search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    குன்னூரில் கடும் பனிமூட்டம்- வாகன ஓட்டிகள் அவதி
    X

    குன்னூரில் கடும் பனிமூட்டம்- வாகன ஓட்டிகள் அவதி

    • குன்னூரில் உள்ள லேம்ஸ்ராக், டால்பினோஸ் காட்சி முனைகளிலும் கடுமையான பனிமூட்டம் காணப்பட்டது.
    • கடும் குளிா் காரணமாக பல்வேறு தனியாா் தேயிலைத் தோட்டங்களில் தொழிலாளா்கள் பணிக்குச் செல்லாமல் வீடுகளில் முடங்கினா்.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றான குன்னூரில் உள்ள லேம்ஸ்ராக், டால்பினோஸ் போன்ற காட்சி முனைககள் உள்ளது.

    இதனை காண நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் இங்கு வந்த வண்ணம் இருப்பர்.

    இங்கு நிலவும் இதமான காலநிலையையும், இயற்கை எழில் கொஞ்சும் வனப்பகுதியையும் சுற்றுலா பயணிகள் கண்டு ரசிப்பார்கள்.

    கடந்த சில நாட்களாக மாவட்டத்தில் மழை பெய்து வருகிறது. இதனால் அனைத்து இடங்களிலும் கடும் பனிமூட்டம் நிலவி வருகிறது.

    நேற்று குன்னூரில் உள்ள லேம்ஸ்ராக், டால்பினோஸ் காட்சி முனைகளிலும் கடுமையான பனிமூட்டம் காணப்பட்டது. இதன் காரணமாக காட்சி முனைகளை காணமுடியாமல் சுற்றுலாப் பயணிகளில் ஏமாற்றத்துடன் திரும்பினா்.

    குன்னூரில் இருந்து காட்சி முனைகளை காண்பதற்காக செல்லும் சாலைகளில் அடா்ந்த பனி மூட்டம் காணப்பட்டதால் வாகன ஓட்டிகள் வாகனங்களை இயக்க முடியாமல் திணறினா்.

    காலை முதல் குளிா் அதிகரித்துக் காணப்பட்டதால் பொதுமக்களின் இயல்பு வாழக்கை பாதிக்கப்பட்டது.

    மேலும், கடும் குளிா் காரணமாக பல்வேறு தனியாா் தேயிலைத் தோட்டங்களில் தொழிலாளா்கள் பணிக்குச் செல்லாமல் வீடுகளில் முடங்கினா்.

    மூடுபனி காரணமாக முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி வாகனங்களை இயக்க வேண்டும் என்று காவல் துறையினா் அறிவுறுத்தினா்.

    Next Story
    ×