search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    போலியோ சொட்டு மருந்து முகாம்
    X
    போலியோ சொட்டு மருந்து முகாம்

    நீலகிரி மாவட்டத்தில் 19-ந்தேதி 774 மையங்களில் போலியோ சொட்டு மருந்து முகாம்

    நீலகிரி மாவட்டத்தில் 19-ந்தேதி 774 மையங்களில் போலியோ சொட்டு மருந்து முகாம் நடத்தப்படும் என்று அம்மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா கூறி உள்ளார்.
    ஊட்டி:

    நீலகிரி மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியதாவது:-

    தீவிர போலியோ சொட்டு மருந்து முகாம் பணிகளுக்காக அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார மையங்கள், தனியார் மருத்துவமனைகள், பள்ளிக்கூடங்கள், சத்துணவு மையங்கள், அங்கன்வாடி மையங்கள், சத்திரங்கள் மற்றும் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகள் ஆகிய இடங்களில் முகாம்கள் நடைபெற உள்ளது.

    அருகாமையிலுள்ள மாவட்டங்களின் எல்லை பகுதிகள், குடிசை பகுதிகள், பணி நிமித்தமாக இடம்பெயர் மக்கள் வாழும் பகுதிகள் ஆகிய இடங்களில் சிறப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவ்வாறு தேர்வு செய்யப்பட்டுள்ள 774 மையங்களில், 5 வயதிற்குட்பட்ட 41,858 குழந்தைகளுக்கு இச்சொட்டு மருந்து வழங்கப்பட உள்ளது. இப்பணிகளின் பொது சுகாதாரத் துறை பணியாளர்களுடன் பிற துறை பணியாளர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் ரோட்டரி சங்கங்கள் என முகாம் ஒன்றுக்கு 4 பேர்கள் வீதம் பல்வேறு துறைகளை சேர்ந்த 3096 பணியாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

    மேலும் பஸ் நிலையங்கள், ரெயில் நிலையங்கள், கோவில்கள் மற்றும் மக்கள் கூடுமிடங்களில் உள்ள குழந்தைகளுக்கு நடமாடும் குழுக்கள் மூலம் சொட்டு மருந்து வழங்கப்படும். ஏதேனும் காரணங்களுக்காக விடுபடும் குழந்தைகள் அடுத்து வரும் 2 நாட்களில் இப்பணியாளர்கள் மூலம் வீடு வீடாக சென்று பார்வையிடப்பட்டு சொட்டு மருந்து வழங்கப்பட உள்ளது.

    அரசால் வழங்கப்படும் போலியோ சொட்டு மருந்து மிகவும் தரமானது. பாதுகாப்பானது உலக சுகாதார நிறுவனத்தின் அங்கீகாரம் பெற்றது. போலியோ சொட்டு மருந்து வழங்குவதன் மூலம் குழந்தைகளுக்கு எந்த விதமான பின் விளைவுகளும் ஏற்படாது.

    எனவே, பெற்றோர்கள் தங்களின் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு ஏற்கனவே எத்தனை முறை போலியோ சொட்டு மருந்து கொடுத்திருந்தாலும் போலியோ சொட்டு மருந்து முகாம் 19-ந்தேதி அன்று காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை முகாம்களுக்கு அழைத்து சென்று போலியோ சொட்டு மருந்து கொடுத்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    Next Story
    ×