search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோத்தகிரியில் மாவட்ட அளவிலான சதுரங்க போட்டி
    X

    கோத்தகிரியில் மாவட்ட அளவிலான சதுரங்க போட்டி

    • தமிழக அரசு, நீலகிரி மாவட்ட சதுரங்க சங்கத்தின் சார்பில் கோத்தகிரி ரிவர் சைடு பப்ளிக் பள்ளியில் சதுரங்க போட்டி நடைபெற்றது.
    • 9 சுற்றுகளாக நடைபெற்ற இப்போட்டியில் ஒரு சுற்றிற்கு 25 நிமிடங்கள் அளிக்கப்பட்டு விளையாடினர்.

    அரவேணு:

    சென்னை மகாபலி புரத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற உள்ளது. அதனை முன்னிட்டு தமிழக அரசு, நீலகிரி மாவட்ட சதுரங்க சங்கத்தின் சார்பில் கோத்தகிரி ரிவர் சைடு பப்ளிக் பள்ளியில் சதுரங்க போட்டி நடைபெற்றது.

    இந்த போட்டியில் நீலகிரி மாவட்டத்தில் கல்வி பயிலும் 1‌5 வயதிற்கு உட்பட்ட மாணவ, மாணவிகள் 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இந்த போட்டி 2 நாட்கள் நடைபெற்றது.

    மொத்தம் 9 சுற்றுகளாக நடைபெற்ற இப்போட்டியில் ஒரு சுற்றிற்கு 25 நிமிடங்கள் அளிக்கப்பட்டு விளையாடினர்.இதில் வெற்றி பெறும் மாணவ, மாணவிகளுக்கு பரிசு கோப்பைகள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

    அத்துடன் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளை சென்னையில் நடைபெறும் ெசஸ் ஒலிம்பியாட் போட்டியை காணவும் அழைத்து செல்லப்பட உள்ளதாக அதன் ஒருங்கிணைப்பாளர்கள் கூறினர். போட்டிக்கான ஏற்பாடுகளை அகில இந்தியா சதுரங்க சங்கம் மற்றும் தமிழ்நாடு சதுரங்க சங்கம் சார்பில் சிறப்பாக செய்யப்பட்டிருந்தது.

    இந்த போட்டியானது மாணவர்களின் அறிவுத்திறன், ஞாபக சக்தியை அதிகரிக்கும் எனவும், மாணவர்களின் எதிர்கால கல்வி சிறப்பாக அமையும் என்று ரிவர் சைடு பள்ளியின் தாளாளர் கந்தசாமி கூறினார்.

    Next Story
    ×