திருச்செங்கோட்டில் ரூ.8.55 லட்சத்திற்கு பருத்தி ஏலம்

வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தின் தலைமையகத்தில் பருத்தி ஏலம் நடைபெற்றது. இந்த ஏலத்திற்கு 433 பருத்தி மூட்டைகளை விவசாயிகள் கொண்டு வந்து இருந்தனர்.
திருச்செங்கோட்டில் ரூ.8.55 லட்சத்திற்கு பருத்தி ஏலம்
Published on

திருச்செங்கோடு:

திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தின் தலைமையகத்தில் பருத்தி ஏலம் நடைபெற்றது. இந்த ஏலத்திற்கு 433 பருத்தி மூட்டைகளை விவசாயிகள் கொண்டு வந்து இருந்தனர். இதில் பிடி ரகம் பருத்தி குவிண்டாலுக்கு ரூ.6089 முதல் ரூ.7360 வரையிலும் விலை போனது. இதன்படி ரூ. 8 லட்சத்து 55 ஆயிரத்திற்கு விற்பனை நடைபெற்றது. இதேபோல் 10 மூட்டைகள் எள் விற்பனைக்கு வந்தது. இதில் சிகப்பு எள் கிலோ ரூ.133 முதல் ரூ.166 வரையிலும், கருப்பு எள் கிலோ ரூ.121 முதல் ரூ.157 வரையிலும் விலை போனது. மொத்தம் ரூ.50 ஆயி ரத்துக்கு விற்பனை நடைபெற்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com