் பதவியிடங்களில் அரசியல் கட்சியினருக்கான அதிகாரப்பூர்வ சின்னம் இல்லாவிட்டாலும், தி.மு.க. ஆதரவு பெற்றவர்கள் 24 ஊராட்சிகளில் தலைவர் பதவியையும், 200-க்கும் மேற்பட்டோர் கிராம ஊராட்சி உறுப்பினர் பதவியிடங்களையும் கைப்பற்றியுள்ளனர்.

    உள்ளாட்சி தேர்தலில் நேற்று நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் நீலகிரி மாவட்டத்தில் மொத்தம் உள்ள 6 மாவட்ட பஞ்சாயத்து வார்டுகளில் 5 இடங்களை தி.மு.க. கூட்டணி கைப்பற்றியது.
    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் முதல் கட்டமாக குன்னூர் மற்றும் கோத்தகிரி ஊராட்சி ஒன்றியங்களிலும், 2-ம் கட்டமாக ஊட்டி மற்றும் கூடலூர் ஊராட்சி ஒன்றியங்களிலும் நடந்தது.

    நீலகிரியில் உள்ள 4 ஊராட்சி ஒன்றியங்களில் 393 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர், 35 கிராம ஊராட்சி தலைவர், 59 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர், 6 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் ஆகிய பதவிகளுக்கு தேர்தல் நடைபெற்றது.

    இதில் கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் 89 பேர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர். நீலகிரியில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தலில் 404 பதவிகளுக்கு 1,479 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

    நேற்று நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் நீலகிரி மாவட்டத்தில் மொத்தம் உள்ள 6 மாவட்ட பஞ்சாயத்து வார்டுகளில் 5 இடங்களை தி.மு.க. கூட்டணி கைப்பற்றியது. அ.தி.மு.க ஒரு இடத்தில் வெற்றி பெற்றது. வெற்றி பெற்றவர்கள் விவரம் வருமாறு-

    1-வது வார்டு - அனிபா (தி.மு.க. கூட்டணியில் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு)

    2-வது வார்டு - பொந்தோஸ் (தி.மு.க.)

    3-வது வார்டு - சசிகலா (அ.தி.மு.க.)

    4-வது வார்டு - வனஜா (தி.மு.க.)

    5-வது வார்டு - ராஜன் (தி.மு.க.)

    6-வது வார்டு - மீனா (திமு.க.)

    வெற்றி பெற்றவர்களுக்கு தேர்தல் அதிகாரிகள் சான்றிதழ்களை வழங்கினார்.
    கூடலூர் பழைய பஸ் நிலையத்தில் திறந்து கிடக்கும் மின்சார பெட்டியால் விபத்து அபாயம் நிலவுகிறது. இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க பயணிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
    கூடலூர்:

    கூடலூர் நகரில் இருந்து ஊட்டி, மைசூருவுக்கு தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. இதுதவிர சுல்தான்பத்தேரி, மலப்புரம், கோழிக்கோடுக்கு மாநில நெடுஞ்சாலைகள் செல்கிறது. இதனால் 3 மாநிலங்களை இணைக்கும் மையமாக கூடலூர் திகழ்கிறது. இந்த நிலையில் கூடலூர் பழைய பஸ் நிலைய பகுதியில் மக்கள் நடமாட்டம் அதிகளவு காணப்படுகிறது. பள்ளிகள், கல்லூரி செயல்படும் காலங்களில் ஆயிரக்கணக்கான மாணவ-மாணவிகள் பழைய பஸ் நிலையம் வழியாக நடந்து செல்கின்றனர்.

    இதனால் மக்கள் கூட்டம் மட்டுமின்றி போக்குவரத்து நெருக்கடியும் மிகுந்து காணப்படும். இதேபோல் ஏராளமான பயணிகளும் சாலையோரம் அரசு பஸ்களுக்காக காத்து நிற்கின்றனர். கேரளா மற்றும் பந்தலூர் தாலுகா பகுதி மக்கள் அத்தியாவசிய தேவைகளுக்காக கூடலூர் வருகை தருகின்றனர். பின்னர் தங்களது பணிகளை முடித்து கொண்டு பழைய பஸ் நிலைய நிறுத்தத்தில் வந்து காத்து நிற்கின்றனர். இந்த சமயத்தில் தங்களது குழந்தைகளுடன் பஸ்சின் வருகைக்காக சாலையோரம் நிற்கின்றனர். மேலும் ஏராளமான பள்ளி மாணவ- மாணவிகளும் பஸ் நிறுத்த பகுதியில் உள்ள நடைபாதைகளில் நடக்கின்றனர்.

    இந்த பகுதியில் உள்ள மின்கம்பத்தின் அடிப்பாகத்தில் மிகவும் தாழ்வாக திறந்த நிலையில் மின்சார பெட்டி உள்ளது. இது கூடலூர் பழைய பஸ் நிலையம் முதல் கோழிக்கோடு சாலையில் இரவு தெருவிளக்குகளை எரிய வைப்பதற்கான சுவிட்ச் பெட்டியாக உள்ளது. அதாவது தரையில் இருந்து 3 அடி உயரத்தில் மின்சார பெட்டி வைக்கப்பட்டு உள்ளது. தற்போது அதன் கதவுகள் உடைந்து திறந்து கிடக்கிறது. பஸ்சுக்காக காத்து நிற்கும் பயணிகளின் குழந்தைகள் அல்லது பள்ளிகள் சென்று விட்டு வீடு திரும்பும் மாணவ-மாணவிகள் விளையாட்டாக மின்சார பெட்டியில் கை வைத்து விட வாய்ப்பு உள்ளது. இந்த சமயத்தில் மின் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.

    இதுகுறித்து பயணிகள் கூறியதாவது:-

    கூடலூர் பழைய பஸ் நிலையத்தில் மின்சார பெட்டி திறந்து கிடக்கிறது. அதனை மூட நடவடிக்கை எடுக்கக்கோரி மின்வாரியத்தின் கவனத்துக்கு கொண்டு செல்லபட்டது. ஆனால் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எப்போது தாழ்வான பகுதியில் மின்சார பெட்டி திறந்தே கிடக்கிறது. எனவே அசம்பாவித சம்பவங்கள் நடைபெறும் முன் விரைவாக தடுப்பு நடவடிக்கைகளை மின்வாரிய துறையினர் மேற்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
    ×