என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஊட்டியில் சாலையில் தேங்கிய குப்பைகளை அகற்றிய இளைஞர்கள்
- மழை காலத்தில் கால்வாய் அடைத்து கொள்வதும், சாலை முழுவதும் மண் மற்றும் குப்பைகள் தேங்குவதும் தொடர்கதையாக உள்ளது.
- 2 நாட்களாக பெய்து வரும் மழை காரணமாக கீழ் கோடப்பமந்து பகுதிகளில் மழை வெள்ளம் வீடுகளில் புகுந்தது.
ஊட்டி:
நீலகிரி மாவட்டம் ஊட்டி கீழ் கோடப்பமந்து பகுதியில் மழை காலத்தின் பொழுது கால்வாய் அடைத்து கொள்வதும், அதனால் சாலை முழுவதும் மண் மற்றும் குப்பைகள் தேங்குவதும் தொடர்கதையாக உள்ளது.இதனால் அப்பகுதியில் உள்ள வீடுகளில் மழைநீர் புகுந்து சேதம் அடைவதும் நடந்து வருகிறது.
இதனை நகராட்சி துறையினர் அவ்வப்பொழுது தூய்மைப்படுத்தி, சரிசெய்து வந்தாலும் மழையின் பொழுது மீண்டும் அதே பிரச்சனை ஏற்படுகின்றது. கடந்த 2 நாட்களாக பெய்து வரும் மழை காரணமாக கீழ் கோடப்பமந்து பகுதிகளில் மழை வெள்ளம் வீடுகளில் புகுந்தது.
மேலும் அப்பகுதியில் உள்ள கால்வாய்களை அடைத்து, கால்வாயில் அடித்து வரப்பட்ட குப்பைகள் மற்றும் மண், கற்கள் ஆகியவை அப்பகுதி சாலையில் தேங்கியது. அதனை நேற்று கீழ் கோடப்பமந்து ஸ்ரீ கணபதி இளைஞர் மன்றத்தை சேர்ந்த கனேஷ், குமாரவேல், செந்தில்குமார், நந்தகுமார், கணபதி உள்ளிட்டோர் கால்வாய் அடைப்பு மற்றும் சாலையை சுத்தப்படுத்தி சீர் செய்தனர். இதனை அப்பகுதி மக்கள் வெகுவாக பாராட்டினர்.






