என் மலர்
நீலகிரி
- ஊட்டியில் இதமான காலநிலையை அனுபவிக்கவும், சுற்றுலா தலங்களை கண்டு ரசிக்கவும் சுற்றுலா பயணிகள் அதிகம் பேர் வருகின்றனர்.
- பூங்காவில் பூத்து குலுங்கும் பல வண்ண, வண்ண மலர்களை கண்டு ரசிக்கின்றனர்.
ஊட்டி:
நீலகிரி மாவட்டத்திற்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் குடும்பம், குடும்பமாக வருவது தொடர்கின்றது.
குளு, குளு காலநிலை நிலவும் ஊட்டியில் இதமான காலநிலையை அனுபவிக்கவும், சுற்றுலா தலங்களை கண்டு ரசிக்கவும் சுற்றுலா பயணிகள் அதிகம் பேர் வருகின்றனர்.
கேரளா, கர்நாடகா போன்ற வெளி மாநிலங்கள் மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர்.
பள்ளிகள் திறந்த பின்னரும் கனிசமான அளவில் சுற்றுலா பயணிகளின் வருகை உள்ளது. கடந்த சில தினங்களாக ஊட்டியில் தினமும் மழை பெய்து வருகிறது.
ஆனால் மழையையும் பொருட்படுத்தாமல் சுற்றுலா பயணிகள் குடை பிடித்தபடியும், மழையில் நனைந்து கொண்டும் சுற்றுலா தலங்களை ரசித்து வருகின்றனர்.
ஊட்டி அரசு தாவிரவியல் பூங்காவுக்கு வரும் சுற்றுலா பயணிகள் கொட்டும் மழையிலும் குடைபிடித்தபடி, பூங்காவில் பூத்து குலுங்கும் பல வண்ண, வண்ண மலர்களை கண்டு ரசிக்கின்றனர்.
மேலும் சுற்றுலா பயணிகள் மலர்களின் முன்பு நின்று செல்பி மற்றும் குழு புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.f
- வனப்பகுதிகளில் காட்டு யானை, சிறுத்தை, கரடி, காட்டெருமை உள்பட பல வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன.
- தினமும் பகல் நேரங்களில் குரங்குகளும், இரவு நேரங்களில் காட்டு யானைகள் நடமாட்டமும் அதிகரித்துள்ளது.
ஊட்டி:
நீலகிரி மாவட்டம் தேவாலா அடுத்துள்ளது. வாழவயல் கிராமம். இந்த கிராமத்தையொட்டி வனப்பகுதிகளில் காட்டு யானை, சிறுத்தை, கரடி, காட்டெருமை உள்பட பல வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன.
வனவிலங்குகள் அவ்வப்போது உணவு, தண்ணீருக்காக ஊருக்குள் வருவது வாடிக்கையாக உள்ளது. இதனை தடுக்க வனத்துறையினரும் நடவடிக்ைக எடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று இரவு வனத்தை விட்டு வெளியேறிய ஒற்றை காட்டு யானை ஒன்று வாழவயல் கிராம பகுதிகளுக்குள் புகுந்தது. வெகுநேரம் குடியிருப்பு பகுதியிலேயே சுற்றி திரிந்த யானை அங்கு வசித்து வரும் முத்தையா என்பவரது வீட்டின் அருகே சென்றது.
பின்னர் அந்த வீட்டில் இருந்த குளியல் அறையை உடைத்து சேதப்படுத்தியது. சத்தம் கேட்டு முத்தையா மற்றும் குடும்பத்தினர் எழுந்து பார்த்தனர். அப்போது யானை நின்றதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. வனத்துறையினரும் விரைந்து யானையை வனத்திற்குள் விரட்டினர்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:- தினமும் பகல் நேரங்களில் குரங்குகள் தொல்லை கொடுத்து வருகிறது. தற்போது கடந்த சில வாரங்களாக இரவு நேரங்களில் காட்டு யானைகள் நடமாட்டமும் அதிகரித்துள்ளது. இதனால் வீடுகளை விட்டு வெளியில் வரவே பொதுமக்கள் மிகவும் அச்சப்படுகின்றனர்.
எனவே ஊருக்குள் யானை வருவதை தடுக்க இரவு நேரங்களில் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என்று, கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கோத்தகிரி வருவாய் வட்டாட்சியர் அலுவலகம் முன் வாகன பிரசாரத்தில் ஈடுபட்டனர்.
- பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 4½ லட்சம் பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும்.
அரவேணு:
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில், பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கோத்தகிரி வருவாய் வட்டாட்சியர் அலுவலகம் முன் வாகன பிரசாரத்தில் ஈடுபட்டனர். இதற்கு சங்க மாநில துணை தலைவர் கிறிஸ்டோபர் தலைமை தாங்கினார்.
மாநில பொருளாளர் பாஸ்கரன், மாவட்ட தலைவர் சலீம், பொருளாளர் ஆனந்தன் ஆகியோர் கோரிக்கைகள் குறித்து விளக்கி பேசினர். பிரசாரத்தின் போது புதிய ஓய்வூதிய திட்டத்தை திரும்ப பெற வேண்டும்.
சாலை பணியாளர்களின் பணி நீக்க காலத்தை பணி வரன் முறை செய்ய வேண்டும். மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் அகவிலைப்படி உயர்வை போல மாநில அரசு ஊழியர்களுக்கும் வழங்க வேண்டும். 21 மாத ஊதிய மாற்ற நிலுவைத் தொகையை உடனே வழங்க வேண்டும்.
பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 4½ லட்சம் பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். இதில் ஏராளமான அரசு ஊழியர்கள் கலந்துகொண்டனர். அவர்கள் பணி சுமை அவலநிலை குறித்து விளக்கினார்
- குழந்தைகளின் திறமைகளை கண்டறிந்து ஊக்குவிக்கும் பொருட்டு ஆன்லைன் வழியாக போட்டி நடைபெற்றது.
- போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு மற்றும் பாராட்டு விழா நடைபெற்றது.
ஊட்டி:
நீலகிரி மாவட்டம் ஊட்டியில் தாம்பட்டி விவேகானந்தர் இளைஞர் நற்பணி மன்றம் சார்பில் குழந்தைகளின் திறமைகளை கண்டறிந்து ஊக்குவிக்கும் பொருட்டு ஆன்லைன் வழியாக போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் 65 ஊர்களை சேர்ந்த குழந்தைகள் போட்டியிட்டனர்.
போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு மற்றும் பாராட்டு விழா ஊட்டி சேரிங் கிராஸில் உள்ள ஹார்ட்டிகள்சர் காம்ப்ளெக்ஸில் நடைபெற்றது.இதில் சிறப்பு விருந்தினராக தோட்டகலை உதவி இயக்குனர் சிபிலா மேரி கலந்து கொண்டு குழந்தைகளுக்கு பரிசுகளை வழங்கி பாரட்டினார். நிகழ்ச்சியில் தாம்பட்டி ஊர் பொதுமக்கள் மற்றும் பலர் பங்கேற்றனர்.
- நாட்டில் நடக்கும் கொலைகளை விட சாலை விபத்துகளில் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.
- அனைத்து வீடுகளிலும் குழந்தைகள் சொல்வதை பெற்றோர்கள் கேட்பார்கள். போக்குவரத்து விதிமுறைகளை முறையாக கடைபிடித்தாலே சாலை விபத்துகள் அடியோடு குறையும்.
மஞ்சூர்:
நீலகிரி மாவட்ட காவல்துறை சார்பில் சாலைப்போக்குவரத்து விழிப்புணர்வு முகாம் மஞ்சூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.
மாவட்ட எஸ்.பி.ஆஷிஸ்ராவத், டி.எஸ்.பி.மகேஸ்வரன், மஞ்சூர் இன்ஸ்பெக்டர் துரை ராஜ், மாவட்ட குற்றபிரிவு இன்ஸ்பெக்டர் சுபாஷினி ஆகியோர் முன்னிலை வகித்தார்கள். மஞ்சூர் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் ரவிக்குமார் வரவேற்றார்.
இதில் மேற்கு மண்டல டி.ஐ.ஜி.முத்துசாமி கலந்து கொண்டு பேசியதாவது:- கடந்த 2021-ம் ஆண்டில் மட்டும் சாலை விபத்துகள் மூலம் தமிழ்நாட்டில் 16ஆயிரத்து 912 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது. நாட்டில் நடக்கும் கொலைகளை விட சாலை விபத்துகளில் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.
போக்குவரத்து விதிகளை கடைபிடிக்காததாலேயே விபத்துகள் அதிகம் ஏற்படுகிறது. சாலை விபத்துகளில் உயிரிழக்கும் குடும்பங்களின் நிலை மிகவும் கவலைகிடமானது. சமுதாயத்தில் மாற்றத்தை ஏற்படுத்துவது மாணவ சமுதாயத்திடம் உள்ளது.
அனைத்து வீடுகளிலும் குழந்தைகள் சொல்வதை பெற்றோர்கள் கேட்பார்கள். போக்குவரத்து விதிமுறைகளை முறையாக கடைபிடித்தாலே சாலை விபத்துகள் அடியோடு குறையும். சாலை போக்குவரத்து விதிமுறைகள் குறித்து மாணவர்கள் தங்களது பெற்றோர்களிடம் கூறி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.
இதை தொடர்ந்து சாலைப்போக்குவரத்து குறித்து கட்டுரை, பேச்சு, ஓவியப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு டி.ஐ.ஜி.முத்துசாமி பரிசுகள் வழங்கினார். மேலும் தொலைதுார பகுதிகளில் இருந்து பள்ளிக்கு அரசு பஸ்சில் வரும் மாணவிகள் இருவருக்கு புத்தகம் வழங்கப்பட்டது. மேலும் மாணவர் யஸ்வந்தின் விழிப்புணர்வு கட்டுரையில் எழுதிய 'தடுக்கப்பட வேண்டியது விபத்து, தடுக்காவிட்டால் ஆபத்து' என்ற வாசகம் தன்னை மிகவும் கவர்ந்துள்ளது.
எனவே மாணவர் யஸ்வந்தை கவுரவப்படு த்தும் வகையில் ஊட்டி நகர் முழுவதும் காவல்துறை சார்பில் விழிப்புணர்வு வாசகமாக எழுதி வைக்க வேண்டும் என மாவட்ட எஸ்.பி.ஆஷிஸ்ராவத்திடம் கேட்டுக்கொண்டார். இதை தொடர்ந்து மஞ்சூர் பஜாரில் நடந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு காவல்துறை சார்பில் இலவசமாக ஹெல்மெட்டுகளை டி.ஐ.ஜி.முத்துசாமி வழங்கினார்.
முன்னதாக மஞ்சூர் காவல் நிலையத்தை ஆய்வு செய்த டி.ஐ.ஜி முத்துசாமியை மஞ்சூர் இன்ஸ்பெக்டர் துரைராஜ் தலைமையில் போலீசார் அணிவகுப்பு மரியாதையுடன் வரவேற்றனர். தொடர்ந்து காவல்நிலையத்தில் பராமரிக்கப்பட்டு வரும் ஆவணங்கள், பதிவேடுகள் மற்றும் குற்ற வழக்குக் கோப்புகளை ஆய்வு செய்து கண்டுபிடிக்காத வழக்குகளை கண்டு பிடிக்குமாறும், நிலுவையில் உள்ள நீண்ட கால வழக்குகளை விரைவில் முடிக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் அறிவுறுத்தினார். இதேபோல் இரவு ரோந்து பணியை முறையாக செய்து
குற்றங்களை தடுக்க வேண்டும். மனு மீதான விசாரணை செம்மையாக செய்ய வேண்டும். மனுதாரர்களிடம் கனிவுடன் நடந்துகொள்ள வேண்டும்.பொதுமக்களிடம் நல்ல முறையில் கண்ணியமான வார்த்தைகளை பயன்படுத்தி பேச வேண்டும் என்றும் கூறினார். இதை தொடர்ந்து போலீஸ் நிலையத்தில் பணியாற்றுபவர்களிடம் குறைகளை கேட்டார்.
- உணவு, தண்ணீர் தேடி வனப்பகுதியில் இருந்து வெளியே வரும் கரடிகள், அவ்வப்போது குடியிருப்பு பகுதிகளிலும் புகுந்து விடுகின்றன.
- கோத்தகிரி அருகே கன்னிகா தேவி காலனி கிராமத்தில் 2 குட்டியுடன் கரடி ஒன்று உலா வந்தது.
அரவேணு:
கோத்தகிரி சுற்றுவட்டாரப் பகுதிகளில் கரடிகளின் நடமாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
உணவு மற்றும் தண்ணீர் தேடி வனப்பகுதியில் இருந்து வெளியே வரும் கரடிகள், அவ்வப்போது குடியிருப்பு பகுதிகளிலும் புகுந்து விடுகின்றன. இதனால் பொதுமக்கள் பெரும் சிரமத்தில் உள்ளனர்.
இந்தநிலையில் நேற்று மாலை கோத்தகிரி அருகே கன்னிகா தேவி காலனி கிராமத்தில் 2 குட்டியுடன் கரடி ஒன்று உலா வந்தது. இதனால் மக்கள் அச்சமடைந்தனர்.
சற்று தொலைவிலேயே அக்கிராம மக்கள் பாதுகாப்பாக நின்று கொண்டு தங்களது செல்போனில் கரடிகளை வீடியோ எடுத்தனர். தொடர்ந்து குடியிருப்பு பகுதிகளுக்குள் குட்டியுடன் கரடிகள் உலா வருவது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், கடந்த சில நாட்களாக இந்த பகுதியில் கரடிகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது.
இதனால் ஒருவித அச்சத்துடனேயே வசித்து வருகிறோம். எனவே ஊருக்குள் குட்டியுடன் உலா வரும் கரடிகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- குன்னூரில் உள்ள லேம்ஸ்ராக், டால்பினோஸ் காட்சி முனைகளிலும் கடுமையான பனிமூட்டம் காணப்பட்டது.
- கடும் குளிா் காரணமாக பல்வேறு தனியாா் தேயிலைத் தோட்டங்களில் தொழிலாளா்கள் பணிக்குச் செல்லாமல் வீடுகளில் முடங்கினா்.
ஊட்டி:
நீலகிரி மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றான குன்னூரில் உள்ள லேம்ஸ்ராக், டால்பினோஸ் போன்ற காட்சி முனைககள் உள்ளது.
இதனை காண நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் இங்கு வந்த வண்ணம் இருப்பர்.
இங்கு நிலவும் இதமான காலநிலையையும், இயற்கை எழில் கொஞ்சும் வனப்பகுதியையும் சுற்றுலா பயணிகள் கண்டு ரசிப்பார்கள்.
கடந்த சில நாட்களாக மாவட்டத்தில் மழை பெய்து வருகிறது. இதனால் அனைத்து இடங்களிலும் கடும் பனிமூட்டம் நிலவி வருகிறது.
நேற்று குன்னூரில் உள்ள லேம்ஸ்ராக், டால்பினோஸ் காட்சி முனைகளிலும் கடுமையான பனிமூட்டம் காணப்பட்டது. இதன் காரணமாக காட்சி முனைகளை காணமுடியாமல் சுற்றுலாப் பயணிகளில் ஏமாற்றத்துடன் திரும்பினா்.
குன்னூரில் இருந்து காட்சி முனைகளை காண்பதற்காக செல்லும் சாலைகளில் அடா்ந்த பனி மூட்டம் காணப்பட்டதால் வாகன ஓட்டிகள் வாகனங்களை இயக்க முடியாமல் திணறினா்.
காலை முதல் குளிா் அதிகரித்துக் காணப்பட்டதால் பொதுமக்களின் இயல்பு வாழக்கை பாதிக்கப்பட்டது.
மேலும், கடும் குளிா் காரணமாக பல்வேறு தனியாா் தேயிலைத் தோட்டங்களில் தொழிலாளா்கள் பணிக்குச் செல்லாமல் வீடுகளில் முடங்கினா்.
மூடுபனி காரணமாக முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி வாகனங்களை இயக்க வேண்டும் என்று காவல் துறையினா் அறிவுறுத்தினா்.
- அடர்ந்த வனப்பகுதியையொட்டி உள்ள சாலையில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகரித்து உள்ளது.
- சுமார் அரைமணி நேரத்துக்கும் மேலாக சாலையில் சுற்றிய காட்டு யானைகள் அதன்பின்னர் சாலையில் இருந்து இறங்கி அடர்ந்த வனப்பகுதிக்குள் சென்றது.
ஊட்டி:
நீலகிரி மாவட்டம் மஞ்சூரில் இருந்து கெத்தை, முள்ளி வழியாக கோவை மாவட்டம் காரமடைக்கு சாலை செல்கிறது.
சமீப நாட்களாக அடர்ந்த வனப்பகுதியையொட்டி உள்ள சாலையில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகரித்து உள்ளது.
இந்தநிலையில் நேற்று மாலை கோவையில் இருந்து மஞ்சூருக்கு அரசு பஸ் புறப்பட்டு சென்றது. பஸ்சில் 40 பயணிகள் இருந்தனர். கெத்தை அருகே அரசு பஸ் சென்றபோது, தனது குட்டியுடன் சென்ற யானைக்கு பக்கபலமாக சென்ற 4 காட்டு யானைகள் பஸ்சை திடீரென வழிமறித்து சாலையின் குறுக்கே நின்றது. இதனால் டிரைவர் சிறிது தொலைவுக்கு முன்பே பஸ்சை நிறுத்தினார்.
யானைகள் வழிமறித்ததால் பயணிகள் அச்சம் அடைந்தனர். சுமார் அரைமணி நேரத்துக்கும் மேலாக சாலையில் சுற்றிய காட்டு யானைகள் அதன்பின்னர் சாலையில் இருந்து இறங்கி அடர்ந்த வனப்பகுதிக்குள் சென்றது.
அதன் பின்னர் அரசு பஸ் அங்கிருந்து மஞ்சூருக்கு சென்றது. இந்த பகுதியில் காட்டு யானைகள் நடமாட்டம் உள்ளதால், வாகனங்களை மிகவும் எச்சரிக்கையுடன் கவனமாக இயக்க வேண்டும் என்று வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.
கோவை-மஞ்சூர் சாலையில் சுற்றி திரியும் காட்டு யானைகள் கூட்டத்தை காணலாம்
- பொன்னானி, சேரம்பாடி, சோலாடி ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
- தூர்வாரும் பணியில் ஈடுபட்ட பொக்லைன் எந்திரம் வெள்ளத்திலும், சேற்றிலும் சிக்கியது
ஊட்டி:
பந்தலூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளான உப்பட்டி, பொன்னானி, குந்தலாடி, பிதிர்காடு, நெலாக்கோட்டை, தேவாலா, சேரம்பாடி, எருமாடு உள்ளிட்ட பகுதிகளில் நேற்று முன்தினம் பலத்த மழை பெய்தது.
இதனால் பொன்னானி, சேரம்பாடி, சோலாடி ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. அய்யன்கொல்லி-கொளப்பள்ளி சாலை, பந்தலூர்-கூடலூர் சாலையில் உள்ள குழிகளில் தண்ணீர் தேங்கியது. இதனால் வாகனங்கள் குழிகளில் சிக்கி விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டு வருகிறது.
இந்தநிலையில் பொன்னானி ஆற்றில் வெள்ளம் ஏற்பட்டு, அருகே உள்ள ஊருக்குள் வெள்ளம் புகுந்தது. அங்குள்ள வீடுகளுக்குள் தண்ணீர் புகும் அபாயம் உள்ளது. இதை தடுக்க வேளாண்மை பொறியியல் துறை சார்பில், பொக்லைன் எந்திரம் மூலம் பொன்னானி ஆற்றை தூர்வாரும் பணி நடந்து வருகிறது. பொக்லைன் எந்திரம் நேற்று முன்தினம் பலத்த மழையால் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
அப்போது தூர்வாரும் பணியில் ஈடுபட்ட பொக்லைன் எந்திரம் வெள்ளத்திலும், சேற்றிலும் சிக்கியது. இதையடுத்து மற்றொரு பொக்லைன் எந்திரம் வரவழைக்கப்பட்டு, கரையோர மண் அகற்றப்பட்டது. பின்னர் சில மணி நேர போராட்டத்திற்கு பிறகு எந்திரம் மீட்கப்பட்டது.
இடி மற்றும் பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதனால் சில இடங்களில் மின்தடை ஏற்பட்டது. மேலும் கிராமங்கள் இருளில் மூழ்கியது. இதன் காரணமாக பி.எஸ்.என்.எல். தொலை தொடர்பு துண்டிக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் இருளிலும், பி.எஸ்.என்.எல். சேவை கிடைக்காமலும் அவதியடைந்தனர். பந்தலூர் சுற்றுப்புற பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது.
- தமிழக அரசு, நீலகிரி மாவட்ட சதுரங்க சங்கத்தின் சார்பில் கோத்தகிரி ரிவர் சைடு பப்ளிக் பள்ளியில் சதுரங்க போட்டி நடைபெற்றது.
- 9 சுற்றுகளாக நடைபெற்ற இப்போட்டியில் ஒரு சுற்றிற்கு 25 நிமிடங்கள் அளிக்கப்பட்டு விளையாடினர்.
அரவேணு:
சென்னை மகாபலி புரத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற உள்ளது. அதனை முன்னிட்டு தமிழக அரசு, நீலகிரி மாவட்ட சதுரங்க சங்கத்தின் சார்பில் கோத்தகிரி ரிவர் சைடு பப்ளிக் பள்ளியில் சதுரங்க போட்டி நடைபெற்றது.
இந்த போட்டியில் நீலகிரி மாவட்டத்தில் கல்வி பயிலும் 15 வயதிற்கு உட்பட்ட மாணவ, மாணவிகள் 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இந்த போட்டி 2 நாட்கள் நடைபெற்றது.
மொத்தம் 9 சுற்றுகளாக நடைபெற்ற இப்போட்டியில் ஒரு சுற்றிற்கு 25 நிமிடங்கள் அளிக்கப்பட்டு விளையாடினர்.இதில் வெற்றி பெறும் மாணவ, மாணவிகளுக்கு பரிசு கோப்பைகள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.
அத்துடன் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளை சென்னையில் நடைபெறும் ெசஸ் ஒலிம்பியாட் போட்டியை காணவும் அழைத்து செல்லப்பட உள்ளதாக அதன் ஒருங்கிணைப்பாளர்கள் கூறினர். போட்டிக்கான ஏற்பாடுகளை அகில இந்தியா சதுரங்க சங்கம் மற்றும் தமிழ்நாடு சதுரங்க சங்கம் சார்பில் சிறப்பாக செய்யப்பட்டிருந்தது.
இந்த போட்டியானது மாணவர்களின் அறிவுத்திறன், ஞாபக சக்தியை அதிகரிக்கும் எனவும், மாணவர்களின் எதிர்கால கல்வி சிறப்பாக அமையும் என்று ரிவர் சைடு பள்ளியின் தாளாளர் கந்தசாமி கூறினார்.
- மழை காலத்தில் கால்வாய் அடைத்து கொள்வதும், சாலை முழுவதும் மண் மற்றும் குப்பைகள் தேங்குவதும் தொடர்கதையாக உள்ளது.
- 2 நாட்களாக பெய்து வரும் மழை காரணமாக கீழ் கோடப்பமந்து பகுதிகளில் மழை வெள்ளம் வீடுகளில் புகுந்தது.
ஊட்டி:
நீலகிரி மாவட்டம் ஊட்டி கீழ் கோடப்பமந்து பகுதியில் மழை காலத்தின் பொழுது கால்வாய் அடைத்து கொள்வதும், அதனால் சாலை முழுவதும் மண் மற்றும் குப்பைகள் தேங்குவதும் தொடர்கதையாக உள்ளது.இதனால் அப்பகுதியில் உள்ள வீடுகளில் மழைநீர் புகுந்து சேதம் அடைவதும் நடந்து வருகிறது.
இதனை நகராட்சி துறையினர் அவ்வப்பொழுது தூய்மைப்படுத்தி, சரிசெய்து வந்தாலும் மழையின் பொழுது மீண்டும் அதே பிரச்சனை ஏற்படுகின்றது. கடந்த 2 நாட்களாக பெய்து வரும் மழை காரணமாக கீழ் கோடப்பமந்து பகுதிகளில் மழை வெள்ளம் வீடுகளில் புகுந்தது.
மேலும் அப்பகுதியில் உள்ள கால்வாய்களை அடைத்து, கால்வாயில் அடித்து வரப்பட்ட குப்பைகள் மற்றும் மண், கற்கள் ஆகியவை அப்பகுதி சாலையில் தேங்கியது. அதனை நேற்று கீழ் கோடப்பமந்து ஸ்ரீ கணபதி இளைஞர் மன்றத்தை சேர்ந்த கனேஷ், குமாரவேல், செந்தில்குமார், நந்தகுமார், கணபதி உள்ளிட்டோர் கால்வாய் அடைப்பு மற்றும் சாலையை சுத்தப்படுத்தி சீர் செய்தனர். இதனை அப்பகுதி மக்கள் வெகுவாக பாராட்டினர்.
- ஆரம்ப கட்ட தீ விபத்தை தடுப்பதற்கு எல்லா இடங்களிலும் தீயணைப்பு கருவிகள் தயார் நிலையில் உள்ளன
- தனியார் நட்சத்திர ஓட்டலில் நடந்த தீத்தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சியில் தீயணைப்பு துறையினர் செயல் விளக்கம் அளித்தனர்.
ஊட்டி:
ஊட்டியில் தனியார் நட்சத்திர ஓட்டலில் தீத்தடுப்பு ஒத்திகை நடைபெற்றது. இதில் தீயணைப்பு துறையினர் செயல் விளக்கம் அளித்தனர். இதில் மாவட்ட தீயணைப்பு அதிகாரி நாகராஜ், நிலைய அலுவர் பிரேம் தலைமையில் 12 பேர் அடங்கிய குழுவினர் கலந்து கொண்டு செயல்முறை விளக்கம் அளித்தனர்.
இதுகுறித்து தீயணைப்பு துறையினர் கூறுகையில், ஆரம்ப கட்ட தீ விபத்தை தடுப்பதற்கு எல்லா இடங்களிலும் தீயணைப்பு கருவிகள் தயார் நிலையில் உள்ளன. ஆனால் அவற்றை முறையாக பயன்படுத்த பெரும்பாலானோருக்கு தெரியாததால் தீயணைப்பு துறையினர் வருவதற்குள் தீ கட்டுக்கடங்காமல் பரவி விடுகிறது.
எனவே தீ விபத்து ஏற்பட்டால் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்து ஆஸ்பத்திரி டாக்டர்கள், நர்சுகள் மற்றும் ஊழியர்களுக்கு செயல்விளக்கம் அளிக்கப்பட்டது என்றார்.
இதில் ஓட்டல் நிர்வாகிகள், பணியாளர்கள் என 50 பேர் கலந்து கொண்டனர். தீயணைப்பு துறையினரீன் இந்த தீத்தடுப்பு ஒத்திகை தங்களுக்கு மிகவும் பயன் உள்ளதாக அமைந்ததாக அவர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்






