என் மலர்
நாமக்கல்
- வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை (அட்மா) திட்டத்தின் கீழ் அங்கக வேளாண்மை மற்றும் இயற்கை விவசாயம் குறித்து விவசாயிகளுக்கான பயிற்சி வள்ளிபுரம் கிராமத்தில் நடைபெற்றது.
- வேளாண்மை உதவி இயக்குநர் சித்ரா தலைமை வகித்தார்.
நாமக்கல்:
நாமக்கல் மாவட்ட வேளாண்மைத்துறையின் மூலம் செயல்படுத்தப்படும் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை (அட்மா) திட்டத்தின் கீழ் அங்கக வேளாண்மை மற்றும் இயற்கை விவசாயம் குறித்து விவசாயிகளுக்கான பயிற்சி வள்ளிபுரம் கிராமத்தில் நடைபெற்றது. வேளாண்மை உதவி இயக்குநர் சித்ரா தலைமை வகித்தார். பயிற்சியில் மோகனூர் வட்டார அங்கக வேளாண்மை சான்று பெற்ற விவசாயி வேலுசாமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு அங்கக வேளாண் சான்று பெறும் முறைகளை விளக்கினார். விவசாயிகளின் சந்தேகங்களுக்கு விரிவாகப் பதிலளித்தார்.இதில் வள்ளிபுரம் இயற்கை விவசாயி கலைவாணி அங்கக வேளாண்மையில் தனது பண்ணை அனுபவங்களை விவசாயிகளிடம் பகிர்ந்து கொண்டார்.பயிற்சியில் அட்மா திட்ட வட்டார தொழில்நுட்ப மேலாளர் ரமேஷ், உதவி தொழில்நுட்ப மேலாளர் கவிசங்கர், உதவி வேளாண்மை அலுவலர் சதீஸ்குமார் ஆகியோர் அட்மா திட்ட பணிகள் குறித்தும் அதன் செயல்பாடுகள், உழவன் செயலின் பதிவிறக்கம் அதன் பயன்கள், பிரதமரின் கவுரவ நிதி தொகை பற்றி விளக்கமளித்து வருகை புரிந்த விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கி நன்றி கூறினர்.
- பிரகாஷ் (47). விவசாயி. இவருக்கும் இவரது மனைவிக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
- இந்நிலையில் நேற்று இரவு வீட்டில் யாரும் இல்லாதபோது விட்டதில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் வேலகவுண்டன்பட்டி அருகே முசிறி வட்டக்காடு பகுதியை சேர்ந்தவர் பிரகாஷ் (47). விவசாயி. இவருக்கும் இவரது மனைவிக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக பிரகாஷ் மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று இரவு வீட்டில் யாரும் இல்லாதபோது விட்டதில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். அருகில் இருந்தவர்கள் உடனடியாக அவரது உடலை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் பிரகாஷ் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து வேலகவுண்டன்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- நாமக்கல் மாவட்டம் சாலைப்புதூரில் வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடம் செயல்பட்டு வருகிறது.
- இங்கு நடைபெறும் ஏலத்தில் தமிழகம் மற்றும் வெளிமாநிலங்களை சேர்ந்த வியாபாரிகள் மற்றும் எண்ணெய் நிறுவன முகவர்கள் கலந்து கொண்டு பொருட்களை வாங்கி செல்கின்றனர்.
பரமத்தி வேலூர்:
நாமக்கல் மாவட்டம் சாலைப்புதூரில் வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடம் செயல்பட்டு வருகிறது. இதில் அருகே உள்ள கரூர் ஒன்றியம், க.பரமத்தி ஒன்றியம் பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் தாங்கள் விளைவித்த வேளாண் பொருட்களை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். இங்கு நடைபெறும் ஏலத்தில் தமிழகம் மற்றும் வெளிமாநிலங்களை சேர்ந்த வியாபாரிகள் மற்றும் எண்ணெய் நிறுவன முகவர்கள் கலந்து கொண்டு பொருட்களை வாங்கி செல்கின்றனர். அதன்படி இந்த வாரம் நடந்த ஏலத்தில் நிலக்கடலை காய் 116.49 1/2 குவிண்டால் எடை கொண்ட 399 மூட்டை நிலக்கடலை காய் விற்பனைக்கு வந்தது. இதில் கிலோ அதிகபட்ச விலையாக ரூ.86.00-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.63.13-க்கும், சராசரி விலையாக ரூ.84.30-க்கும் என மொத்தம் ரூ. 8 லட்சத்து 44ஆயிரத்து 12-க்கு ஏலம் போனது.
- கோப்பணம்பாளையம் பரமேஸ்வரர் ஆலயத்தில் உள்ள நந்தி பெருமானுக்கு புரட்டாசி மாத வளர்பிறை பிரதோஷத்தை முன்னிட்டு 18 வகை யான வாசனைத் திரவியங்க ளால் அபிஷேகம் நடை பெற்றது.
- பின்னர் சாமி ரிஷப வாகனத்தில் கோவிலை சுற்றி வலம் வந்தார். அதனைத் தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா கோப்பணம்பாளையம் பரமேஸ்வரர் ஆலயத்தில் உள்ள நந்தி பெருமானுக்கு புரட்டாசி மாத வளர்பிறை பிரதோஷத்தை முன்னிட்டு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திரு மஞ்சனம், தேன், கரும்புச்சாறு விபூதி உள்ளிட்ட 18 வகை யான வாசனைத் திரவியங்க ளால் அபிஷேகம் நடை பெற்றது. அதனை தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.
பின்னர் சாமி ரிஷப வாகனத்தில் கோவிலை சுற்றி வலம் வந்தார். அதனைத் தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு நந்தி பெரு மான், பரமேஸ்வரர் மற்றும் பரிவார தெய்வங்களை தரிசனம் செய்து அருள் பெற்றனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
இதேபோல் பரமத்தி வேலூர் அருகே உள்ள பாண்டமங்கலம் புதிய காசி விஸ்வநாதர் கோவில், நன்செய் இடையாறு திருவே லீஸ்வரர் கோவில், மாவு ரெட்டி பீமேஸ்வரர் கோவில், பில்லூர் வீரட்டீஸ்வரர் கோவில், பொத்தனூர் காசி விஸ்வநாதர் கோவில், பரமத்திவேலூர் பேட்டை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில், எல்லையம்மன் கோவிலில் உள்ள ஏகாம்ப ரேஸ்வரர் கோவில், பிலிக்கல்பாளையம் கரட்டூர் விஜயகிரி வடபழனியாண்ட வர் கோவிலில் உள்ள பருவ தஈஸ்வரர், பரமத்திவேலூர் வல்லப விநாயகர் கோவிலில் உள்ள விசாலாட்சி சமேத பானலிங்கவிஸ்வேஸ்வரர் மற்றும் பரமத்திவேலூர் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள சிவன் கோவில்களில் எழுந்தருளியுள்ள சிவபெரு மானுக்கும், நந்திகேஸ்வ ரருக்கும் புரட்டாசி மாத வளர்பிறை பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு அபிஷேக, ஆரா தனைகளும், சிறப்பு அலங்கா ரமும் நடைபெற்றது. இதில் அந்தப் பகுதியை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டனர்.
- இனிப்பு மற்றும் காரவகை உணவு பண்டங்களின் பொட்டலங்களில் உற்பத்தி தேதி, காலாவதியாகும் தேதி உள்ளிட்ட விவரங்கள் இல்லாமல் விற்பனை
- இதன் மூலம் ஒரே நாளில் உணவு சம்மந்தப்பட்ட 10 வழக்குகளில் நாமக்கல் நுகர்வோர் கோர்ட்டில் சமரச தீர்வு ஏற்பட்டுள்ளது.
நாமக்கல்:
இனிப்பு மற்றும் காரவகை உணவு பண்டங்களின் பொட்டலங்களில் உற்பத்தி தேதி, காலாவதியாகும் தேதி உள்ளிட்ட விவரங்கள் இல்லாமல் விற்பனை செய்ததாக நாமக்கல், திருச்சி, கோவை மாவட்டங்களில் உள்ள கடைகளின் மீது ஏற்கனவே தொடரப்பட்ட பல வழக்குகள் நாமக்கல் நுகர்வோர் கோர்ட்டில் நிலுவையில் உள்ளன.
இந்த வழக்குகள் உட்பட 53 வழக்குகளில் நாமக்கல் மாவட்ட நுகர்வோர் கோர்ட்டில் நேற்று நீதிபதி டாக்டர் ராமராஜ் மற்றும் உறுப்பினர் ரத்தினசாமி ஆகியோர் முன்னிலையில் சமரச பேச்சுவார்த்தை நடைபெற்றது.
ரூ.1 லட்சம் இழப்பீடு
நாமக்கல்லில் இனிப்பு மற்றும் கார வகைகளை விற்பனை செய்யும் 6 பேக்கரி உரிமையாளர்கள், திருச்சி மாவட்டத்தில் உள்ள 2 கடை உரிமையாளர்கள், கோவையில் உள்ள 2 கடை உரிமையாளர்கள் சமரச பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டு பாதிக்கப்பட்ட நுகர்வோர்களுக்கு கோர்ட்டு உத்தரவுப்படி ரூ.1 லட்சம் இழப்பீடு செலுத்தினர். இதன் மூலம் ஒரே நாளில் உணவு சம்மந்தப்பட்ட 10 வழக்குகளில் நாமக்கல் நுகர்வோர் கோர்ட்டில் சமரச தீர்வு ஏற்பட்டுள்ளது.
மற்றொரு வழக்கு
நாமக்கல்லில் உள்ள மின்சாதன பொருட்கள் விற்பனை செய்யும் ஒரு கடையில் வாங்கப்பட்ட பொருட்களுக்கான ரசீதில் விற்பனை செய்த பொருட்கள் திரும்ப வாங்கப்படமாட்டாது என அச்சிடப்பட்டது தவறு என நுகர்வோர் வழக்கு தாக்கல் செய்திருந்தார். அந்த வழக்கில் கடை உரிமையாளர் நுகர்வேருக்கு ரூ.10 ஆயிரம் இழப்பீடு வழங்கினார்.
மற்றொரு வழக்கில் நாமக்கல்லில் உள்ள தனியார் சூப்பர் மார்க்கெட் நிர்வாகம் வாடிக்கையாளரிடம் கேரி பேக் கொடுத்ததற்கு ரூ.10 வசூலித்தது தவறு என தொடரப்பட்ட வழக்கில் அந்த நிறுவனம் நுகர்வோருக்கு இழப்பீடாக ரூ.2,000 செலுத்தியது. முதல் சுற்று பேச்சு வார்த்தையில் சமரசம் ஏற்பட வாய்ப்பில்லாத சில வழக்குகள் 2-வது சுற்று பேச்சு வார்த்தைக்காக வரும் அக்டோபர் 6-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
- ஓட்டல்கள், சில்லி சிக்கன் தயாரிக்கும் கடைகளில் தரமற்ற உணவுப் பொருட் கள் விற்பனை செய்வதாக மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிக்கு தகவல் கிடைத்தது.
- சிக்கன் சில்லி கடைகள் மற்றும் ஓட்டல்களில் உணவு பாதுகாப்பு மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் அருண் தலை மையில் உணவு பாதுகாப்பு அலுவலர் செல்வகுமார் கொண்ட குழுவினர் திடீர் ஆய்வு நடத்தினர்.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் சுல்தான் பேட்டை மற்றும் பழைய பைபாஸ் சாலையில் உள்ள ஓட்டல்கள், சில்லி சிக்கன் தயாரிக்கும் கடைகளில் தரமற்ற உணவுப் பொருட்கள் விற்பனை செய்வதாக மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிக்கு தகவல் கிடைத்தது.
ஆய்வு
அதன்பேரில் பரமத்திவேலூர் பழைய பைபாஸ் சாலை மற்றும் சுல்தான் பேட்டைபகுதிகளில் உள்ள சிக்கன் சில்லி கடைகள் மற்றும் ஓட்டல்களில் உணவு பாதுகாப்பு மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் அருண் தலை மையில் உணவு பாதுகாப்பு அலுவலர் செல்வகுமார் கொண்ட குழுவினர் திடீர் ஆய்வு நடத்தினர்.
அப்போது தயாரிப்பு தேதி இல்லாமல் வைத்தி ருந்த சில்லி பவுடர்கள் மூலம் உணவுப் பொருட்கள் தயாரித்து விற்பனை செய்வது தெரிய வந்தது. மேலும் பழைய சப்பாத்தி மாவு மற்றும் கெட்டுப்போன இறைச்சி களை பறிமுதல் செய்து பினாயில் ஊற்றி அளித்தனர்.
அபராதம்
இது தொடர்பாக ஓட்டல் கடைக்கு நோட்டீஸ் வழங்கி சுகாதாரமற்ற 6 கிலோ சில்லி பவுடர்களை பறி முதல் செய்தனர்.
தொடர்ந்து ஆய்வு செய்து தரமற்ற உணவுப் பொருட்களை தயாரித்த அனைத்து கடைகளுக்கும் அபராதம் விதிக்கப்பட்டது.
மேலும் இதுபோன்ற தரமற்ற உணவு பொருட் களை தயாரித்தாலோ, காலாவதியான சில்லி பவுடர் பயன்படுத்தினாலோ கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தனர்.
- சூரியாம்பாளையம் பெரிய தோட்டம் பகுதியில் ரூ.17 லட்சம் திட்ட மதிப்பீட்டில் தார் சாலை அமைக்கும் பணி தொடங்கி நடைபெற்று வந்தது.
- காலை புதிதாக போட்டப்பட்ட இந்த தார் சாலை பெயர்ந்து கிடந்தது. இதை பார்த்து அந்த பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே சூரியாம்பாளையம் பெரிய தோட்டம் பகுதியில் ரூ.17 லட்சம் திட்ட மதிப்பீட்டில் தார் சாலை அமைக்கும் பணி தொடங்கி நடைபெற்று வந்தது. கடந்த 3 நாட்களுக்கு முன்பு தார்சாலை அமைக்கும் பணி முடிவடைந்தது.
நேற்று முன்தினம் காலை புதிதாக போட்டப்பட்ட இந்த தார் சாலை பெயர்ந்து கிடந்தது. இதை பார்த்து அந்த பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். கடந்த 25-ந் தேதி மாலை சூரியம்பாளையம் பகுதியில் லேசான மழை பெய்தது. இந்த மழைக்கே தாக்குப் பிடிக்காமல் தார் சாலை பெயர்ந்து போயுள்ளது தெரியவந்தது.
இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறியதாவது:-
இப்பகுதியில் பழைய தார் சாலை திடமாகவும் இருந்தது. ஆனால் புதிய தார்சாலை போடுகிறோம் என்ற பெயரில் 2 நாட்களுக்கு கூட தாக்குபிடிக்காத தரமில்லாத சாலை அமைத்து உள்ளனர்.
பழைய தார் சாலையின் மீது புதிய தார்சாலை அமைக்கும் போது பழைய சாலையை பெயர்த்து எடுக்காமல் அதன் மீது சிறிய ஜல்லிகளை கொட்டி தார் கலவைகளை மட்டும் போட்டு சாலை அமைத்து விடுகின்றனர். இதனால் தார் சாலைகள் தரமற்றதாக உள்ளது. இதுகுறித்து கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
- கபிலர்மலை ஊராட்சி ஒன்றிய ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டப் பணிகள் சார்பில் சமுதாய வளைகாப்பு விழா பாண்டமங்கலத்தில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
- விழாவில் கபிலர்மலை ஒன்றிய குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் பிரபா கலந்து கொண்டு அனைவரையும் வரவேற்றார்.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா கபிலர்மலை ஊராட்சி ஒன்றிய ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டப் பணிகள் சார்பில் சமுதாய வளைகாப்பு விழா பாண்டமங்கலத்தில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
விழாவில் கபிலர்மலை ஒன்றிய குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் பிரபா கலந்து கொண்டு அனைவரையும் வரவேற்றார். கபிலர்மலை வட்டார ஆட்மா தலைவர் சண்முகம் தலைமை வகித்தார்.
கபிலர்மலை ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் ஜே.பி.ரவி, பாண்ட மங்கலம், பேரூராட்சி தலைவர் டாக்டர் சோம சேகர், துணை தலை வர் பெருமாள் என்கிற முருகவேல் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள். இதில் 100-க்கும் மேற்பட்ட கர்ப்பிணி பெண்களுக்கு டாக்டர் சித்ரா மருத்துவ அறிவுரைகள் வழங்கினார். விழாவில் கலந்து கொண்ட கர்ப்பிணி பெண்கள் அனைவருக்கும் சீர்த்தட்டு, புடவை, வளையல் மற்றும் மஞ்சள், குங்குமம் வழங்கப்பட்டது.
முடிவில் வட்டார ஒருங்கிணைப்பாளர் மனோஜ் நன்றி கூறினார். விழா விற்கான ஏற்பாடுகளை கபிலர்மலை குழந்தை வளர்ச்சித் திட்ட கண்காணிப்பாளர் ஜானகி, மேற்பார்வையாளர்கள் அன்னபூரணம், ராமாயி, மணிமேகலை இளநிலை உதவியாளர் சாந்தி மற்றும் அலுவலக உதவியாளர் முகமதுதாவூத் ஆகியோர் செய்திருந்தனர்.
- பிரபாத் (37). விவசாயி. இவரது மனைவி பவானியில் உள்ள அவரது தந்தை வீட்டில் உள்ளார்.
- மேம்பாலம் அருகில் சென்று கொண்டிருந்தபோது முன்னால் சென்று கொண்டிருந்த வாகனத்தின் மீது பிரபாத் ஓட்டிச் சென்ற மோட்டார்சைக்கிள் மோதியது.
கரூர் காமாட்சி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் நல்லுசாமி. இவரது மகன் பிரபாத் (37). விவசாயி. இவரது மனைவி பவானியில் உள்ள அவரது தந்தை வீட்டில் உள்ளார். அவரை பார்ப்பதற்காக பிரபாத் தனது மோட்டார்சைக்கிளில் கரூரில் இருந்து திருச்செங்கோடு வழியாக செல்வதற்காக கரூர்- சேலம் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது பரமத்திவேலூர் அருகே குப்புச்சிபாளையம் செல்லும் பிரிவு சாலை பகுதியில் உள்ள மேம்பாலம் அருகில் சென்று கொண்டிருந்தபோது முன்னால் சென்று கொண்டிருந்த வாகனத்தின் மீது பிரபாத் ஓட்டிச் சென்ற மோட்டார்சைக்கிள் மோதியது. இதில் நிலைத்தடுமாறி பிரபாத் மோட்டார்சைக்கிளுடன் கீழே விழுந்தார். இதில் அவருக்கு தலை மற்றும் பல்வேறு பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டது. அந்த வழியாக சென்றவர்கள் பிரபாத்தை மீட்டு உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் பரமத்திவேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் பிரபாத் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து பரமத்திவேலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பனிமலர் (56). இவர் கடந்த 23-ந் தேதி வசந்தபுரத்தில் உள்ள சர்ச்சுக்கு சென்று விட்டு உறவினர் வசந்த் என்பவரது மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்தார்.
- பனிமலருக்கு தலை சுற்றுவது போன்று இருந்ததால் மோட்டார்சைக்கிளை நிறுத்தும்படி கூறியுள்ளார்.
நாமக்கல்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா மணியனூர் ஆதிதிராவிடர் தெருவை சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன் (65). இவரது மனைவி பனிமலர் (56). இவர் கடந்த 23-ந் தேதி வசந்தபுரத்தில் உள்ள சர்ச்சுக்கு சென்று விட்டு உறவினர் வசந்த் என்பவரது மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்தார். பரமத்தி - திருச்செங்கோடு சாலையில் இரும்புபாலம் பஸ் நிறுத்தம் பகுதியில் உள்ள மதுரைவீரன் கோவில் அருகே வந்து கொண்டிருந்தனர். அப்போது பனிமலருக்கு தலை சுற்றுவது போன்று இருந்ததால் மோட்டார்சைக்கிளை நிறுத்தும்படி கூறியுள்ளார். இதையடுத்து வசந்த் திடீரென பிரேக் போட்டதில் நிலை தடுமாறி பனிமலர் கீழே விழுந்தார். இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அவரை மீட்டு நாமக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி பனிமலர் நேற்று இறந்தார். இது குறித்து பனிமலரின் மகன் நிஷாந்த் (29) அளித்த புகாரின் பேரில் நல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தின் தலைமையகத்தில் பருத்தி ஏலம் நடைபெற்றது.
- இந்த ஏலத்திற்கு 433 பருத்தி மூட்டைகளை விவசாயிகள் கொண்டு வந்து இருந்தனர்.
திருச்செங்கோடு:
திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தின் தலைமையகத்தில் பருத்தி ஏலம் நடைபெற்றது. இந்த ஏலத்திற்கு 433 பருத்தி மூட்டைகளை விவசாயிகள் கொண்டு வந்து இருந்தனர். இதில் பிடி ரகம் பருத்தி குவிண்டாலுக்கு ரூ.6089 முதல் ரூ.7360 வரையிலும் விலை போனது. இதன்படி ரூ. 8 லட்சத்து 55 ஆயிரத்திற்கு விற்பனை நடைபெற்றது. இதேபோல் 10 மூட்டைகள் எள் விற்பனைக்கு வந்தது. இதில் சிகப்பு எள் கிலோ ரூ.133 முதல் ரூ.166 வரையிலும், கருப்பு எள் கிலோ ரூ.121 முதல் ரூ.157 வரையிலும் விலை போனது. மொத்தம் ரூ.50 ஆயி ரத்துக்கு விற்பனை நடைபெற்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
- அரசு மருத்துவமனை தரம் உயர்த்தி தற்போது அனைத்து வசதி களுடன் கூடிய மருத்துவ மனையாக உள்ளது.
- மருத்துவத்திற்கு தனித்தனி டாக்டர்கள் இங்கு உள்ளனர்.இங்கே தினசரி 800-க்கு மேற்பட்ட நோயாளிகள், புறநோயாளியாக சிகிச்சை பெற்று செல்கின்றனர்.
பரமத்திவேலூர்:
பரமத்திவேலூர் அரசு மருத்துவமனை தரம் உயர்த்தி தற்போது அனைத்து வசதிகளுடன் கூடிய மருத்துவ மனையாக உள்ளது. இங்கு எக்ஸ்ரே, ரத்த பரிசோதனை மற்றும் பொதுநல வைத்தியம், பல் மருத்துவம், மனநல மருத்துவம், மகப்பேறு மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு மருத்துவம் பார்க்கப்பட்டு வருகிறது.
மருத்துவத்திற்கு தனித்தனி டாக்டர்கள் இங்கு உள்ளனர்.இங்கே தினசரி 800-க்கு மேற்பட்ட நோயாளிகள், புறநோயாளியாக சிகிச்சை பெற்று செல்கின்றனர். 100 படுக்கை வசதிகள் கொண்ட மருத்துவமனையாக திகழ்கிறது. குறிப்பாக மகப்பேறு பிரிவிற்கு கர்ப்பிணி பெண்கள் அதிக அளவில் வந்து பரிசோதனை செய்தும், பிரசவம் பார்த்தும் செல்கின்றனர்.
தற்போது கடந்த சில நாட்களாக மருத்துவ மனையில் தெரு நாய்கள் மற்றும் எலிகள் தொல்லை அதிகரித்து வருகிறது. அரசு மருத்துவமனை சுற்றி உள்ள பகுதிகளில் விற்கப்படும் பழங்கள் மற்றும் ஆஸ்பத்திரி வெளியே சாப்பிட்டு விட்டு சாக்கடையில் போடும் உணவு கழிவுகளுக்கு சாப்பிட எலிகள் வருகின்றனர். உணவு பற்றாக்குறை ஏற்படும்போது எலிகள் அரசு மருத்துவமனை வளாகத்தில் புகுந்து அங்கு வைத்திருக்கும் நோயாளிகளின் உணவுகளை பதம் பார்க்கின்றது.மேலும் அரசு மருத்துவமனை வளாகம் மரங்களால் சூழப்பட்டு இருப்பதால் தெருநாய்கள் அங்கு ஓய்வெடுக்கும் இடமாக மாறியுள்ளது நோயாளிகள் தெரிவித்தனர்.






