ஊட்டியில் தனித்திறமை போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கும் விழா

குழந்தைகளின் திறமைகளை கண்டறிந்து ஊக்குவிக்கும் பொருட்டு ஆன்லைன் வழியாக போட்டி நடைபெற்றது. போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு மற்றும் பாராட்டு விழா நடைபெற்றது.
ஊட்டியில் தனித்திறமை போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கும் விழா
Published on

ஊட்டி:

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் தாம்பட்டி விவேகானந்தர் இளைஞர் நற்பணி மன்றம் சார்பில் குழந்தைகளின் திறமைகளை கண்டறிந்து ஊக்குவிக்கும் பொருட்டு ஆன்லைன் வழியாக போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் 65 ஊர்களை சேர்ந்த குழந்தைகள் போட்டியிட்டனர்.

போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு மற்றும் பாராட்டு விழா ஊட்டி சேரிங் கிராஸில் உள்ள ஹார்ட்டிகள்சர் காம்ப்ளெக்ஸில் நடைபெற்றது.இதில் சிறப்பு விருந்தினராக தோட்டகலை உதவி இயக்குனர் சிபிலா மேரி கலந்து கொண்டு குழந்தைகளுக்கு பரிசுகளை வழங்கி பாரட்டினார். நிகழ்ச்சியில் தாம்பட்டி ஊர் பொதுமக்கள் மற்றும் பலர் பங்கேற்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com