என் மலர்tooltip icon

    நாமக்கல்

    • முட்டை விலை நாளுக்கு நாள் சரிந்து வருவதால் பண்ணையாளர்கள் கவலை அடைந்துள்ளனர்.
    • 420 காசுக்கு விற்பனை செய்யப்பட்ட முட்டை விலை, 20 காசுகள் மேலும் குறைந்து 400 காசாக நிர்ணயம் செய்யப்பட்டது.

    நாமக்கல்:

    நாமக்கல் மண்டலத்தில் 8 கோடிக்கும் அதிகமான முட்டை கோழிகள் வளர்க்கப்படுகின்றன. இந்த கோழிகள் மூலம் தினமும் 6 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இந்த மூட்டைகள் உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

    இந்த நிலையில் முட்டை விலை நாளுக்கு நாள் சரிந்து வருவதால் பண்ணையாளர்கள் கவலை அடைந்துள்ளனர். இதற்கிடையே தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டம், நாமக்கல்லில் நேற்று நடந்தது. இதில் முட்டை தேவை மற்றும் உற்பத்தி குறித்து விரிவாக ஆலோசனைக்கப்பட்டது. பின்னர் முட்டை விலை மேலும் 20 காசுகள் குறைக்கப்பட்டது.

    அதன்படி 420 காசுக்கு விற்பனை செய்யப்பட்ட முட்டை விலை, 20 காசுகள் மேலும் குறைந்து 400 காசாக நிர்ணயம் செய்யப்பட்டது. உற்பத்தி சரிவாலும், வடமாநிலங்களில் விலை குறைந்ததாலும் நாமக்கல் மண்டலத்தில் கொள்முதல் விலை சரிந்துள்ளது.

    கடந்த 2 நாட்களுக்கு முன்பு 30 காசு சரிந்த நிலையில், நேற்று மேலும் 20 காசு சரிந்து 3 நாட்களில் மட்டும் 50 காசுகள் சரிந்துள்ளதால் கோழி பண்ணை உரிமையாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    மேலும் கோழிப்பண்ணைக்கு தேவையான உணவு தானியங்களை மானிய விலையில் வழங்க வேண்டும் இல்லாவிட்டால் தொழிலை தொடர்ந்து நடத்த முடியாது. பல லட்சம் பேர் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது என்றும் தமிழக அரசுக்கு அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    மற்ற மண்டலங்களில் முட்டை விலை நிலவரம் வருமாறு:

    சென்னை-435 காசு, விஜயவாடா-395, ஹைதராபாத்-370, விஜயவாடா-395, பார்வால-375, மும்பை-430, மைசூர்-415, பெங்களூர்-410, கொல்கத்தா-455, டெல்லி-405 காசுகள் என விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கறிக்கோழி மற்றும் முட்டை கோழி விலையில் எவ்வித மாற்றமும் செய்யாமல் அதே விலை நிர்ணயம் செய்யப்பட்டது.

    • நீரேற்று பாசன திட்டத்தின் மூலம் யாருக்கும் கடந்த சில நாட்களாக தண்ணீர் விநியோகம் செய்யப்படவில்லை.
    • மோட்டார்களை இயக்கி தண்ணீர் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதி அளித்தனர்.

    நாமக்கல்:

    நாமக்கல் அருகே உள்ள மணப்பள்ளி கிராமத்தில், மணப்பள்ளி நீரேற்று பாசன கூட்டுறவு சங்கம், கடந்த 50 ஆண்டுகளுக்கு மேல் செயல்பட்டு வருகிறது. இச்சங்கத்தில், அப்பகுதியை சேர்ந்த, 200-க்கும் மேற்பட்ட விவசாயிகள் உறுப்பினர்களாக உள்ளனர். இச்சங்கத்தின் மூலம், 400 ஏக்கர் விவசாய நிலங்களுக்கு, காவிரி ஆற்றின் அருகில் உள்ள கிணற்றில் இருந்து, மின் மோட்டார் மூலம் தண்ணீர் எடுத்து, விவசாயிகளுக்கு பகுதி வாரியாக பிரித்து, முறை வைத்து குழாய்கள் மூலம் தண்ணீர் விநியோகம் செய்யப்படுகிறது.

    இந்த தண்ணீரைக் கொண்டு, விவசாயிகள் நெல், கரும்பு, வாழை, மரவள்ளி கிழங்கு உள்ளிட்ட பயிர்களை சாகுபடி செய்து வருகின்றனர். இந்நிலையில், சங்க நிதியில் இருந்து முறைகேடு செய்துள்ளதாக, நீரேற்றுப் பாசன சங்கத் தலைவர் அப்பாவு மீது, ஏற்கனவே விவசாயிகள் அதிகாரிகளிடம் புகார் மனு அளித்திருந்தனர்.

    இதனால் கோபமடைந்த அப்பாவு விவசாயிகளுக்கு தண்ணீர் எடுத்துவிடும் மோட்டார் அறையை, கடந்த சில நாட்களுக்கு முன், பூட்டி விட்டதாக கூறப்படுகிறது.

    அதனால், நீரேற்று பாசன திட்டத்தின் மூலம் யாருக்கும் கடந்த சில நாட்களாக தண்ணீர் விநியோகம் செய்யப்படவில்லை. தண்ணீர் இன்றி, தோட்டத்தில் பயிரிட்டுள்ள பயிர்கள் காய்ந்ததால், விவசாயிகள் கடும் அதிர்ச்சியும், அதிருப்தியும் அடைந்தனர்.

    இதற்கிடையில், விடுமுறை நாளான நேற்று சங்கத்தின் முன்னாள் செயலாளர் சண்முகம், மோட்டார் பம்ப் ஆப்ரேட்டர்கள் மலையப்பன், சுப்ரமணியன் ஆகிய 3 பேரும் அலுவலகத்தைத் திறந்து உள்ளே சென்றனர். அதைக்கண்ட விவசாயிகள், கடந்த சில நாட்களாக தண்ணீர் திறந்துவிடாத நிலையில், 3 பேரையும் சங்க அலுவலகத்திற்குள் அடைத்து வைத்து, சங்க அலுவலகத்தை பூட்டி வைத்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    தகவல் அறிந்த மோகனூர் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் நடராஜன், சங்கர் ஆகியோர் வந்து, விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி, சமரசம் செய்தனர். அதையடுத்து, சங்க அலுவலகத்தை திறந்து, 3 பேரையும் மீட்டனர்.

    தொடர்ந்து, மோட்டார்களை இயக்கி தண்ணீர் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதி அளித்தனர்.

    • மர வள்ளி கிழங்கு விலை உயர்ந்துள்ளதால் மரவள்ளிகி ழங்கு பயிர் செய்துள்ள விவசா யிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
    • ஒரு டன் மர வள்ளிக்கிழங்கை ரூ 15 ஆயி ரத்திற்கு வாங்கி செல்கின்றனர்.

    பரமத்திவேலூர்:

    பரமத்திவேலூர் சுற்று வட்டாரப் பகுதிகளான எஸ்.வாழவந்தி, பெரிய கரசபா ளையம், செங்கப்பள்ளி, பரமத்தி, பொத்தனூர், கூடச்சேரி, கபிலர்மலை, சின்னமருதூர், சோழசிரா மணி, பெருங்கு றிச்சி, ஆனங்கூர்,பெரிய சோளிபா ளையம், சின்ன சோளி பாளையம், சுள்ளிப்பாளையம் உள்ளிட்ட பல்வேறு சுற்று வபரமத்திவேலூர் பகுதியில்

    வரத்து குறைவால் மரவள்ளி கிழங்கு விலை உயர்வு

    ட்டார பகுதிகளில் நூற்றுக்க ணக்கான ஏக்கரில் மரவள்ளி கிழங்கு பயிரிடப்பட்டு உள்ளது.

    இப்பகுதிகளில் விளை யும் மரவள்ளி கிழங்குகளை வியா பாரிகள் வாங்கிச் சென்று புதன்சந்தை, புதுச் சத்திரம், மின்னாம்பள்ளி, மல வேப்பங்கொட்டை, ஆத்தூர் உள்ளிட்ட பகுதி களில் செயல்பட்டு வரும் சவ்வரிசி மற்றும் கிழங்கு மாவு தயாரிக்கும் கிழங்கு ஆலை களுக்கு அனுப்பி வருகின்றனர். கிழங்கு ஆலை களில் மரவள்ளி கிழங்கில் இருந்து ஜவ்வரிசி மற்றும் கிழங்கு மாவு தயார் செய்யப்படுகிறது. மேலும் சிப்ஸ் தயார் செய்ய வும் வியாபாரிகள் அதிக அள வில் பெரிய அளவி லான மரவள்ளி கிழங்குகளை வாங்கிச் செல்கின்றனர்.

    மரவள்ளிக் கிழங்குகளை வாங்கும் ஆலை உரிமை யாளர்கள் மரவள்ளிக்கி ழங்கில் உள்ள மாவுச்சத்து மற்றும் புள்ளிகள் அடிப்ப டையில் விலை நிர்ணயம் செய்கின்றனர். அதேபோல் ஜவ்வரிசி விலை உயரும் போதும், வீழ்ச்சி அடையும் போதும் அதன் விலைக்கு ஏற்ப சேகோ சர்வ் மூலம் மரவள்ளிக்கிழங்குக்கு விலை நிர்ணயம் செய்கின்ற னர். அதேபோல் சில்லறை வியா பாரிகள் மரவள்ளி கிழங்குகளை வாங்கி ஊர் பகுதிகளுக்கு கொண்டு சென்று கிராமங்களில் கிலோ கணக்கில் மர வள்ளிக்கி ழங்குகளை விற்பனை செய்து வருகின்றனர்.

    மரவள்ளி கிழங்குகளை வாங்கிய பொதுமக்கள் மர வள்ளிக் கிழங்கில் உள்ள தோலை அகற்றி சிறிய துண்டுகளாக வெட்டி உப்பு போட்டு வேக வைத்து தாழித்து சாப்பிடுகின்ற னர்.சிலர் முழுக்கிழங்கை உப்பு போட்டு வேக வைத்து சாப்பிடு கின்றனர்.

    இந்நிலையில் கடந்த வாரம் மரவள்ளிகிழங்கை மில் அதிபர்கள் டன் ஒன்று ரூ.13 ஆயிரத்திற்கு வாங்கிச் சென்றனர். சிப்ஸ் தயாரிக்கும் மரவள்ளி கிழங்கு டன் ஒன்று டன் ஒன்று ரூ.14 ஆயிரத்திற்கு விற்பனை யானது. தற்போது மில் அதிபர்கள் மர வள்ளிக்கிழங்கை டன் ஒன்றுக்கு ரூ.14 ஆயிரத்திற்கு வாங்கி செல்கின்றனர் அதே போல் சிப்ஸ் தயாரிப்பவர்கள் ஒரு டன் மர வள்ளிக்கிழங்கை ரூ 15 ஆயி ரத்திற்கு வாங்கி செல்கின்றனர்.

    மரவள்ளி கிழங்கு வரத்து குறைந்துள்ள தாலும், ஜவ்வரிசி விலை உயர்வு அடைந்துள்ள தாலும் மரவள்ளி கிழங்கின் விலை உயர்ந்துள்ளதாக வியா பாரிகள் தெரிவித்தனர். மர வள்ளி கிழங்கு விலை உயர்ந்துள்ளதால் மரவள்ளிகி ழங்கு பயிர் செய்துள்ள விவசா யிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    • ருநங்கை ஒருவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
    • அந்த வழியாகச் சென்ற பயணிகள் இது குறித்து கிராம நிர்வாக அலுவலர் செந்தில்குமார் தகவல் தெரிவித்தனர்.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டம் எருமபட்டி ஒன்றியம் வடவத்தூர் எல்லை கல் பஸ் நிறுத்தத்தில் உள்ள பயணிகள் நிழல் கூடத்தில் நேற்று திருநங்கை ஒருவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அந்த வழியாகச் சென்ற பயணிகள் இது குறித்து கிராம நிர்வாக அலுவலர் செந்தில்குமார் தகவல் தெரிவித்தனர்.

    அவர் எருமப்பட்டி போலீசில் கொடுத்த புகார் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் பெரியசாமி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று திருநங்கையின் பிணத்தை மீட்டு பிரேத பரி சோதனைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.

    விசாரணையில் பிணமாக கிடந்த திருநங்கை சேந்தமங்கலத்தை அடுத்த பழைய பாளையத்தைச் சேர்ந்த ராஜூ மகன் ஸ்ரினிகா(வயது 26) என்பது தெரிய வந்தது. அவரது முழங்காலில் காயங்கள் ஏற்பட்டுள்ளது. இரவு நேரத்தில் அவர் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகி கொலை செய்யப்பட்டாரா? அல்லது உடல் நலம் பாதிக்கப்பட்டு இருந்தாரா? என்ற கோணத்தில் போலீ சார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருநங்கை சாவில் தொடர்ந்து மர்மம் நீடிக்கிறது.

    அவர் இறப்பதற்கு முன்பாக யாருடனும் செல்போனில் பேசினாரா? அவர் யாருடனாவது வாக னத்தில் சென்றாரா? அது தொடர்பான காட்சிகள் கண்காணிப்பு காமிராக்க ளில் பதிவாகி உள்ளதா? என போலீசார் தீவிர விசா ரணை நடத்தி வருகிறார்கள்.எருமபட்டி அருகே

    திருநங்கை சாவில் மர்மம் நீடிப்பு 

    • நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு எட்டிமடை புதூர் பகுதியில் பிரசித்தி பெற்ற தேவி கருமாரியம்மன் கோவில் கம்பம் விடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
    • 28-ந் தேதி பூச்சாட்டுகளுடன் தொடங்கியது.

    திருச்செங்கோடு:

    நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு எட்டிமடை புதூர் பகுதியில் பிரசித்தி பெற்ற தேவி கருமாரியம்மன் கோவில் கம்பம் விடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு நேர்த்திக்கடனை செலுத்தினர். இந்த கோவிலின் திருவிழா கடந்த 28-ந் தேதி பூச்சாட்டுகளுடன் தொடங்கியது.அபிஷேக ஆராதனை, வழிபாடுகள், சக்தி அழைத்தல், கும்பம் தாளித்தல், பூச்சொரிதல் வழிபாடு, திருவிளக்கு பூஜை, பொங்கல் வைத்தல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான கம்பம் பிடுங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    தேவி கருமாரியம்மன் கோயிலில் இருந்து கம்பம் பிடுங்கப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக திருச்செங்கோடு தெப்பக்குளத்தை அடைந்தது. பூசாரியும், பக்தர்களும் தெப்பக்குளத்தில் கம்பத்தை பூஜை செய்து வழிபட்டு குளத்தில் விட்டனர். ஏராளமான பக்தர்கள் வேண்டுதலுக்காக வேடமிட்டு ஆடி படி ஊர்வலமாக வந்தனர்.

    • நாமக்கல் மாவட்ட மக்கள் கல்வி நிறுவனம் மற்றும் முள்ளுக்குறிச்சி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் இணைந்து நடத்திய இலவச மருத்துவ முகாம் நடை பெற்றது.
    • 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டை ஊராட்சி ஒன்றியம் பெர பஞ்சோலை ஊராட்சி பாலப்பட்டி புதூரில் உலக சுகாதார தினத்தை முன்னிட்டு நாமக்கல் மாவட்ட மக்கள் கல்வி நிறுவனம் மற்றும் முள்ளுக்குறிச்சி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் இணைந்து நடத்திய இலவச மருத்துவ முகாம் நடை பெற்றது .

    முகாமிற்கு ஊராட்சி மன்ற தலைவர் தங்கபழனி பாலுசாமி தலைமை தாங்கினார். ஊராட்சி கவுன்சிலர் சித்ரா சரவணன் முன்னிலை வைத்தார். மக்கள் கல்வி நிறுவன இயக்குனர் சரவணன் வரவேற்றார். மருத்துவ முகாமில் முள்ளுக்குறிச்சி ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர்கள் , சுகாதார ஆய்வாளர்கள் கலந்து கொண்டு முகாமில் கலந்து கொண்ட பொதுமக்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்து உரிய மருந்து, மாத்தி ரைகளை வழங்கினார்கள்.

    முகாமில் பொது மக்க ளுக்கு இலவச முழுக்கவசம் வழங்கப்பட்டு பொது மக்களிடையே சுகாதாரம் பற்றிய விழிப்புணர்வு ஏற்ப டுத்தப்பட்டது. முகாமில் ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள் சசிகலா, பரமேஸ்வரி, சுப்பிரமணி உட்பட 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மக்கள் கல்வி நிறுவன பணியாளர்கள் செய்திருந்தனர்.

    • நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் இயற்கை முறையில் விளைவிக்கப்படும் மிளகு, மற்ற பகுதி மிளகுகளை காட்டிலும் காரத்தன்மை அதிகம் கொண்டதாகும்.
    • கொல்லிமலையில் சுமார் 7 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் மிளகு பயிரிடப்பட்டு உள்ளன.

    நாமக்கல்:

    ஒரு குறிப்பிட்ட புவிசார்ந்த இடத்தையோ அல்லது தோற்றத்தையோ குறிக்கும்படி ஒரு பொருளின் மீது பயன்படுத்தப்படும் பெயர் அல்லது சின்னம் புவிசார் குறியீடு எனப்படும். இந்த குறியீடு அந்த பொருள் புவிசார்ந்து பெறும் தரத்தையோ, நன்மதிப்பையோ சாற்றும் சான்றாக விளங்கும்.

    தமிழ்நாட்டில் காஞ்சிபுரம் பட்டுச்சேலை, தஞ்சாவூர் கலைத்தட்டு, திருப்பதி லட்டு, மதுரை மல்லிகைப் பூ, மதுரை சுங்குடி சேலை, சேலம் மாம்பழம், சேலம் மாவட்டம், தம்மம்பட்டி மரச்சிற்பம், தஞ்சாவூர் ஓவியப் பாணி, பத்தமடை பாய் உள்ளிட்ட பல பொருட்கள் புவிசார் குறியீடு பெற்றுள்ளன. சேலம் ஜவ்வரிசி உள்பட 11 பொருட்களுக்கு சமீபத்தில் புவிசார் குறியீடு கிடைத்துள்ளது. இவ்வாறு புவிசார் குறியீடு பெற்றிருக்கும் பொருளை சம்பந்தப்பட்ட ஊரை தவிர மற்ற இடங்களில் தயாரித்து சந்தைப்படுத்த முயல்வோர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க முடியும்.

    நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் இயற்கை முறையில் விளைவிக்கப்படும் மிளகு, மற்ற பகுதி மிளகுகளை காட்டிலும் காரத்தன்மை அதிகம் கொண்டதாகும். எனவே கொல்லிமலை மிளகுக்கு புவிசார் குறியீடு வழங்க வேண்டும் என்பது அங்கு வாழும் பழங்குடியின விவசாயிகளின் நீண்ட கால எதிர்பார்ப்பாகும். இதற்கான நடைமுறைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

    தமிழகத்தின் முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றாக கருதப்படும் கொல்லிமலை கடல் மட்டத்தில் இருந்து 4,663 அடி உயரம் கொண்டது. 280 சதுர கி.மீட்டர் பரப்பளவை கொண்ட இந்த மலைப்பகுதியில் 14 கிராம ஊராட்சிகள் உள்ளன. இங்குள்ள மலைவாழ் பழங்குடியின மக்கள் மா, பலா, வாழை, அன்னாசி, மிளகு, நெல், மரவள்ளி, சிறு தானியங்கள் பயிரிட்டு வாழ்ந்து வருகின்றனர்.

    இதில் மிகவும் பிரசித்தி பெற்றதாக விளங்குவது கொல்லிமலை மிளகு. கொல்லிமலையில் சுமார் 7 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் மிளகு பயிரிடப்பட்டு உள்ளன.

    சில்வர்ஒக் மரங்களில் ஊடுபயிராக பரவ விடப்படும் மிளகு கொடிகள் வளர்ந்து பருவநிலையை எட்ட 4 ஆண்டுகள் வரை ஆகும். அறுவடைக்கு ஏற்றவாறு மிளகு கொடி படர்ந்து விட்டால், குறைந்தபட்சம் 15 முதல் 18 ஆண்டுகள் வரை விவசாயிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

    மிளகு வகைகளில் பன்னியூர்1, கரிமுண்டா, பன்னியூர்5 ஆகியவை இங்கு அதிகம் பயிரிடப்படுகிறது. கொல்லிமலை மிளகிற்கு புவிசார் குறியீடு கிடைக்க உரிய நடவடிக்கையை தமிழக அரசு எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    மிளகு வளர்ப்பிற்கான சீதோஷ்ண நிலை கொல்லிமலை பகுதியில் நன்றாக உள்ளது. இங்கு பன்னியூர் மற்றும் கரிமுண்டா ரக மிளகுகள் விளைந்து வருகிறது. இருந்தபோதிலும் பன்னியூர் ரகமே அதிக அளவில் காணப்படுகிறது. மலைவாழ் மக்களின் வருமானத்தை அதிகரிக்கும் விதமாக செம்மேடு மற்றும் பவர்காடு பகுதியில் தலா ஒரு மிளகு சேமிக்கும் குளிர்பதன கிடங்கை அமைத்து கொடுக்க வேண்டும்.

    கொல்லிமலையில் இயற்கை விவசாய முறையில் மிளகு விளைவிக்கப்படுவதால் இங்குள்ள மிளகிற்கு புவிசார் குறியீடு கிடைத்தால், சீரான விலை கிடைக்கவும், ஏற்றுமதி அதிகரிக்கவும் வாய்ப்பு உருவாகும் என்கின்றனர் விவசாயிகள்.

    • தேர் திருவிழா நடத்துவது தொடர்பான அமைதி பேச்சுவார்த்தை பரமத்திவேலூர் தாலுகா அலுவலகத்தில், தாசில்தார் கலைச்செல்வி முன்னிலையில் நடைபெற்றது.
    • இதில் துணை போலீஸ் சூப்பிரண்டு கலையரசன், இந்து சமய அறநிலையத்துறை செயல் அலுவலர் செந்தில்குமார், வருவாய் துறையினர், போலீசார் மற்றும் அனைத்து தரப்பை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா பொத்தனூரில் வெள்ளக்கல் மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் தேர் திருவிழா நடத்துவது தொடர்பான அமைதி பேச்சுவார்த்தை பரமத்திவேலூர் தாலுகா அலுவலகத்தில், தாசில்தார் கலைச்செல்வி முன்னிலையில் நடைபெற்றது.

    இதில் துணை போலீஸ் சூப்பிரண்டு கலையரசன், இந்து சமய அறநிலையத்துறை செயல் அலுவலர் செந்தில்குமார், வருவாய் துறையினர், போலீசார் மற்றும் அனைத்து தரப்பை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.

    பேச்சுவார்த்தையில், தாசில்தார் கலைச்செல்வி அறிவுரையின்படி சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படாத வகையில் அமைதியான முறையில் திருவிழாவை நடத்த அனைவரும் ஒப்புக்கொண்டனர்.

    மேலும் கோவில் திருவிழா, இந்து சமய அறநிலையத்துறை மூலம் நடத்தப்பட வேண்டும். இந்து சமய அறநிலைய துறையினர் தவிர தனிப்பட்ட நபர்கள் யாரும் நன்கொடைகள் வசூலிக்க கூடாது.

    சாமி ஊர்வலத்தின் போது எந்த தரப்பினரும் தனது சமூகத்தை முன்னிலை படுத்தி ஆடைகள் மற்றும் தொப்பிகள் அணியக்கூடாது. வெட்டும் குதிரை ஊர்வலம் வரும் 23-ந் தேதி மாலை 6 மணி முதல் மறுநாள் காலை 8 மணி வரை மட்டும் நடைபெற வேண்டும். தேரோட்டம் வரும் 25-ந் தேதி காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெற வேண்டும்.

    கோவில் பெயருடன் வெள்ளை நிற பனியன் அணிந்த பொத்தனூரைச் சேர்ந்த 60 பேர் மட்டும் தேருக்கு சன்னக்கட்டை போட வேண்டும். திருவிழா நடைபெறும் போது எவ்வித சட்டம்-ஒழுங்கு பிரச்சினையும் ஏற்படாத வகையில் அமைதியான முறையில் திருவிழா நடத்தப்பட வேண்டும் என முடிவு செய்யப்பட்டது.

    கூட்டத்தில் வருவாய்த்துறையினர் போலீசார் மற்றும் அனைத்து தரப்பினர் கலந்து கொண்டனர்.

    • விஜயராஜ் (வயது 24). இவருக்கு திருமணம் ஆகவில்லை. தனியார் என்ஜினீயரிங் கம்பெனியில் வெல்டராக வேலை பார்த்து வந்தார்.
    • இந்த நிலையில், கபிலர்மலை அருகே வேட்டுவம்பாளை யத்தில் உள்ள ஒரு அரிசி ஆலைக்கு நெல் அரவை எந்திரத்தை பொருத்துவதற்காக கடந்த 3-ந் தேதி வந்துள்ளார்.

    பரமத்திவேலூர்:

    திருவாரூர் மாவட்டம், கிடாரம் கொண்டான் பகுதியை சேர்ந்தவர் வீரமணி. இவரது மகன் விஜயராஜ் (வயது 24). இவருக்கு திருமணம் ஆகவில்லை. தனியார் என்ஜினீயரிங் கம்பெனியில் வெல்டராக வேலை பார்த்து வந்தார்.

    இந்த நிலையில், திருச்சியில் உள்ள தனியாருக்கு சொந்தமான என்ஜினீயரிங் கம்பெனியில் இருந்து பரமத்திவேலூர் தாலுகா, கபிலர்மலை அருகே வேட்டுவம்பாளை யத்தில் உள்ள ஒரு அரிசி ஆலைக்கு நெல் அரவை எந்திரத்தை பொருத்துவதற்காக கடந்த 3-ந் தேதி வந்துள்ளார்.

    தொடர்ந்து 3 நாட்களாக வேலை பார்த்து வந்த விஜயராஜ், நேற்று முன்தினம் அரிசி ஆலையில் எந்திரத்தை பொருத்தும் பணியில் ஈடுபட்டிருந்த போது, எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார்.

    உடனடியாக அவரை பரமத்திவேலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், விஜயராஜ் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்துள்ள னர். இதுகுறித்து ஜேடர் பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மோகனூர் ஊராட்சி ஒன்றியம், வளையப்பட்டியில், சிப்காட் எதிர்ப்புக் குழு ஆலோசனை கூட்டம் நடை பெற்றது.
    • இதில் கொ.ம.தே.க உறுப்பினர்கள், விவசாய முன்னேற்றக் கழகத்தினர் மற்றும் பலர் பங்கேற்றனர்.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டம், மோகனூர் ஊராட்சி ஒன்றியம், வளையப்பட்டியில், சிப்காட் எதிர்ப்புக் குழு ஆலோசனை கூட்டம் நடை பெற்றது. தமிழக விவசாயிகள் முன்னேற்றக் கழக பொதுச்செ யலாளர் பாலசுப்ரமணியன் தலைமை வகித்தார்.

    கொ.ம.தே.க. தெற்கு மாவட்ட செயலாளர் மாதேஸ்வரன், ஒருங்கிணைந்த மாவட்ட விவசாய அணி செயலாளர் ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்த னர்.கூட்டத்தில் நிறை வேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

    தமிழக அரசு, மோகனூர் ஊராட்சி ஒன்றியம், வளை யப்பட்டி, புதுப்பட்டி, பரளி, அரூர் ஆகிய பகுதிகளில் சிப்காட் தொழிற்பேட்டை அமைக்கும் திட்டத்தை கைவிடவேண்டும். மேலும், இப்பகுதியில் சிப்காட் தொழிற்பேட்டை அமையும்போது, இங்குள்ள நீர்நிலைகள், இயற்கை எழில் கொஞ்சும் மலைகள், கால்ந டைகள் மற்றும் இயற்கை சார்ந்த விவசாயங்கள் பாதிக்கப்படுவதுடன், நீர் மாசுபடுதல், சுற்றுச்சூழல் பாதிப்பு போன்ற பல்வேறு பிரச்சினைகள் ஏற்படும்.

    வளையப்பட்டி, புதுப்பட்டி, பரளி, அரூர் ஆகிய பகுதிகளில், சிப்காட் தொழிற்பேட்டைக்காக நிலம் எடுப்பது சம்மந்தமாக, மாவட்ட நிர்வாகத்தால் அப்ப குதியில் உள்ள மக்களோடு இதுவரை சிறிய ஆலோசனைக் கூட்டம் கூட நடத்தவில்லை. உடனடியாக கூட்டம் நடத்தி, சிப்காட் குறித்த மக்களின் நிலைப்பாட்டை அரசுக்கு கொண்டு செல்ல வேண்டும்.

    சிப்காட் தொழிற்பேட்டை அமைந்தால், நாமக்கல் மாவட்டத்தில், படித்த இளைஞர்கள், 1 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். விவசாயிகளுக்கு தேவையான இழப்பீட்டுத் தொகை வழங்கப்படும் என, அரசியல் கட்சித் தலைவர்கள் கூறுகின்றனர். ஆனால், இது சம்மந்தமாக, அமைச்சர்க ளோ, மாநில தொழில் துறை செயலாளரோ, சிப்காட் தலைவரோ, கலெக்டரோ என யாரும் இதுவரை எதுவும் உறுதிமொழி கூறவில்லை. அதனால், அப்பகுதி விவசா யிகள், பொதுமக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

    நாமக்கல் மாவட்டத்தில் சிப்காட் தொழிற்பேட்டை அமைக்கப்படுமா?, அமைக்கப் படாதா? என்பது குறித்து, சிப்காட் தலைவர் உடனடியாக அறிவிக்க வேண்டும்.

    மோகனூர் ஊராட்சி ஒன்றியத்தில், சிப்காட் தொழிற்பேட்டை அமைக்கும் திட்டத்தை அரசு கைவிடத் தவறும் பட்சத்தில், சென்னை யில் உள்ள தமிழக கவர்னர் மாளிகை முன், திட்டத்தை ரத்து செய்ய வலி யுறுத்தி முற்றுகைப் போராட்டம் நடத்தி, கவர்னரிடம் இது குறித்து மனு கொடுக்கப்படும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது. இதில் கொ.ம.தே.க உறுப்பினர்கள், விவசாய முன்னேற்றக் கழகத்தினர் மற்றும் பலர் பங்கேற்றனர்.

    • கடந்த 2 நாட்களாக பரமத்திவேலூரில் உள்ள பஸ் நிலையம், கடைவீதி, பள்ளி சாலை, 4 ரோடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் திடீர் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • இதில், 18 வயதுக்கு குறைவான சிறுவர்கள் இருசக்கர வாகனங்களை ஒட்டி வருவது கண்டுபிடிக்கப்பட்டது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு கலையரசன் உத்தரவின்படி, போலீஸ் இன்ஸ்பெக்டர் இந்திராணி மற்றும் போலீசார் கடந்த 2 நாட்களாக பரமத்திவேலூரில் உள்ள பஸ் நிலையம், கடைவீதி, பள்ளி சாலை, 4 ரோடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் திடீர் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதில், 18 வயதுக்கு குறைவான சிறுவர்கள் இருசக்கர வாகனங்களை ஒட்டி வருவது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து இருசக்கர வாகனங்களை ஒட்டி வந்த 8 சிறுவர்கள் மீதும், அவர்களது பெற்றோர்கள் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    மேலும் பெற்றோர்கள், 18 வயதுக்கு குறைவான சிறுவர்கள் இருசக்கர வாகனங்களை ஓட்டுவதற்கு அனுமதி அளித்தால், வாகனங்களை பறிமுதல் செய்வதுடன் பெற்றோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என துணை போலீஸ் சூப்பிரண்டு கலையரசன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    • குமாரபாளை யம் ஆனங்கூர் பிரிவு சாலையில் சுமை தூக்குவோர் தொழிலா ளர்கள் சங்கம் சார்பில் நீர் மோர் பந்தல் தொடக்க விழா நடைபெற்றது.
    • நீர் மோர் பந்தலை திறந்து வைத்து, பொதுமக்களுக்கு நீர் மோர், தர்பூசணி பழங்கள், இளநீர் ஆகிய வற்றை விநியோகித்தார்.

    குமாரபாளையம்:

    குமாரபாளையத்தில் கோடை வெப்பத்தின் தாக்கம் நாளுக்கு நாள் அதி கரித்து வருகிறது. பொது மக்கள் வெப்பத்தின் தாக்கு தலில் இருந்து சமாளிக்க இளநீர், தர்பூசணி பழங்கள், குளிர்பானங்கள் ஆகிய வற்றை உண்டு வருகின்றனர்.

    கோடை வெப்பத்தின் தாக்குதலில் இருந்து பொதுமக்களுக்கு உதவும் வகையில், பொதுமக்கள் தாகம் தீர்க்க குமாரபாளை யம் ஆனங்கூர் பிரிவு சாலையில் சுமை தூக்குவோர் தொழிலா ளர்கள் சங்கம் சார்பில் நீர் மோர் பந்தல் தொடக்க விழா நடைபெற்றது.

    நகராட்சித்தலைவர் விஜய்கண்ணன் பங்கேற்று நீர் மோர் பந்தலை திறந்து வைத்து, பொதுமக்களுக்கு நீர் மோர், தர்பூசணி பழங்கள், இளநீர் ஆகிய வற்றை விநியோகித்தார். இதில் சங்க நிர்வாகிகள், கவுன்சிலர் ஜேம்ஸ் உள்பட பலர் பங்கேற்றனர்.

    ×