என் மலர்
நீலகிரி
- கொடநாடு தொடர்பான வழக்கு ஊட்டியில் உள்ள மகளிர் கோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது.
- விசாரணையையொட்டி சயான், வாளையார் மனோஜ் ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜராகி இருந்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய திபு என்பவர் விசாரணைக்கு ஆஜராகவில்லை.
ஊட்டி:
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே கொடநாடு எஸ்டேட்டில் நடந்த கொலை, கொள்ளை சம்பவம் தொடர்பாக தற்போது மறு விசாரணை நடந்து வருகிறது. இதற்காக அமைக்கப்பட்டுள்ள 5 தனிப்படை போலீசார் பல்வேறு கோணங்களில் பலரிடமும் விசாரணை நடத்தி உள்ளனர்.
இது தொடர்பான வழக்கு ஊட்டி நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இன்று கொடநாடு தொடர்பான வழக்கு ஊட்டியில் உள்ள மகளிர் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. விசாரணையையொட்டி சயான், வாளையார் மனோஜ் ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜராகி இருந்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய திபு என்பவர் விசாரணைக்கு ஆஜராகவில்லை.
இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி விசாரணையை வருகிற 29-ந் தேதிக்கு ஒத்திவைத்தார்.
- காலை கோவில் திறக்கப்பட்டு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.
- விநாயகர் சிலை கண் திறந்த தகவல் அந்த கிராமம் மட்டுமின்றி அதனை சுற்றியுள்ள கிராம பகுதிகளிலும் வேகமாக பரவியது.
அரவேணு:
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே கட்டபெட்டு-குன்னூர் செல்லும் சாலையில் பெட்டட்டி எனும் பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் 500-க்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் மக்கள் வசித்து வருகிறார்கள்.
இந்த பகுதியில் ஒரு விநாயகர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் தினமும், காலை, மாலை வேளைகளில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும்.
இதில் பெட்டட்டி, பெட்டட்டி சுங்கம், இளித்தொரை, அண்ணா நகர், காந்திநகர், அணியாரா உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த மக்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்வது வழக்கம்.
நேற்று வழக்கம்போல் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடந்தது. காலை கோவில் திறக்கப்பட்டு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.
அதனை தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் விநாயகர் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
தொடர்ந்து சுவாமிக்கு தீபாராதனை நடந்து கொண்டிருந்தது. அந்த சமயத்தில் விநாயகர் சிலையின் ஒரு பகுதி கண் திறந்து மூடியதாக கூறப்படுகிறது.
ஒரு சில நொடிகள் இது போன்று விநாயகர் சிலை கண் திறந்து மூடியதாக அங்கிருந்த பக்தர்கள் தெரிவித்தனர். இதற்கிடையே விநாயகர் சிலை கண் திறந்த தகவல் அந்த கிராமம் மட்டுமின்றி அதனை சுற்றியுள்ள கிராம பகுதிகளிலும் வேகமாக பரவியது.
இதையடுத்து அப்பகுதி மக்களும் விநாயகர் சிலை கண் திறந்த காட்சியை காண வேண்டும் என்ற ஆர்வத்தில் கோவிலுக்கு வந்தனர். இதனால் கோவிலில் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.
விநாயகர் சிலை கண் திறந்ததாக கூறப்பட்ட தகவலால் அந்த பகுதியில் மிகுந்த பரபரப்பு ஏற்பட்டது.
- கூடலூர் பகுதியில் காட்டு யானைகள் குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழைந்து அட்டகாசம்
- பொதுமக்கள் இரவு நேரங்களில் பாதுகாப்புடன் செல்லுமாறு வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
ஊட்டி :
கூடலூர் பகுதியில் காட்டு யானைகள் குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழைந்து அட்டகாசம் செய்யும் சம்பவங்கள் தொடர் கதையாகி வருகிறது.
இந்தநிலையில் கூடலூர் பாடந்துரை உளிமாஞ்சோலை பகுதியில் காட்டு யானை ஒன்று புகுந்தது. அந்த யானை அங்குள்ள ரவிச்சந்திரன் என்பவர் வீட்டை தாக்கி சேதப்படுத்தியது. பின்னர் அங்கிருந்து வேறு பகுதிக்கு சென்றது. சேதம் அடைந்த வீட்டின் இடிபாடுகளில் சிக்கி ரவிச்சந்திரன் படுகாயம் அடைந்தார். உடனடியாக அவரை மீட்டு கூடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு எக்ஸ்ரே பிரிவு செயல்படாததால் ஊட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார்.
கோத்தகிரி-மேட்டுப்பா ளையம் பிரதான சாலையில் குஞ்சப்பனை ஊராட்சி அமைந்துள்ளது. இங்கு காபித்தோட்டம், தேயிலை தோட்டம் அதிகம் உள்ளது. தற்போது பலாப்பழ சீசன் நடந்து வருவதால் அந்த பகுதிக்கு காட்டு யானைகள் உணவு தேடி வருகின்றன. எனவே பொதுமக்கள் இரவு நேரங்களில் பாதுகாப்புடன் செல்லுமாறு வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
- 28-ந் தேதி முதல் 30-ந் தேதி வரை நடைபெறுகிறது.
- பொது மக்கள் கோரிக்கைகளை மனுக்களாக சமர்ப்பிக்கலாம்.
கோத்தகிரி,
கோத்தகிரி தாசில்தார் காயத்ரி வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கோத்தகிரி தாலுகா வருவாய் வட்டத்திற்கு உட்பட்ட கோத்தகிரி, கீழ் கோத்தகிரி, நெடுகுளா உள் வட்டத்திற்கான ஜமாபந்தி (வருவாய் தீர்வாயம்) முகாம் வருகிற 28-ந் தேதி முதல் 30-ந் தேதி வரை 3 நாட்கள் கோத்தகிரி தாசில்தார் அலுவலகத்தில் நடைபெறுகிறது. இதற்கு குன்னூர் சப்-கலெக்டர் தீபனா விஷ்வேஸ்வரி தலைமை தாங்குகிறார்.
28-ந் தேதி கோத்தகிரி, 29-ந் தேதி கோத்தகிரி, 30 ந் தேதி கோத்தகிரி சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த பொதுமக்களிடம் இருந்து மனுக்கள் பெறப்படும். பெறப்பட்ட மனுக்கள் சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
கோத்தகிரி தாசில்தார் அலுவலகத்தில் ஜமாபந்தி நடைபெற உள்ளதையொட்டி ஊழியர்கள் ஆவணங்களை தயார் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கூடலூர் தாசில்தார் சித்தராஜ் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப் பில் கூறப்பட்டு உள்ளதாவது:
கூடலூர் தாலுகாவில் பசலி 1431-க்கான வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) தாலுகா அலுவலகத்தில் வருகிற 28-ந் தேதி தொடங்குகிறது. அன்றைய தினம் தேவர்சோலை உள்வட்டத்துக்கும், 29-ந் தேதி கூடலூர் உள்வட்டத்துக்கும் ஜமாபந்தி நடக்கிறது. கூடலூர் ஆர்.டி.ஓ. சரவண கண்ணன் தலைமை தாங்குகிறார். எனவே, பொது மக்கள் தங்களது கோரிக்கைகளை மனுக்களாக சமர்ப்பிக்கலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
- போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
- 33 பேருக்கு அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்தனர்.
நீலகிரி,
கோத்தகிரி பகுதியில் இருசக்கர வாகனங்களில் செல்லும் வாலிபர்கள் போக்குவரத்து விதிகளை பின்பற்றாமலும், ஹெல்மெட் அணியாமலும் சென்று வருகின்றனர். இந்தநிலையில் கோத்தகிரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்
மனோகரன் மற்றும் போலீசார் கோத்தகிரி பஸ் நிலையம் பகுதியில் வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது ஹெல்மெட் அணியாமல் செல்வது, அதி வேகமாக மோட்டார் சைக்கிளை இயக்குவது, ஓட்டுநர் உரிமம் மற்றும் உரிய ஆவணங்கள் இல்லாமல் வாகனங்களை இயக்கியவர்களுக்கு அபராதம் விதித்தனர். போக்குவரத்து விதிகளை மீறியதாக 33 பேருக்கு ரூ.5 ஆயிரத்து 500 அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்தனர்.
மேலும் போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்ற வேண்டியதன் அவசியம் குறித்து போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
- விடுதி 2-வது மாடியில் கான்கிரீட் கம்பிகளை எடுத்து வைத்தனர்.
- உயர்மின்னழுத்த மின்கம்பிகள் மீது கான்கிரீட் கம்பி பட்டது.
ஊட்டி,
நீலகிரி மாவட்டம் ஊட்டி மத்திய பஸ் நிலையம் அருகே உள்ள தனியார் தங்கும் விடுதி கட்டிடத்தை பழுது பார்க்கும் பணி நேற்று முன்தினம் நடைபெற்றது. ஊட்டி நொண்டிமேடு பகுதியை சேர்ந்தவர் கொத்தனார் ஆறுமுகம் (வயது 55) மற்றும் தொழிலாளர்கள் கட்டுமான பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். விடுதி 2-வது மாடியில் கான்கிரீட் கம்பிகளை எடுத்து வைத்தனர்.
ஆறுமுகம் கான்கிரீட் கம்பியை மேலே தூக்கி திருப்பி வைக்க முயன்றார். அப்போது அருகே சென்ற உயர்மின்னழுத்த மின்கம்பிகள் மீது கான்கிரீட் கம்பி பட்டது. இதனால் கம்பியில் மின்சாரம் பாய்ந்து ஆறுமுகத்தை தாக்கியது. இதில் அவர் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார். இதை பார்த்த சக தொழிலாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். தொடர்ந்து அவர்கள் ஆறுமுகத்தை மீட்டு ஊட்டி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். போலீசார் விசாரணை அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர்.
இருப்பினும் சிகிச்சை பலனின்றி ஆறுமுகம் இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த ஊட்டி நகர மேற்கு போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து தங்கும் விடுதி உரிமையாளரிடம் விசாரணை நடத்தினர். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கட்டுமான பணியின் போது மின்சாரம் தாக்கி கொத்தனார் இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- கிராம மக்கள் அச்சம் அடைந்து உள்ளனர்
- கரை ஓரத்தில் ஏராளமான எலும்பு கூடுகள் கிடக்கின்றன.
ஊட்டி
ஊட்டி அருகே மார்லிமந்து வன பகுதிக்கு வந்துள்ள 35 - க்கும் மேற்பட்ட செந்நாய்கள் கூட்டம் கடமான்களை வேட்டையாடும் சம்பவம் கிராம மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஊட்டி அருகே உள்ள மார்லிமந்து அணை பகுதியை சுற்றி அதிக வனப்பகுதி உள்ளது. அதில் புலி, சிறுத்தை, காட்டுபன்றி, கடமான் உள்ளிட்ட பல்வேறு வன விலங்குகள் உள்ளன. மார்லிமந்து அணையில் உள்ள தண்ணீர் ஊட்டி நகரின் குடிநீராக வினியோகம் செய்யபட்டு வருகிறது.இந்த நிலையில் முதுமலை புலிகள் காப்பக வன பகுதியில் வாழக்கூடிய அரிய வகை செந்நாய்கள் மார்லிமந்து வனபகுதிக்கு இடம் பெயர்ந்து வந்துள்ளன. சுமார் 30-க்கும் மேற்பட்ட செந்நாய்கள் கொண்ட அந்த கூட்டம் அப்பகுதியில் முகாமிட்டு அவ்வப்போது கடமான்களை வேட்டையா டி வருகிறது.அதிகாலை மற்றும் மாலை நேரங்களில் அணையின் கரையோ ரத்திற்கு வரும் செந்நாய்கள் தண்ணீர் குடிக்க அணைக்கு வரும் கடமான்களை அடித்து கொன்று தின்று வருகின்றன.இதனால் அணையின் கரை ஓரத்தில் ஏராளமான எலும்பு கூடுகள் கிடக்கின்றன. செந்நாய்கள் கூட்டம் கடமான்களை வேட்டையாடுவதை கண்டு மார்லி மந்து பகுதி மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.இதே நிலை தொடர்ந்தால் செந்நாய்கள் கிராம மக்கள் வளர்த்து வரும் கா ல்நடைகளை வேட்டையாட வாய்ப்பு உள்ளதால் வனத்து றையினர் அந்த செந்நாய்களை கண்காணிக்க வேண்டும் என்றும் வேட்டையாடிய மான்களின் உடல்கள் தண்ணீருக்குள் கிடப்பதால் தண்ணீர் மாசடைய வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்தனர்.
- நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கி தற்போது தொடர்ந்து பெய்து வருகிறது.
- நீலகிரி மாவட்டத்தில் மழை மற்றும் வெள்ள பாதிப்புகளில் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து பணியாற்ற 3,329 முதல்நிலை பொறுப்பாளர்கள் தயார் நிலையில் உள்ளனர்.
ஊட்டி:
நீலகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் அம்ரித் தலைமையில் முன்னேற்பாடு பணிகள் குறித்து அதிகாரிகளுடனான ஆலோசனை கூட்டம் நடந்தது. தொடர்ந்து கலெக்டர் அம்ரித் நிருபர்களிடம் கூறியதாவது:-
நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கி தற்போது தொடர்ந்து பெய்து வருகிறது. இதுதொடர்பான முன்எச்சரிக்கை நடவடிக்கையாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள 6 வட்டங்களுக்கு உட்பட்ட இடங்களில் மழைக்காலங்களில் அதிக பாதிப்பு ஏற்படக்கூடிய இடங்கள் என கண்டறியப்பட்டு உள்ள 283 பகுதிகளுக்கும் 42 மண்டல குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளது.
அந்த குழுக்கள் 24 மணி நேரமும் தயார் நிலையில் இருக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது. மேலும் 6 வட்டங்களுக்கு துணை ஆட்சியர் நிலையில் கண்காணிப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
குறிப்பாக மாவட்டத்தில் மண்சரிவு ஏற்படும் இடங்களை தொடர்ந்து கண்காணிக்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இதேபோல இயற்கை பேரிடர்களினால் மரம் சாலைகளில் விழுந்தால் உடனடியாக அப்புறப்படுத்த தேவையான பவர்சா உள்ளிட்ட எந்திரங்களும், ஜே.சி.பி. ஆகியவை தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளது.
அபாயகரமான மரங்களை கண்டறிந்து அதனை அகற்றுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளது. அவசர காலங்களில் பாதிக்கப்படும் பொதுமக்களை தங்க வைக்க 456 பாதுகாப்பு மையங்கள் தயார் நிலையில் உள்ளன. மேலும் நீலகிரி மாவட்டத்தில் மழை மற்றும் வெள்ள பாதிப்புகளில் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து பணியாற்ற 3,329 முதல்நிலை பொறுப்பாளர்கள் தயார் நிலையில் உள்ளனர்.
மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளும் உடனுக்குடன் மேற்கொள்ளப்பட வருவாய்த்துறை, உள்ளாட்சித்துறை, காவல்துறை, தீயணைப்புத்துறை, நெடுஞ்சாலைத்துறை, மின்சாரத்துறை, பொதுப்பணித்துறை, மருத்துவம் மற்றும் சுகாதாரப்பணிகள் துறை மற்றும் குடிமைப்பொருள் வழங்கல் துறைகளைச் சார்ந்த அலுவலர்கள் தயார் நிலையில் உள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
- மாணவர்கள் யோகாசனம் செய்தனர்
- 350 ராணுவ அதிகாரிகள் குடும்பத்தினருடன் கலந்துகொண்டனர்
ஊட்டி,
நீலகிரி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளில் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது. இதில் மாணவர்கள் யோகாசனம் செய்தனர். யோகா தினம் ஆண்டுதோறும் ஜூன் மாதம் 21-ந் தேதி சர்வதேச யோகா தினம் கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி ஊட்டியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் மாணவிகள் யோகாசனங்களை செய்து அசத்தினர். மேலும் அவர்கள் நடனமாடி யோகா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இதுகுறித்து ஆசிரியர்கள் கூறுகையில், யோகா உடலுக்கு மட்டுமல்ல மனதுக்கும் நன்மை அளிக்கும். அனைத்து வயது பிரிவினரும் யோகா கற்றுக்கொள்ளலாம் என்றனர். ஊட்டி கோர்ட்டில் யோகா தினம் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட நீதிபதி முருகன் தலைமை தாங்கினார். நீதிபதிகள் ஸ்ரீதரன், ஸ்ரீதர், மோகனகிருஷ்ணன், தமிழினியன் மற்றும் கோர்ட்டு ஊழியர்கள் கலந்துகொண்டு யோகா பயிற்சிகளை மேற்கொண்டனர். ராணுவ அதிகாரிகள் குன்னூர் வெலிங்டன் ராணுவ கல்லூரி வளாகத்தில் உள்ள ஏகலைவா அரங்கத்தில் யோகா தின நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சியில் ராணுவ பயிற்சி கல்லூரி கர்னல் திருப்பாதி தலைமையில் 350 ராணுவ அதிகாரிகள் தங்களது குடும்பத்தினருடன் கலந்துகொண்டு தரையில் அமர்ந்து மூச்சுப்பயிற்சி, சூரிய நமஸ்காரம், பத்மாசனம், புஜங்காசனம் போன்ற யோகாசனங்களை செய்தனர். ஊட்டி அருகே ஓடைக்காடு ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளி மற்றும் அரசு, தனியார் பள்ளிகள், அரசு கல்லூரிகள், தனியார் கல்லூரிகளில் யோகா தினம் கொண்டாடப்பட்டன.
ஊட்டி அரசு ஆஸ்பத்திரியில் நடந்த நிகழ்ச்சிக்கு டீன் மனோகரி தலைமை தாங்கினார். கூடலூர் கூடலூர் அரசு மாதிரி மேல்நிலை பள்ளி வளாகத்தில் மாணவ-மாணவிகள் நேற்று உடல் வலிமையை கூட்டும் வகையில் யோகா பயிற்சி செய்தனர். நிகழ்ச்சியில் தலைமை ஆசிரியர் அய்யப்பன் பேசும்போது, யோகா செய்வதால் மனம், உடல் பலம் பெறுகிறது. நினைவுத் திறன் அதிகரிப்பதால் பாடங்களை எளிதில் புரிந்து படிக்க முடியும் என்றார். இதேபோல் அரசு மற்றும் தனியார் பள்ளிக்கூடங்களில் யோகா தினம் கடைபிடிக்கப்பட்டது.
கூடலூர் குற்றவியல் நீதிமன்றத்தில் நீதிபதிகள், வக்கீல்கள் மற்றும் நீதிமன்ற பணியாளர்கள் சர்வதேச யோகா தினத்தை கடைபிடித்தனர். இதையொட்டி அனைவரும் யோகா செய்தனர். அதற்கான பயிற்சியை மனவளக்கலை பேராசிரியர் பாஸ்கர் அளித்தார். தொடர்ந்து கூடலூர் மனவளக்கலை மன்றத்தில் யோகா தினம் கடைபிடிக்கப்பட்டது. இதில் கூடலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு குமார் கலந்துகொண்டார்.
- சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு யோகா விழிப்புணர்வு நிகழ்சி ஊட்டி தாரவியல் பூங்காவில் நடந்தது.
- உடல் மற்றும் மனம் இரண்டுமே ஒருங்கிணைந்து செயல்பட யோகாசனம் உதவுகிறது.
ஊட்டி:
நீலகிரி மாவட்டம் ஊட்டியில் ஜெ.எஸ்.எஸ் பார்மசி கல்லூரியின் நாட்டு நலப்பணி திட்டம், ஜெ.எஸ்.எஸ்.சர்வதேசபள்ளி, ஜெ.எஸ்.எஸ்.யோகா கல்லூரி சார்பில் சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு யோகா விழிப்புணர்வு நிகழ்சி ஊட்டி தாரவியல் பூங்காவில் நடந்தது.
அதனை தொடர்ந்து பேரணியும் நடைபெற்றது. இதில் ஜெ.எஸ்.எஸ்கல்லூரி முதல்வர் டாக்டர். எஸ்.பி.தனபால் தொடங்கி வைத்தார். தோட்டகலை துணை இயக்குநர் ராதாகிருஷ்ணன் முன்னிலை வகித்தார்.
பின்னர் ஜெ.எஸ்.எஸ்கல்லூரி முதல்வர் டாக்டர். எஸ்.பி.தனபால் ேபசுகையில், உடல் மற்றும் மனம் இரண்டுமே ஒருங்கிணைந்து, செயல்பட, உடல் ஆரோக்கியமாக இருக்க, நோய்களைத் தடுக்க, மூப்பைத் தடுக்க, என்று பல விதங்களில் யோகாசனம் உதவுகிறது.
பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே மக்களின் வாழ்வில் ஒன்றிணைந்த யோகாவின் நன்மைகளும், யோகா பயிற்சிகள் செய்வதால் ஏற்படும் மாற்றங்களும் மீண்டும் மக்களிடையே பரவத் தொடங்கியுள்ளது என்றார். இதில் கல்லூரி பேராசிரியர் கவுதமராஜன், நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் பாபு மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
- சாலையில் கிடந்த பையில் ரூ.3,200, ஆதார் கார்டு, குடும்ப அட்டை, பான் கார்டு, வங்கி புத்தகம் இருந்தது.
- அந்த பெண்ணிடம் சப்-இன்ஸ்பெக்டர் யாதவ் கிருஷ்ணன், தலைமை காவலர் பாலசுப்பிரமணியம் ஆகியோர் தவறவிட்ட பை, பணம், ஆவணங்களை ஒப்படைத்தனர்.
அரவேணு:
கோத்தகிரி மார்க்கெட் பகுதியில், போலீஸ் ஏட்டு பாலசுப்பிரமணியம் என்பவர் போக்குவரத்து ஒழுங்கு பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது சாலையின் கீழே ஒரு பை கிடந்ததை பார்த்தார்.
பின்னர் அதை எடுத்து பார்த்த போது, உள்ளே ரூ.3,200, ஆதார் கார்டு, குடும்ப அட்டை, பான் கார்டு, வங்கி புத்தகம் இருந்தது. புத்தகத்தை திருப்பி பார்த்தபோது, அதில் கோத்தகிரி ஓரசோலை காமராஜர் நகரை சேர்ந்த சரஸ்வதி என பெயர் இருந்தது.
தொடர்ந்து அந்த பையை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார். இதையடுத்து காவலர் ஆதார் அட்டையில் உள்ள முகவரி மூலம் சம்பந்தப்பட்ட பெண்ணை போலீஸ் நிலையத்துக்கு வரவழைத்தனர்.
பின்னர் அந்த பெண்ணிடம் சப்-இன்ஸ்பெக்டர் யாதவ் கிருஷ்ணன், தலைமை காவலர் பாலசுப்பிரமணியம் ஆகியோர் தவறவிட்ட பை, பணம், ஆவணங்களை ஒப்படைத்தனர். அதனை பெற்றுக்கொண்ட அந்த பெண் போலீசாருக்கு நன்றி தெரிவித்தார்.
- அதிகப்படியான பலா மரங்கள், வாழை, பாக்கு தோட்டங்கள் உள்ள காரணத்தால் யானைகள் இந்த வாழ்விடத்தை நோக்கி வருகின்றன.
- காட்டு யானைகளின் நடமாட்டத்தை இரவும் பகலும் தொடா்ந்து களக் குழுவுடன் உதவி வனப் பாதுகாவலா் மற்றும் வனச் சரக அலுவலா்கள் ரோந்து பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.
ஊட்டி:
நீலகிரி மாவட்ட வன அலுவலா் கொம்மு ஓம்காரம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப–தாவது:-
நீலகிரி மாவட்டம், கூடலூா் வனக் கோட்டத்திலுள்ள ஓவேலி பகுதியானது கேரளத்தின் நிலம்பூா் வடக்கு வனக் கோட்டம், நீலகிரி வடக்கு வனக்கோட்டம், கூடலூா் வனக் கோட்டம் மற்றும் முதுமலை புலிகள் காப்பகத்துடன் இணையும் பகுதியாக உள்ளது.
இந்தப் பகுதியில் அதிகப்படியான பலா மரங்கள், வாழை, பாக்கு தோட்டங்கள் உள்ள காரணத்தால் யானைகள் இந்த வாழ்விடத்தை நோக்கி வருகின்றன. தற்போது யானைகள் நிலம்பூரில் இருந்து ஓவேலி வழியாக முதுமலை நோக்கி வருகின்றன.
யானைகள் நீண்ட தூரம் நகரும் விலங்காக இருப்பதால் மனித-யானை மோதல்கள் தவிா்க்க முடியாததாகிவிட்டது. மேலும் பழ வகைகள், தென்னை, ஏலக்காய் போன்ற யானைகளின் உணவு பயிர்களை பெரும்பா–லான மனிதா்கள் வசிக்கும் இடங்கள், தோட்டத் தொழிலா–ளா்களின் வீடுகளில் வளர்க்கப்படுகிறது.
இவை யானைகள் மனித குடியிருப்புகளுக்குள் நுழைவதற்கு ஒரு முக்கிய காரணமாக உள்ளன. இதனை தவிா்க்கும்பொ–ருட்டு கூடலூா் வனக் கோட்டம், ஓவேலி வனச் சரகத்தில் மனித-விலங்குகளின் மோதல்க–ளை குறைப்பதற்காக முதுமலை புலிகள் காப்பகம், தெப்பக்காட்டிலிருந்து 5 கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டுள்ளன.
முதுமலை புலிகள் காப்பகத்திலிருந்து வேட்டைத் தடுப்பு காவலா்கள், கூடுதல் களப்ப–ணியாளா்கள் சுமாா் 50 போ் பாதுகாப்புப் பணியிலும், 3 வாகனங்களுடன் அதிவிரைவு நடவடிக்கை குழு ரோந்து பணியில் ஈடுபட்டு உள்ளனா்.
காட்டு யானைகளின் நடமாட்டத்தை தொடா்ந்து கண்காணிக்க ஆளில்லா விமானக் குழுக்களை அனுப்புதல், முன்னெச்சரிக்கை ஒலி எழுப்பும் கருவிகள் ஆங்காங்கே நிறுவுதல், காட்டு யானைகள் மனித குடியிருப்புக்குள் நுழையாத வகையில் புகை மற்றும் நெருப்பு அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
காட்டு யானைகளின் நடமாட்டத்தை இரவும் பகலும் தொடா்ந்து களக் குழுவுடன் உதவி வனப் பாதுகாவலா் மற்றும் வனச் சரக அலுவலா்கள் ரோந்து பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.
காட்டு யானைகள் தொடா்பான எந்த ஒரு பிரச்னைக்கும் தொடா்பு கொள்ள பொதுமக்களுக்கு அவசரகால தொடா்பு எண்கள் வழங்க–ப்பட்டு–ள்ளன. மேலும் யானைகள் குறித்து ஒலிபெருக்கி மூலம் தினசரி அறிவிப்பு வழங்கி விழிப்புணா்வு உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளாா்.






