என் மலர்
செய்திகள்

கம்பட்டராயர் பண்டிகையையொட்டி கோத்தர் இன மக்கள் பாரம்பரிய நடனம் ஆடி மகிழ்ந்தபோது எடுத்த படம்.
கோத்தகிரியில் கோத்தர் இன மக்களின் கம்பட்டராயர் பண்டிகை கோலாகலம்
கோத்தகிரியில் கோத்தர் இன மக்களின் கம்பட்டராயர் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதில் கோத்தர் இன மக்கள் பாரம்பரிய நடனமாடி மகிழ்ந்தனர்.
கோத்தகிரி:
கோத்தர்கள் பெருமளவில் வாழ்ந்த மலை பகுதியாக இருந்த காரணத்தால் கோத்தர், கிரி என்ற பெயர் நாளடைவில் கோத்தகிரி என்று மாறியதாக கூறப்படுகிறது. இந்த கோத்தர் இன மக்களின் குல தெய்வமான அய்யனோர் அம்மனோர் கோவில் கோத்தகிரி நேரு பூங்கா வளாகத்தின் ஒரு பகுதியில் அமைந்துள்ளது. இந்த கோவில் நூற்றாண்டுகள் பழமை வாய்ந்ததாகும். இந்த கோவிலில் ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே ஜனவரி மாதத்தில் கம்பட்டராயர் பண்டிகை நடைபெறுவது வழக்கம்.
இந்த ஆண்டிற்கான பண்டிகை கோத்தகிரியில் இருந்து குன்னூர் செல்லும் சாலையில் அமைந்துள்ள கோத்தர் இன மக்கள் வசிக்கும் கிராமமான புது கோத்தகிரியில் கடந்த 4-ந் தேதி பிறை கழித்தல் என்ற நிகழ்ச்சியுடன் தொடங்கியது. தொடர்ந்து இந்த பண்டிகை வருகிற 15-ந் தேதி வரை நடைபெறுகிறது. பண்டிகையை முன்னிட்டு அந்த கிராம மக்கள் தங்கள் வீடுகளை சுத்தப்படுத்தி தங்களது விரதத்தை தொடங்கினர். முதல் நாளில் கம்பட்டராயர் கோவில் முன்புறம் இரவு நேரத்தில் தீ மூட்டி அதனை சுற்றி கோத்தர் இன மக்கள் தங்களது கலாசார பாரம்பரிய நடனமாடி கம்பட்டராயரை வழிபட்டு வந்தனர்.
நேற்று முன்தினம் நான்கு ஊர் பூசாரிகள் உள்பட விரதம் இருந்து வரும் இளைஞர்கள் தங்களது கிராமத்தில் உள்ள கோவிலின் கூரையை புதுப்பிப்பதற்காக வனப்பகுதிக்கு சென்று மூங்கில் மற்றும் இலை, தழைகளை சேகரித்து வந்தனர். இதனை தொடர்ந்து கோவிலில் உள்ள சுமார் 100 கிலோ எடைகொண்ட கல்லை விரதம் இருந்து வந்த ஊர் பூசாரிகள் உள்பட மொத்தம் 11 பேர் தங்களது வலது கை நடுவிரல்களால் மட்டும் தூக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. 11 விரல்களால் மட்டும் தூக்கப்படும் இந்த கோவில் கல் சாதாரணமாக சுமார் 4 அடி முதல் 8 அடி உயரம் வரை நிலத்திலிருந்து மேலே எழும். இந்த கோவில் கல் எழும் உயரத்தை வைத்து அந்த ஆண்டு கிராமம் எவ்வளவு செழிப்பாக இருக்கும் என்பது குறித்து தெரிந்து கொள்வது இவர்களின் ஐதீகமாக உள்ளது.
இதனையடுத்து மதியம் 2 மணி முதல் வனப்பகுதியிலிருந்து கொண்டு வரப்பட்ட மூங்கில் உள்ளிட்ட பொருட்களை கொண்டு தங்களது கிராம கோவிலின் மேற்கூரையை புதுப்பித்தனர்.
நேற்று காலை புது கோத்தகிரி மக்கள் அனைவரும் தங்களது கலாசார உடையணிந்து கோத்தகிரியில் உள்ள அய்யனோர் அம்மனோர் கோவிலுக்கு வந்தனர். அங்கு ஊர் பூசாரிகள் ரங்கன், கிருஷ்ணன், கனகராஜ், லட்சுமணன் ஆகிய 4 பேர் தலைமையில் ஆதி கோவிலின் நடை திறக்கப்பட்டு தீபம் ஏற்றி, தூபம் காட்டி கம்பட்டராயரை வழிபட்டனர்.
இதனை தொடர்ந்து கோத்தர் இன மக்கள் அனைவரும் கடவுளை வழிபட்ட பிறகு கோவிலின் முன் புறம் உள்ள நடுகல்லை சுற்றி தங்களது பாரம்பரிய இசைக்கருவிகள் முழங்க பாரம்பரிய நடனமாடி மகிழ்ந்தனர். இந்த நிகழ்விற்கு பின் ஆண்டிற்கு ஒரு முறை மட்டுமே திறக்கப்படும் புதுகோத்தகிரியில் உள்ள கோவில் மீண்டும் பூட்டப்பட்டது.
இன்று (திங்கட்கிழமை) புதுகோத்தகிரியில் உள்ள கோவிலில் சாமை அரிசி சாப்பாடு, பட்டாணி, அவரை, தட்டப்பயிறு ஆகியவற்றை கொண்டு உப்பு சாம்பார் செய்து அதனுடன் நெய் சேர்த்து கடவுளுக்கு படையலிட்டு வழிபட்ட பின் கிராம மக்கள் அனைவருக்கும் அதே உணவை அன்னதானமாக வழங்குகின்றனர். நாளை மற்றும் நாளை மறுநாள் தங்களது கிராம கோவிலில் பகல் நேரத்தில் ஆண்கள், மற்றும் பெண்கள் தனித்தனி குழுவாக பாரம்பரிய நடனமாடி வழிபாடும் நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.
இது குறித்து கோவில் பூசாரிகள் தெரிவிக்கையில் வருடந்தோறும் பொங்கல் பண்டிகை சமயத்தில் எங்களது பாரம்பரிய பண்டிகையான கம்பட்டராயர் பண்டிகை கொண்டாடப்படுகிறது. புது கோத்தகிரி கோக்காலில் பண்டிகை நடைபெறுவது போலவே மாவட்டத்தில் உள்ள மொத்தம் 7 கோக்காலிலும் இந்த பண்டிகையை கோத்தர் இன மக்கள் வெகு சிறப்பாக கொண்டாடி மகிழ்வார்கள். இந்த பண்டிகையில் பங்கேற்பதற்காக வெளி மாநிலம், மற்றும் வெளி நாடுகளில் பணி புரியும் கோத்தர் இன மக்கள் கூட விடுமுறை எடுத்து பண்டிகையில் வந்து கலந்து கொள்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது என்று தெரிவித்தார்.
கோத்தகிரி நேரு பூங்கா வளாகத்திலுள்ள குல தெய்வம் கோவிலில் கோத்தர் இன மக்கள் தங்களது பாரம்பரிய உடையணிந்து வந்து நடனமாடி மகிழ்ந்ததை பூங்காவிற்கு வந்த சுற்றுலா பயணிகளும், வெளி நாட்டினரும், பொதுமக்கள் பலரும் கண்டு ரசித்தனர்.

Next Story