நிலக்கடலைகாய் ரூ. 8.44 லட்சத்துக்கு ஏலம்

நாமக்கல் மாவட்டம் சாலைப்புதூரில் வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடம் செயல்பட்டு வருகிறது.இங்கு நடைபெறும் ஏலத்தில் தமிழகம் மற்றும் வெளிமாநிலங்களை சேர்ந்த வியாபாரிகள் மற்றும் எண்ணெய் நிறுவன முகவர்கள் கலந்து கொண்டு பொருட்களை வாங்கி செல்கின்றனர்.
நிலக்கடலைகாய் ரூ. 8.44 லட்சத்துக்கு ஏலம்
Published on

பரமத்தி வேலூர்:

நாமக்கல் மாவட்டம் சாலைப்புதூரில் வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடம் செயல்பட்டு வருகிறது. இதில் அருகே உள்ள கரூர் ஒன்றியம், க.பரமத்தி ஒன்றியம் பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் தாங்கள் விளைவித்த வேளாண் பொருட்களை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். இங்கு நடைபெறும் ஏலத்தில் தமிழகம் மற்றும் வெளிமாநிலங்களை சேர்ந்த வியாபாரிகள் மற்றும் எண்ணெய் நிறுவன முகவர்கள் கலந்து கொண்டு பொருட்களை வாங்கி செல்கின்றனர். அதன்படி இந்த வாரம் நடந்த ஏலத்தில் நிலக்கடலை காய் 116.49 1/2 குவிண்டால் எடை கொண்ட 399 மூட்டை நிலக்கடலை காய் விற்பனைக்கு வந்தது. இதில் கிலோ அதிகபட்ச விலையாக ரூ.86.00-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.63.13-க்கும், சராசரி விலையாக ரூ.84.30-க்கும் என மொத்தம் ரூ. 8 லட்சத்து 44ஆயிரத்து 12-க்கு ஏலம் போனது.

X

Maalai Malar
www.maalaimalar.com