வேலகவுண்டன்பட்டி அருகே விவசாயி தூக்கு போட்டு தற்கொலை

பிரகாஷ் (47). விவசாயி. இவருக்கும் இவரது மனைவிக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.இந்நிலையில் நேற்று இரவு வீட்டில் யாரும் இல்லாதபோது விட்டதில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
வேலகவுண்டன்பட்டி அருகே விவசாயி தூக்கு போட்டு தற்கொலை
Published on

பரமத்திவேலூர்:

நாமக்கல் மாவட்டம் வேலகவுண்டன்பட்டி அருகே முசிறி வட்டக்காடு பகுதியை சேர்ந்தவர் பிரகாஷ் (47). விவசாயி. இவருக்கும் இவரது மனைவிக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக பிரகாஷ் மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று இரவு வீட்டில் யாரும் இல்லாதபோது விட்டதில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். அருகில் இருந்தவர்கள் உடனடியாக அவரது உடலை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் பிரகாஷ் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து வேலகவுண்டன்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com