என் மலர்
நீலகிரி
- கலெக்டர் அம்ரித் வழங்கினார்.
- தலா ரூ.50,000 வீதம் ரூ. 2 லட்சத்துக்கான வரைவோலையை வழங்கினாா்.
ஊட்டி,
ஊட்டியில் உள்ள நீலகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மக்கள் குறைதீா் நாள் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் அம்ரித் தலைமை தாங்கினாா்.
இதில், பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக 100-க்கும் மேற்பட்ட மனுக்களை பொதுமக்கள் வழங்கினா்.
இதைத் தொடா்ந்து, முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ஊட்டி காந்தல் பகுதியைச் சோ்ந்த தாரணி, பந்தலூா் பகுதியைச் சோ்ந்த வி.மோனிஷா, தனசஞ்சய், குன்னூா் உலிக்கல் பகுதியைச் சோ்ந்த காளிராஜ் ஆகிய 4 கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகையாக தலா ரூ.50,000 வீதம் ரூ. 2 லட்சத்துக்கான வரைவோலையை வழங்கினாா்.
பின்னா், பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்களின் மீது சம்மந்தப்பட்ட துறை அலுவலா்கள் தனி கவனம் செலுத்தி நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டாா்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் கீா்த்தி பிரியதா்ஷினி, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் ஜெயராமன் உள்பட அரசுத் துறை அலுவலா்கள் பலா் கலந்துகொண்டனா்.
- கூடலூா் மற்றும் பந்தலூா் பகுதிகளில் கடந்த சில தினங்களாக தொடா்ந்து கன மழை பெய்து வருகிறது.
- பொன்னானி உள்ளிட்ட ஆறுகள், கால்வாய்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது.
ஊட்டி:
நீலகிரி மாவட்டம், கூடலூா் மற்றும் பந்தலூா் பகுதிகளில் கடந்த சில தினங்களாக தொடா்ந்து கன மழை பெய்து வருகிறது.
இதனால், அப்பகுதிகளில் சாலைகளில் மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. இதுதவிர மின் கம்பங்களின் மீது விழுவதால் மின்சாரமும் துண்டிக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் இருளில் தவித்து வருகின்றனர்.
பலத்த மழையால் நீர்நிலைகளிலும் தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளது. தொடர் பலத்த மழையால் கூடலூர் தாலுகா ஸ்ரீமதுரை ஊராட்சிக்கு உட்பட்ட குற்றிமுற்றி பகுதி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது.
இதனால் விவசாய நிலங்களுக்குள் வெள்ளம் புகுந்தது. வாழை, பாக்கு மற்றும் பயிர்களை வெள்ளம் சூழ்ந்து உள்ளது. பாடந்தொரை ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. மேலும் கம்மாத்தி, பாடந்தொரை, முதுமலை ஊராட்சி பகுதியில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது.
பந்தலூர் தாலுகாவில் பெய்த மழைக்கு பொன்னானி உள்ளிட்ட ஆறுகள், கால்வாய்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது.
பந்தலூர் அருகே இரும்புபாலம் பகுதியில் வீரம்மாள் என்பவரது வீட்டின் சுவர், மேற்கூரை இடிந்து விழுந்தது. இதை அறிந்த வீட்டில் இருந்தவர்கள் வெளியே தப்பி ஓடியதால் காயம் இன்றி உயிர் தப்பினர்.
தொடர்ந்து மழை பெய்வதால் பொதுமக்கள் வீடுகளுக்குள் முடங்கி உள்ளனர். பொன்னாளி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. பொன்னானியில் இருந்து பந்தப்பிளா, அம்மன்காவு செல்லும் சாலையில் உள்ள பாலத்தை தொட்டவாறு வெள்ளம் சென்றது.
தொடர் மழையால் தேவா்சோலை பேரூராட்சியிலுள்ள மச்சிக்கொல்லி பகுதியில் மண் சரிவு ஏற்பட்டது. இதனால், அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. தொடா்ந்து மண் சரிவுகளை அகற்றும் பணியில் அப்பகுதியில் பொதுமக்கள் ஈடுபட்டனர்.
- போலீசார் அச்சம் அடைந்து உள்ளனர்.
- குடியிருப்புகளை காட்டு யானை அடிக்கடி முற்றுகையிட்டு வருகிறது.
ஊட்டி,
பந்தலூர் அருகே சேரம்பாடி போலீஸ் நிலையம் உள்ளது. இங்கு பணிபுரியும் போலீசார் தங்கி பணிபுரியும் வகையில், அப்பகுதியில் குடியிருப்புகள் உள்ளன. அந்த குடியிருப்புகளை காட்டு யானை அடிக்கடி முற்றுகையிட்டு வருகிறது. இந்தநிலையில் குட்டியுடன் காட்டு யானை ஒன்று போலீஸ் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்தது. அங்கு மூங்கில் மரங்களை ஒடித்து தின்றது. போலீசார் செல்லும் சாலையின் நடுவே யானை நின்றதால், போலீசார் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் அச்சம் அடைந்தனர். தகவல் அறிந்த சேரம்பாடி வனவர் ஆனந்த், வனகாப்பாளர் குணசேகரன் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் காட்டு யானையை விரட்டினர். தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். காட்டு யானை நடமாட்டத்தால் பணி முடிந்து குடியிருப்புக்கு திரும்பும் போலீசார் அச்சம் அடைந்து உள்ளனர்.
- மஞ்சப்பை குறித்த விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.
- தூய்மை விழிப்புணா்வு உறுதிமொழி ஏற்றுக்கொண்டனா்.
ஊட்டி :
ஓவேலி பேரூராட்சியில் தூய்மை நகரங்களுக்கான மக்கள் இயக்கம் குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், குப்பைகளைத் தரம் பிரித்தல், உரமாக்குதல் குறித்து செயல் அலுவலா் சி.ஹரிதாஸ் செயல் விளக்கமளித்தாா்.
தொடா்ந்து பெரியாா் நகா் மற்றும் காந்தி நகா் பகுதியில் மஞ்சப்பை குறித்த விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.நிகழ்ச்சியில் பேரூராட்சிப் பணியாளா்கள், வாா்டு உறுப்பினா்கள், பொதுமக்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டு தூய்மை விழிப்புணா்வு உறுதிமொழி ஏற்றுக்கொண்டனா்.
- பேரூராட்சியில் 8 இடங்களில் தடுப்பூசி போட ப்பட்டது.
- அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும்.
ஊட்டி,
நீலகிரி மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற்றது. கூடலூர் தாலுகா தேவர்சோலை பேரூராட்சியில் 8 இடங்களில் தடுப்பூசி போட ப்பட்டது. தேவர்சோலை சமுதாய கூடத்தில் நடந்த முகாமை பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் இப்ராஹிம் ஷா நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தொடர்ந்து பேரூராட்சி மக்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும். பொது இடங்களில் முககவசம் அணிய வேண்டும் என முகாமில் கலந்துகொண்ட மக்களுக்கு அறிவுரை வழங்கினார். நிகழ்ச்சியில் பேரூராட்சி செயல் அலுவலர் (பொறுப்பு) பிரதீப் குமார் உள்பட சுகாதாரப் பணியாளர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.தொடர்ந்து நடுவட்டம் பேரூராட்சியில் 5 இடங்களில் நடைபெற்ற முகாம்களை பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் இப்ராஹிம் ஷா பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின்போது பேரூராட்சி செயல் அலுவலர் பிரதீப் குமார் உள்பட பணியாளர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனர். சோலூர் பேரூராட்சிக்கு உட்பட்ட நாகர்தனை ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடந்த கொரோனா தடுப்பூசி முகாமை பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் இப்ராஹிம் ஷா நேரில் ஆய்வு செய்தார்.
- ஒரு கட்டத்தில் அந்த உழவர் சந்தை செயல்படாமல் போனது.
- ரூ.1 கோடிவரை வருமான இழப்பு ஏற்படும் என சுட்டி காட்டப்பட்டு உள்ளது.
ஊட்டி,
நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் 2006 -ல் கதர்துறை அமைச்சராய் இருந்த தற்போதைய வனத்துறை அமைச்சர் ராமசந்திரனால் உழவர் சந்தை திறந்து வைக்கப்பட்டது. ஒரு கட்டத்தில் அந்த உழவர் சந்தை செயல்படாமல் போனது.
இந்த நிலையில் தினசரி மார்க்கெட் பகுதியில் 40 வருட காலமாக இயங்கி கொண்டிருக்கும் கடைகளின் ஒரு பகுதியில் 64 கடைகளை அப்புறபடுத்தி விட்டு அந்த இடத்தில் உழவர் சந்தை அமைக்க ஆய்வுகள் நடைபெற்றனஇது வியாபாரிகளிடையே அதிருப்தியையும் அச்சத்தையும் ஏற்டுத்தியது
மார்க்கெட்டின் அந்த கடைகளை நம்பி வாழும் சுமார் 300 குடும்பங்கள் வாழ்வாதாரத்தை இழந்து வாடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் என மார்க்கெட் வியாபாரிகள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் உழவர் சந்தையை மார்க்கெட் பகுதியில் அமைக்க கூடாது என கோத்தகிரி மார்க்கெட் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் , வாகன டிரைவர்கள், உரிமையாளர்கள் சார்பில் தமிழக முதல்-அமைச்சருக்கு மனு அனுப்பும் போராட்டம் நடைபெற்றது.பழைய இடத்திலேயே உழவர் சந்தை அமைக்க வேண்டும், இல்லாவிட்டால் புதிய நூலகம் அருகே உள்ள பேருராட்சி இடம், என்.சி.எம்.எஸ் மைதானம், ரைபில் ரேஞ்ச் கால்நடை மைதானம் ஆகிய இடங்களில் ஒன்றை தேர்ந்தெடுத்து உழவர் சந்தை அமைக்கலாம் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.மார்க்கெட் பகுதியில் கடைகளை அகற்றி உழவர் சந்தை அமைந்தால் பேருராட்சிக்கு ரூ.1 கோடிவரை வருமான இழப்பு ஏற்படும் என சுட்டி காட்டப்பட்டு உள்ளது.
- இருவயல், தொரப்பள்ளி ஆகிய பழங்குடியின கிராமங்களுக்குள் மழை வெள்ளம் புகுந்தது.
- 20-க்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது. இதனால் வீடுகளில் இருந்தவர்கள் அங்கிருந்து வெளியேறி பாதுகாப்பான இடங்களுக்கு சென்று தங்கினர்.
ஊட்டி:
நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை கடந்த ஒரு மாதமாக தொடர்ந்து பெய்து வருகிறது.
கூடலூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளான தேவர் சோலை, தேவாலா, பந்தலூர் உள்ளிட்ட இடங்களில் நேற்றுமுன்தினம் இரவு முதல் மழை பெய்து வருகிறது. இன்று காலையும் அங்கு கனமழை கொட்டியது.
இதனால் ஒற்றவயல், குற்றிமுற்றி, கம்மாத்தி, புத்தூர்வயல், தொரப்பள்ளி வழியாக மாயாற்றுக்கு செல்லும் ஆற்று வாய்க்காலில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இருவயல், தொரப்பள்ளி ஆகிய பழங்குடியின கிராமங்களுக்குள் மழை வெள்ளம் புகுந்தது. அங்கு 20-க்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது. இதனால் வீடுகளில் இருந்தவர்கள் அங்கிருந்து வெளியேறி பாதுகாப்பான இடங்களுக்கு சென்று தங்கினர்.
மழை மட்டுமல்லாமல் நீலகிரி மாவட்டத்தில் தற்போது கடும் குளிரும் வாட்டி வதைக்கிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
கூடலூரில் இருந்து ஊட்டி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் நடுவட்டம், ஆகாச பாலம் பகுதியில் ராட்சத கற்கள் சாலையில் உருண்டு விழுந்தது. இதன் காரணமாக கூடலூர்-ஊட்டி இடையே போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போலீசாரும், வருவாய்த்துறையினரும் விரைந்து வந்து பொக்லைன் எந்திரம் மூலம் ராட்சத கற்களை அகற்றி போக்குவரத்தை சீர் செய்தனர். இதனால் 2 மணி நேரத்துக்கும் மேலாக அந்த சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
ஓவேலி லாரஸ்டன் 4-ம் நெம்பர் பகுதியில் தமிழ்செல்வி என்பவரது வீட்டின் மீது மரம் விழுந்தது. இதில் வீட்டின் மேற்கூரை சேதம் அடைந்தது.
- பாரதிய ஜனதா தொழிற்சங்க பேரவை என்ற போலியான அமைப்பு உருவாக்கிய 3 பேர் நீக்கப்படுகிறார்கள்.
- கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அவர்களிடம் கட்சி சார்பாக எவ்வித தொடர்பும் வைத்துக் கொள்ள வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது.
சென்னை:
தமிழக பாரதிய ஜனதா தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழக பாரதிய ஜனதா கட்சியின் அனுமதியும் ஒப்புதலும் இல்லாமல் கட்சியின் விதிமுறைகளுக்கு மாறாக பாரதிய ஜனதா தொழிற்சங்க பேரவை என்ற போலியான அமைப்பை உருவாக்கியும், கட்சியின் நிர்வாகிகள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியும், கட்சியின் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வருவதாலும் கட்சியின் பொறுப்பில் இருந்தும், அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தும், ஸ்டீல் அருள் (மாநில செயலாளர் உள்ளாட்சி பிரிவு), கே.ராஜு, கருணாகரன் ஆகியோர் 6 ஆண்டுகளுக்கு நீக்கப்படுகிறார்கள்.
ஆகவே கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அவர்களிடம் கட்சி சார்பாக எவ்வித தொடர்பும் வைத்துக் கொள்ள வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- 29 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு.
- கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தார்.
அரவேணு
நீலகிரி மாவட்ட கலெக்டர் அம்ரித் உத்தரவி ன்படி, பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் இப்ராகிம் ஷா தலைமையில், பேரூராட்சி செயல் அலுவலர் மணிகண்டன், கோத்தகிரி வட்டாட்சியர் காயத்ரி, வருவாய் ஆய்வாளர் அருண் உள்ளிட்ட அதிகாரிகள் கோத்தகிரியில் உள்ள கடைகளில் தடை செய்த பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தப்படுகிறதா என சோதனை மேற்கொ ண்டனர்.
மார்க்கெட் மற்றும் போக்குவரத்து போலீஸ் நிலைய சாலை உள்ளிட்ட பகுதிகளில் கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களில் பிளாஸ்டிக் பைகள் விற்பனை செய்யப்படுகிறதா என சோதனை நடத்தினர். சில வியாபாரிகள் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்தியது தெரி யவந்தது. இதுதொடர்பாக வியாபாரிகளுக்கு ரூ.10 ஆயிரத்து 500 அபராதம் விதிக்கப்பட்டது. அரவேணு பஜாரில் தாசில்தார் காயத்ரி தலைமையில் கடைகளில் சோதனை மேற்கொண்டனர். அங்கு 29 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு, வியாபாரிகளுக்கு ரூ.10 ஆயிரத்து 500 அபராதம் விதிக்கப்பட்டது.
கோத்தகிரியில் 4½ கிலோ பிளாஸ்டிக் கவர்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதுகுறித்து அதிகாரிகள் கூறும்போது, வணிக நிறுவனங்கள், திருமண மண்டபங்கள் அல்லது கடைகளில் தடை செய்த பிளாஸ்டிக் பைகள், கவர்கள், டம்ளர்கள், தட்டுகள் உள்ளிட்டவை பயன்படுத்துவது கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எச்சரிக்கை விடுத்தார்.
- போலீசார் இதுகுறித்து தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
- அலமாரிகள் எரிந்து நாசமானது.
அரவேணு,
கோத்தகிரியில் இருந்து ஊட்டி, குன்னூர் செல்லும் சாலையில் அய்யப்பன் கோவில் அமைந்துள்ளது. அங்கு ஒரு மண்டபம் உள்ளது. மண்டபத்தின் மேல் பகுதியில், காய்கறி மற்றும் பழக்கடை செயல்பட்டு வந்தது.
கடந்த சில மாதம் முன்பு அங்கு கடை நடத்தி வந்தவர் கடையை காலி செய்தார். ஆனால், கடையில் பயன்படுத்திய மரத்தால் ஆன அலமாரிகளை கொண்டு செல்லாமல், அங்கேயே வைத்திருந்தார்.
இந்தநிலையில் இரவு 10.15 மணியளவில் பழக்கடையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. அங்கிருந்த அலமாரிகள் தீப்பிடித்து எரிந்தது. அந்த வழியாக ரோந்து சென்ற போலீசார் இதுகுறித்து தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். ஒரு மணி நேரத்திற்கு பின்னர் தீயை அணைத்தனர். கடையில் பொருட்கள் எதுவும் இல்லாததால், அலமாரிகள் எரிந்து நாசமானது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
- கோத்தகிரி ஜூட்ஸ் பப்ளிக் பள்ளி மாணவர்கள் சாம்பியன் பட்டத்தை வென்றனர்.
- 19 வயதுக்கு உட்பட்ட பெண்கள் பிரிவில் முதலிடம் பிடித்து சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினர்.
அரவேணு -
நீலகிரி, கொடைக்கானல் மண்டலத்திற்கு உட்பட்ட ஆங்கிலப் பள்ளிகளுக்கு இடையேயான 70-வது ஆண்டு வருடாந்திர தடகள போட்டிகள் ஊட்டியில் தனியார் பள்ளி மைதானத்தில் நடைபெற்றது.
மொத்தம் 31 பள்ளிகளை சேர்ந்த ஏராளமான மாணவ-மாணவிகள் போட்டிகளில் பங்கேற்றனர். போட்டிகளை வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லூரி பிரிகேடியர் அனுராக் பரத்வாஜ் தொடங்கி வைத்தார். ஆங்கில பள்ளிகளின் சங்கத் தலைவர் சரவணசந்தர் முன்னிலை வகித்தார். தடகள போட்டிகளில் ஆண்கள் பிரிவில் 192.5 புள்ளிகளை பெற்ற கோத்தகிரி ஜூட்ஸ் பப்ளிக் பள்ளி மாணவர்கள் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வென்றனர்.
இதேபோல் பெண்கள் பிரிவில் ஜூட்ஸ் பள்ளி மாணவிகள் 2-ம் இடத்தை பிடித்து சாதனை படைத்தனர். மேலும் ஜூட்ஸ் பள்ளி மாணவர்கள் 11, 14 வயதுக்கு உட்பட்ட ஆண்கள் பிரிவில் முதலிடம், 17 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் 2-ம் இடம், 19 வயதுக்கு உட்பட்ட பெண்கள் பிரிவில் முதலிடம் பிடித்து சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினர்.
இதுமட்டுமின்றி தனிநபர் சம்பியன் ஷிப் விருதுகளை ஆண்கள் 14 வயதுக்கு உட்பட்ட பிரிவில் சர்வேஸ், 17 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் சவன் எஸ் ரெஜிநால்ட் ஆகியோரும், பெண்கள் 14 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் ஹர்ஷநேத்ரா, 19 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் கரீஷ்மா ஆகிய ஜூட்ஸ் பள்ளி மாணவர்கள் வெற்றி பெற்று சாதனை படைத்தனர்.
மண்டல அளவிலான போட்டியில் சாதனைப் படைத்த ஜூட்ஸ் பள்ளி மாணவ-மாணவிகள் மற்றும் பயிற்சியாளர்கள் பிரபு, வனஜா சேகர் ஆகியோரை, பள்ளி தாளாளர் தன்ராஜன், செயல் இயக்குநர் டாக்டர் சம்ஜித் தனராஜன், பள்ளி முதல்வர் சரோ தன்ராஜன் ஆகியோர் பாராட்டி ஊக்குவித்தனர்.
- வினாடிக்கு 300 கன அடி நீா் வந்து கொண்டிருக்கிறது.
- கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டது.
ஊட்டி,
நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடா் மழை காரணமாக எமரால்டு அணையின் பாதுகாப்பு கருதி அணையில் இருந்து தண்ணீா் திறக்கப்பட்டது.
நீலகிரி மாவட்டத்தில் கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது.
இதனால் நீலகிரி மாவட்டத்தில் உள்ள குந்தா, அவலாஞ்சி, எமரால்டு, பைக்காரா, மேல்பவானி போன்ற அணைகளுக்கு நீா்வரத்து அதிகரித்து காணப்பட்டது.
இந்நிலையில் எமரால்டு அணை உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்து வரும் தொடா் மழையின் காரணமாக அணையின் முழு கொள்ளளவான 145 அடியை எட்டிய நிலையில் அணைக்கு வினாடிக்கு 300 கன அடி நீா் வந்து கொண்டிருக்கிறது.
இதனைத் தொடா்ந்து, அணையின் பாதுகாப்பு கருதி அணையில் இருந்து 430 கன அடி உபரிநீரை மாவட்ட நிா்வாகம் திறந்துவிட்டுள்ளது.
முன்னதாக, கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு ஒலிப்பெருக்கி மூலம் மாவட்ட நிா்வாகம் சாா்பில் அறிவுறுத்தப்பட்டது. மேலும், பொதுப் பணித் துறை அதிகாரிகள் அணையில் முகாமிட்டு தொடா்ந்து கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.






