நீலகிரியில் தொடர் மழை எமரால்டு அணை நிரம்பியது

வினாடிக்கு 300 கன அடி நீா் வந்து கொண்டிருக்கிறது. கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டது.
நீலகிரியில் தொடர் மழை எமரால்டு அணை நிரம்பியது
Published on

ஊட்டி,

நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடா் மழை காரணமாக எமரால்டு அணையின் பாதுகாப்பு கருதி அணையில் இருந்து தண்ணீா் திறக்கப்பட்டது.

நீலகிரி மாவட்டத்தில் கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது.

இதனால் நீலகிரி மாவட்டத்தில் உள்ள குந்தா, அவலாஞ்சி, எமரால்டு, பைக்காரா, மேல்பவானி போன்ற அணைகளுக்கு நீா்வரத்து அதிகரித்து காணப்பட்டது.

இந்நிலையில் எமரால்டு அணை உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்து வரும் தொடா் மழையின் காரணமாக அணையின் முழு கொள்ளளவான 145 அடியை எட்டிய நிலையில் அணைக்கு வினாடிக்கு 300 கன அடி நீா் வந்து கொண்டிருக்கிறது.

இதனைத் தொடா்ந்து, அணையின் பாதுகாப்பு கருதி அணையில் இருந்து 430 கன அடி உபரிநீரை மாவட்ட நிா்வாகம் திறந்துவிட்டுள்ளது.

முன்னதாக, கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு ஒலிப்பெருக்கி மூலம் மாவட்ட நிா்வாகம் சாா்பில் அறிவுறுத்தப்பட்டது. மேலும், பொதுப் பணித் துறை அதிகாரிகள் அணையில் முகாமிட்டு தொடா்ந்து கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா். 

X

Maalai Malar
www.maalaimalar.com